மாயவனின் மலரிவள் 4

Active member
Messages
140
Reaction score
113
Points
43
மாயவனின் மலரிவள் 4


பரிமளம் ஒப்பாரியை முடிப்பதாக தெரியவில்லை. இரு மகள்களை மடியில் இழுத்துப்போட்டவர் "இனி உங்க ரெண்டு பேரையும் நான் எப்படி கரை சேர்த்தபோறனோ, தெரியலையே? மாரியாத்தா என்ன இந்த நிலமைல கொண்டு வந்து விட்டானே இவன்"என்று தலையில் அடித்து கொண்டு அழுதவர் திடிரென மகள்களை விலக்கி எழுந்து மாயவனின் சட்டையை பிடித்து"அன்னிக்கு சொன்னியே தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்லது நடக்காம, நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு, இப்போ இப்படி என் தலைமேல கல்லை போட்டுட்டியே? இதே நான் பெத்த என்ர மகனா இருந்தா இப்படி செஞ்சிருப்பானா?"என்று அவர் அவனை ஆவேசமாக கேட்க, ஏற்கனவே தெரிந்தது தன் என்றாலும் மாயவன் அவரின் நேரடி தாக்குதலில் நிலைக்குலைந்து போனான்.


மலரினியோ எதுக்காக இந்தம்மா இப்படி பேசுது என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் தெளிவாக புரிந்தது. அவர் அவனின் பெற்ற தாய் இல்லை என்றும் அவன் திருமணம் செய்துகொண்டதால் அவரின் மகள்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவான் என்று நினைத்து ஆத்திரத்தில் பேசுகிறார் என்று புரிந்தாலும் ஏனோ அவளுக்கு அவனை திட்டும் அந்த பெண்மணியை சிறிதும் பிடிக்கவில்லை.

மாயவன் எதுவும் பேசாமல் அவன் அமைதியாக இருப்பதிலே அவனின் மனநிலையை புரிந்து கொண்ட அவனின் தந்தை அவனின் தோளில் கைவைத்து அழுத்தம் கொடுத்தவர் "போதும் பரிமளம் பேசுனவரைக்கும் அவனை பத்தி தெரிஞ்சும் நீ இப்படி பேசுறது நல்லா இல்லை.உன்னை விட அவன் தங்கச்சிங்களை நல்லபடியா வாழ வைப்பான். என் புள்ளைக்கு அவன் கடமைகளை எப்படி செய்யறதுனு தெரியும். போய் ஆரத்தி எடுத்து புள்ளைங்கள உள்ளார கூட்டிட்டு போ, மறுபடியும் எதுவும் பேசி மனச கஷ்ட படுத்தாத", என்றவர் மகள்களை ஆரத்தி எடுத்து வர கூற, பரிமளம் கணவரின் அதட்டலில் பயந்து அமைதியாக நின்றார்.

மாயவனின் இளைய தங்கை தாரணி ஆரத்தியை எடுத்து வந்தவள் தன் அன்னையிடம் கொடுத்து விட்டு, அண்ணனிடம் வந்தவள் "அண்ணா அண்ணி ரொம்ப அழகா இருக்காங்க, ரொம்ப அமைதி போல தெரியுது.ஆனா அவங்களயாச்சும் வாய திறந்து பதில் பேச சொல்லுங்க அண்ணா. உங்களை மாதிரி அமைதியாகவே இருக்க போறாங்க"என்றவள் அன்னையின் முறைப்புக்கு பயந்து அவரின் அருகில் சென்று நின்றுகொண்டாள்.

மாயவன் இவ ரொம்ப அமைதியா? என்று அவளை திரும்பி பார்க்க, அவளோ என்ன என்று புருவமுயர்த்தி வினவிய அழகில் சொக்கிப்போனவன் பார்வையை அவளிடம் இருந்து விலக்குவதற்குள் தவித்து தான் போனான்.

அவர்களின் பார்வை பரிமாற்றத்தில் பரிமளாவிற்கு வயிரெரிந்தது. வேண்டாவெறுப்பாக ஆரத்தி எடுக்க,அதற்குள் அருகில் இருந்த உறவினர்கள் அனைவர்க்கும் விசயம் தெரிந்து வந்து விட, வீடே கலகலப்பாக இருக்க, ஆனால் வீட்டில் உள்ளோர் யாரும் மகிழ்வுடன் இல்லை.

மாயவனின் அத்தை இருவரையும் அழைத்து விளக்கேற்றி,ஒவ்வொரு சடங்காக நிறைவேற்ற சொல்ல மாயவனுக்கோ எங்கு உற்றார் உறவினர் முன்பு எதும் பேசி விடுவாளோ என்று அவ்வப்போது அவன் மலரினியை பார்க்க, அதை வைத்து அவனை கிண்டல் செய்தனர் அவனை முறைப்பெண்கள். அவளோ,அனைத்து சடங்கையும் செவ்வனே செய்து கொண்டிருந்தாள் பின்னே அவள் தான் வாக்களித்திருந்தாளே ஆறு மாதத்திற்கு மனைவியாக இருக்கிறேன் என்று அதை நினைத்து தான் அனைத்தையும் செய்து கொண்டிருந்தாள்.


பரிமளம் வீட்டின் பின்கட்டில் அமர்ந்து எங்கேயோ வெறித்துகொண்டிருக்க, அவரின் அருகில் சென்றவன் அவரின் காலுக்கடியில் அமர்ந்தவன், "சின்னம்மா நான் எதையும் வேணும்னு பண்ணல, ஆத்தா அப்டி கையை பிடிச்சி கேட்கவும் என்னால முடியாதுனு சொல்ல முடியல, அந்த இடத்துல கல்யாணம் நடக்கலைன்னா சதாசிவம் அய்யா உயிரே விட்டுருப்பாரு... அதனால தான் நான் அந்த நேரத்துல என்ன பண்றதுனு தெரியாம இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.மத்தபடி நானா எதுவும் செய்யல, தாரணிக்கும் மகேஷுக்கும் நல்லபடியா கல்யாணம் முடிச்சு அவங்களுக்கு செய்ய வேண்டிய எல்லாத்தையும் நான் சரியா செய்வேன். இந்த கல்யாணம் எதையும் மாத்திராது, நம்ம உறவையோ இல்லை தங்கச்சிகளுக்கும் எனக்கும் இருக்க பாசத்தையும், புரிஞ்சுக்கோங்க நீங்க இப்படி விலகி நிக்கறது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குது... நீங்க என்னைய எப்படி நினைச்சாலும் நான் உங்களை என் அம்மாவ தான் நினைக்குறேன்"என்றவனின் கண்களில் ஒரு சொட்டு நீர் துளிர்க்க, அது தாரணியுடன் பின்கட்டில் இருந்த குளியலறைக்கு வந்த மலரின் கண்களில் தெளிவாக விழுந்தது.

அவன் அவரின் கால்களில் விழுந்து அழுகிறான் ஆனாலும் இந்த பெண்ணின் மனம் இரங்கவில்லை என்று நினைத்தவளுக்கு பரிமளாவின் மேல் கோவம் பெருக, அவரின் அருகில் சென்றவள் "இப்போ உங்களுக்கு என்ன பிரச்னை,எதுக்காக இவளோ சீப் ஆஹ் ட்ராமா பண்றீங்க? உங்க பொண்ணுங்களுக்கு நீங்க தான எல்லாம் செய்யணும். பெத்துக்க தெரிஞ்சவங்களுக்கு கல்யாணம் பண்ணி வாழவைக்க முடியாதா? அதுக்கு உங்களுக்கு இன்னொருத்தங்க உதவி தேவைப்படுது, அதுவும் இவ்வளவு அதிகாரமா பேசுறீங்க...என்ன கேரக்டர் நீங்க? என்று அவரிடம் கோவமாக கேட்க...

மாயவனின் பேச்சில் கோவம் வடிந்து அமர்ந்திருந்தவளுக்கு மலரின் பேச்சு ஆத்திரத்தை கிளப்ப,மாயவனிடம் திரும்பியவர் "நான் கூட ஒரு நிமிசம் நம்பிட்டேன், நீ சொன்னத. இதோ உன்னால பேசமுடியாததா உன் பொண்டாட்டிக்கு சொல்லிகுடுத்து கூட்டிட்டு வந்துருக்க என்ன நடிப்புல, இவ இத்துலூண்டு இருந்துகிட்டு என்ன பேச்சு பேசற நீங்க பார்த்துகிட்டே நிக்கிறிய" என்று கணவனிடம் எரிந்து விழுந்தார்.


மாயவனோ மலர் பேசியதிலே அதிர்ந்து நின்றிருந்தான், இவளுக்கு நம்மை கண்டாலே பிடிக்காது நமக்கு சப்போர்ட் பன்றா என்று அதிர்ந்து நின்றிருந்தவனுக்கு அவளின் பேச்சு அதிகப்படி என்று தோன்ற "போதும் மலரு எதுவும் பேசாம உள்ளாற போ"என்று அவளை அதட்ட, அவளோ "நான் என் போகணும். நான் எதுவும் தப்பா பேசலையே?"என்று அவள் பதிலுக்கு எகிற...

மாயவன் "தப்பா சரியா எல்லாம் பெறவு பேசிக்கலாம், நீ உள்ளாற போ"என்று சற்று அழுத்தமாகவே கூறினான்.

பரிமளத்தை முறைத்தப்படியே உள்ளே செல்ல, அழகரோ "எந்திச்சு வா பரிமளம், அவன் நம்ம மகன் அப்டிலாம் அவன் கைவிட்டுற மாட்டான்"என்று கூறியவரிடம் "எதைய வச்சு என்னைய நம்ப சொல்றிங்க, அதான் அவன் பொஞ்சாதி கேட்டாலே புள்ளைய பெத்துக்க தெரிஞ்சவங்களுக்கு வளர்த்து ஆளக்கா தெரியாதான்னு?அதுக்கு என் புருஷன் உதவி வேணுமான்னு கேட்டாலே இனி நம்ப சோலிய நம்ம பாத்துக்க வேண்டியது தான்... அவன் சோலிய அவனே பாத்துக்கிடட்டும். எப்ப அவ இப்படி ஒரு பேச்சு பேசிப்புட்டாலோ இனி அவனாச்சு அவன் குடும்பமாச்சு... இதோ இந்த முன்பகுதில நம்ம புலங்கிகிடுவோம், இந்த புறத்துல அவங்க இருந்துகிட்டும் அவளோ தான், இத பத்தி இனி ஆரும் எதுவும் பேசாதீங்க"என்றவள் எழுந்து வேகமாக அவரின் அறைக்குள் சென்று அடங்கிக்கொண்டார்.

அழகர்சாமிக்கு தான் நினைத்தது இவ்வளவு சுலபமாக நடந்ததில் அத்துணை மகிழ்ச்சி.அவரை பொறுத்தவரை இனியாவது அவரின் மகன் மற்றவர்களை போல நல்ல உடை உடுத்தி, மூன்றுவேளையும் உணவு உண்பான். அவனை கவனித்து பார்க்க அவனுக்கு ஒருத்தி வந்துவிட்டாள் என்று மகிழ்வடைந்தார். இத்தனை வருடங்களாக மகன் என்ற பார்வையில் தங்கைகள் உண்டு விட்டார்கள் என கூறி பழையசாதத்தை கொடுப்பது, நிறைய சாப்பிட்டால் வேலைசெய்ய முடியாது என்று கால்வாயிறு உணவு கொடுப்பது, பண்டிகைகளுக்கு கூட உடை எடுக்காமல் நாலு காசு சேர்த்து வைக்கணும் என்று கிழிந்ததையே தைத்து போடுவது மகனை அவ்வப்போது உன் தாய் இடத்தில் இருந்து பார்த்துக்கொண்டேன் என்று அவன் தாயில்லாத வேதனையை கிளறுவது போன்ற வேதனைகள் தொடர்ந்து அரங்கேறும் போதெல்லாம் அவரின் கையறு நிலையால் எதுவும் தெரியாதது போல இருந்து விடுவார். ஏதாவது தட்டி கேட்டாலும் ஒரு வாரத்திற்கு அதை வைத்து ஒப்பாரி வைத்து கொண்டு இருப்பார் என்பதால், மாயன் அவரிடம் எதுவும் பேச வேண்டாம் என்று கூறி விடுவான்.


மாயவனுக்கு பெரும் அதிர்ச்சி. பரிமளம் பிரச்சனை செய்வார் என்று தெரியும். ஆனால் வீட்டையே பிரிக்கும் அளவுக்கு செல்வார் என்று அவன் நினைக்கவில்லை. ஆனால் அவனுக்கு தெரியாதது வீடு அவன் பெயரில் இருப்பதால் தான் அவன் இன்னும் அங்கு இருக்கிறான் என்பது... இல்லையென்றால் எப்போதோ அவனை வீட்டை விட்டு அனுப்பியிருப்பாரே!...


விளைநிலங்கள், வீடு, தோட்டம் என்று அனைத்துமே அவனின் பெயரில் தான் இருந்தது. அதனால் தான் அவனுக்கு இவர் ஏதோ ஆதரவு அளித்து பாதுகாப்பது போல் அவனுக்கு அரைவயிறு கால்வாயிறுமே உணவை போட்டு வீட்டுக்கு சம்பாரித்து கொட்டுபவனாய் வளர்த்தார்.

பரிமளாவை பொறுத்தவரை அவன் திட்டமிட்டு அவளிடம் காதலை கூறி அவளை திருமணம் செய்து கொண்டதாய் நினைத்தார். மாயவன் அவனை நடத்திய விதம், அவனின் காதல் பற்றி கூறி அவளை திருமணம் முடித்திருப்பானோ அதனால் தான் அவள் அவனிடம் உரிமை எடுத்துக்கொண்டு தன்னை வசைப்படுகிறாள் இதற்க்கு மேல் சரிப்படாது என்று தான் இந்த முடிவை எடுத்தார்.


உறவினர்கள், அக்கம்பக்கத்தவர்கள் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது போல் இந்த விசயத்தை பற்றி பட்டிமன்றம் நடத்த,அந்த நேரத்தில் சரியாக பர்வதம்மாள் உள்ளே வர அவரை கண்ட பரிமளா "வாத்தா பெரிய மனுஷி... சந்தோசமா இருக்கியாலோ...நெனச்சத நடத்திபுட்டிக இல்லை. அன்னைக்கு சொன்ன போலவே துணைக்கு வானு கூட்டிட்டு போய் என் மவனுக்கு உன் ராங்கிகாரி பேத்திய கட்டி வச்சுட்ட இல்லை சந்தோசமா தான் இருக்கும் உனக்கு...வந்தவ முத நாளுன்னு அடக்க ஒடுக்கமாவ இருக்கா என்னையே என்ன சங்கதினு கேட்டு என் சினத்த தூண்டிவிட்டு என்ர வாயாலயே என் மவன தனியா போக பிரிக்க வச்சுட்டா இல்லை. நல்ல ராசியான பொண்ணுதான் ஊரே மெச்சிக்கணும்"என்று வாய் ஓயாமல் பேசினார்.

அவர் பேச்சில் அதிர்ந்து போன பாட்டி "ஏட்டி உனக்கு என்னட்டி இத்தனை இறுமாப்பு. கல்யாணம் முடிச்சு வீட்டுக்கு வந்த பிள்ளைகள எத்தனை பாடு படுத்தறவ, பொம்பளையா நீ...இவ லட்சணத்துக்கு என் பேத்தி ராங்கிகாரியாம்...கொமட்டுல குத்தி பல்ல பேத்து புடுவேன்"என்று அவரிடம் எகிறி அவளின் வாயை மூடியவர் சொந்தக்காரர்களிடம் பேசி ஒவ்வொருத்தராக அனுப்பி வைத்தவர் மலர் இருந்த அறைக்குள் நுழைய, அவளோ அங்கு இருந்த கட்டிலில் அமர்ந்து நகத்தை கடித்து கொண்டிருந்தாள்.

அவளின் அருகில் வந்தவர் "மலரு"என்றழைத்தவர் அவளை அணைத்துக் கொண்டார்."நான் கூட கொஞ்சம் பயந்து போன ஆத்தா, ஆனா இப்போ இங்க நடந்தத கேள்வி பட்டு மனசுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா? மாயன் ரொம்ப நல்லவன் ஆத்தா... இந்த பரிமளம் பாசத்தை காட்டுறேன்னு அவனை அவனாகவே இருக்க விடுல, நீ ஆறுமாசம் கழிச்சு இங்க இருந்து போனாலும் சரி, அதுக்குள்ள இந்த பயலுக்கு ஒரு நல்லத செஞ்சிட்டு போத்தா"என்று கண்கலங்க, கூறியவரை கண்டு எதுவும் பேச தோன்றாமல் அவர் கூறியதை யோசிக்க துவங்கினாள்.


 
Messages
69
Reaction score
43
Points
18
சூப்பர், மலர் எதிர்த்து பேசலைன்னா தான் ஆச்சர்யம், பர்வதம்மா சொன்ன மாதிரி மாயவனுக்கு இவள் மூலம் கொஞ்சம் விடிவு காலம் பிறந்தா சரித்தேன் 😊😊😊
 
Top