• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,036
Reaction score
2,940
Points
113
பொழுது – 5 💖

சில நொடிகள் நிவினின் பார்வை சுதி பின்னே படர, அவளுக்கு அது அசௌகரியத்தை கொடுத்திருக்க வேண்டும். அவளது உடல் மொழியிலே கண்டு கொண்டவன், தன்னையே நிந்தித்துவிட்டு அலைபேசியை எடுத்துக் காதுக்கு கொடுத்தான்.

பாலா அழைப்பை ஏற்க, “எங்க இருக்க டா?” எனக் கேட்டான் இவன்.

“இங்க பாண்டி பஜார் வந்தேன் டா. ஒரு சின்ன வேலை, அதான்!”

“சரி, மீனாட்சி காம்ப்ளக்ஸ்க்கு பத்து நிமிஷத்துல வா டா!” என்ற நிவின் அழைப்பை நொடியில் துண்டித்திருந்தான். இல்லையெனில் எதிரிலிருப்பவன் ஏன், எதற்கு, எப்படி என பெரிய விவாதத்தையே வைக்க கூடுமென அவனுமே அறிவான்.

“டேய்... ஏன் டா? எதுவும் வேணுமா?” பாலா கேட்க, அவனுக்குப் பதில் வராது போனதில் அலைபேசியை முறைத்தவன், நிவினை வாயில் மென்று கொண்டே வணிக வளாகத்திற்கு வாகனத்தை செலுத்தினான்.

நிவின் மேலும் வேறு எதாவது வேண்டுமா எனத் தேடினான். வாசனை திரவியங்கள் பக்கம் அவனது பார்வை செல்ல, ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தான். அவனருகே வந்த ஊழியன் ஒருவன், “எந்த ப்ராண்ட் ட்ரை பண்றீங்க சார்?” எனக் கேட்க, “எட்டர்னிட்டி கெல்வின் க்ளீன்!” என அவன் உதடுகள் முணுமுணுக்க, அந்த கடல் நீல வண்ண வாசனை திரவியத்தை எடுத்துக் கூடைக்குள் வைத்தான்.

அவன் எப்போதும் உபயோகப்படுத்தும் வாசனை திரவியம் அது. சற்றே விலை கூடுதல் என்றாலும் நாள் முழுவதும் எலும்பிச்சையும் பெர்ரீயும் கலந்த சுகந்தம் உடலில் தங்கியிருக்கும் உணர்வை அளிக்கும். அதனாலே விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிவிடுவான்.

பத்து நிமிடங்களை எப்படி கடத்துவது எனத் தெரியாது அந்த தளத்தையே சுற்றி வந்தான். சுதியின் புறம் அவனது பார்வை படராமல் இல்லை. இழுத்துப் பிடித்த பொறுமையுடன் அவள் ஒரு வாடிக்கையாளரிடம் பேசுவதை இவன் தூரத்திலிருந்தே அவதானித்தான். பின்னர் அவளிருந்த அடுக்கிற்குப் பக்கமாய் நின்றுகொண்டு பொருட்களைப் பார்வையிட்டான்.

“என்ன சுதி, இதுவும் போச்சா?” விவேகா இவளிடம் முணுமுணுக்க, சுதிக்கும் முகத்தில் சோர்வு படர்ந்தது. இன்னும் ஒன்பது வழலைக் கட்டிகள் மீதமிருந்தன. நாற்பத்து ஒன்று கட்டிகளை விற்றுவிட்டாள். இன்னும் ஒன்பது மட்டும் எஞ்சிவிட்டன. வைகுண்டம் அவளுக்கு கொடுத்த தண்டனை இவை. அன்றைக்கு நிவினை மரூத்துவனையில் சேர்த்துவிட்டு தாமதமாய் வந்ததற்கான தண்டனை என யோசித்து விற்காமல் இருந்த ஐம்பது வழலைக் கட்டிகளை ஒரு மாதத்திற்குள் விற்றுவிட வேண்டும் என்று கூற, இவளுக்கு அதில் சுத்தமாய் உடன்பாடில்லை. இருந்தும் மறுக்கும் நிலையிலோ இல்லை தனது விருப்பத்தை தெரிவிக்கும் இடத்திலோ அவள் இல்லையே. சரியென்று விட்டாள்.

ஆனாலும் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் அந்த வழலைக் கட்டியைப் பற்றி கூறி வாங்க வைப்பதற்குள் அவளது பொறுமை நீர்த்துப் போனது. அதிலும் அவர்களைக் கட்டாயப்படுத்துவதில் அவளுக்கு விருப்பம் இல்லை. அதனாலே இவர்கள் வாங்குவார்கள் என தனக்குத் தோன்றியவர்களிடம் மட்டும் அதை விற்க முயற்சித்தாள். வெற்றிகரமாக முக்கால்வாசியை விற்றுவிட்டாள். இன்னும் ஒன்பது வழலைக் கட்டிகளை இன்றைக்கே அவள் விற்றாக வேண்டிய கட்டாயம். காலையிலிருந்து ஒருவருமே வாங்கவில்லை என்பது அவளை வருத்தியது. கொஞ்சமே கொஞ்சம் விற்று விடலாம் என்ற உறுதி உதிர்ந்ததில் உடல் தளர்ந்தது. கலங்கப் பார்த்த விழிகளை சிமிட்டி தன் சிந்தனையிலிருந்து வெளிவந்தவள், “பார்த்துக்கலாம் விவே, வித்துடலாம். நீ போய் கஸ்டமரைப் பாரு. இல்லைன்னா மூக்கு வேர்த்து சூப்பர் வைசர் வந்துடும்வாரு!” தோழியை இலகுவாக்க கூறி வேலையைக் கவனித்தாள்.

நிவினுக்கு அவர்கள் பேச்சு எதுவுமே காதில் விழவில்லை. இத்தனைக்கும் வெகு அருகில்தான் நின்றான். எப்படி இவர்களால் சத்தமில்லாமல் உரையாட முடிகிறது என்றொரு ஆச்சர்யம் அவனுக்குப் படர்ந்தது. அவனுடைய பார்வை சுதியைத் தொட்டுக் கொண்டே இருக்க, அவளும் அவனைக் கவனித்தாள்தான்‌. பத்து நிமிடமாக எதையும் வாங்காது தன்னையே தொடருபவனிடம் கோபமாய் பேச அவளுக்கு உரிமை இல்லை. இப்போதிருக்கும் மனநிலையில் அவனிடம் சென்று பேசவும் விருப்பமில்லை. பெருமூச்சுடன் அவனை நேர்க்கொண்டு பார்க்க, அவன் விழிகளை அவளிடமிருந்து நகர்த்தினான்.

‘என்னத்தான் வேணும்?’ என கோபமாய் கேட்க உதடுகள் துறுதுறுத்தாலும் விறுவிறுவென தரை தளத்திற்குச் சென்றுவிட்டாள். இங்கே பற்றாக்குறையாக இருக்கும் பொருட்களைக் கீழே சென்று எடுத்து வந்து வைத்தாள். மேலும் கீழும் இரண்டு முறை நடந்து முடிந்ததும் முதுகில் சுள்ளென வலிக்க ஆரம்பித்தது. சட்டென ஓரிடத்திலே நின்றவள், “அண்ணா, கீழ இருக்க சாக்லேட்ஸை மட்டும் எடுத்துட்டு வரீங்களா?” என சக ஊழியரை அனுப்பிவிட்டு எது எது குறைகிறது எனப் பார்த்து எடுத்து வந்தப் பொருட்களை அங்கே நிரப்பினாள்.

“மச்சான், ஃபர்ஸ்ட் ப்ளோர்ல இருக்கேன்‌. எங்க இருக்க நீ?” பாலாஜி நிவினுக்கு அழைத்துக் கேட்டான்.

“செக்ண்ட் ப்ளோர் வா டா!” என இவன் கூறி மேலிருந்தே கையை அசைத்தான். அவனைக் கண்டு விட்டதாய் தலையை அசைத்த பாலாஜி இரண்டிரண்டு படிகளாகத் தாவி மேலே வந்தான்.

“ஏன் டா பேசும்போதே காலைக் கட் பண்ணுவீயா நீ? எதுக்கு கூப்ட்ட?” அவன் நண்பனை முறைக்க, அதையெல்லாம் நிவின் கண்டு கொள்ளவில்லை.

“என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண பொண்ணு இவங்களான்னு பாரு. சாக்லேட்டை ரேக்ல அடுக்குறாங்க இல்ல, அவங்கதான்!” நிவின் கூற, மற்றவனும் பார்வையை அந்தப் பெண்ணிடம் குவித்தான். ஒரு நிமிடம் அவளை அடையாளம் காணத் திணறியவன் உற்றுப் பார்க்க, அதே பெண்தான் என மூளை இனம் கண்டது.

“ஏ... ஆமா டா. இவங்கதான் உன்னை அட்மிட் பண்ணது. உனக்கு எப்படிடா தெரியும்? நீதான் மயக்கத்துல இருந்தீயே!” என அவன் ஆச்சரியமாய் வினவினான்.

“ஆமா டா... அவங்க யூனிபார்மை என் தலையில கட்டி விட்டாங்க இல்ல. அந்த ப்ளூ ட்ரெஸ் ப்ளஸ் அந்தப் பொண்ணோட வாய்ஸ் கேட்டதும் புரிஞ்சது. பட், கன்பார்ம் பண்ணத்தான் உன்னைக் கூப்ட்டேன்!” நிவின் பதிலளிக்க, பாலாஜி தலையை ஆமோதிப்பாக அசைத்தான்.

“நீ இதை போய் பில் போடு. நான் அவங்கிட்டே தேங்க்ஸ் சொல்லிட்டு வரேன்!” நிவின் அவளை நோக்கிச் செல்ல, மற்றவன் பணம் செலுத்துமிடம் நோக்கி நகர்ந்தான்.

தன் பின்னே நிழலாடுவதை உணர்ந்த சுதிரமாலா, யாரென திரும்பிப் பார்க்க, நிவின் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் இவளிடம் ஆயாசமான பார்வை படர்ந்தது.

“யெஸ் சார், என்ன வேணும் சார்?” என வெகுவாய் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கேட்டாள்.

“ஒரு கப் காஃபி சாப்பிடலாமா?” எனக் கேட்டவன் குனிந்து அவளது பெயரை ஒருமுறை வாசித்து, “சுதி... சுதிர!” எனத் திணறினான். தமிழில் எழுதியிருந்தது பெயர். அவனுக்கும் தமிழுக்கும் சற்றே தூரம்‌. ஆங்கில வழிக் கல்வி பயின்றவனால் அத்தனை தெளிவாக வாசிக்க இயலவில்லை.

“சுதிர மாலா சார்!” என அகத்தை முகத்தில் காட்டாதிருக்க பிரம்மபிரயத்தனப்பட்டவள், உதடுகளில் கடினப்பட்டு புன்னகையை இழுத்துப் பிடித்தாள்.

“ஹம்ம்... சுதிரமாலா, என் கூட காஃபி சாப்பிட வர்றீங்களா?” என மீண்டும் அதையேக் கேட்டவனை மெதுவாய் விழிகளை உயர்த்தி முகத்தைப் பார்த்தாள். வெண்ணையைக் குழைத்தது போல பளிச்சென வெண்மையாய் இருந்தான் நிவின். பார்க்கும்போது எந்த தவறான எண்ணமும் அவளுக்குத் தோன்றவில்லை. இருந்தும் ஏன் இப்படி படுத்துகிறான் என எரிச்சலாய் விழிகளைத் தாழ்த்தி ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்தினாள்.

“சார், உங்களுக்கு பஸ் ஸ்டாப் தெரியுமா?” என இவள் கேட்க, அவன் புரியாது தலையை அசைத்தான்.

“ஹம்ம்... பஸ் ஸ்டாப்பை க்ராஸ் பண்ணி செகண்ட் ரைட் கட் பண்ணிங்கன்னா அங்க ஒரு காஃபி ஷாப் இருக்கும். இங்க வர்ற கஸ்டமர்ஸ் எல்லாம் அங்கதான் காஃபி குடிப்பாங்க. நல்லா இருக்கும்னு கூடப் பேசிக்குவாங்க. உங்களுக்கு காஃபி வேணும்னா அங்கப் போய் குடிங்க சார். எனிதிங்க் எல்ஸ் சார்?” என புன்னகையை இழுத்து அவன் மனம் நோகாது பேசினாள் பெண். அவனை ஏதேனும் நோகடித்துவிட்டாள் மேற்பார்வையாளர் அவளை வார்த்தைகளால் வதைத்துவிடுவார் என அவள் மட்டுமே அறிவாள். வாடிக்கையாளரிடம் சிரித்து மட்டுமே பேச வேண்டும் என்ற விதியை மனதில் மீண்டுமொரு கூறிக் கொண்டாள்.

“காஃபி சாப்பிட வர மாட்டீங்க?” நிவின் உதடுகளில் புன்னகை நெளிந்தது.

“சாரி சார், இன்னும் ரெண்டு நிமிஷம் உங்க கூட நின்னு பேசுனா சூப்பர் வைசர் இங்க வந்துடுவாரு. உங்களை எதுவும் சொல்ல மாட்டாரு. என்னைத்தான் திட்டுவாரு. என் வேலையை என்னைப் பார்க்க விட்டீங்கன்னா உங்களுக்குப் புண்ணியமா போகும் சார். நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்ல. ப்ளீஸ் அண்ட்ர்ஸ்டாண்ட் சார்!” என்றாள். கோபமாய் வந்தாலும் தன்மையாய்த்தான் கூறினாள். ஏற்கனவே இருந்த மனச்சோர்வில் இவனும் படுத்துகிறானே என உடலும் சோர்ந்து போனது. முதுகில் மெதுமெதுவாக வலி ஏறத் தொடங்க, உணவு உண்ணும்போது வலி நிவாரணி மாத்திரையை மறக்காமல் உண்ண வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

“என் உயிரையே காப்பாத்தி இருக்கீங்க சுதி. ஒரு கப் காஃபி சாப்பிட வர மாட்றீங்க?” அவன் புருவத்தை உயர்த்த, சுதிக்கு அந்தப் பேச்சின் சாராம்சம் உறைக்கவில்லை.

‘என்ன?’ எனப் பார்வையை அவன் முகத்தில் வைத்தாள். நிவின் வார்த்தையில்லாது விழிகளை கையோடு கழுத்தில் கட்டியிருந்த கட்டைக் காண்பிக்க, சுமதிக்கு மெதுவாய் புரிந்தது. தான் காப்பாற்றியவனோ இவன் என மூளை எடுத்துக் கொடுக்க, முகத்தை ஊன்றிக் கவனித்தாள். அன்றைக்கு முகத்தில் அடிபட்டு ரத்தத்தில் தோய்ந்திருக்க, இவனது முகம் மனதில் பதியவில்லை. அதைவிட அன்றைக்கு பாதி முகத்தை தாடி மறைத்திருந்தது‌. ஆனால் இன்றைக்கு வழுவழுவென்று சவரம் செய்திருந்தான். அதனால் அவளால் எளிதில் கண்டறிய முடியவில்லை.

அன்றைக்கு அவனது நண்பர்கள் என்னவென கூறி இவனை அழைத்தார்கள் என யோசித்தவள், “நிவின்...” என நிறுத்திப் பின்னே, “நிவின் சார்?” என மறியாதை விளிப்பை இணைத்தாள்‌‌.

“யெஸ், அதே நிவின்தான் நான்!” அவன் தோளைக் குலுக்க, இத்தனை நேரமிருந்த சோர்வு இந்த மனிதனின் முன்பு கரைந்திருந்தது. அன்றைக்கு அவனை நண்பர்களிடம் ஒப்படைத்துவிட்டு வந்தாலும் உடல்நிலை தேறி வீட்டிற்குச் சென்றிருப்பானோ என மூளையின் ஒரு கேள்வி நச்சரித்தது. ஒருமுறை அவனது நலத்தை கண்களால் அளந்தாள். அவன் நன்றாய் இருக்கிறான் என்ற ஒரு காரணமே வைகுண்டத்தின் வார்த்தைகளை நீர்த்துப் போகச் செய்தன.

“தேங்க் யூ சுதிர... சுதிரமாலா!” என அவன் பெயரைத் திக்கினான்.

“பரவாயில்லை சார்!” என இவள் உணர்ந்து உளமாறப் புன்னகைத்தாள். நிவினும் அவளது செய்கைகளை கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.

“இப்பவும் காஃபி சாப்பிட வர மாட்டீங்களா?” அவன் இலகுவாய்க் கேட்க, இவள் மெலிதாய் புன்னகைத்தாள். அவ்வளவுதான் பதிலுரைக்கவில்லை. அந்தப் புன்னகையே அவனை எட்ட நிறுத்திவிட்டது என்பதை நிவினும் உணர்ந்தான்.

“நான்... இங்க பின்னாடி இருக்க அப்பார்ட்மெண்ட்ல தான் இருக்கேன். உங்களுக்கு எதுவும் ஹெல்ப்னா என்னைக் காண்டாக்ட் பண்ணலாம். ஃபீல் ஃப்ரீ டூ ஆஸ்க் எனி ஹெல்ப்!” என்றவன், “என் நம்பர் வேணும்னா சேவ் பண்ணிக்கோங்க!” என்றான்.

அவனது பேச்சில் நொடியில் சுதியின் முகம் மாறினாலும் தன்னை மீட்டவள், “இட்ஸ் ஓகே சார்... நான் எதையும் எக்ஸ்பெக்ட் பண்ணி உங்களை அட்மிட் பண்ணலை. அன்னைக்கு யாரா இருந்தாலும் நான் இதைத்தான் பண்ணியிருப்பேன்!” என்றாள் மெல்லிய குரலில். இவனுக்கு ஏதோ போலாகிவிட்டது.

“நோ... நோ, சாரி சுதி. ஐ டிடின்ட் மீன் எனிதிங்க். ஜஸ்ட் பக்கத்துல இருக்கீங்களே, ஹெல்ப்னா கேட்க சொன்னேன். மத்தபடி வேற எதுவும் இல்ல!” அவன் கொஞ்சம் பதற்றத்துடன் கூற, பெண் புன்னகைத்தாள். அவனது குரலிலிருந்த பதற்றத்தையும் உண்மையும் அவளால் உணர முடிந்தது.

“நானும் எதுவும் நினைக்கலை சார். இப்போ சூப்பர் வைசர் வந்துடுவாரு. உங்க கூட டென் மினிட்ஸா பேசியிருக்கேன். இதுக்கும் மேல நின்னா, கடிச்சு கொதறிடுவாரு. நான் வேலையைப் பார்க்கப் போறேன். நீங்களும் உங்க ஹெல்த்தைப் பார்த்துக்கோங்க!” என அவள் கூற, இவன் தலையை அசைத்தான். போய் வருகிறேன் என நகரச் சென்றவன் ஒரு நொடி திரும்பிப் பார்க்க, சுதியும் அவனைத்தான் பார்த்தாள். ஒரு வழலைக் கட்டியை அவனை வாங்க சொல்லலாம் என தோன்றினாலும் ஏதோ தடுத்துவிட அழைக்காது விட்டுவிட்டாள். ஆனால் அவள் மனதின் அலைப்புறுதல் அவனுக்கு கேட்டுவிட்டது போல. நின்று அவளைத் திரும்பிக் கேள்வியாகப் பார்த்தான்.

‘தயங்கினால் இன்றைக்குள்ளே விற்க முடியாது!’ என மூளை கூறியது. ‘இதை வித்து முடிக்கலைன்னா, நைட் எவ்வளோ நேரமானாலும் இருந்து சேல் பண்ணிக் கொடுத்துட்டுத்தான் போகணும் சுதிரமாலா!’ என காலையில் வந்ததும் வராததுமாய் பேசிய வைகுண்டத்தின் குரலும் எதிரொலிக்க, தயக்கத்தை உதறிவிட்டாள்.

“இந்த சோப்ல ஒன்னை உங்களால வாங்கிக்க முடியுமா?” எனக் கேட்டாள். அவன் என்னவெனப் புரியாது விழித்தாலும் அடிபடாத கையை நீட்டி அதை வாங்கிப் பார்த்தான்.

“கோட் மில்க்ல ப்ரிபேர் பண்ண சோப். நல்லா இருக்கும். உங்களுக்கு ஓகேன்னா எடுத்துக்கோங்க சார்!” என்றவளுக்கு அவன் வாங்குவானா என்ற சந்தேகம். அவன் கூடையிலிருந்த பொருட்கள் யாவும் விலை உயர்ந்த தரமான பொருட்கள். அதைவிட அவன் வாங்கிய வாசனை திரவத்தை அவளும் பார்த்தாள். அந்த திரவியத்தை அவளால் மறக்க முடியாதே. அதைத்தானே முதன்முதலில் சுதி கீழே போட்டுடைத்தது. அப்படி வாங்கியவன் இந்த வழலைக் கட்டியை நிச்சயமாக வாங்க மாட்டான் என மனம் உறுதியாய் உரைத்தது.

“வொய் நாட்... வாங்கிக்கிறேன்!” அந்த வழலைக் கட்டியில் கண்களை ஓட்டியவாறு உடனே ஒப்புக் கொண்டவன் நிமிர, சுதியின் கண்கள் ஒரு நொடி மின்னி மறைந்தன.

‘இன்னும் எட்டு சோப்தான் இருக்கு. வித்திடு சுதி’ தனக்குத் தானே நம்பிக்கை அளித்தாள் பெண்.

“இதை சேல் பண்ணணும்ன்றது எல்லாருக்கும் கம்பல்சரியா?” அவன் கேட்க, சில நொடிகள் தயங்கியவள், “இல்ல... அப்படிலாம் இல்ல சார். இது எனக்குப் பெனால்டி, பனிஷ்மெண்ட் மாதிரி சார். இந்த சோப்பை இன்னைக்குள்ள சேல் பண்ணி முடிக்கணும் சார்!” என்றாள் உள்ளடங்கிய குரலில்.

“என்னாச்சு... நான் தெரிஞ்சுக்கலாமா? இப்படிலாம் பனிஷ்மெண்ட் தருவாங்களா என்ன?” என அவன் கேட்க, சுதி சொல்லவா வேண்டாமா என யோசித்தாள். யாரோ ஒரு அந்நிய ஆடவனிடம் இவ்வளவு நேரம் பேசியதே தவறென மூளை கூற, உதடுகளைப் பூட்டிக் கொண்டாள்.

“இட்ஸ் ஓகே, நீங்க சொல்ல வேணாம். நானே இந்த சோப்ஸ் எல்லாத்தையும் பை பண்ணிக்கிறேன்!” என அருகிலிருந்த கூடையை எடுத்து மீதமிருந்த எட்டு வழலைக் கட்டிகளையும் எடுத்துப் போட்டான்.

“ஐயோ... சார். பரவாயில்லை, நீங்க ஒன்னு வாங்குங்க போதும். நான்... நான் மத்ததை சேல் பண்ணிக்கிறேன். உங்களுக்கு என்னால காசு வேஸ்டாக வேணாம். நீங்க இந்த சோப்பை யூஸ் பண்ணுவீங்களான்னு தெரியலை‌!” சுதி அவனை எடுக்க விடாது தடுக்க, நிவின் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

“தௌசண்ட் ரூபிஸ்தானே சுதிரமாலா. நாட் அ பிக் டீல் ஃபார் மீ. டோன்ட் ஃபீல் பேட்!” என அவன் கூற, இவள் அவனை நன்றியோடு பார்த்தாள். ஆயிரம் ரூபாய் பெரிதில்லை என அவன் கூறியது இவளது மூளையில் ஆழப் பதிந்து போனது.

‘ஒரு மாசத்துக்கு அரிசி வாங்க ஆயிரம் ரூவா ஆகுது சௌமி!’ சந்திரா புலம்பல் செவியில் ஒலிக்க, அதை தட்டி அடக்கியவள், “தேங்க் யூ சார்... தேங்க் யூ சோ மச்!” என உளமார அவனுக்கு நன்றியை நவில்ந்தாள். அன்றைக்கான பெரிய பாரம் ஒன்றை கீழே இறக்கி வைத்த திருப்தியில் அவளது உடல் தளர, உதடுகள் சோபையாய் புன்னகைத்தன. இனிமேல் யாரிடமும் சங்கடப்பட்டு வழலைக் கட்டியை விற்க வேண்டியதில்லை. மாலை வர மனம் முழுக்க பயத்துடன் நேரத்தைப் பார்க்க வேண்டியதில்லை என்ற இல்லைகள் அவளை களிப்புறச் செய்தன.

அந்தப் பெண்ணை சில நொடிகள் நின்று பார்த்தான் நிவின். பாலாஜி பணத்தை செலுத்திவிட்டு நண்பனுக்காக காத்திருந்தான். அவன் வரவே இல்லை என கடந்து சென்ற பத்து நிமிடங்களும் மூளை கத்த, விறுவிறுவென மேலேறி வந்தான்.

“மச்சான்...” பாலாஜி இவர்கள் அருகே வந்தான். சுதிக்கு அவனை நினைவிருந்தது. அவன் இவளைப் பார்த்து புன்னகைக்க, இவளும் உதடுகளை விரித்தாள். அவன் பேச முயற்சிக்கவில்லை. இவளும் அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாது அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றுவிட நிவின் அகன்றான்.

இருவரும் வீட்டை நோக்கி பாலாஜியின் இருசக்கர வாகனத்தில் சென்றனர். “நல்ல பொண்ணு டா அவங்க... உன்னை அட்மிட் பண்ணதுக்காக சொல்லலை. உன்னோட கோல்ட் செயின், வாட்ச், போன், பர்ஸ்னு எல்லாத்தையும் கரெக்டா எடுத்து வச்சு கொடுத்துட்டங்க. அவங்க நினைச்சிருந்தா, அது எல்லாத்தையும் எடுத்து வச்சிக்கிட்டு, தொலைஞ்சு போய்டுச்சுன்னு கூட சொல்லி இருக்கலாம். பட், ஷிஸ் சோ ஜென்யூன்!” பாலா அன்றைக்கே நினைத்தான் தான். இப்போது சுதியைப் பார்த்ததும் அவளது நற்பண்புகள் நினைவில் வர, வாய் வார்த்தையாக உரைத்தான். நிவின் தலையை அசைத்தான். அவனது சிந்தனை அலுவலகத்தை நோக்கி நகர்ந்தது.

ஒரு மாதம் முடிந்திருக்க, வீட்டிலிருந்தே வேலை செய்ய விண்ணபித்திருந்தான். இன்னும் அதற்குப் பதில் வரவில்லை. அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உடல் தேறிய பிறகு அலுவலகம் வந்தால் போதுமென உரைத்திருந்தாலும், அவனுக்கு எந்த வேலையும் செய்யாமல் பொழுதைக் கழிப்பது எரிச்சலாய் இருக்க, நேற்றைக்குத்தான் உயர் அதிகாரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தான்.

“என்னடா... என்ன யோசிக்கிற?” அவன் கேட்க, நிவின் மனதிலிருப்பதை பகிர்ந்தான்.

“டேய்... இப்போ வொர்க் ப்ரம் ஹோம் போட்டு ஒத்தைக் கைல வேலை பார்க்கப் போறீயா?” அவன் கடிய, “ப்ம்ச்... என்னை மாதிரி வீட்ல ஒரு மாசம் சும்மா இருந்து பாரு டா. அப்போதான் என் கஷ்டம் உனக்குப் புரியும்!” நிவின் பல்லைக் கடித்தான்.

அவனது மனநிலை புரிந்த பாலாஜி, “சரி... சரி டா. ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத. முடிஞ்சா பாரு... இல்லைன்னா லீவ் எக்ஸ்டென்ட் பண்ணிடலாம். நான் ஆஃபிஸ்ல பேசுறேன்!” என அவன் கூற, நிவின் தலையை அசைக்க, இருவரும் வீடு சேர்ந்தனர்.

***

“சுதி, இன்னைக்கு காலிஃப்ளவர் பொரிச்சேன். உனக்கும் ஒரு டப்பால எடுத்துட்டு வந்தேன்!” என விவேகா தன் கையிலிருந்த சிறிய டப்பாவை சுதியின் புறம் நகர்த்த, அவள் சின்ன தலையாட்டலுடன் பெற்றுக் கொண்டாள்.

“ஆமா... அந்த புண்ணியவான் யாரு டி... மொத்த சோப்பையும் வாங்கிட்டு போய்ட்டான்?” விவேகா ஒரு கவள உணவை வாயில் அடைத்தவாறு கேட்டாள்.

“அவரைதான் டி அன்னைக்கு நான் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு, லேட்டா வந்தேனே!” சுதி தோழிக்கு நினைவு படுத்தினாள்.

“ஓ... இந்த பனிஷ்மெண்ட்க்கு காரணமே அவன்தானா? சரி, அப்போ அவன் வாங்குனதுல தப்பில்லை. போட்டும் விடு!” விவேகா தோளைக் குலுக்க, சுதி அவளது நியாயத்தில் முறுவலித்தாள்‌.

“ஆனால் சுதி... பாரேன். எப்பிடி டி இவ்வளோ வெள்ளையா இருக்கான் அவன்? நம்மளும் இந்த ஊர்லதான் இருக்கோம். இந்த அப்பார்ட்மெண்ட்ல இருந்து வர்ற ஒருத்தராவது கருப்பா இருந்து பார்த்துருக்கீயா? நல்லா ஐஸ்க்ரீம் கலர்ல வெள்ளையா இருக்கானுங்க!” அவள் நொடிக்க, சுதி சிரித்துவிட்டாள். அவர்கள் இருவரும் பார்த்தவுடன் கருப்பு எனக் கூறும் வகையில்தான் இருந்தனர்.

“ஏசியிலயே இருக்கதால வெள்ளையா இருக்காங்களோ... இருக்கும் இருக்கும் டி!” அவளே கேள்வியைத் தொடுத்து அவளே பதிலளித்துவிட்டு இரண்டு கவளத்தை உண்டாள்.

“நல்லா பார்க்க சினிமா ஹீரோ மாதிரி இருந்தானில்ல அவன். எப்படித்தான் இப்படி மெய்ன்டெய்ண் பண்றாங்களோ? நம்மதான் கரிச்சட்டி மாதிரி இருக்கோம். க்ளீன் சேவ் பண்ணி, முகத்துல ஒரு பிம்பிள், ப்ளாக் ஸ்பாட்ஸ் கூட இல்லை. பளபளன்னு இருந்தான் டி. நம்ம மூஞ்சியில எண்ணெய் வடியுது. கருமத்தை தலைக்குத்தான் குளிச்சேன். இருந்தாலும் மூஞ்சியெல்லாம் எண்ணெய் பிசுபிசுப்பு!” அவள் அங்கலாய்க்க, சுதி தோழியை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

“அப்போ நீ கஸ்டமரை கவனிக்கலை விவே, அவரைத்தான் பார்த்துட்டு இருந்தீயா?” இவள் குறும்பாய் கேட்க, “ஹ்க்கூம்... இப்படியெல்லாம் பார்த்தா தானேடி அலுப்பில்லாம வேலை பார்க்க முடியும். இந்தாளு சூப்பர் வைசர் மூஞ்சியைப் பார்த்தா ஓடத்தான் தோணும். இந்த மாதிரி அழகா நாலு பசங்க வந்தாதானே ரிலாக்ஸ்டா இருக்க முடியும்!” எனக் கண்ணடித்து சிரித்தவள், “நம்ப மட்டும்தான் பார்ப்போம். அவனுங்க எதுக்கு நம்பளைப் பார்க்குறாங்க. அதுவும் இன்னைக்கு வந்தவன் எல்லாம் செம்ம பணக்காரன் போல. அவன் எடுத்த பெர்ஃப்யூமை பார்த்தீயா, ஆறாயிரம் டி. நம்பளோட பத்து நாள் சம்பளம். அவனோட வாட்ச், ட்ரெஸ் எல்லாம் டாப் பிராண்ட். அப்படி இருக்கவனுங்க எல்லாம் எதுக்கு நம்பளைப் பார்க்க போறானுங்க. சும்மா இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் பொழுது போக்குதான் சுதி. நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி குடும்பத்துக்கு அடக்க ஒடுக்கமான பையனைக் கட்டிகிட்டாதான் கடைசிவரை வண்டி ஓடும்!” எனப் பேசியவளைப் பார்த்தவாறே சுதி உண்டு முடிந்து கையைக் கழுவ சென்றாள். தோழியின் பேச்சில் அவளுக்குமே சிறு முறுவல் தோன்றிற்று. இன்று அந்த வாலிபன் நிவினை அவள் பெரிதாய் கவனிக்கவில்லை. ஆனாலும் அவனுடைய நிதி நிலைமை அவன் வாங்கிய பொருட்களிலிருந்தே அறிந்திருந்தாள். விவேகா கூறும்போது கேட்டுக் கொண்டாள்.

அவளுக்குமே திருமணத்தைப் பற்றிய பெரிய பெரிய ஆசைகள் இல்லாவிடினும் சின்னஞ்சிறு விருப்பங்கள் இருந்தன. அந்த விருப்பத்தைக்கொண்டு அழகாய் வாழ்க்கையை வாழ வேண்டும்.

தன்னுடைய தகுதிக்கு ஏற்ற ஒருவனை மணம் முடித்தால் சரியாயிருக்கும். பணக்கார வர்க்கத்தின் மீது அவளுக்கு பெரிதாய் அபிப்ராயம் இல்லை. கண்டிப்பாக தன்னைப் போல கஷ்டப்பட்ட பின்னணியிலிருந்து கொஞ்சமே கொஞ்சம் முன்னேறியிருக்கும் ஒருவனைத்தான் திருமணம் முடிக்க வேண்டும். நிறைய படித்திருக்க கூடாது. தான் படித்தது போல பள்ளி முடித்திருந்தால் போதும். இல்லையென்றால் எந்த ஒரு கணத்திலும் படித்திருக்கும் தான், படிக்காத உன்னைத் திருமணம் செய்திருக்கிறேன் என்ற ஏற்றத் தாழ்வுகளையோ, குத்தல் பேச்சுக்களையோ அவளுக்கு கேட்க விருப்பமில்லை என்பதே உண்மை. தனக்கு கணவனாய் வருபவனிடம் சுயமரியாதையை இழக்க விருப்பமில்லை. அவனோடு எவ்வித ஏற்றத் தாழ்வும் இல்லாது நிம்மதியாக வாழ வேண்டும் என்றொரு சராசரி ஆசைகளைக் கொண்ட பெண்தான் சுதிர மாலா. இப்படி பலவித எண்ணத்துடனே வேலையைப் பார்க்க சென்றாள்.

தொடரும்...

 
Well-known member
Messages
433
Reaction score
321
Points
63
சுதி நவீன் உனக்கு தான் ஜானு பிக்ஸ் பண்ணிட்டா 😜😜😜😜
 
Messages
57
Reaction score
37
Points
18
நன்மை செய்து மறந்து விட்டாள்
நன்றி சொல்லும் மனம் மறவாதே...

மறந்த போதிலும்
மனித நேயம் வளருமே...

காத்திருந்த நொடி
கண்கள் அவளின் புறம்
காற்றில் அலையுதே...

ஒன்றும் எதிர்பார்க்காத செயலில் தவிக்க
ஒன்றும் பிரச்சினை இல்லை என கொடுக்க...

ஏற்ற தாழ்வுகளை
எண்ணி வருந்தி
என் நிலை இதுவே
எதார்த்தமும்
உரைக்குதே...

 
Top