- Messages
- 1,036
- Reaction score
- 2,940
- Points
- 113
பொழுது – 4
ஒருவாரம் கடந்திருந்தது. நிவினுக்கு உடல்நிலை தேறியிருக்க, மருத்துவர் சில பல அறிவுரைகளைக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஒன்பது நாட்கள் கழித்து தையல் பிரித்து கட்டை மாற்ற வேண்டும், மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் நிவின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
ஓய்வின்றி அங்குமிங்கும் அலைந்து திரிந்த கால்கள் கடந்து சென்ற பத்து நாட்களாக அதீத ஓய்வில் இருந்தன. அவனுக்குமே அடித்துப் போட்டது போல உடல் முழுவதும் வலி பரவியது. கை முறிவைத் தவிர பெரிதாய் காயமில்லை. இருந்தாலும் சோர்வு அப்பியிருந்தது. பின் மண்டையிலிருந்த தையலை மருத்துவமனையிலே செவிலியர்கள் அகற்றியிருந்தனர். இப்போது அந்த இடத்தில் லேசாய் முடிகள் முளைக்கத் துவங்கியிருக்க, காயம் ஆறத் ஆரம்பித்திருந்தது.
வலித்தாலோ இல்லை மீண்டும் ரத்தம் வந்தாலோ களிம்பொன்றை பூசி விடுமாறு செவிலியர் மகேந்திராவிடம் கொடுத்திருந்தார். ஒரு கூடை நிறைய மாத்திரைகள் நிரம்பி வழிய, நிவின் அவற்றை ஆயாசமாய்ப் பார்த்தான். ஏனோ சிறு வயதிலிருந்தே அவனுக்கு மருந்து மாத்திரைகள், மருத்துவமனை என்றால் பிடித்தமின்மை தோன்றிற்று. கடைசியாய் அவனுடைய தாய்க்காக சில மாதங்கள் மருத்துவமனையில் இருந்தான். அதற்குப்பின் மூன்று வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் மருத்துவமனை வாசம்.
வாய் வார்த்தையாக உரைக்காவிடினும் அவனது பிடித்தமின்மையை தந்தையும் அறிவாரே. அதனாலே மருத்துவரிடம் பேசி இன்னும் ஒரு வாரம் தங்க வேண்டும் என்று கூறியவரின் மனதைக் கரைத்து மகனை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்.
கை கால்களில் ஆங்காங்கே இருந்த சிராய்ப்புகள் இப்போது செந்தழும்புகளாய் ஆறத் துவங்கியிருந்தன. தோள்பட்டையில் புண் இன்னும் சரியாகவில்லை. கன்னத்தில் ஒரு பக்க காதோரமிருந்த சிராய்ப்பு செம்புண்ணாகியிருந்தது. இன்னும் சில வாரங்களுக்கு எங்கேயும் செல்ல கூடாது என மகேந்திரா மகனை அதட்டி உருட்டி ஓரிடத்தில் அமர வைத்துவிட்டார். அவனால் சத்தியமாய் முடியவில்லை. எப்போது வெளியே சென்று சுதந்திரக் காற்றை சுவாசிப்போம் என மனம் ஏங்கிற்று.
அக்ஷா தினமும் வந்து இவனைப் பார்த்துவிட்டு சென்றாள். வரும்போது எதாவது என அவனுக்காக பார்த்துப் பார்த்து சமைத்து எடுத்து வந்தாள். நிவின் இத்தனை மெனக்கெடல்கள் வேண்டாம் என அழுத்திக் கூறியும் அவள் காதில் வாங்கவில்லை. அவள் பிடியிலே நின்றாள்.
“ப்ம்ச்... நான் என்ன நீ நல்லா இருக்கப்போ எடுத்துட்டு வந்தேனா நிவின். உனக்கு ஹெல்த் இஷ்ஷூஸ். அதனாலே தான் செய்றேன். ரொம்ப பண்ணாத மேன்!” என அலட்டிக்காது பதிலளித்து அவள் நகர, இவன் பெருமூச்சை வெளிவிட்டான்.
அவள் அகன்றதும், “இந்தப் பொண்ணு ரொம்ப பார்க்க அமைதியா, அழகா இருக்கா நிவினு. உன்னை அக்கறையா பார்த்துக்கிறா. அவளுக்கு உன் மேல விருப்பம் இருக்கு போல. லாஸ்ட் டைம் நான் வந்த்தப்பவே கவனிச்சேன். நீ என்ன டா சொல்ற? உனக்கு எதுவும் எண்ணமிருக்கா?” மகேந்திரா மகனின் முகம் பார்த்தார். அவன் எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை.
அவனுக்குமே அக்ஷாவின் எண்ணம் ஆரம்பத்திலே புரிந்திருந்தது. அவள் வாய் வார்த்தையாகக் கூறாவிடினும் அவளது நட்பை முடிந்தளவு முறித்துக் கொண்டான். ஒரு சில முறை மறைமுகமாகக் கூட தனது விருப்பமின்மையைத் தெரிவித்திருக்கிறான். ஆனால் இந்தப் பெண் அதையெல்லாம் தூசியாய் தூக்கியெறிந்து
விட்டாள். அதில் நிவினுக்கு ஏகக் கோபம். கடந்து சென்ற நாட்களில் அவளது அழைப்புகள், குறுஞ்செய்திகளுக்கு மதிப்பளிக்காமல் இருந்தான். அவளது வரவில் தனக்கு உவப்பில்லை என்பது போல நடந்து கொண்டான்.
அவளுக்கும் வலித்தது போல. சில மாதங்களாக பெரிதாய் அவனைத் தொந்தரவு செய்யாது இருந்தாள். அதில் நிவினுக்கு நிம்மதி நிறைந்திருந்தது. கடைசியாக பத்து நாட்கள் முன்பு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வெளியே செல்லலாம் என திட்டம் தீட்டியிருந்தனர். அதில் கலந்து கொள்ளச் செல்லும்போது தான் நிவினுக்கு விபத்து ஏற்பட்டிருந்தது. முறிக்கப்பட்டு விட்டது என அவன் நினைச்சு ஆசுவாசப்பட்ட நாட்களை எல்லாம் தூள் தூளாக்கிவிட்டு அக்ஷா மீண்டும் அவனது வாழ்க்கையில் நுழைத்திருந்தாள். நிவினுக்கு வேறு எப்படி அவளிடம் கடுமையாக நடந்து கொள்ள வென்று தெரியவில்லை. சில பல வருடங்களாக நட்பிலிருக்கும் பெண்ணை வார்த்தைகளால் வதைக்க அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் இந்தப் பெண் அவனது பொறுமையை வெகுவாய் சோதித்துப் பார்த்தாள்.
“டேய் நிவினு... உன்கிட்ட தான் கேட்குறேன். உனக்கு வயசு முப்பதாகிடுச்சு. கல்யாணம்னு பேச்செடுத்தா, அதை தட்டிவிட்ற. இந்தப் பொண்ணை மருமகளாக்கிடுறதுல எனக்கு அப்ஜெக்ஷன் இல்ல டா. நீ உன் மனசுல இருக்கதை சொல்லு!” அவர் அழுத்திக் கேட்க, இவனது தலை இடம் வலமாக அசைந்தது.
“இல்லப்பா... அக்ஷா எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவ்வளோ தான். நீங்க நினைக்கிற அளவுக்கு எங்களுக்குள்ள ஒன்னும் இல்ல. இனிமே இந்தப் பேச்சை எடுக்காதீங்கப்பா!” இவன் உறுதியாய் உரைத்தான்.
“சரி அந்தப் பொண்ணு வேணாம். நான் உனக்கு பொண்ணு பார்க்குறேன். நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ டா!” மகேந்திரா குரலில் ஆற்றாமை ததும்பி வழிந்தது. தன் மனைவி இருக்கும்வரை நிவின் அவரது காலைச் சுற்றும் பூனைக் குட்டி போல அவரைத்தான் சுற்றி வருவான். படித்து முடித்ததும் வெளியூர்களிலிருந்து நிறைய நல்ல வேலை வாய்ப்புகள் கிடைத்தும் தாயைவிட்டு எங்கும் செல்ல முடியாதென உள்ளூரிலே குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தான். தாயுடனே சுற்றுவான். அப்படியிருக்கையில்தான் நிவினின் தாய் பரணி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு முற்றிய நிலையில்தான் மருத்துவர்கள் நோயைக் கண்டுபிடிக்க, அவரது உயிரைப் பிடித்து வைக்க முடியாது போனது.
இறப்பதற்கு முன்பு சில மாதங்களாக மருத்துவனையில் தான் பரணியை அனுமதிக்கப்பட்டிருந்தார். நிவின்தான் அவருடனே இருந்து பார்த்துக் கொண்டான். மூன்று மாதங்களிலே பரணி இறைவனடி சேர்ந்துவிட, இவனால் தாயின் இழப்பை அத்தனை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரில்லாத வீட்டில் இருக்க முடியாது என மறுத்து மதுரையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து இங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாங்கி குடிபுகுந்து விட்டான்.
பாலுமகேந்திரா விருதுநகர் அரசுப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அலுவல் நிமித்தமாக அவரால் மகனுடன் தங்க இயலவில்லை. அதுவும் மட்டுமல்லாமல் விருதுநகரில் தான் அவர்களுக்கு சொந்தமான பூர்வீக விடு, விவசாய நிலம் என அத்தனை சொத்துக்கள் குவிந்திருந்தன. அவற்றைப் பராமரிக்கும் பொருட்டு அவரால் இடம் மாறுதலை ஆதரிக்க முடியவில்லை. முதலில் நிவின் செல்வதில் அவருக்கு விருப்பமில்லைதான். இருந்தாலும் மகனுக்கு மனமாற்றம் வேண்டும் என்று ஒப்புக் கொண்டார்.
வாகீஸ்வரி மதுரையில் வாசிப்பதில் அவருக்கொரு நிம்மதி உண்டு. இவர் மதுரைக்கு செல்ல ஓரிரண்டு மணி நேரங்கள் பிடிக்கும். மகனுக்கு ஏதுமென்றால் அவர் பார்த்துக் கொள்வார் என மனதில் சிறு ஆசுவாசம் துளிர்க்க, நிவின் மதுரைக்கு இடம் பெயர்ந்ததும் தங்கைக்கு அழைத்துக் கூறிவிட்டார்.
வாகீஸ்வரி கணவர், பிள்ளைகள் சகிதமாக சென்று நிவினுக்கு வேண்டிய உதவிகளை செய்தார். சிறு வயதில் அவ்வப்போது பார்த்த நினைவு அவனுக்கு உண்டென்றாலும், எளிதில் அவனால் பெரியவர்களிடம் ஒட்ட முடியவில்லை. ஆனால், சிறியவர்கள் இருவரும் அவனிடம் நன்றாய் பேசி பழக, ஒத்த வயதுடையவர்களின் கருத்துக்கள் ஒருமித்திருந்த படியால் அவர்களுக்கு இடையே நட்பு பலப்பட்டிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக நிவினின் வாழ்க்கையில் அவர்கள் ஒரு அங்கமாக மாறியிருந்தனர். இடையே அக்ஷாவும் ஆரோனும் நந்தனா உபயத்தால் மூவர் ஐவராகிப் போயினர்.
மறுநாள் அக்ஷி காலையிலே வந்துவிட்டாள். “குட் மார்னிங் நிவின். இன்னைக்கு உளுந்தங்களி செஞ்சு எடுத்துட்டு வந்தேன். ரெசிப்பி யூட்யூப்லதான் பார்த்தேன். இந்த மாதிரி டைம்ல இது நல்லதாமே. அம்மாகிட்ட கேட்டேன், அவங்களும் சொன்னாங்க. அதான் ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு எடுத்துட்டு வந்தேன்!” எனப் புன்னகையுடன் பேசுபவளை மனம் நோக வைக்க விருப்பமில்லாதவன், தலையை அசைத்து வைத்தான்.
“அங்கிள் எங்க, தூங்குறாரா?” விழிகளால் வீட்டைத் தூழாவியபடி வினவினாள் இவள்.
“நோ... ஹி இஸ் பாத்திங்!” பதிலுரைத்தான் நிவின்.
“நீ க்ளீனிக் கிளம்பலையா?” அவன் நேரத்தைப் பார்க்க, “ஹம்ம்... போகணும் டா. இன்னைக்கு ஒரு க்ன்ப்ரென்ஸ் இருக்கு. அதுக்குப் போக எனக்கு இஷ்டமில்லை. சோ, இங்க வந்துட்டேன். லேட்டா போனா போதும். யூ டோன்ட் வொர்ரீ. காஃபி குடிக்கிறீயா? நான் போட்டுத் தரவா?” என வினவியபடியே சமையலறைக்குள் சென்றாள்.
“வேணாம் அக்ஷா... நான் இப்போதான் காபி குடிச்சேன்!” அவன் குரலை உயர்த்தி அவளுக்கு கேட்குமாறு பதிலளிக்க, “பரவாயில்லை மேன்... நான் போட்ற காபியையும் குடி. ஒன்னுமில்ல!” என மூவருக்கும் குளம்பியைக் கலந்தாள். அவள் அடுக்களையில் இருந்து வெளியே வர, மகேந்திரா குளித்து முடித்து வந்தார்.
“வாம்மா...” என அவர் தலையசைக்க, “குட் மார்னிங் அங்கிள்!” எனப் பளிச்சென புன்னகைத்து அவருக்கொரு குளம்பியைக் கொடுத்தாள்.
“ஏன்மா டெய்லி நீ இங்க மெனக்கெட்டு வர்ற. வேலைக்குப் போற புள்ளை. இங்கேயும் அங்கேயும் அலையணுமா? இதுல சமைச்சு வேற எடுத்துட்டு வர்ற? உங்க வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்களா?” மகேந்திரா கொஞ்சம் அவளுக்காகக் கரிசனையாய் வினவினார்.
அவரைப் பார்த்து புன்னகைத்தவள், “அங்கிள், நீங்க என்ன நினைக்குறீங்கன்னு எனக்கு நல்லாவே புரியுது. நான் இங்க வர்றது என் வீட்டுக்குத் தெரியும். அம்மா, அப்பாகிட்டே சொல்லிட்டுத்தான் வரேன். ரொம்ப கஷ்டமெல்லாம் இல்லை. க்ளினிக் போகும்போதும் அப்படியே நிவினைப் பார்த்துட்டுப் போறேன். அவ்வளோ தான்!” சின்ன தோள் குலுக்கலுடன் பேசியவளை அவர் ஆதுரமாகப் பார்த்தார். நன்றாய் படித்து முடித்து பல் மருத்துவராக வேலை செய்கிறாள் அக்ஷா. கலையான முகம், வெளிர் நிறம் என இந்தக் காலத்து நவீன் யுவதி. பார்த்ததும் கட்டியிழுக்கும் புன்னகை. யாரையும் ஒரு வார்த்தை அதிர்ந்து பேசாத சுபாவம் என அவளுடைய குணங்கள் கூட மென்மையானவை, மேன்மையானவை. இந்தப் பெண்ணை ஏன் மகன் பிடிக்கவில்லை என்று கூறினான் என நேற்றிலிருந்தே கேள்வி தொக்கி நின்றது. சிறிது நேரத்தில் அவள் அகலவும், மகனிடமே கேட்டார் பெரியவர்.
“ஏன்டா நிவினு... இந்தப் பொண்ணை ஏன் வேணாம்னு ஒரு காரணம் சொல்லு டா. நல்லா அழகா இருக்கா. படிச்ச பொண்ணு . பண்பான பொண்ணு டா!” தந்தை மீண்டும் அந்தப் பேச்சிற்கே வர, இவனுக்கு சற்றே சலிப்பாய் இருந்தது.
“ப்பா... அவ அழகா இருக்கா. இல்லைன்னு சொல்லலை. பட், எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல!” என்றான் அழுத்தம் திருத்தமாக.
“ப்ம்ச்... அப்புறம் எப்படிப்பட்ட பொண்ணு உனக்குப் பிடிக்கும் டா?” அவர் குரலை மெதுவாய் உயர்த்தினார்.
“க்வாலிபிகேஷனே கிடையாது. எனக்குப் பிடிச்சிருக்கணும்ன்றது மட்டும்தான் கண்டிஷன்!”
“டேய்... அநியாயம் பண்ணாத டா. உனக்குப் பிடிக்குற மாதிரி பொண்ணை நான் எங்கடா தேட?”
“அது உங்கப் பிரச்சனை!” அசட்டையாகக் கூறி அவன் அறைக்குள் நுழைய, இவர் அவனை முறைத்தார்.
“உனக்கு உடம்பு சரியானதும் நான் பார்க்குற பொண்ணை நீ கல்யாணம் பண்ணணும் டா. இது தான் என்னோட முடிவு!” அவர் கண்டிப்பாய்க் கூற, அறையிலிருந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தான் நிவின்.
“அப்போ நீங்களும் கேட்டுக்கோங்க. நீங்க பார்க்குற பொண்ணை வெறும் ஐஞ்சு நிமிஷம் பார்த்துட்டு லைஃப் பாட்னரா என்னால அக்செப்ட் பண்ண முடியாது. பழகிப் பார்த்து எனக்குப் பிடிச்ச பொண்ணைத்தான் மேரேஜ் பண்ணிப்பேன்!” என அவரது தலையில் இடியை இறக்கினான் மகன்.
“டேய்... அதுக்காக பொண்ணை உன் கூட பழக பெத்தவங்க சம்மதிப்பாங்களா டா. இதெல்லாம் அநியாயமா தெரியலை உனக்கு?” அவர் பல்லைக் கடிக்க, இவன் பெருமூச்சை விட்டுவிட்டு வெளியே வந்தான்.
“ப்பா... சில். ஏன் டென்ஷனாகுறீங்க. ஒன்னுமில்ல, எனக்கு முதல்ல ஹெல்த் சரியாகட்டும். அப்புறம் பார்க்கலாம். மேரேஜ் வேணாம்னு நான் சொல்லலை. எனக்குப் பிடிச்ச பொண்ணா பண்ணிக்கிறேன்னு சொல்றேன். சோ, லீவ் திஸ் டாபிக் நவ்!” என்னவனை இவர் வேதனையாகப் பார்த்தார். முதல்முறையாக மகனின் திருமண பேச்சை துவங்கும்போது பரணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரைப் பார்த்துக் கொள்ள, அவரது இன்மையை ஏற்றுக் கொள்ள என இந்த மூன்று வருடங்கள் ஓடிவிட, அவருக்குமே இப்போதுதான் உறைத்தது. மகனுக்கு முப்பது வயதாகிவிட்டது, அவனுக்கொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மனம் முழுவதும் அந்த எண்ணமே நிரம்பி வழிந்தது.