• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நீ நான் நேசம் - 20 💕 (இறுதி அத்தியாயம்)

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
இந்தக் கதையில் வரும் உமையாள், பிரபஞ்சன் கதைக்கான திரி "என் நெஞ்சோரத்தில்!" சைட்ல ஓபன் பண்ணிட்டேன். என்ஜாய் பட்டூஸ் 💕💕

லிங்க் 👇,



நீ நான் நேசம் – 20 💕 (இறுதி அத்தியாயம்)



சில வருடங்களுக்குப் பிறகு,



அந்தக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், அவர்கள் உறவினர்கள் என அனைவராலும் நிரம்பி வழிந்தது. ஒலிப்பெருக்கி ஒலியும் மக்கள் பேச்சு சத்தமும் செவியை நிறைத்தன.



அன்றைக்கு முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஆதலால் கல்லூரி ஜொலித்துக் கொண்டிருக்க, பேராசிரியர்கள் மாணவர்களை ஒழுங்குப்படுத்தி அமர வைத்துக் கொண்டிருந்தனர்.



கோகுலும் கனிமொழியும் இரண்டாவது வரிசையிலிருந்த இருக்கையை ஆக்கிரமித்திருக்க, அவனுக்கு அடுத்ததாக பிரபஞ்சன், உமையாள், ரகுநாதன், சஞ்சய், ஆராதனா என வரிசையாய் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அருகே தாமரையும் நம்பியும் உட்கார்ந்திருந்தனர்.



“ம்மா... ம்மா!” என கனிமொழிக்கு நேரே பின்னே அமர்ந்திருந்த பிரபாகரன் கையில் கோகுலின் ஆறு வயது மகள் நேசிகா சத்தமாக அழைத்தாள்‌.



“என்ன ம்மா?” என இவள் திரும்ப, “எப்போ மா கேப், ஷீல்ட் எல்லாம் தருவாங்க. எனக்கும் வேணும்!” என்றாள் ஆர்வமாய்.



“பட்டுக் குட்டி, உனக்கு வேணும்னா நீ பெரியாளானதும் படிச்சு வாங்கலாம் டா!” என்று பிரபா கூற, “மாமா... எனக்கு இப்போ வேணும். அம்மாதான் தரேன்னு சொல்லி கூட்டீட்டு வந்தா!” என்ற சின்னவள் அழத் தயாராகி உதட்டைப் பிதுக்கினாள்.



“ப்ம்ச்... பட்டூ அழாம இருந்தா மாமா உனக்கு கார்னெட்டோ மினி வாங்கித் தருவேன்!” என பிரபாகரன் கூறியதும் இவளது பற்கள் தெரியத் தொடங்கின.



“நிஜமா மாமா?” என சின்னவள் ஆச்சர்யமாய்க் கேட்க, “ப்ராமிஸா டா!” எனப் புன்னகைத்த பிரபாகரனை அவளது மனைவி சுபா பார்த்து சிரித்தாள்.



“குழந்தை எதை சொன்னா, அமைதியாவாளோ, அதை சொல்லி ஆஃப் பண்ணுங்க!” என கணவனை முட்டியால் இடித்தவளின் கரங்களில் அவர்களது ஒரு வயது மகன் தூங்கிக் கொண்டிருந்தான். பிரபாகரன் முனைவர் பட்டம் முடித்து தான் படித்த கல்லூரியிலே பேராசிரியர் வேலைக்குச் சேர்ந்திருக்க, திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்திருந்தது.



அவனுடைய வழிகாட்டுதலின்படி தான் கனிமொழியும் தனது முனைவர் படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தாள். அவளது வற்புறுத்தலின் பெயரில்தான் இவர்கள் இருவரும் இங்கே வந்திருந்தனர்.



“அக்கா... அக்கா!” எனத் தன் கையை சுரண்டிய தம்பியை என்னவெனப் பார்த்தாள் ஆராதனா. அவள் இப்போது மேல்நிலை வகுப்பிலிருக்க, சஞ்சய் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.



“எனக்கு சுச்சா வருது!” சின்னவன் கூறவும் அவனது கையைப் பிடித்து எழுந்தவள், “ம்மா... தம்பி கூட ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன்!” என்று உமையாளிடம் உரைத்துவிட்டு நகர, பிரபஞ்சன் எழுந்து அவர்களோடு சென்றான்.

உமையாள் கணவனைப் பார்த்து புன்னகைத்தாள். பிள்ளைகளை எங்கேயும் தனியாக விடாது இவன் அவர்களுடனே இருப்பது போலத்தான் பார்த்துக் கொண்டான்‌. சாரதா கூட மகனை ஓரிரு முறை சிரிப்பும் முறைப்புமாய் கண்டித்தார்.



“பிரபா, அவங்க அவங்களைப் பார்த்துக்கிற அளவுக்கு வளர்ந்துட்டாங்க. நீ பின்னாடியே போகாத!” என அவர் அதட்டினாலும் மகன் கேட்பதாய் இல்லை. அவரும் விட்டுவிட்டார்.



இப்போதும் அவன் செய்கையில் மருமகளை முறைத்தார் பெரியவர். “அத்தை, என்னை ஏன் முறைக்குறீங்க? எல்லாம் உங்கப் பையனைக் கேளுங்க!” என்றாள் சிரிப்புடன். கோகுலும் இவர்களது பேச்சை சிரிப்புடன் கேட்ட வண்ணமிருக்க, கனிமொழி சற்றே இருக்கையை சரி செய்து அமரவும், இவனின் கவனம் மனைவியிடம் சென்றது.



“என்ன டி, என்ன செய்யுது? அன்கம்பர்டபிளா இருக்கா?” எனக் கேட்டு அவளது கையைப் பிடித்த கணவனைப் பார்த்து இல்லையென தலையை ஆட்டியவளின் முகம் தாய்மையில் மிளிர, எட்டுமாத வயிறு கனிந்து கூம்பியிருந்தது.



நேசிகா பிறந்ததும் அடுத்த குழந்தை கண்டிப்பாக வேண்டாமென்று கனிமொழி அடமாய் இருக்க, இத்தனை வருடங்கள் காக்க வைத்தப் பின்னே கடவுள் அவர்களுக்கு இரட்டைக் குழந்தையைப் பரிசளித்திருந்தார்‌.



“ஜூஸ் எதுவும் வாங்கிட்டு வரவா கண்ணம்மா?” என்றவன் அவளது முகத்தையே பார்க்க, “ஒன்னும் இல்லங்க எனக்கு. சேர்லயே உட்கார்ந்திருக்கதுல முதுகு லைட்டா வலிக்குது!” என்றாள் முகத்தை சுருக்கி விரித்து.



“சரி, ஒரு பத்து நிமிஷம் நடந்துட்டு வருவோமா?” எனக் கேட்டவனிடம் வேண்டாம் எனத் தலையை அசைத்தவள், “இன்னும் பத்து நிமிஷத்துல பங்க்சன் ஸ்டார்ட் ஆகிடும். முடிஞ்சதும் கிளம்பலாம்!” என நன்றாய் சாய்ந்தமர்ந்தாள்.



குழந்தைகளை அழைத்துச் சென்ற பிரபஞ்சன் அப்படியே பழச்சாறையும் வாங்கி வந்தான். நேசிகாவிற்கு முதலில் கொடுத்தவன், பின் கனிமொழிக்கும் கொடுத்தான். பெரியவர்கள் வேண்டாம் என்றுவிட, சிறியவர்கள் மட்டும் அருந்தினர்.



“இன்னும் நீங்க எல்லாரும் என்னைக் குழந்தையாவே ட்ரீட் பண்றீங்க?” சிணுங்கிய கனியின் முகத்திலிருந்த வியர்வையைப் புறங்கையால் துடைத்த கோகுலின் முகத்திலும் கேலிச் சிரிப்பு.



“நீ அவங்களோட சேர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்றதை எப்போ நிறுத்துறீயோ, அப்போதான் டி நாங்க உன்னை பெரியவங்க லிஸ்ட்ல சேர்த்துக்குவோம்!” என்றவனை இவள் முறைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கோகுல் கூறியது போல அவளால் பனிக்கூழ் உண்பதை நிறுத்த முடியாதென மனம் கூறியதில் அவளுக்குமே புன்னகை முகிழ்த்தது. சிறிது நேரத்தில் விழா தொடங்கியது. கல்லூரி முதல்வர், சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பேசி முடித்து ஒவ்வொரு மாணவராக அழைப்பு சான்றிதழ்கள், கேடயம் என அனைத்தும் வழங்கப்பட்டன.



கனிமொழி பெயர் அழைக்கப்பட, கோகுல் அவளை அழைத்துச் சென்று மேடையேற்றினான். அவன் வராது அப்படியே நிற்க, இவள்தான் யாருடைய கண்ணையும் கவராது கணவனையும் இழுத்துச் சென்று சான்றிதழ்களையும் பரிசையும் வாங்கினாள். கனிமொழி வேதியியலில் செய்திருந்த திட்டத்தை செயல்வடிவம் கொடுக்க, அரசு முன்வந்திருக்க, அவளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.



தாயும் தந்தையும் மேடையேறி பரிசு வாங்கியதில் நேசிகாவிற்கு அத்தனை மகிழ்ச்சி. பிரபாகரன் கையிலிருந்து துள்ளினாள். “கீழே விழுந்துடாத நேசிகா...” என அவன் குழந்தையைத் தன் மடிமீது தூக்கி அமர வைத்தான்.



ஆராதனா அருகில் அமர்ந்திருந்த சஞ்சய் சாரதாவிடம் தாவினான். அவர் மடியில் ஒய்யாரமாக அமர்ந்தவன், தந்தைக் கையை சுரண்டினான். அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பிரபஞ்சனின் கவனம் மகனிடம் குவிந்தது.



“என்னடா?” என அவன் வினவ, “ப்பா... கனி அத்தைக்கு கொடுக்குற மாதிரி அம்மாவுக்கு எப்போ ப்ரைஸ் தருவாங்க பா?” என வினவினான்.



“என் அம்மாவுக்கு மட்டும்தான் ப்ரைஸ். உங்க அம்மாவுக்கு தர மாட்டாங்க?” பின்னே அமர்ந்திருந்த நேசிகா முன்பக்கம் தலையை எக்கி நீட்டி உடலை அசாதாரணமாக வளைத்து விழிகளை உருட்டியபடி கூறினாள். அவளுக்கும் சஞ்சய்க்கும் ஏனோ ஒத்து வரவில்லை. இருவரும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். மூன்று வயது வித்யாசம் அவர்களுக்குள் பெரிதாய் தெரியவில்லை. அதனாலே நீயா? நானா? என்ற சண்டை வந்தது.



“நான் உன்கிட்ட கேட்லை நேசிகா. என் அப்பாகிட்ட தான் கேட்டேன். ஷட் அப் யுவர் மௌத்!” என சஞ்சய் சீற, “நீ முதல்ல ஷட் அப் பண்ணு!” என்றாள் அவள்.



“சஞ்சுமா... நேசி உன்னைவிட சின்ன பொண்ணு. நீ அவகிட்ட சண்டை போடக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல?” என்ற உமையா சிறிய கண்டிப்புடன் மகனைத் தன் மடியில் அமர்த்தினாள்.



“ம்மா... நான் ஒன்னும் அவளோட ஃபைட் பண்ணலை. அவ தான் முதல்ல பேசுனா. ஷி இஸ் வெரி பேட் கேர்ள்!” என்றவனின் முகம் தாய் தனக்கு ஆதரவாகப் பேசவில்லை என்றதும் கசங்கியது.



“சஞ்சுமா, அவ பாப்பா டா. தெரியாம பேசி இருப்பா. நீதான் குட் பாயாச்சே, அதை விடு!” என்று இவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, “நான் பேட் கேர்ள் இல்ல. சஞ்சய் நீதான் பேட் பேட் வெரி வெரி வெரி...” என இழுத்த நேசிகா, “பேட் பாய்...” என முறைத்து தனது குட்டி முடியை ஆட்டினாள்.



“ம்மா... பாரு அவளை!” என சஞ்சய் தாயிடம் புகாரளிக்க, “ஏன் டி... நீ கொஞ்ச நேரம் அமைதியா இரேன். இல்ல, உங்கம்மா கிட்ட சொல்லிக் கொடுத்துடுவேன்!” என சின்னவளை மிரட்டியவள், இருவரையும் அமைதிபடுத்தினாள். அதற்கே அவளுக்கு மூச்சு வாங்கியது. இவர்களை சமாதானம் செய்தே அவளுக்கு பாதி நாள் கழிந்துவிடும். ஆரா இருவருக்கும் பொதுவானவள்.



சஞ்சய் ஆரா தன்னுடைய அக்கா என சண்டையிட, நேசிகா அவளைத் தன் அக்கா என சண்டையிட காலையில் இருவரையும் எதுவும் செய்ய முடியாது உமையாள் திணற, கனிமொழிதான் மகளை அதட்டி உருட்டி பிரபாகரிடம் அவளை அமர வைத்திருந்தாள். சஞ்சய் ஆராவுடன் அமர்ந்து நேசிகாவை வெறுப்பேற்றியதை பெரியவர்கள் அறியவில்லை. அதை மனதில் வைத்துதான் இப்போது அவனிடம் வம்பிழுத்தாள்.



“ம்மா... அப்பா நான் கேட்ட கேள்விக்கு ஆன்சரே பண்ணலை. உனக்கு எப்போ மா இந்த மாதிரி ப்ரைஸ் தருவாங்க!” என மீண்டும் அந்தக் கேள்விக்கு வந்தவனை உமையாள் அயர்ச்சியாய்ப் பார்த்தாள். சஞ்சய் எதையும் எளிதில் மறக்க மாட்டான்‌. பிரபஞ்சனை விட அதி புத்திசாலி.‌ அவன் கேள்விக்குப் பதிலளிப்பது என்பது அத்தனை எளிதல்ல.



‘உங்கப் பையன் தானே? நீங்களே பதில் சொல்லுங்க!’ எனப் பாவமாய் தன் முகத்தைப் பாரத்த மனைவியை நோக்கி புன்னகைத்து தலையை அசைத்து, ‘நான் பார்த்துக்கிறேன்!’ என்றான் பிரபஞ்சன்.



“சஞ்சு கண்ணா... அம்மாவுக்கு எதுக்கு எல்லாரும் பிரைஸ் தரணும். அம்மாவே நமக்குப் பெரிய கிஃப்ட் டா. நம்மளை கேர் பண்ணிக்கிறவங்களை என்ன சொல்லுவோம்?” என இவன் கேட்க, “ஹம்ம்... தட் டே நீங்க சொன்னீங்களே. அம்மா நமக்கு ஏஞ்சல்னு...” என சின்னவன் துள்ளலாய்க் கூறினான்.



‘என்ன இது? எப்போ?’ என உமையாளும் கணவனை ஆர்வமாய்ப் பார்க்க, “குட் பாய் சஞ்சய்...” என மகன் கன்னம் கிள்ளினான் பிரபஞ்சன். அதில் சின்னவன் தன்னைப் பெருமையாய் உணர்ந்து, நேசிகாவைப் பார்த்தான். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.



“அம்மா நமக்கு ஏஞ்சல் மாதிரி. ஏஞ்சல்ஸ் தானே நமக்கு கிஃப்ட் கொடுப்பாங்க, நம்ம அவங்களுக்குக் கொடுக்கத் தேவையில்லை!” எனவும், “அப்போ அம்மா நம்ம எல்லாருக்கும் கிஃப்ட் கொடுப்பாங்களா?” என அடுத்தக் கேள்வியை முன் வைத்தான்.



“ஆமா... அம்மா டெய்லி உன்னைக் கேர் பண்ணிக்கிறாங்க. உனக்காக எல்லாம் பார்க்குறாங்க. உனக்கு சாக்லேட், ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித் தராங்களே. அதெல்லாம் கிஃப்ட்ஸ் தானே கண்ணா!” என்றான். தந்தை கூறியதும் சின்னவன் புரிந்ததாய் தலையை அசைக்க, “மாமா... அப்போ என் அம்மா ஏஞ்சல் இல்லையா. அதான் அவங்களுக்கு எல்லாரும் கிஃப்ட் தராங்களா?” என்ற நேசிகா கண்ணைக் கசக்கினாள்.



“உன் அம்மா ஏஞ்சல் இல்ல, விச்!” என சஞ்சய் கூறி தன் ஓட்டைப் பற்கள் தெரிய சிரிக்கவும், அவள் அழ ஆரம்பித்தாள். பிரபஞ்சன் என்ன பதில் சொல்வது எனத் தெரியாது விழிக்க, அதற்குள் கோகுல் வந்து மகளைத் தூக்கிக் கொள்ளவும் மற்றவர்களுக்கு நிம்மதி பிறந்தது. குழந்தைகள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது பெரியவர்கள் அத்தனையாய் திணறிப் போயினர்.



விழா முடிந்ததும் அங்கேயே உணவை உண்டுவிட்டு வீட்டிற்குக் கிளம்பினர். பிரபாகரன் அங்கிருந்தே விடை பெற, பிரபஞ்சனும் உமையாளும் ஆடைத் தயாரிப்பகம் செல்ல, கோகுல் மனைவி குழந்தை மற்றும் சாரதா, ரகுநாதனோட வீடு வந்து சேர்ந்தான்.



ஆராதனாவோடு சஞ்சயும் நேசிகாவும் சென்றுவிட, சாரதா குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதாய் உரைக்க, கனிமொழி தன்னறைக்குச் சென்று ஓய்வெடுத்தாள். ரகுநாதனும் அறைக்குள் நுழைய, இவன் வெளியே ஒரு வேலையாகச் சென்றுவிட்டு மாலை நுழைந்தான்.



கனிமொழி இன்னுமே உறங்கிக் கொண்டிருக்க, இவன் உடைமாற்றி வந்து அவளை எழுப்பினான். “கண்ணம்மா, எழுந்திரி டி. ஈவ்னிங் ஆச்சு, அப்புறம் நைட் தூக்கம் வராது...” என அவளது கன்னத்தை மென்மையாய்த் தட்டினான்.



“அதெல்லாம் நைட்டும் நான் நல்லாதான் தூங்குவேன். போங்க... போங்க!” என மறுபுறம் திரும்பிப்படுத்தாள் பெண். அவளை அதட்டி உருட்டி வெளியே அழைத்து வந்தான்.

ரகுநாதன் தேநீர் கொடுக்கவும் அதை வாங்கிக்கொண்டு இருவரும் வீட்டின் பின்புறம் சென்று அமர்ந்தனர். சூடான பானம் உள்ளிறங்கியதில் கனிமொழிக்கு உறக்கம் கலைந்திருந்தது.

மெல்லிய கூதக் காற்று உடலை ஊடுருவ, கணவனுக்கு அருகே நெருங்கி அமர்ந்தாள் பெண்.
“குளிருதா டி, உள்ளே போகலாமா?” என்றவன் அவளது தோளில் கையை வைத்து அணைத்துக் கொண்டான்.



“இல்ல, கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாம்...” என்றவளின் பார்வை செடி கொடி எனத் தொட்டு கணவனிடம் நிலைத்தன. நன்றாய் இரவு கவிழ்ந்திருக்க, பௌர்ணமி முழு நிலா வெளிச்சம் அவர்களை நிறைத்தது.



மெல்லிய சிரிப்புடன் தன் முகம் பார்க்கும் மனைவியை மென்னகையுடன் நோக்கியவன், “என்ன டி?” என்றான்.



“ஹம்ம்... ஐ திங்க் ஐ லவ் யூ...” என்றவளின் கூற்றில் இவனுக்கு ஆச்சர்யமும் சிரிப்பும் பொங்கியது.



“என்னவாம் திடீர்னு?” என்றவன் கரங்கள் மனைவி கரத்தை நேசத்துடன் பிடித்துக் கொண்டன.



“தெரியலை... சொல்லணும்னு தோணுச்சு. அதான் சொன்னேன்!” என்றவளின் முகம் அவளது அகத்தைப் பிரதிபலித்தன.



“லவ்னா என்னடி கண்ணம்மா?” எனக் கேட்டான் கணவன்.



“அன்பு, பாசம், நேசம். இதெல்லாம் தான்!”



“சரி, அப்போ என் மேல நிறைய அன்பு வச்சிருக்க ரைட்?” என்றவனை யோசனையாய்ப் பார்த்தவளின் தலை தானாக ஆடியது‌.



“ஏன் என் மேல லவ் வந்துச்சு? யோசிச்சு பார்த்திருக்கீயா?” என்றவனை முறைத்தவள், “ஒரு ஐ லவ் யூ சொன்னது குத்தமா?” என இரைந்தாள்.



“ப்ம்ச்... நான் கேட்டதுக்கு பதில் சொல்லு டி...” என்றவன் அடமாய் நிற்க, சில நொடிகள் யோசித்தாள்.



“பொய் சொல்லாம சொல்றேன். ஒருத்தவங்க மேல காதல் வரணும்னா அவங்க நம்மளை சந்தோஷமா பார்த்துக்கணும், கேர் பண்ணணும், அக்கறையா இருக்கணும். ரொம்ப சரியா சொன்னா, நம்ம நம்மளா யார்கிட்டே இருக்க முடியாதோ, அவங்க மேல நமக்கு அன்பு காதல், ஹம்ம் நேசம் எல்லாம் வரும். அதை நம்மால உணர முடியாது. கைண்ட் ஆப் பீலிங் லைக் கடவுள் மாதிரி தான். இருக்குன்னு நம்புனா காதல் உண்மை, இல்லைன்னு நினைச்சா இல்ல தான்!” என்று மனதில் உள்ளதை உரைத்தாள்.



“அப்போ நான் உன்னை நல்லா பார்த்துக்கிறேனா டி கண்ணம்மா? நீ சந்தோஷமா இருக்கீயா?” எனக் கேட்டவளின் குரல் முழுவதும் அவள் மீதான நேசம், அவர்களுக்கு இடையேயான நேசம்தான் மிளிர்ந்தது.



இப்போது கனிமொழி உதட்டில் புன்னகை படர்ந்தது. அவனை பாசமாய்ப் பார்த்தவள், “வெறும் வார்த்தைல என்னங்க இருக்கு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதை வார்த்தையால சொன்னாதான் உங்களுக்குத் தெரியுமா?” என்றவள் சில நொடிகள் நிறுத்தி, “இல்ல, ஏன் இவ இத்தனை வருஷத்துல இந்த வார்த்தையை சொல்லலைன்னு இப்படி கேட்குறீங்களா?” என வினவினாள்.



கோகுல் தலை அதை மறுத்தலித்தன. “நிச்சயமா இல்ல டி. இப்போ நீ செல்லவும் ஒரு ஆசை. என் பொண்டாட்டியை நான் எப்படி பார்த்துக்குறேன்‌. நல்லா பார்த்துக்கிறேனா? பெத்த அம்மா அப்பா, இருபது வருஷமா வளர்த்தவங்களை விட்டுட்டு என்னை மட்டுமே நம்பி வந்தப் பொண்ணை நான் அவளோட நம்பிக்கையைக் காப்பாத்தி இருக்கேனா? நிறைவா வச்சிருக்கேனான்னு கேட்கத் தோணுச்சு. நீ சொல்ற பதிலைக் கேட்டு சந்தோஷப் படணும்னு ஆசை. அதைவிட இன்னும் என் பொண்டாட்டியைத் தாங்கணும், கொஞ்சணும், குழந்தைகளையும் அவளையும் பிரிச்சுப் பார்க்கக் கூடாதுன்னு எண்ணம்!” என்றவன் கரத்தை எடுத்து அதில் முத்தமிட்டவள், “ஆசை, எண்ணம்... தோணுச்சுன்னு சொல்ற எல்லாத்தையும் என் புருஷன் ஏற்கனவே செஞ்சுட்டுதான் இருக்காரு. வெறும் வாய் வார்த்தையாய் இல்லாம என்னை ராணி மாதிரிதான் அவர் பார்த்துக்குறாரு, இனிமேலும் என்னை அப்படியேதான் பார்த்துப்பாரு. உங்களுக்கு டவுட் எல்லாம் வேணாம் மிஸ்டர் கோகுல்...” என்றவளின் வாழ்வு கோகுலோடு பரிபூரணம்தான். அவளுக்கான நிறைவு கணவன்.



அவளைப் பொறுத்தவரை நீ நான் நேசம் அவர்களது நேசிகா, ரகுநாதன் அதில் அடக்கம். மனைவியின் வார்த்தைகளில் அவள் பேசும்போது மின்னிய விழிகளில் இவனுக்குள்ளும் ஒரு நிறைவு.



“நிஜமாவா டி?” மீண்டும் அவளிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்க வேண்டும் என்ற அவா, ஆவல்.



“நிஜமா, சத்தியமா, ப்ராமிஸா, இந்தக் கோகுல் என்னை நல்லா பார்த்துக்கிறாரு. ஐ லவ் ஹிம். இப்போ இல்ல எப்பவுமே ஐ வில் லவ் ஹிம். ஏழு வருஷம் கழிச்சு சொன்னாலும் இத்தனை வருஷ வாழ்க்கை முழுசும் எப்படி இருந்தேன்னு என் மனசுக்குத் தெரியும்!” என்றவள் எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.



“போடி...” என அவளைத் தள்ளி அமர்த்தியவனை இப்போது குறும்புடன் பார்த்தாள் கனி.



“போதும் பார்வை... எழு முதல்ல நீ, உள்ளே போகலாம். குளிர் உடம்புக்கு ஒத்துக்காது!” என்றவன் அதட்டலாய் அழைக்கவும், இவள் எழவே இல்லை. சன்னமான சிரிப்புடனே அவனைப் பார்த்தாள்.



“ஒரு மனுஷன் கத்தீட்டு இருக்கேன். அசையுறாளா பாரு இவ!” என முறைத்தவனை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டியவள், “தூக்கீட்டு போங்க...” என்றாள் ஆசையாய். இப்போது அவன் முகம் கனிந்தது.



“அப்பா ஹால்ல இருப்பாரு டி...” என்று கோகுல் தயக்கமாய்க் கூற, “டைம் எட்டு... பேத்திக்கு சாப்பாடு ஊட்டணும்னு அவளைக் கூப்பிட போய்ட்டாரு. சத்தமே இல்ல வீட்ல. சோ தூக்கலாம், தப்பில்லை!” என்றவளை சிரிப்புடன் கைகளில் அள்ளியவன் அறைக்குள் சென்று படுக்க வைக்கவும், “அப்பா...” என நேசிகா உள்ளே வந்தாள்.



“வா குட்டிமா...” என அவளை நோக்கி கையை விரித்தவனிடம் தாவியவள், “ப்பா... சஞ்சய் என்னை கீழே தள்ளிவிட்டுட்டான். நீங்க வந்து என்னென்னு கேளுங்க!” என்று உதட்டைப் பிதுக்கிக் கண்ணைக் கசக்கினாள் சின்னவள்.



“என் பொண்ணை அவன் கீழ தள்ளி விட்டுட்டானா? இரு அவனைப் போய் திட்டலாம். அதுக்கு முன்னாடி வெளியே பஞ்சு மிட்டாய் விக்கிறாங்க. வாங்கி சாப்பிட்டு போய் திட்டலாமா குட்டி?” என அவன் கேட்டதும், “பஞ்சு மிட்டாய் சாப்ட்டே போகலாம் பா!” என செல்லமாய் சிணுங்கினாள் மகள். கோகுல் இப்போது கனிமொழியை நக்கலாகப் பார்
க்க, அதில் இவளது முகம் சிவந்தது.



“ஹக்கும்... விதை ஒன்னு போட்டா, சுரை ஒன்னா முளைக்கும். போங்க... போங்க!” என அவனை விரட்டியவளின் முகம் சிரிப்பில் மலர, குழந்தையோடு செல்பவனை ஆசையாய்ப் பார்த்தாள் பெண்.



சுபம்‌... 💕


கண்டிப்பா கதை எப்படி இருந்ததுன்னு ரெண்டு வார்த்தை சொல்லீட்டுப் போங்க மக்களே! நான் உங்களோட கருத்துகளுக்காக வெயிட் பண்ணுவேன். நிறையோ, குறையோ செப்பவும் 😎😍 இதுவரைக்கும் கருத்துகளைப் பகிர்ந்து ஊக்குவித்த அனைவருக்கும் நனி நன்றிகள். யாருக்கும் ரிப்ளை பண்ணலை‌. சோ கோவிக்க வேண்டாம். இந்த அப்டேட்ல எல்லாருக்கும் பக்கம் பக்கமா ரிப்ளை பண்ணுவேன். அதனால் நீங்களும் பெருசா கமெண்ட் பண்ணலாம். தப்பில்லை 😍

அடுத்த கதையின் தலைப்பு "இளவேனிற் காலப்பஞ்சமி" எப்படி இருக்குன்னு சொல்லீட்டுப் போங்க. எப்போ ஆரம்பிப்பேன்னு தெரியலை. பார்க்கலாம் சீக்கிரம் 💕
 
Active member
Messages
341
Reaction score
229
Points
43
Simple ah sollanum ah oru cute love story ithu
Gokul mozhi rendu perumae virupam illa na kooda marriage na ra oru bonding kula enter agi avanga kula develop aana kadhal ah rombha azhaga solli irukiga ithula ennaku rombha pidicha vishyam onnu endha uravu kula vum ego parka koodathu
Second oruthar oda replica ah innoruthar kula theda koodathu avanga la avangala vae yetha kita than life nalla irukum
 
Active member
Messages
103
Reaction score
67
Points
28
Rendu varathai naa
Amazing story sis
Manasu lessa oru soothing feel
good story
Superb narration
Gokul n kani characters
Avanga kulla irundha misunderstanding adhukana ah thelivu ellamae semma semma 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
Well-known member
Messages
409
Reaction score
303
Points
63
யதார்த்தமான கதை. இயல்பான காரெக்டர்ஸ். வயசு வித்யா.சம் காரணமா முதலில் தடுமாறினாலும் இருவருமே சுதாரித்து அதைக் கடந்து வந்தது சூப்பர்👌👌👌👌. பிரபாவோட அட்வைஸ் கோகுலுக்கு நிறையவே உதவி இருக்கு. அருமையான கதை 👌👌👌. அடுத்த கதை டைட்டில் சூப்பர்.
 
Well-known member
Messages
854
Reaction score
626
Points
93
Superrrrrrrrrana story ma
Azhaghana ending
Kani KU eatha maathiri Gokul maarittan
Kani Kum nesika Kum different eh theriyala😜😜😜😜😜😜😜😜
Kutties rendu peroda fight azhagha irukku
Umayaal praba saratha amma
Gokul APPA ellarume superrrrrrrrr character
Ellaarayum romba miss pannuven
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Top