நின் நெஞ்சம் நேர்பவளே ! - 4

Messages
32
Reaction score
20
Points
8
அத்யாயம் -4

காலை அலார சத்தத்தில் எழுந்த கார்த்திக் பக்கத்தில் இருந்த குணலை உதைத்து எழுப்பினான் திடுக்கிட்டு எழுந்தவன் என்னடா ஆச்சு என்று பதற ஆஃபீஸ்க்கு லேட் அகுதுடா என்று சொல்ல இருவரும் வேகமாக தங்களை தயார் செய்தார்கள் .

மிரு தன்னை சீக்கரம் ரெடி ஆனவள் கீழே வர சிவகாமி வாயில் கையை வைத்தவர் இன்னைக்கு என்ன மழைவரப்போகுதா என கேட்டு மிருவின் எரிச்சலை கூட்ட

அம்மா எனக்கு இன்னைக்கு சாப்பாடு வேண்ட நா கேண்டீன்ல சாப்டுக்குர என்று சொல்ல சிவகாமி - "மிரு ரெசிக்னேஷின் லெட்டர் தந்துட்டு சீக்கரம் வந்துடு இனிமே எனக்கு வேல செய்ய ஒரு அடிமை சிக்கிடுச்சு என்று மனதில் சொல்வதாக நினைத்து வாய்விட்டு சொல்லிட மிரு அம்மா ... இரு வந்து பாத்துக்கற என்று சொல்லி வேகமாக சென்றாள் பெண்ணவளுக்கு இதை எப்படியாவது கார்த்திக் கிடம் பேசவேண்டும் என்று சென்றுவிட .

பெங்களூரு சிட்டி நெரிசலில் தப்பித்து அலுவலகம் வந்த மிரு முதலில் தேடியது கார்த்திகைதான் அப்பொழுதுதான் உள்ளே வந்த காவ்யா விடம்

"கவி கார்த்தியை பாத்தியா " என்று படபடப்பாக கேட்ட

"மிரு ரிலாக்ஸ் என்ன ஆச்சு நேத்து நல்லாத்தானே இருந்த " என கேட்டு அமைதி படுத்தினால் .

நேற்று நடந்த அனைத்தையும் சொல்ல ஒரு அதிர்ச்சி தான் காவ்யாவிட்கு

"நீ சம்மதம் இல்லனு சொல்லிட்டா இந்த கல்யாணம் நடக்காத மிரு " -கவி

"அப்படித்த அப்பா சொன்னாரு என்னோட சம்மதம் இல்லாம இது நடக்காது அந்த நம்பிக்கைலதா இருக்க கவி " என்று சொல்லி கொண்டிருக்கும் போது அங்கு வந்த கார்த்தி "ஹாய் மிரு என்ன சீக்கரம் வந்துட்டா "என்று சர்வ சாதாரணமாக கேட்டவனை பார்த்த மிரு சிரியதாக ஒரு மூலையில் மனம் வலித்தாலும் காட்டிக்கொள்ளாமல் " நைட் மெசேஜ் பண்ணனே பாக்கலயா" என்று சிறிய குரலில் கேட்க .

சிரித்தவாறே சமாளிக்கும் விதமாக "ஓ நைட் ஒரே டயர்ட் அதுனால சீக்கரம் தூங்கிட்ட மிரு மோர்னிங் லேட் அதனாலதா பாக்கல "என்று அவளை சமாதனம் செய்ய உடனே தொலைபேசியை எடுத்தவன் அப்படி என்ன முக்கியமான செய்தி என்று நினைத்தவாறு பார்த்தவனுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை விழி பிதுங்க "மிரு இது எப்படி நீதானா உங்க அப்பாட்ட பேசுறன அதுக்குள்ள " அவனுக்குத்தான் வார்த்தையே வரவில்லையே இப்பொழுது தான் தன் வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கிறது என்று நினைத்தவனுக்கு இது இடியாக இருக்க .

மிரு விரிவாக சொல்ல கொஞ்சம் மனம் ஆறினாலு மிருவின் தந்தை மீது கோவமாக வந்தது கார்த்திக்கு .

மிரு கலங்கும் தன் விழியை கட்டுப்படுத்தியவள் தான் இங்கு வேலை செய்ய போவதில்லை என்றும் எல்லாம் கார்த்திக் கைகளில் தான் தனது வாழ்கை என்றும் சொல்லி சென்றுவிட இப்பொழுது தலை சுத்தியது கார்த்திக்கு .

இரண்டு நாள் போனதே தெரியவில்லை காலம் தனது வேலையை யாருக்காகவும் நிற்பதில்லை .

அந்த பெங்களூரின் இரவில் செல்லும் வாகனங்கள் சாலையோர தீப்பந்தம் போல் மனிதன் செய்த தீப்பந்தத்தின் அழகில் இன்னும் சற்று அழகாக காட்சியளித்தது பல நிறுவனங்களை தன்னுள் அடக்கிய அந்த நகரம் .

நிலவின் ஒளியை விட அங்கு அலங்கரிக்க பட்ட செயற்கை விளக்குகளின் ஒளி பிரகாசிக்க .

நிறுவனங்களில் பணிபுரியும் அணைத்து பணியாளர்கள் அவர்களது குடும்பங்கள் என்று வருகை தந்து இருக்க ராஜதேவ் வீட்டின் முன்னால் வந்து நின்றது கார் அதில் இருந்து இறக்கிய மகனை வரவேற்க ஆரத்தி தட்டுடன் இருக்க சரவாத்தை அன்புடன் ஆரத்தி எடுத்து வரவேர்த்தார் திலகா. வந்தவனின் சற்று விரிந்தது அவ்வளவே . அவன் வரும் முன்னரே அனைத்தையும் கூறித்தான் வைத்து இருந்தார் ராஜதேவ் . சரவாத் ஒரு தனி காரிலும் ராஜதேவ் மற்றும் திலகா ஒரு காரிலும் புறப்பட்டனர் .

சிவகாமி ,"ஏக கொஞ்சம் யோசிச்சு பாருங்க பின்னாடி நா இருக்கும்போது ஏகிட்ட கேக்காம எதுக்கு கல்யாணம் பண்ணிங்கன்னு வந்து கேட்ட என்ன பண்றதுங்க "

"அப்படி வந்து கேட்ட நா பேசிக்குற அது இல்லாம நாம எங்க எப்படி இருந்த நம்ப எதுரிக்கு கவல இல்ல அவங்கள எதுகண்டுக்க மாட்டாங்க நீ கொழப்பிக்காத "-வேதாசலம்

அத்துடன் இந்த பேச்சுக்கு முற்றும் என்று முடித்துக்கொண்டு கீழே சென்றுவிட்டார்

"இவர் எதுக்கு இப்படி பன்றாருனு தெரில ராஜா அண்ணா வீட்டுக்கு பொண்ணு மருமகளா போனாலு சந்தோசம்தா இருந்தாலு" என்று நினைத்துக்கொண்டு இருந்த சிவகாமியை வேதாசலம் அழைக்க அத்துடன் மனதில் தோன்றியதை அப்படியே விட்டு சென்று விட்டார் .

தனது அறையில் கண்ணாடி முன் நின்று இருந்த மிருதுளா பிளவுஸ் கொக்கியை போட போராடிக்கொண்டு இருந்தாள் "ஆ எனக்கு வர கோவத்துக்கு " என்று பல்லை கடித்தவள் ஒரு வழியாக போட்டு முடித்தால் " நம்ப கொஞ்சம் குட்டையோ ம்ஹு எற்றமாரி வச்சு இருக்க வேண்டியதுதான " என்று தனது கோவத்தை காட்டியவள் "இனிமே அந்த அக்காகிட்ட சொல்லிவைக்கனும்" இந்த போராட்டம் முடிந்ததும் தந்தை சொன்னது நினைவில் வர "சின்ன வயசுல இருந்து தெரியும் அவன எப்படி எனக்கு கல்யாணம் பண்ணிவைக்க நெனைக்குறாங்க அப்பா " ஒரு பெருமூச்சு விட்டவள் நிதானமாக தன் விம்பத்தை பார்த்து "பார்ட்டிக்கு போறோம் சரவாத்தா பாக்குறோம் நா ஆல்ரெடி ஒரு பயன லவ் பன்றானு சொல்லனு நல்லா சாப்பிட்டு வீட்டுக்கு வரணும் " தனது திட்டம் என்று நினைத்து சொல்லிப்பார்த்துக் கொண்டாள் .

சிவகாமி -"மிரு டைம் ஆச்சு சீக்கரம் வா " என்று அழைக்கிறேன் என்று கத்திக்கொண்டு இருந்தார் .

"வாரேன் மா " என்றவள் எழுந்து கண்ணாடியை பார்க்க

அழகிய பிங்க் நிற லெஹன்கா டிரஸ் அவள் சிலையென காட்டி கொடுக்க ஒரு பக்கம் ஷாலை போட்டிருக்க மிதமான ஒப்பனைகளுடன் சிறிய பொட்டு வைத்தது பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் பார்க்கவைக்கும் இதழில் சிரிப்புடன் இருந்தாள் .

விழா போல அனைவரும் கூடி இருந்த அந்த பார்ட்டியில் அணைத்து வசதிகளும் இருந்தது சாப்பிட பலவகையான உணவுகள் மதுக்கள் மெல்லிய இசை அனைவரின் முகத்திலும் சிரிப்புடன் இருக்க இரவு ஒன்பதை தாண்டி இருக்க வேதாசலம் மற்றும் ராஜதேவ் குடும்பங்கள் வந்து இறக்க அவர்களை வரவேர்த்தார் மேனேஜெர் .

வேதாசலம் ராஜதேவ் கட்டி அணைக்க சரவாத் கையை அசைத்து "ஹாய் அங்கிள் எப்படி இருக்கீங்க "என்று விசாரிக்க

"நாங்களா நல்லா இருக்கோம் டா நீதான் எங்களை விட்டு ரொம்ப தூரத்துல இருந்த நீ எப்படி இருக்க இனிமே எங்களை விட்டு போகமாட்டா " என்று சொல்லி சிரிக்க

"நல்லா இருக்க அங்கிள் ஆமா அப்பா ரெஸ்ட் எடுக்கட்டும் அங்கிள் " -சரவாத்

மிருதுளா அங்கு நிக்கவே முடியவில்லை விட்டால் எங்காவது சென்று விடுவாள்

திலகா மிருவை பார்த்தவர் "ரொம்ப அழகா இருக்க மிரு உனக்கு எங்ககிட்ட பேசரத விட நீங்க பேசுங்க ரெண்டு பேருக்கும் புடிச்ச மத்தத பேசிக்கலாம்" என்று புன்னகையுடன் சொல்ல . சிவகாமி ,"ஆமா நீங்க பேசுங்க " என்று அவர்கள் நகர்ந்து கொள்ள .

அப்பொழுதுதான் அவனை பார்த்தால் மிரு பல வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் பார்க்கிறாள் பெண்களை கவரும் அழகில் இருந்தான் மிருக்கு

அது ஏதும் மூலையில் பதியவில்லை ஒரு தயக்கத்துடன் பேச அரமித்தான் சரவாத்

"மிரு சாரி "

என சொல்ல தரையை பார்த்தவள் நிமிர்ந்து பார்க்க அவள் கண்களில் அவன் இந்த திருமணம் புடிக்கவில்லை என்று சொல்ல போகிறான் என்று காத்திருக்க.

"உனக்கு கேக்க கஷ்டமாதா இருக்கு எனக்கு வேற வழி தேறில அம்மா சொன்னதாலதா இங்க வந்த " என்று நிறுத்தி அவளை உற்று பார்த்தவன்

"நா ஒரு பொண்ண லவ் பண்ற சோ நீங்காத ஹெல்ப் பண்ணணு மிரு " அவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தவள் சந்தோசம் தாங்கவில்லை .

சுதாரித்து முகத்தை சோகமாக வைத்து "ம்ம் கண்டிப்பா ஹெல்ப் பண்ற சரா "-மிரு

"நீ என்ன புடிக்கலன்னு சொல்லிடு உனக்கு நல்ல பயனா பாத்து கல்யாணம் பண்ணிவைக்குற " என்று ஆறுதல் சொல்ல அவனை மேலிருந்து பார்த்தவள் "இதுக்கா நாம ரொம்ப ஏமோசின்ஸ் வேஸ்ட் பண்ணிட்டோமே இப்படி இவனே வேண்டான்னு சொல்லிட்டா எது எப்படியோ நமக்கு கார்த்திக் மட்டும் போதும் "

மனதில் பேசிக்கொண்டு இருக்க சொடக்கிட்டு "என்ன பகல் கனவா " என்று சரவாத் கேக்க சிரிப்புடன் பார்த்து " அதுலா இல்ல போலாமா "

இருவரும் அவர்களது குடும்பத்துடன் இணைய சிவகாமி திலகா பேச சென்று விட வேதாசலம் ராஜதேவ் சரவாத் மூவரும் அவர்களது கம்பெனிக்கு வரப்போகும் சிறப்பு விருந்தினரை அழைக்க சென்று விட்டனர் தனியாக இருந்தது மிரு மட்டுமே அவள் அங்கு விளையாடும் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருக்கையில் அமர்ந்தவாறு எப்பொழுது இந்த பார்ட்டி முடியும் என்று நினைத்துக்கொண்டு இருந்தாள் .

சென்னையில் வளர்ந்து வரும் டாப் நிறுவனங்களில் புதிய சிந்தனைகளுடன் மிக சிறப்பாக வளம் வரும் இளம் வயதில் பொறுப்பாகவும் சிறப்பாகவும் செயல்படும் தேஜ் குருப்ஸ் கம்பெனி நம்முடன் நினைந்து செயல்படுவது நல்ல முன்னேற்றத்தை தரும் என்று பேசிக்கொண்டு இருந்தனர் .

சடன் பிரேக் போட்டு நின்றது உயர்ரக கார் அதில் இருந்து தன் குலரை கழட்டியவன் அவனது உயரத்திட்கு நிமிர்வாக நடந்து வந்தவனை கவனித்த ராஜதேவ் பூங்கோத்தை எடுத்து தயாராக வைத்தார்

அவன் நடக்கும் தோரணையே சொல்லியது அவனின் திமிரையும் எதை செய்ய நினைத்தாலும் அதை செய்தே தீருவேன் எனும் பிடிவாதமும் இருக்க கழுகு கண்பார்வை கொண்டு எதிரியின் பலவீனத்தை கணித்து விடுபவன் ஆறடிக்கும் சற்று உயரமாகவே இருக்க அடர்ந்த சிகை ஆணுக்கு கழகு சேர்க்கும் மீசையை கொண்டு ஆணழகனாக நடந்து வருபவனை பார்த்து இன்முகத்துடன் வரவேர்த்தார் ராஜதேவ் .

-தொடரும்
 
Messages
32
Reaction score
20
Points
8
story nalla irukka ...........
exam irukku athu illa ma story nalla pogathonu thonuthu
sry dr nxt epi poda try pandra pa
 
Active member
Messages
211
Reaction score
136
Points
43
ஸ்டோரி நல்ல போகுது சிஸ்டர். உங்க எக்ஸாம் எல்லாம் முடிஞ்சதும் யுடி போட டிரை பண்ணுங்க சிஸ்டர். ஆல் த பெஸ்ட் ஃபர் யுவர் எக்ஸாம்ஸ் சிஸ்டர்😊
 
Top