‘வர்ணா’ வின் தலைமை அலுவலகம் நான்கு மாடியில் ஷோரூம்களை போலவே இங்கேயும் மினிமளிஸ்டிக் தீமில் தான் டிசைன் செய்யப்பட்டிருந்தது.. அதன் மூன்றாம் மாடியில் தன்னுடைய அலுவலக அறையில் குறுக்கும் நெடுக்கும் கோபமாய் நடந்து கொண்டிருந்தான் அபய் என்னமோ எதிரி நாட்டை பிடிக்கப்போவபன் போல!
மேசையில் அவனுடைய மாக்புக் பாதி வரையப்பட்ட டிசைன்களோடு திறந்து வைக்கப்பட்டிருந்தது காலையில் இருந்து அப்படியே இருக்கிறது.
பக்கத்திலேயே காபி ஆறிப்போய் இருந்தது. எப்போது எடுத்து வந்தான் என்றே ஞாபகம் இல்லை.
ப்ச்...அலுத்தவண்ணம் எடுத்துக்கொண்டு போய் சிங்கில் கொட்டி கழுவி விட்டு உரிய இடத்தில் வைத்து விட்டு வந்தான்
அடுத்த வாரம் பெரிய பங்குதாரருக்கு ஒரு ப்ராஜெக்ட் முடித்து கொடுக்க வேண்டியது இருந்தும் மனக்குரங்கு ஒரு நிலையில் நிற்க மறுத்து அலைபாய்ந்து கொண்டிருக்க தலையை அழுத்தமாய் கோதிக்கொண்டே நடையை தொடர்ந்தான் அவன்.
உன் வயது செட்டோடு சேர்க்கை வை என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்? ஒரு ஏழு வயசு சிறிய ஏழரையுடன் பழக்கம் வைத்த பாவத்தினால் அவன் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது. பல்லைக்கடிக்கத்தான் முடிந்தது அவனுக்கு. அதுதான் மொத்தமாய் செஞ்சு விட்டுட்டு போயிட்டாளே..
நிருதி அவனுடைய நித்தி.. ப்ச்
அவர்கள் இருவருக்குமிடையில் ஆரம்பம் மட்டும் தான் சரியாய் இருந்தது. அதன் பின் தொட்டதெல்லாம் வேறு விதத்தில் துலங்கி எங்கெங்கேயோ போய் இப்போ தனியே பைத்தியமாய் நடைபழகுவதில் வந்து நிற்கிறது!
காதலி, இந்த உலகில் எந்த உறவும் இல்லாத அவனுக்கு ஒரே ஒருத்தி இவள் தான் என்று மனம் முடிவு பண்ணிய பிறகு விளையாட்டுக்கு கூட இன்னொருவனோடு இணைத்துப்பார்க்க மனம் வருமா? அவள் விஷயத்தில் கொஞ்சம் அதிகமாகவே அவளை யாருக்கும் தர மாட்டேன் என்று பிடிவாதமாய் இருப்பவன் அவள் வாயாலேயே ஆமாம். நான் அவனை லவ் பண்றேன் அதுக்கிப்ப என்னங்கிறீங்க?” என்று கேட்டதில் மனசு காயப்பட்டு ஏக கோபமாய் அவளே வந்து தன்னிடம் மனம் திறக்காமல் நானாக உன்னை நெருங்கப்போவதில்லை, உன் பெயர் கூட என் வாயில் வராது என்று தான் ஓர்மமாய் சுற்றிக்கொண்டிருந்தான்.
அவனுக்கே அந்த ஐந்து வருடங்கள் மலர்ப்பாதையில்லையே.. தனிப்பட்ட உணர்வுகள், தன்னை நிரூபிக்கும் போராட்டம், தன்னை தோல்வியடைய வைத்து ஓட வைக்க அவனை சேர்ந்தாரே கச்சை கட்டி நின்றது..இதெல்லாம் தாண்டி மூர்க்கமாய், யாரும் தட்டி வைக்க முடியாத ஒருவனாய் தன்னை மாற்றிக்கொண்டது ஒரே நாளில் நடந்ததில்லையே..
அவன் இந்தப்பக்கம் போராடிக்கொண்டிருக்க அவளோ வேலையில் தன்னை தொலைத்து ஒரு சாம்பியாயே சுற்றிக்கொண்டிருந்தாள். அவனது விலகலை கவனிக்க கூட அவளுக்கு நேரமில்லை.. ஆக மீண்டும் அவனே தான் அடிக்கடி அவளை தொல்லை செய்தாவது தன் இருப்பை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது.
முன்னூறு பேர் பணிபுரியும் அலுவலகம் அதை தாண்டி ஐநூறு பேர் பணிபுரியும் தொழிற்சாலை இதை தலைமை தாங்கி நடத்துபவனின் தனிப்பட்ட காரியதரிசிக்கு எவ்வளவு வேலை இருக்கும்? கூடவே காலேஜ் படிப்பு, எக்ஸாம் என எல்லாவற்றையும் தலையில் கட்டிக்கொண்டு எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடிக்கொண்டே இருந்தவள் எத்தனையோ நாட்கள் சாப்பிடக்கூட நேரமில்லாமல் வெறும் காபியோடு உயிர் வாழ்வதை கண்டு பல்லை கடித்திருக்கிறான்.
அவளுக்கென்று இருப்பதும் அபய் ஒருவன் தானே.. அவளே அதை ஏற்காவிடினும் கூட..
காலேஜ் படிப்பு முடியும் வரை அவளுக்கு அடீரா தான் பாதுகாப்பு என்று உறுதியாய் நம்பியவனுக்கு அங்கே அவள் இருந்த இடத்தை தான் பிடிக்கவே இல்லை. கோபம் கொண்டால் எதிர்மறையாய் செய்யும் வழக்கம் உள்ளவள் என்று நன்றாக தெரியும்.
அனிருத்தனோடு இணைத்து நக்கல் செய்தால் கோபத்தில் உள்ளுக்குள்ளேயே தனக்கு பொருத்தமான ஒரு பிரிவை கேட்டு அங்கே மாறிக்கொள்வாள் என்று எதிர்பார்த்தால் அவளோ இடித்த புளி போல சுற்றிக்கொண்டிருந்தால் அவனுக்கு கோபம் வராதா? பொல்லாத நன்றியுணர்ச்சி!
இதெல்லாவற்றுக்கும் மேல் அபயின் பாதி ரத்தம் வேறு தன் வேலையை செவ்வனே செய்து அவனை கொதிக்க வைப்பான்..
சில நேரங்களில் சரி..ரைட் பர்சன் அட் த ராங் டைம் என்பார்களே அப்படியே எண்ணி விலகி விடலாம் என்று கூட நினைப்பான்
ஆனால் எங்கு இருந்தாலும் எப்படிப்பட்ட வேலையில் முதுகு முறிந்தாலும் அவனையே சுற்றும் அவளுடைய கண்களும்.. அவன் அவளுக்கென வடிவமைத்த உடைகளை யூனிபார்ம் போல அணிந்து அவனுக்கே அவனது கைவண்ணத்தை வெறுத்து போக வைப்பதும், அவனுக்கு சின்னதாய் மனக்கஷ்டம் ஏற்பட்டாலும் தன் கண்ணுக்குள்ளே விழுங்கி பொத்தி வைத்துக்கொள்வதை போல தூரத்தில் தெரியும் அவள் தவிப்புமாய் ஒன்று சேர்ந்து அவனை எங்கே விலக விட்டன? அவளது பாதையில் அவனே குறுக்கிட்டு இன்னும் இன்னும் தவிப்பை கூட்டிக்கொண்டு தான் இருந்தான்
நேரில் அவன் வளைத்துப்பிடித்து பேச வைக்க தூண்டினால் பயந்தவள் போல தலையை குனிந்து கொண்டு பம்மிக்கொண்டிருப்பது.
இப்படிப்பட்டவளை வேறெப்படி அணுக?
சரி படித்து முடிக்கட்டும் மொத்தமாய் பேசி முடித்து வெளியே கூட்டிப்போய்விடலாம் என்று அவன் இருக்க ஏதேதோ நடந்து மேடம் கம்பி நீட்டி விட்டார்கள்
என்ன சொன்ன என்ன சொன்ன? மொம்மீஸ் லிட்டில் ப்ரின்சா நான்? இன்னும் கூட அவனுக்கு மனசு ஆறவே இல்லை. இன்னொரு தடவை என் கையில் மாட்டு வச்சு செய்றேன் என்று பல்லை கடித்தான் அபய்.. பின்னே சொந்த லேபிள் ஆஹா ஓஹோ வளர்ச்சி கண்டும் உனக்காய் அங்கே பழி கிடந்தேனில்லை.. ஏன் சொல்ல மாட்ட?
அன்றைக்கு அவள் பேசியதை கேட்ட போது எதுவும் தெரியாமல் எனக்கும் சேர்த்து மனதில் மருகியிருக்கிறாள் என்று குற்ற உணர்வு வந்தது நிஜம். நான் எதையும் அவளோடு பகிர்ந்து கொள்ளவில்லை தான். ஆனாலும் என் கோபமும் நியாயம் தானே.. அவளே வந்து என்னிடம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தது நியாயமான எதிர்பார்ப்பு தானே..என் காதலை நான் எத்தனையோ வழிகளில் உணர்த்தியிருக்கிறேன். நீயும் அதை செய்யாவிட்டால் நீயே வேண்டாம் போடி என்ற மனநிலையில் இருந்தவன் நான், அவள் இருந்த இடம் வேறு அவளுக்கும் எனக்குமான சாதாரண பேச்சுக்கான வாய்ப்பை கூட தகர்த்த பிறகு வலுக்கட்டாயமாய் அவனே அவளை இழுத்து பிடித்து பேசியிருக்காவிட்டால் அந்த தொடர்பும் இல்லாமல் போய்விட்டிருக்கும். ஆக இப்படி ஒரு நிச்சயமற்ற நிலையில் எதை எப்படி சொல்ல? நாங்கள் சாதாரணமாய் பேசிக்கொண்டு எத்தனை வருஷமாகி விட்டது?
கடைசியில் வந்து நான் வருஷக்கணக்கில் எதிர்பார்த்ததை சொன்னாள், கூடவே என்னையும் வேண்டாம் என்றும் சேர்த்து சொல்லிவிட்டு போய்விட்டாள்
காதலுக்கு மேல் கசப்புகளே கூடிக்கொண்டு போவதாக அவனுமே அன்றைக்கு உணரத்தான் செய்தான். சரி ஒரு விலகல் நல்லது. ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்து ஓடிக்கொண்டே இருப்பவள் இனியாவது அவளுக்காய் எங்கேயோ வாழட்டும் ,, அந்த வாழ்க்கையில் அவனுக்குரிய இடமும் அவளுக்கு புரியும் இத்தனை காலம் காத்திருந்த உனக்கு இன்னும் கொஞ்ச காலம் பெரிதா என்று பரந்த மனதோடு நினைத்து நிம்மதியாயிருப்போம் என்றால் எங்கே முடிகிறது? எதை வேண்டுமானாலும் என் கண்பார்வையில் செய் என்று டாக்ஸிக் காதலனாய் அவளைப் போய் பிடித்து இழுத்து வரத்தான் தோணுகிறது!
ஒருவேளை அவள் திரும்பி வராவிட்டால்?
அவனை கடந்தகாலமாக்கி விட்டால்?
தலையை பிடித்துக்கொண்டான் அவன். இதோ இரண்டு வாரமாய் அவள் முகம் காணாததே அவனை திருப்பி போட்டுவிட்டதே..இன்னும் எவ்வளவு காலமோ.. அபய் தாங்கி விடுவானா என்ன?
என்னவாய் இருந்தாலும் அவனுக்கு அந்த ஏழரை மட்டும் தான். அவளை இந்த ஜென்மத்தில் விடுவதாயில்லை அது மட்டும் நிச்சயம்!
யோசித்துக்கொண்டே ஸ்க்ரீனை வெறித்திருந்தவனின் இன்டர்காம் ஒலித்து தரைக்கு இறக்க கோபமாய் எடுத்து ஹலோ சொன்னான்
அவனுடைய காரியதரிசி சந்திரா தான் லைனில் இருந்தார் “சார். உங்களை மீட் பண்ணணும்னு ரெண்டு பேர் வந்துருக்காங்க. அப்பாயின்ட்மென்ட் இல்லையாம். அவங்களோட பேர் சௌமியா ராகவன், நரேன் கிருஷ்ணன்னு சொல்லி உங்க கிட்ட பேசணும்னு கேட்கறாங்க.”
பெயர்களை கேட்டதுமே சின்ன புன்னகை உதடுகளில் ஏற “வர சொல்லுங்க கூடவே ரெண்டு காபியும் கொடுத்தனுப்பி விடுங்க” என்று விட்டு சாய்ந்து அமர்ந்தான்
தயக்கமாய் உள்ளே வந்தவர்களை கை நீட்டி தனக்கு முன்னே அமரச் சொன்னான்.
என்ன அதிசயமா ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீங்க? சோம்பல் புன்னகையை உதடுகளில் நெளியவிட்டபடியே கேட்டான் அபய்.
கங்ராஜூலேஷன்ஸ் பாஸ். நீங்க கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே” என்று அவர்கள் கேட்க
அதான் இப்போ தெரிஞ்சிகிட்டீங்கள்ள.. என்று சிரித்தான் அவன்
“நீங்க இல்லாமல் அங்கே ஆபீசே ஆபீஸ் மாதிரி இல்லை சார்.. அங்கே எங்களோட ஏரியாவையே முழுக்க இன்டீரியர் எல்லாம் வேற மாதிரி பண்றாங்க என்றான் நரேன் தவிப்பாய்
ஓஹோ..”
சில நேர மௌனகளுக்கு பிறகு : உங்க ஆபீஸ் செம்மையா இருக்கு சார் என்று நரேன் சொல்ல ஆமாம் இன்டீரியர் எல்லாம் பக்காவா செட் பண்ணிருக்கீங்க என்று சௌமியாவும் இணைந்து கொள்ள
தாங்க்ஸ் டா என்று புன்னகைத்தான் அபய். எல்லாம் பார்த்து பார்த்து அவனே செய்ததில்லையா..
அதற்குள் காபியோடு அலுவலக பணியாளர் வரவும் நன்றி சொல்லி மூவரும் எடுத்துக்கொண்டனர்.
ஆமாம்.. என் ஆபீசோட இன்டீரியரை கமன்ட் பண்ணவா ரெண்டு பேரும் கிளம்பி வந்தீங்க..? என்று அவர்களை அபய் கேட்க
நீ சொல்லு நீ சொல்லு என்று இருவரும் மாறி மாறி ரகசியமாய் அடித்துக்கொள்வதை பார்க்க அவனுக்கு சிரிப்பு வந்து தொலைத்தது.
யாரவது ஒருத்தர் சொல்லித்தொலைங்கடா” என்று அவன் அதட்ட
“பாஸ். எங்களுக்கு இந்த ஆபீஸ்ல ஒப்பனிங் ஏதாவது இருந்தா கொடுங்களேன்” என்று ஒரு வழியாய் கேட்டு விட்டான் நரேன்
“ப்ளீஸ் பாஸ். அங்கே வெள்ளைக்காரனோட டிசைனுக்கு எக்ஸ்டிரா கோடு, வட்டம் போட்டுட்டு வாழ்க்கையை ஓட்ட முடியாது. மொத்த ப்ராஜெக்டில் எண்பது வீதமே அது தான் போலிருக்கு” சொல்லும் போதே சௌம்யா அழுது விடுவாள் போலிருந்தது.
அப்பா முறைக்கத்தான் செய்வார்.. செரி விடு.. இவனுங்களை நானுமே கொஞ்சமே கொஞ்சம் மிஸ் செய்தேன் தானே..போனவாரமே தன் பழைய டீமில் யாராவது தன்னை தேடி வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்ததும் நிஜம்.
“இதை சொல்ல பத்து நாள் எடுத்துருக்குல்ல உங்களுக்கு?” அவன் அழுத்தமாய் கேட்டதிலேயே பதிலை புரிந்து கொண்டவர்கள் கொள்ளை மகிழ்ச்சியாய் நன்றி சொன்னார்கள்.
உங்க ரெண்டு பேரையும் ஜூனியர் டிசைனர்சாவே சேர்த்துக்கிறேன்டா. ஆனா நரேன் யூ ஆர் நாட் குட் வித் காட்டன். உன்னை என்னோட ஆண்களுக்கான பிரிவில் தான் போடுவேன். இன்னிக்கே பார்மாலிட்டீஸ் முடிச்சிடுங்க ஒகே?
டபிள் ஒகே பாஸ்!
முகம் கொள்ளா மகிழ்வுடன் இருந்தவர்களை அழைத்துப்போய் அலுவலகத்தை முழுக்க சுற்றி காண்பித்தவன் நரேனை HR அறைக்குள் அனுப்பி விட்டு “அப்புறம் சௌம்யா உன் பிரன்ட் நிருதி அவளுக்கும் போயிட்டாளாமே.. புது ஜாப்பா?” என்று மெல்ல மெல்ல பிட் போட்டான்
ஆமாம் பாஸ். அவளுக்கு பேய் தான் பிடிச்சிருக்கு.. எனக்குன்னா ஒண்ணுமே புரியல. ஏலக்காடுன்னு ஒரு இடத்துல ஒரு நொடிச்சுப்போன ஸ்பைஸ் எஸ்டேட்ல வேலை கிடைச்சிருக்குன்னு சொல்றா.. இங்கே எத்தனை பெரிய கம்பனி அவளை அள்ளிப்பாங்க.. ப்ச்
அவள் வெள்ளந்தியாய் முழுக்க ஒப்புவிக்க அபயின் முகம் இறுகிப்போயிற்று.
சௌம்யா
பாஸ்?
எனக்கொரு உதவி வேணுமே..
சொல்லுங்க பாஸ்..
உன் பிரண்ட் கிட்ட நீ வர்ணால வேலை பார்க்கிறேன்னு சொல்லாதே. அப்புறம் அவ கிட்ட அடிக்கடி பேசி டீட்டயில்சை இங்கே பாஸ் பண்னனும்
பாஸ்? ஆனா ஏன்?
கேள்வி கேட்கக்கூடாது
எனக்கு புரிஞ்சிருச்சு..காட் நா ஒரு டியூப்லைட்” என்று திடுமென கத்தியவளை பொய்கோபமாய் முறைத்தவன்
என்ன புரிஞ்சது.. என்று கேட்டான்
நீங்க தான் அந்த அண்ணா!
அபிக்கு வெட்கமாகி விட்டது.
அடச்சே நிறுத்து
என்ன பாஸ் நீங்க.. அவ என் பிரண்டு..அவளைப்போய் அண்ணான்னு சொல்லிட்டு ஏமாத்தியிருக்கீங்க!!!
ஷ் தேவை எல்லாத பேச்செல்லாம் பேசாத. உன்னால முடியுமா முடியாதா? என்று கடுப்பாய் கேட்கவும்
கொஞ்சம் யோசித்தவள் “நான் சொல்றதை எல்லாம் வச்சி அவளோட மனசுக்கு பிடிக்காத எதையும் நீங்க பண்ணமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணினீங்கன்னா” என்று தயக்கமாய் இழுக்க
“செய்ய மாட்டேன்மா. எனக்கு அவ எங்கே எப்படி இருக்கான்னு தெரிஞ்சா மனசு அமைதியா இருக்கும் அதுக்காக மட்டும் தான் கேட்கிறேன்” என்று நிஜத்தையே சொல்லி உறுதி தந்தான் அபய்.

Last edited by a moderator: