கதவை பூட்டிக்கொண்டு உள்ளே வந்தவள் கொஞ்ச நேரம் சோபாவிலேயே விழுந்து கிடந்து அழுது தீர்த்தாள். அழ அழ தன்னுடைய எல்லா சோகங்களும் வந்து தன்னை ஆக்கிரமிப்பது போலிருக்க ஒன்றுக்காய் ஒன்று என்று அழுகைகள் தொடர்ந்து கொண்டே போய் ஒரு கட்டத்தில் கண்ணை துடைத்துக்கொண்டு எழுந்து அமர்ந்தே விட்டாள் நிரு.
நாம் ஏன் அழவேண்டும்?
எப்போதும் இது தானே நடக்கிறது? என்னை புரிந்து கொள்ளாமல் ஏதாவது பேசுவதும் பிறகு சமாதானம் ஆவதும், பிறகு மீண்டும் காயம் செய்வதுமாய்..
இந்த சங்கிலியை நான் அறுத்தால் ஒழிய அறாது. நிருதி இன்னும் சின்னப்பெண்ணில்லை. டீப்பாயில் இருந்த டிஷூவை எடுத்து நன்றாக கண்களையும் முகத்தையும் துடைத்துக்கொண்டவள் மனதை அமைதிப்படுத்தும் இசை ஒன்றை ஒலிக்க விட்டு விட்டு போய் படுத்துக்கொண்டாள்.
மறுநாள் ஞாயிறு ஏழுமணிக்கே கிளம்பி தேவந்தி பவனத்திற்கு போய்விட்டவள் இரவு எட்டு மணி வரை அங்கே தான் இருந்தாள்.
கம்பியூட்டர் ரூம் செட் செய்வதற்காக எல்லா லாப்டாப்புகளிலும் தேவையானவற்றை டவுன்லோட் செய்து சிறுமிகள் உபயோகிக்கத்தக்கதாக பொதுவான ஈமெயில் ஐடி ஒன்றை உருவாக்கி தயார் செய்து கொண்டிருந்தாள். சம்யூ மிஸ் அவளோடு டேபிளின் இன்னொரு பக்கமாய் ஒரு புத்தகத்துக்குள் மூழ்கிப்போயிருந்தார்.
நிரும்மா..”
சொல்லுங்க மிஸ்?“
“கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்க கூடாது” என்று அவரின் குரல் தயங்க
அட கேளுங்க மிஸ்” என்று லேசாய் சிரித்தாள் நிரு.
“ஏதாவது பிரச்சனையாம்மா? தொடர்ந்து ரெண்டு ஞாயிறு இங்கே வந்துருக்க அது தான் கேட்டேன். இன்னிக்கு நீயுமே ரொம்ப டல்லா இருக்க” என்று அவர் சட்டென்று விஷயத்துக்கு வரவும் நிருவுக்கு என்ன சொல்வதென்று தெரிவதில்லை. அவ்வளவு வெளிப்படையாகவா என் முகம் காட்டிக்கொடுக்கிறது?
“வழக்கமான குழப்பம் தான் மிஸ். எனக்குமே என்னனு சொல்லத்தெரியல..” கண் கலங்கி விட்டது அவளுக்கு
“நான் ஏதாவது பண்ண முடியும்னா சொல்லுடா தங்கம்” அவர் ஆறுதலாய் அவளுடைய தோளை அழுத்த
அது அவளுக்கே தெளிவாய் தெரியாத ஒன்றல்லவா? லேசாய் சிரித்தவள் “எப்போ வேணும்னாலும் நான் இங்கே வரலாம் இருக்கலாம்னு கதவை திறந்து விட்டிருக்கீங்களே இதை தவிர நீங்க எனக்கு என்ன செய்து விட முடியும் மிஸ்?” என்று கேட்டாள். மனதுக்குள் உண்மையான நன்றியுணர்வு மட்டும் தான்.
“உதை வாங்குவ ராஸ்கல்.. இவ்ளோ ரூம் இருக்கு, உனக்கு சும்மா தங்கிக்க இஷ்டம் இல்லைன்னா பேயிங் கெஸ்ட் மாதிரி தங்கிக்கோன்னு எவ்ளோ தடவை சொல்லிருக்கேன். நீ தான் கேட்கலை...” என்றார் அவர் ஆதங்கமாய்
“அதுக்கான அவசியம் இன்னும் வரலை மிஸ்..தேவைப்பட்டா நேரா இங்கே தான் வந்து நிப்பேன். நீங்க வார்த்தை மாறக்கூடாது.. “ அவள் குறும்பாய் கண்சிமிட்ட
“உன்னை மாத்தவே முடியாது நிரு..” என்று தலையசைத்துக்கொண்டே போய்விட்டார் சம்யூ மிஸ்
திங்கள் வழக்கம் போல அனிருத்தன், ஆதவன் இருவருமே அலுவலகம் வந்து விட அவளுக்கு இதையெல்லாம் யோசிக்கக்கூட நேரமில்லை. அடிக்கடி அபராஜிதனின் உறுக்கும் பார்வை அவள் மேல் தீயாய் படும். புரிந்து கொள்ளாதது போலவே தலை குனிந்து மௌனம் காத்துக்கொண்டிருந்தாள் நிரு.
கிரிங் கிரிங் என்று இன்டர்காம் அழைக்க
“நிரு ஒரு தடவை வந்துட்டு போறியா?” என்று வழக்கம் போல அனியின் உற்சாகக்குரல் போனில் வந்தது
“ஒகே சார்..”
உள்ளே பெரிய சிரிப்புடன் அமர்ந்திருந்தான் அனி. பயணம் முடிந்து முதல் நாள் அலுவலகம் வருவதாலோ என்னமோ காஷுவலில் இருந்தான். என்னதான் நேரெதிராய் நிறத்திலும் குணத்திலும் இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் இவன் அபயை நினைவு படுத்துவதை அதிர்வோடு மனம் உணர தலையை லேசாய் உலுக்கிக்கொண்டு அவன் முன்னே அமர்ந்தாள் நிருவும்.
“ஆல்பா ஸ்கூல் அந்த லிம்கா ரெக்கார்ட் ப்ரேக் பண்ணிட்டாங்களாம். சர்ட்டிபிக்கேட் வந்ததாம்” என்று பகிர்ந்து கொண்டவன் அவனவனுக்கு அவனவன் பிரச்சனை.. என்று சிரித்தான்.
ஹாஹா இதெல்லாம் பணக்கார ஸ்கூல்களுக்கே வரும் பிரச்சனைகள்.. வெறுமனே சிரிப்போடு நிறுத்திக்கொண்டு விட்டாள் நிருவும்.
“உனக்குத்தான் தாங்க்ஸ் சொல்லணும். அவன் கிட்டயும் நான் சொன்னதா சொல்லிடு..”
“நான் ஈமெயில் பண்ணிடறேன். வேறேதும் இருக்கா சார்?”
அவளை ஒரு கணம் ஏறெடுத்துப்பார்த்தான் அவன். வழக்கமாய் அவன் இப்படி ஏதேனும் அபய்க்கு மெசேஜ் சொன்னால் இவளே நேரில் போய் சொல்லிவிட்டு அவனிடம் வார்த்தையால் கொட்டும் வாங்கிக்கொண்டு வருவாள். இன்றைக்கு ஈமெயில் செய்கிறேன் என்றதும் புதிதாய் இருந்தது போலும் ..அனிருத்தனின் பார்வை அவளை அளவிடுவது போல கூர்மையானது
“பாப்ஸ் ஆர் யூ ஒகே? ஓவர் ஸ்ட்ரெஸ்ல இருக்கியா?”
எல்லாருக்குமேவா தெரியுது? “அப்படில்லாம் இல்லை சார். காலைல கொஞ்சம் தலைவலி வேறொண்ணுமில்லை” என்று சமாளித்து வைத்தாள்
“நம்புறேன்” என்றவன் “அப்புறம் மறந்தே போயிட்டேனே” என்றபடி எழுந்து கப்போர்டை நோக்கி போனவன்“உனக்காகத் தான் வாங்கிட்டு வந்தேன். கொடுக்க மறந்து போயிட்டேன்” என்றபடி ஒரு பெரிய பிரமாண்டமான பையோடு வந்து அவளின் கையில் திணித்தான்.
“எனக்கெதுக்கு சார். வேணாம்” என்று பிடிவாதமாய் மறுத்தவளை “அவ்வளவு தானா? என்னிடம் இருந்து ஒரு கிப்ட் வாங்க மாட்டியா?” என்று மறுக்க மறுக்க கையில் திணித்து வெளியே துரத்தியும் விட்டான்.
நொந்து நூடில்சாய் அந்த பெரிய பார்சலோடு நிரு வெளியே வர சரியாய் அவள் முன்னே எதிர்ப்பட்டான் அபய். அவன் கண்கள் அவளையும் அந்த பார்சலையும் மாறி மாறி தொட்டு வர
இனிமேல் நான் இதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் என்று தலையை நிமிர்த்திக்கொண்டவள் தனக்குள் சிரித்துக்கொண்டே தன்னுடைய கேபினுக்கு போய்விட்டாள். அவன் பல்லைக்கடித்தபடி தனக்கு முன்னே நடந்ததை கண்கள் கண்டும் காணாதது போலவே இருந்து கொண்டன.
நல்ல வேளை அந்த பார்சலில் எதுவுமே அனிருத்தன் சென்று அவளுக்காய் தேர்ந்தெடுத்து வாங்கியது போலில்லாமல் ஒரு மிக விலையுயர்ந்த கிப்ட் செட் தான் இருந்தது. அதற்குள்ளே பர்பியூம், ஏகப்பட்ட சாக்லேட் வகைகள், வாசனைத்திரவியங்கள் இத்யாதிகள் என்று மொத்த பாக்கேஜாய் இருந்தது. அனிருத்தனை பற்றிய அவளது கணிப்பு தவறாகாமல் போன நிம்மதிப்பெருமூச்சோடு வேலையை தொடர்ந்தவள் அன்றைக்கு மாலையே அந்த பார்சலை தேவந்தி பவனத்தில் பகிர்ந்து எடுத்துக்கொள்ளும் படி கொடுத்து விட்டு வந்துவிட்டாள். இந்த சாக்லேட் எல்லாம் சாப்பிடும் மனநிலையா அவள் அப்போது இருந்தாள்?
அந்த வாரம் தொடர்ந்தது. பாரிஸ் பயணத்தால் பிற்போடப்பட்டிருந்த அலுவலகத்தின் புத்தாண்டு விழா அந்த வெள்ளி நடைபெற முடிவு செய்யப்பட்டதால் நிருவுக்கு தலை கொள்ளாத வேலை. கேட்டரிங் ஒழுங்குகள், விழா முடிய அனைவருக்கும் வாகன வசதிகள், அலங்காரம் அது இதுவென தனித்தனியாய் இவற்றை செய்ய ஆளிருந்தாலும் அவற்றை ஒருங்கிணைப்பது இவள் தலையில் வந்து விழுந்திருக்க மீண்டும் ஓட ஆரம்பித்திருந்தாள் நிரு
“நிரு..நீயே எல்லாத்தையும் பண்ணணும்னு நினைக்காதே. புதுசா HR டீமுக்கு வந்திருக்கற ரெண்டு இன்டர்ன்சையும் தேவைப்பட்டா யூஸ் பண்ணிக்கோ. நான் வசந்தி மேம் கிட்ட இன்பார்ம் பண்ணிடறேன்” என்று அனிருத்தன் சொல்லியிருந்தான்.
ஆனால் ஒன்றுமே தெரியாத புதியவர்களை வைத்து இந்த வேலையை செய்விப்பது அவளே தனியாய் செய்வதை விட ரொம்பவே கடினமாய் இருந்ததென்பது தான் உண்மை. கூடவே எப்போது வெடிக்குமோ என்று புகை மூட்டமாய் மூடிக்கிடந்த அவள் மனதும் ஒரு காரணம் தான்.
அவள் பேச சந்தர்ப்பம் தராவிடினும் தன்னோடு பேச முனைவான், சமாதானம் செய்வான் என்று நிருவின் மனதில் இருந்த எதிர்பார்ப்பை அபயின் பாராமுகமும் கோப அவதாரமும் தகர்த்துப்போட்டிருந்தது. அடிக்கடி வீட்டுக்கு முன்னே அபயை காணவே செய்தாள், தீயாய் எரிக்கும் பார்வையை அவள் மேல் அவன் வீசுவதும் மெல்ல தலைகுனிந்தபடியே அவனது வீட்டை இவள் கடப்பதும் அவர்களுக்குள் வாடிக்கையாகியிருந்தது. அவனது பார்வையை சந்தித்திருந்தால் பேசியிருப்பானோ? நிரு அதை பரீட்சித்து பார்க்கவில்லை
செவ்வாய்க்கிழமை மதியம் அலுவலகத்தில் அவசர அவசரமாய் நிரு மதிய உணவை எடுத்து விட்டு திரும்பி வரும் போது வழக்கம் போல அபயின் கால் அவள் முன்னே திடும்மென தோன்றி அவளை விழவைக்கப்பார்த்தது.
வந்த கோபத்தில் வழக்கம் போல தடுமாறி பிடித்துக்கொண்டு எழுந்து நிற்காமல் வேண்டுமென்றே கையை விட்டு குப்புற விழுந்தே விட்டாள் நிரு. நெற்றியில் அடிபட்டு வலியில் சின்ன முனகல் அவளை அறியாமலே வெளிப்பட்டு விட அந்தப்பக்கம் இருந்தவர்கள் எல்லாரும் நிரு நிரு என்று ஓடி வந்து கை கொடுத்து எழுப்பி விட்டு நெற்றியில் இருந்த சின்ன கீறலுக்கு ப்ளாஸ்டரும் போட்டுவிட்டு விசாரிக்க தன்னை சமாளித்துக்கொண்டு திரும்பிப்பார்த்தபோது இப்போது அபயின் சீட் வெறுமையாய் இருந்தது.
ப்ச் ரொம்ப கோபப்படுத்தி விட்டோமோ?
ச்சே ச்சே இல்லை. முதலில் எல்லாவற்றையும் ஆரம்பித்து வைத்தது அவன் தானே..
முன் சீட் மேசையில் காலில் தலையை கொண்டு போய் இடித்து ஓவர் பர்பாமன்ஸ் பண்ணவும் உனக்கு அவன் தானா சொன்னான்?
மனம் அவனுக்கும் அவளுக்குமாய் மாறி மாறி வாதம் செய்ய பிளாஸ்டரை தேய்த்தாள் நிரு.
என்னை இப்படி ஆட்டி வைக்க இனியும் அனுமதித்துக்கொண்டிருந்தால் நான் ஒரு லூசு என்று தான் அர்த்தம்.. நான் செய்தது தான் சரி. எதுவானாலும் நேருக்கு நேரே இனியாவது எதிர்கொள்வோம். என்று மீண்டும் தன் முடிவை நிரு இறுக்கிப்பிடித்துக்கொண்டாள்
அந்த சம்பவத்துக்கு பிறகு அபய் அவளின் வழியில் குறுக்கிடுவதே கிடையாது. ஏன் அவளின் பக்கம் அவனது கோபப்பார்வை கூட திரும்புவது நின்று போனது. வீட்டுக்கு முன்னேயும் தென்படுவது இல்லை. பின்னிரவில் எரியும் லைட் வெளிச்சம் மட்டும் தான் வீட்டில் அவனது இருப்பை சொல்லும். காலையில் அலுவலகம் வரும் போது கண்ணில் படுவான்.. அதன் பிறகு எங்கே போகிறானோ என்ன செய்கிறானோ..அவளுக்கும் தெரியவே இல்லை.
என்னமோ பெரிய வெறுமை அவளை சூழ்ந்து கொண்டிருப்பதாய் அதற்கும் அழவே செய்தாள் நிரு. இங்கிருந்து போய் விடலாமா என்று கூட தோன்றித்தொலைத்தது. அதற்கும் மனம் துணியவில்லை.
அவளோடு பிணைத்துக்கொண்டு எங்கிருந்தோ உருண்டு வரும் நூற்கண்டின் முடிவை காணாமல் எப்படி போவது?

Last edited by a moderator: