• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நினைவிழை - 5

Ush

Active member
Messages
77
Reaction score
208
Points
33
5

“நிரு உனக்கு நான் இப்படி கால் பார்வடிங் பண்ணிக் கொடுத்தேன் என்று யார்க்கிட்டயும் சொல்லக்கூடாது புரிஞ்சதா? மேலிடத்துக்கு தெரிஞ்சதுன்னா நான் தொலைஞ்சேன்” ரகு சீரியஸாக எச்சரிக்கை செய்து விட்டு போக பவ்யமாய் தலையசைத்து நன்றி சொல்லி விட்டு ஒரே உற்சாகமாய் கிச்சனை நோக்கி ஓடினாள் நிரு.

வரும் சனிக்கிழமை ‘பாஷன் காட்டலாக்’ மற்றும் ‘அடீரா டிசைன்ஸ்’ இணைந்து நடாத்தும் புதுவருட பாஷன் ஷோவுக்கு பார்வையாளர்களாய் கலந்து கொள்ள விரும்புபவர்கள் எல்லாருக்குமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நிருவுக்கு தன்னிடத்தில் இருப்புக்கொள்ளவே இல்லை.

அபய் நேற்று மாலையில் இருந்து தன்னுடைய கேபினுக்கு வரவே இல்லை. இன்று காலையிலும் அவன் அலுவலகத்துக்கு உள்ளே வரும் போது கண்டது தான். அதன் பிறகு முழு நேரமும் அவன் தன்னுடைய டீமின் இடத்திலேயே தான் இருக்க வேண்டும்...

அனிருத்தனுக்கு வரும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்கவேண்டும். அவன் மற்றும் பெரிய பாஸிடம் யாரேனும் விருந்தினர்கள் வந்தால் வரவேற்பாளர் இவளுடைய இன்டர்காமுக்கு தான் அழைப்பார். பேசி அனுப்ப வேண்டும். ஆக இவளுக்கு இருக்கும் இடத்தை விட்டு நகரமுடியாத நிலை..அனுருத்தன் மற்றும் அவனுடைய அப்பா அலுவலகத்தில் இருக்கும் போது இதெல்லாம் நினைக்க கூட அவளுக்கு நேரமிருக்காது. இன்றைக்கு அவளது கவனம் பின்புறம் இருந்த டிசைன் டீமின் இடத்துக்கான கதவிலேயே இருந்தது.

என்ன செய்யலாம் என்று மண்டையை உடைத்து பிறகு ஓடிப்போய் டெக்னிக்கல் பிரிவில் பணிபுரியும் ரகுவை தாஜா செய்து இன்டர்காமுக்கு வரும் கால்களை தன்னுடைய மொபைலுக்கு மாற்றிக்கொண்டு விட்டாள். காபி கப்பில் நிரம்பியதும் கையில் எடுத்துக்கொண்டு டிசைன் பிரிவின் தனி இடத்தை நோக்கி ஜாலியாய் நடந்தாயிற்று. யாரும் கேட்கப்போவதில்லை தான் என்றாலும் காபி ப்ரேக் எடுக்கும் போது அப்படியே உங்களையும் பார்க்க வந்தேன் என்று காரணம் சொல்லலாமில்லையா?

உள்ளே அவள் எதிர்பார்த்ததை போலவே ஏகப்பட்ட களேபரம், பாஷன் காட்டலாக்கில் இருந்தும் சிலர் அங்கே இருந்தனர். அபய் தரையில் அமர்ந்திருந்து மாடலாக அவனது டீம் மேட் ஒருவனையே வைத்து அவன் அணிந்திருந்த உடையில் கடைசி திருத்தங்களை செய்து கொண்டிருந்தான். சௌமியும் நரேனும் மற்றவர்களும் செம்ம பிசி.. எல்லாரும் எங்கோ எதற்கோ வேகவேகமாய் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

சற்று நேரம் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தவள் பிறகு உதட்டை பிதுக்கிகொண்டு திரும்பி வந்தாள். யாரும் அவளிடம் உதவி கேட்கவுமில்லை, அவளிடம் நின்று பேசவும் நேரமில்லை. நாமாக ஏதும் எடுத்து போட்டு உதவலாம் என்றால் அவர்களுக்கு உதவும் அளவுக்கு அவளுக்கு அத்துறை பற்றி கொஞ்சமும் தெரியாதே.. அங்கே அவள் என்ன செய்யவேண்டும் என்று தன் மனம் எதிர்பார்க்கிறது என்று அவளுக்கே புரியவில்லை..

அடுத்த அரைமணிநேரத்தில் திரும்ப அங்கே போன போது இப்போது அபய் மேசை ஒன்றுக்கு மேல் உட்கார்ந்து நரேனிடம் கத்திக்கொண்டிருந்தான்.

“அறிவிருக்காடா? கண்ணை எங்கே வச்சிருக்க? இதென்ன கலர் த்ரெட் நடுவுல அசிங்கமா? இதெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? ஓடு.. எனக்கு கரக்ஷன் எல்லாம் வேண்டாம். இன்னொரு ப்ரெஷ் பீஸ் வேண்டும். மூணு மணிநேரம் தான் உனக்கு டைம், என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ வாங்கிட்டு வர்ற!” என்று நரேனை சாம்பிள் பீஸ் தயாரிக்கும் தையல் விற்பன்னர்கள் இருக்கும் இடத்துக்கு விரட்ட மெல்ல அவ்விடத்தில் இருந்து வந்த தடயமே இல்லாமல் நழுவி விட்டாள் நிருவும்

இருக்கும் கோபத்தில் அவளை கண்டு விட்டான் என்றால் மொத்த கோபத்தையும் இறக்கி வைக்கும் இடமாக அவளை மாற்றிவிடுவான் என்பது அவளது அனுபவ பட்டறிவு!

சாப்பிடப்போகும் முன்னும் அவ்வறையை எட்டிப்பார்த்தாள். அறைக்குள் யாருமே இல்லாமல் அபய் மட்டும் ஏதோ நோட்டை புரட்டிக்கொண்டிருக்க கால்கள் தானாகவே அபௌட் டர்னில் திரும்பி ஓடிவிட்டன.

சாப்பிட்டு முடித்து அனிக்கு அனுப்ப வேண்டிய ஈமெயில்களை அனுப்பி என்று ஒருமணி நேரம் உட்கார்ந்து வேலை செய்து விட்டு திரும்பவும் அங்கே நிரு விஜயம், கையில் அதே காபி

இந்த முறை அவ்விடத்திலேயே அபயை காணவில்லை.. மேசைக்கு கீழே மேலே மூலைகளில் என்று எல்லா இடமும் விழிகளால் ஸ்கான் செய்து நெகட்டிவ் ரிசல்ட்ஸ் வரவே வெளியே போய் விட்டான் போலும் என்று நினைத்துக்கொண்டு திரும்பியவளுக்கு மூச்சு நின்றே விட்டது. அவளுக்கு நேர் பின்னே கையை கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தான் அவன்

கண்கள் அவளையே முறைத்துக்கொண்டிருந்தன...

நிரு ஏதாவது சொல்லி விட்டு ஓடிவிடு என்று மனம் சொல்ல வார்த்தைகள் வருவேனா என்றன..

“என்ன மாணிக்கம் காபி விக்கற வேலை ஏதும் சைட்ல பார்க்கிறியா?” கண்கள் அவளையும் கையில் இருந்த காபியையும் குறிப்பாய் ஏறிட்டன.

“சார்?” என்றாள் நிரு அப்பாவியாய் நடித்து தப்பிக்கும் முயற்சியில்

“இல்ல காலைல இருந்து பார்க்கிறேன்.. ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் ஒரு தடவை ‘காபி வேணுமா காபி’ன்ற போல இந்தப்பக்கம் வந்து வந்து போயிட்டிருக்க என்ன விஷயம்..??” அவன் கூர்மையாய் அவளை ஊடுருவ

“இல்ல சார்.. நான்.. ப்ரேக் டைம்.. சும்மா பார்க்க ..” நாவு டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டது அவளுக்கு

“சும்மா பார்க்கிறியா? இங்கே நாங்கல்லாம் உயிரைக் கொடுத்து வேலை பார்க்குறது உனக்கு வேடிக்கையா தெரிதா...?” என்று முறைத்தவன் “வேலை இல்லாமல் வெட்டியா இருந்தா இப்படித்தான் வா இந்தப்பக்கம்” என்று கிட்டத்தட்ட அவளை முன்பக்கமாய் இழுத்துப்போனவன் “முதல் மூணு செட்டிலும் எல்லாம் சரிதானே?” என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டவன் “அந்த நாலாவது செட்டை கொடுங்க” என்று வாங்கிக்கொண்டு வந்து பாஷன் காட்டலாக்கில் இருந்து வந்த ஒருவருக்கு அணிவிக்க ஆரம்பித்தான்..

நிருவுக்கு அந்த பீஸ்களை கையில் பிடித்திருக்கும் வேலை. அதாவது உடைகளை மாட்டும் மனித ஹாங்கர் தான் வேலை. ஆனாலும் அந்த கரடிக்கு அத்தனை ஆனந்தம் என்பதை போல அணிலாய் தானும் அங்கே பங்கு கொள்ள முடிந்தது அவளுக்கு பெரிய சந்தோஷம். புது வருடத்துக்கான கலெக்ஷன் அது. ஆக உடைகள் கொஞ்சம் பாரம்பரிய ஸ்டைலில் தான் இருந்தன. சால்வையை பின் வைத்து பிளீட் எடுத்து மடித்து அவள் கையில் தந்து விட்டு அவன் மாடலின் மேல் செட் பண்ணிக்கொண்டிருக்க இவள் அவனின் கைகள் வேலை பார்க்கும் நேர்த்தியையும் வேகத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்

“மாணிக்கம் ப்ரோச்” வேலையில் இருந்து கண்ணை எடுக்காமல் அவன் கைகளை நீட்டுவான்

கைகளில் உரிய ப்ரோச் வைக்கப்படும்.

“பெல்ட்..”

நீட்டப்படும்..

“மாணிக்கம்” உடனடியாய் கைநீட்டி அவன் கைகளில் இருந்த பின்னை இவள் வாங்கிக்கொள்ள இப்படியாக அபராஜிதனின் ஜீபூம்பா செம சிங்கில் இருந்தது.. இடையிடையே அவளுக்கு கால் வந்தாலும் அதையும் பேசி சமாளித்தபடி தான் இருந்தாள்,

இப்போது அபய் வேலை செய்து கொண்டிருப்பது அவள் வந்ததில் இருந்து நான்காவது ஆண் மாடல், மொத்தம் இருபது மாடல்களாம் ஆண்களும் பெண்களும் தலா இருபது. கிட்டத்தட்ட மொத்த வேலையும் முடிய இறுதியாய் விசிறி போல வயலட் நிற வேஷ்டியில் இருந்த பிளீட்களை கீழே உட்கார்ந்து சரியாக நிறுத்தி ப்ளீட் செய்துகொண்டிருந்தான் அபய்.

இந்த புதுவருட தீம் வர்ணங்கள் வயலட்டும் பிங்கும் போல இருக்கிறது. அங்கிருந்த எல்லா உடைகளும் அந்நிறங்களை ஒட்டியே இருந்தது.

அனி ஏதோ கேட்க அழைத்திருக்க பக்கத்தில் இருந்த டேபிளில் சாய்ந்தபடி அவனுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்த நிருவுக்கும் எல்லாருக்கும் பப்ஸ் கொண்டு வந்த சிந்து அக்கா ஒரு பப்ஸை கொடுக்க வாங்கி கடித்தபடியே பேசிக்கொண்டிருந்தாள்.

அந்த மாடலை போட்டோ எடுக்கப்படும் இடத்துக்கு அனுப்பி விட்டு தானும் ஒரு பப்ஸ் ஐ கடித்துக்கொண்டே உள்ளே போனவன் திரும்ப வரும் போதே ஒற்றை விரலால் அவளை அழைத்துக்கொண்டு வர இவ்வளவு நேரமும் இருந்த சிங்கில் தயக்கமில்லாமல் அவன் அருகில் போனவளை திரும்பி நிறகும் படி சைகை செய்தான்.

வாயில் பப்சை வைத்துக்கொண்டு நின்றவளுக்கு முதலில் புரியவில்லை.

சார்..

டேர்ன் என்றபடி தன்புறம் கைகாட்ட குழப்பமாய் திரும்பியவளின் முன்னே முழந்தாளிட்டவன் இடுப்பில் இருந்து பாதம் வரை அவன் மெஷரிங் டேப்பை வைத்து அளவெடுக்க அந்த பொம்மையே நான் தான் என்று அப்போது தான் டியூப் லைட் பற்றிக்கொள்ள பதறிப்போனாள்.

“ஸா..சார் எதுக்கு?” அவளின் வார்த்தைகள் வழக்கம் போல தடுமாற

“ப்ச்.. பீஸை செட் பண்ணி பார்க்கணும். திரும்பு” சர்வசாதாரணமாய் சொல்லி விட்டு வைத்திருந்த செட்டை பையை விட்டு பிரித்தான்.

“ஸா..சார் என்னால முடியாது” ஒரு வழியாய் சொல்லி விட்டாள்

என்ன முடியாது..?

“எனக்கு அப்படில்லாம் நடக்க வராது”

ஒரு கணம் அவளை ஏறிட்டு பார்த்தவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிக்க இவளுக்கு முகம் சிவந்து விட்டது.

“உன்னை யாரும் இப்போ மாடலிங் பண்ணு காட்வாக் பண்ணுன்னு கேட்டாங்களா? ஆனாலும் உனக்கு நினைப்பு கொஞ்சம் அதிகமாவே இருக்கு மாணிக்கம்.. ஆனாலும் பாஷன் காட்டலாக் காட்வாக் கொஞ்சம் அதிகம்!” அவன் இன்னும் சிரித்துக்கொண்டிருந்தான்

“நான் ஒண்ணும் கேக்கலை.. நீங்கதான்” என்று குழப்பமாய் கேட்டவளுக்கு ஒன்றும் புரியவில்லை

“ப்ச் காமடி பண்ணாம திரும்பி நில்லு...”

“இவன் செய்வது புரிஞ்சு தான் பண்றானா? ஆண்களுக்கு அவன் ட்ரஸ் பண்ணிய விதத்தை பார்த்திருந்தாளே..உதறல் அவன் நெருங்க நெருங்க கூடியதே தவிர குறையவில்லை.

அவளுக்கு போட்டு பார்க்கவிருந்த பீஸ், ஒரு மல் காட்டன் லுங்கி போல பிங்கில் வயலட் பிரிண்ட் அதில் சேலை அணிந்தால் இடுப்புக்கு கீழே இப்படி இருக்குமோ அப்படி ஒரு ரப்பிள் வளைவாய் ஓடியது. அதற்கு கழுத்தில் முத்து வேலைப்பாடு செய்த ஸ்லீவ் லெஸ் டாப் வழக்கமான ஒரே சைஸ் டாப் தான். அதன் மேல் அணிய ஒற்றைக்கையில் மட்டும் வயலட் சால்வை போல ஒரு துணி, தாவணிக்கான இன்ஸ்பிரேஷன் போலும்..

டாப்பை அவளது கையில் தந்து மாற்றிக்கொண்டு வா என்று துரத்தி விட தன்னுடைய டாப்புக்கு பதிலாய் அதை மாற்றிக்கொண்டு வந்தவளை அவன் பார்த்தது போலவே தெரியவில்லை.. சுற்றி இருந்தவர்களும் சௌமி உட்பட இது வழக்கமான நிகழ்வே என்பதை போலவே இவர்களை கண்டு கொள்ளக்கூட இல்லை.. எல்லாம் சேர கொஞ்சம் கொஞ்சமாய் ரிலாக்ஸ் ஆனாள் நிரு.

அவளது அளவை வைத்து அந்த காட்டன் துணியை சேலையின் கீழ்ப்பகுதி போல உடலில் சுற்றி பின் செய்தவன் ரபிளையும் செட் பண்ணி பின் செய்தான். கண்ணாடியில் இருவரையுமே பார்த்திருந்தது நிருவின் விழிகள். அந்த பீஸ் அவளுக்கு அவ்வளவு அழகாய் இருந்தது என்பதையும் கண்கள் குறிப்பெடுக்க தவறவில்லை. விரல்கள் அவளை தொடுவது போன்ற அருகாமையில் ஆனால் ஒரு தடவை கூட அவளை தொடாமல் அபய் வேலை பார்த்தது அவளுக்குள் பெருமை வேறு..

இவன் வேலையென்று வந்து விட்டால் வெள்ளைக்காரன் தான் என்று மனம் சான்றிதழ் வேறு கொடுத்தது.

மேலே அந்த காட்டன் சால்வையை செட் பண்ணி விடும் போதுதான் ஆரம்பித்தது அவஸ்தை..அவன் நிமிர்ந்து நேராக நின்று அவளது கழுத்தின் கீழ குனிந்த படி பின் செய்ததில் இவளுக்கு மூச்சடைக்காத குறை.. நெளிய ஆரம்பித்தவளை இரண்டு தடவை அவன் அதட்டி நேராக நிற்கவைக்க வேண்டியிருந்தது.

ஒருவழியாய் அவளை தயார் செய்து போட்டோ எடுக்கும் இடத்துக்கு துரத்தி விட்டவன் பின்னாலேயே அவனும் வந்தான்.

இவளை கண்டதும் அங்கே போட்டோ கிராபி டீம் ஒரே கலாட்டா..

இங்க பாரடா நம்ம பெல்லா ஹதீத் என்று சீண்ட ஆரம்பித்து விட்டார்கள். குழந்தையில் இருந்து ஒரு இடத்தில் பழகும் போது இதுதான் பிரச்சனை யாருமே மரியாதை கொடுத்து தள்ளி நிற்க மாட்டார்கள்! நிரு ஏற்கனவே சிவந்து போயிருந்தவள் இவர்கள் பண்ணும் கலாட்டாவில் ஓடிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்க பின்னாலேயே வந்த அபயை கண்டதும் எல்லாம் கப் சிப் ஆகி விட்டது!

ஸ்டைலிஸ்ட் ஓடி வந்து அவசரமாய் அவளது முடியை அவிழ்த்து லூசாக விட்டு கூடவே சின்ன மேக்கப்பும் செய்து விட போட்டோ எடுக்க அனுப்பப்பட்டாள்.

அப்போது தான் அவளுக்கு புரிந்தது. இந்த போட்டோக்களை வைத்து தான் அந்த உடையில் அமைப்பை பைனலைஸ் செய்யப்போகிறார்கள் என..அதன் பிறகே அணியப்போகும் மாடலின் சைஸுக்கு அந்த உடை உருவாக்கப்படும். கிட்டத்தட்ட மாடல் பொம்மையின் வேலையை தான் நாம் பார்த்திருக்கிறோம் என்று நினைக்க சிரிப்பும் பொங்கி வந்தது. இதில் காட்வாக் வராது என்று சொல்லி மொக்கை வேறு வாங்கிவிட்டோம்!

போட்டோவுக்கு ஜாலியாய் போஸ் கொடுத்திருக்கலாம். ஆனால் கூர்மையான அளவிடும் பார்வையோடு தன் முன் நின்றவனால் படபடப்பு தான் முந்திக்கொண்டது.

எப்படியோ ஒரு வழியாய் எல்லாம் முடிய அன்றைக்கு டிசைன் டீமுக்கு கூடவே இருந்து நிரு உதவியதால் பரேடுக்கு உபயோகிக்காத அபயின் மீதி ஐந்து உடைகளில் ஒன்றை சனிகிழமை அணிந்து கொள்ள அந்த டீமின் பெண்களோடு இவளையும் சேர்த்துக்கொண்டார்கள். முதல் தெரிவையும் சௌமி இவளுக்குத்தான் கொடுத்தாள்.

ஆர்வமாய் புரட்டி லெஹெங்கா வகையறா அழகிய உடைகளை டிசைன் டீம் பெண்களுக்காக விட்டு விட்டு சிம்பிளான ஒரு டாப்பை அவளுக்கென தெரிவு செய்தாள் நிரு, தன்னிடம் இருக்கும் சாம்பல் பாய்ப்ரன்ட் ஜீன்ஸுக்கு பொருத்தமாய் இருக்கும் என்ற எண்ணத்தில்..அப்படியே ஐவரும் அந்த உடைகளுக்கு அணிகலன்கள் வாங்க அன்று மாலை ஷாப்பிங் போவதாகவும் முடிவானது.

ஏன் இவ்வளவு உற்சாகமும் சந்தோஷமும் என்று அவளுக்கே தெரியவில்லை. சனிக்கிழமை எப்போது வரும் என்று காத்துக்கொண்டே இருந்தது மனது.

ஒருவழியாய் வந்து சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கெல்லாம் சௌமியோடேயே பாஷன் பாரெட் நடக்கவிருந்த ஏழு நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தும் விட்டாள்.

வயலட், பிங்க் வர்ணங்களை கலந்த கோடுகள் கொண்ட ஜார்ஜெட் டாப் அவளுடையது. அணிந்து பார்த்த பிறகே அதன் அழகு தெரிந்தது. சௌமி தேர்ந்தெடுத்தது கிட்டத்தட்ட அதே வர்ணக்கலப்பு கொண்ட லெஹெங்கா. ரொம்பவே அழகாய் இருந்தது அவளுக்கு. ஆறுமணிக்குத்தான் விழா ஆரம்பம் ஆகையால் பின்புறம் தயாரிப்புப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்க அவர்களுக்கு உதவும் பொருட்டே நேரத்தோடு வந்தால் அங்கே அவர்களுக்கு பெரிதாக வேலை இல்லை.

ஏற்கனவே உடைகள் அணிவிக்கப்பட்டு யாருக்குப்பின் யார் , பிறகு ஜோடியாக நடப்பது என மாடல்கள் தான் ரிகர்சல் பார்த்துகொண்டிருந்தனர். அபய் கறுப்புக்கும் வயலட்டுக்கும் இடைப்பட்ட வர்ணத்தில் குர்தா அணிந்துகொண்டு பிசியாக சுற்றிக்கொண்டிருக்க இவர்கள் வெறுமனே சுற்றிப்பார்த்துக்கொண்டு நின்றனர்.

அன்றைக்கு அவள் அணிந்த உடையை அணிந்திருந்த மாடலை கவனித்துப்பார்த்தாள் நிரு. அவளுக்கென்னமோ அந்த மாடலை விட அந்த உடை நிருவுக்குத்தான் நன்றாக பொருந்தியிருந்ததாக தோன்றியது. உதட்டை சுளித்துக்கொண்டு திரும்ப அவளது எண்ணப்போக்கினை அறிந்தவன் போல ஒரு நமுட்டுச்சிரிப்போடு அவளை கடந்து போனான் அபய்

ஆறு மணி மின்னல் வேகத்தில் வந்து விட விழா ஆரம்பித்து விட்டது. இரண்டாவது வரிசையில் அலுவலகத்தோழர்களோடு அமர்ந்து விழாவை ரசித்துக்கொண்டிருந்தாள் நிரு. சரியாக ஏழு மணிக்கு பலத்த கரகோஷங்களுடன் புதுவருஷ பாஷன் பரேட் ஆரம்பமானது.

மாடல்கள்.முதலில் ஒவ்வொருவராகவும் பிறகு ஜோடியாகவும் நடை பயின்றனர். வழக்கமாக பாஷன் பரேட்களில் வரும் உடைகள் நடைமுறையில் அணிய முடியாதவை என்ற கருத்துக்கு எதிராய் ஒரு பாரம்பரிய தீம் பார்ட்டிக்கோ புதுவருட பார்ட்டிக்கோ அணியக்கூடிய வகைகள் தான் எல்லாமே.. எல்லா உடைகளுக்குமே பலத்த கரகோஷங்கள் கிடைக்க முகத்தில் எதையும் காண்பிக்காமல் ஸ்டேஜின் கீழே நின்றுகொண்டிருந்த அபராஜிதனையே இவள் கண்கள் அடிக்கடி தழுவிப்போயின..

தனியாக சுதந்திரமாய் அவனது இஷ்டப்படி வேலை செய்ய முடிந்தால் இப்போதைக்கு எவ்வளவு பெரிய வெற்றிகரமான டிசைனராக இவன் மாறியிருப்பான்? என்ற எண்ணத்தை தவிர்க்கவே முடியவில்லை அவளுக்கு.

அவன் இப்போது ஸ்டேஜின் பின் புறம் போக..ஓ.. பாரேட் முடிவில் டிசைனரும் மாடல்களோடு கூட சேர்ந்து நடந்து வந்து பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவார்களே அதற்காகத்தான் போகிறானாக இருக்கும் என்று ஊகித்துக்கொண்டவள் பார்த்துக்கொண்டிருக்க ஒரு ஐந்து நிமிடங்களின் பின்னர் மொத்த பாரேடும் முடிய தன்னுடைய மாடல்களுக்கு பின்னே நடந்து வந்தவனை பார்க்க நிருவுக்கு மூச்சே நின்று போனது.

ஒரு பழுப்பு நிற மல் காட்டன் வேஷ்டி மேலே வெஸ்ட் கோட் போல வயலட் அங்கவஸ்திரத்தை டிசைன் செய்திருக்க அது பெயருக்கு அவனது மார்பை மறைத்திருந்தது. ஒரு திராவிட இளவரசனை போலவே திமிர் விழிகளுடன் நடந்து வந்தவனுக்கா அவன் வடிவமைத்த உடைகளுக்கா என்று தெரியாமல் கூட்டத்தில் கரகோஷங்கள் பறந்தன.

நிருவுக்கு வயிற்றில் மீண்டும் அல்சர் தன் தலையை நீட்டுவது போலிருந்தது.

உற்சாகமாய் கையசைத்து வரவேற்றுக்கொண்டிருந்த இளம் பெண்களை உதடு கடித்து பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அபய் மீது தான் கடுப்பு.

இப்போ இந்த சன்னி லியோன் கெட்டப் தேவையா?

“இது இதைத்தான் நீ இவ்ளோ நாளும் மிஸ் பண்ணடி! பார்த்தியா எங்க பாஸை? எவ்ளோ ஸ்போர்ட்டிவா இருக்கார்,, அவரை போய் சிங்கம் புலின்னு பில்டப் கொடுக்கிற? இன்னிக்கு டீஜே நைட் இருக்குல்ல..அப்போ பாரு” பக்கத்தில் இருந்த சௌமி அவள் காதில் கிசுகிசுக்க

இது ஸ்போர்ட்டிவா இருக்கறதா? அவளை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவள் ஒன்றுமே பதில் சொல்லவில்லை.

ஒரு வழியாய் ஷோ முடித்து எல்லோரும் டின்னர் எடுப்பதற்காக டைனிங் ஹால் செல்ல அபய் தன்னுடைய டீமோடு அமர்ந்து கொண்டிருக்க நிருவும் சௌமியோடு அந்த வட்ட மேசையின் எல்லையில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

அடிக்கடி அவள் பார்வை அபையையே தொட்டு வந்தது. நிகழ்ச்சி முடிவை நெருங்கும் போதே நிருவின் மனம் காற்றுப்போன பலூனாகி மொத்த உற்சாகத்தையும் தொலைத்து விட்டிருந்தது. நாளைக்கு பாரிஸ் போனவர்கள் எல்லாரும் வந்து விடுவார்கள். இன்றைக்கு பிறகு சுதந்திரமாக அலுவலகத்தில் அவள் நடமாட முடியாது. மறுபடியும் கழுத்தொடிய வேலை ஆரம்பித்து விடும்.

எதுவரை தொடரும் இது? யாராவது ஒருவர் முடித்தாலொழிய இந்த நாடகம் முடியாதே...

அவள் கண்கள் கலங்க ஆரம்பித்த நொடி அவளின் மறுபக்கத்தில் இருந்த நரேன் “இன்னிக்கு நிரு உலக வரலாற்றில் முதல் தடவையா நம்ம கூட பங்க்ஷன் எல்லாம் அட்டென்ட் பண்ணி அதுவும் முடியும் வரை கூடவே இருக்கா..அதனால் “ என்று க்ளாசை எடுத்து சியர்ஸ் செய்ய எல்லாரும் சிரித்தபடியே சியர்ஸ் சொன்னார்கள்

“அவசரப்படறீங்களேடா..நாளுக்கு சின்னவர் வந்ததும் இந்த மேடம் சொல்லுங்க பாஸ் ஆமா பாஸ், அப்படியா பாஸ்னு பின்னாடியே போய்டுவாங்க.. அவர் இல்லாத நேரம் டைம் பாஸுக்கு தான் மேடமுக்கு நம்ம எல்லாரும்” என்று அபயின் குரல் இறுக்கமாய் இடையிட

எல்லாரும் அதை அவன் நிருவை கிண்டல் பண்ணுவதாக எடுத்துக்கொண்டு சிரிக்க,

அவளுக்குத்தான் அவன் என்ன சொல்கிறான் என்று புரியுமே.. கண்ணீரே கண்களில் திரண்டு விட்டது.

ஒரு வருஷம் ரெண்டு வருஷம் என்றால் பரவாயில்லை.. ஐந்து வருஷங்கள் கடந்தும் உனக்கு என்னை புரியவில்லையா என்ன?

‘அனி கிட்ட வேலை செய்ய மாட்டேன்னு நான் சொல்ல முடியுமா? விட்டுட்டு நான் எங்கே போக?

தெருவில் நின்றிருக்க வேண்டிய என் வாழ்க்கையை திருப்பி நேராக்கி தந்தவர்கள் அவர்கள். என்னால் ஆமாம் பாஸ் என்று சொல்ல மட்டும் தான் முடியும். உனக்கு புரியாதா?

டைம் பாஸுக்கு தான் நான் வர்றேனாம்.. இந்த வாரம் முழுக்க சந்தோஷமாக இருந்த மனதை ஒரே வார்த்தையில் உடைத்து விட்டானே..

டெசர்ட் எடுத்து வரும் சாக்கில் அவர்களை விட்டு விலகியவள் விடுவிடுவென ஹோட்டல் வாசலுக்கு வந்து ஆப்பில் காப் ஒன்றுக்கு புக் செய்து விட்டு காத்திருந்தாள்.

அவளின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுவதை இருள் திரையிட்டு மறைத்துக்கொண்டது.

போன் அடிக்கவும் எடுத்துப்பார்த்தால் RW காலிங் என்றது திரை.

கண்டுபிடிச்சிட்டான் உதடு அலுப்பாய் சுழிந்தது

“மாணிக்கம் எங்க இருக்க?” மறுமுனையில் பல்லைக்கடித்தான் அவன்.

“நான் வீட்டுக்கு போயிட்டிருக்கேன் சார், தலைவலி”

“எல்லாருக்கும் டாக்சிக்கு ஒழுங்கு பண்ணியிருக்கு நீ மட்டும் தனியா கிளம்பினா என்ன அர்த்தம்?”

“டைம் பாஸுக்கு வர்றவங்களுக்கெல்லாம் எதுக்கு சார் ஒரு சீட், வேற யாருக்கும் கொடுங்க”

“திரும்பி வா..” அந்த இரண்டே சொற்களில் தான் எத்தனை அழுத்தம்!

“நான் கிளம்பிட்டேனே சார்”

“நீ வாசல்ல தான் நிக்கற..ஐ சி யூ. இப்போ நீ திரும்பி வரல நடக்கறதே வேற” அவன் குரல் மாறவும் இவளுக்கும் கோபம் வந்து விட்டது. இவங்க பேசறதை எல்லாம் கேட்டுட்டு பம்மிட்டு நிக்க நான் ஒண்ணும் குழந்தை இல்லை. இன்னிக்கு நான் திரும்பி வரமாட்டேன் முடிஞ்சத பாருடா என்று மனதுக்குள் கறுவிக்கொண்டவள்

“Beggers cannot be choosers. இந்த கம்பனியில் நான் இருக்கும் வரை yes சார் மட்டும் தான் சொல்ல முடியும். பை சார்” என்று விட்டு போனை கட் பண்ணி விட்டாள். அது மீண்டும் அடித்ததை கண்டுகொள்ளவில்லை

டாக்சி வர இன்னும் ஐந்து நிமிடங்கள் இருப்பதாக ஆப் காண்பித்தது. அதுவரை இங்கே நின்றால் அவனே வெளியே வந்தாலும் வருவான். என எண்ணிக்கொண்டவள் ஆட்டோ ஒன்றை மறித்து ஏறி முகவரியை சொல்லிவிட்டு புக் செய்திருந்த டாக்சியை கான்சல் செய்து விட்டு சாய்ந்து கொண்டாள்.

இரவு நேரம் ஆட்டோவில் தனியாய் போகும் பயம் கண்ணை மூட விடாமல் பண்ண விழித்திருந்து வழி சொல்லிக்கொண்டே வந்தவள் வீட்டில் இறங்கும் போது முற்றாய் தளர்ந்திருந்தாள்

உங்கள் இருவருக்குள் அடித்து விளையாடும் பந்தா நான்?

இந்த வாரம் முழுக்க எவ்வளவு சந்தோஷமாக இருந்தேன். பொம்மைக்கு நன்றாக உடையணிவித்து கடைசியில் சேற்றில் தள்ளிவிடுவது போல கடைசி மட்டும் உன் மனதில் எனக்கான இடம் இப்படித்தான் இருக்கும் என்று காட்டி விட்டாயில்ல?

கண்ணை துடைத்துக்கொண்டு வேக வேகமாய் வீட்டை நோக்கி நடந்தாள் நிரு. வழமையாய் அச்சுறுத்தும் இருளும் இரவும் இன்றைக்கு அவள் கருத்திலேயே புலப்படவில்லை.

“என்ன தனியா வர்ற? கூட வந்தவளை காணோம்?” அதே நான்காவது வீட்டு ராஜேஸ்வரி பாட்டி தான்! அவர்களது வீட்டு வாசலில் நின்று அதட்டலாய் கேட்டுக்கொண்டிருந்தார்

இவங்களுக்கு இப்போ என்னவாம்? என்று எரிச்சலானவள்

“இன்னும் பங்க்ஷன் முடியல பாட்டி, எனக்கு தலைவலி” என்று முணுமுணுத்து விட்டு அவரை கடக்க முயன்றாள்

“சாப்பிட்டாவது வந்தியா?”

காதில் கேட்டதை நம்ப முடியாமல் அவரை திரும்பி பார்த்தாள் நிரு

முறைத்துகொண்டே விசாரித்துக்கொண்டிருந்தார் ராஜேஸ்வரி

சட்டென்று அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெளியே வந்து விட்டது. வார்த்தைகளை நம்பாமல் தலையை மட்டும் ஆட்டி விட்டு விடுவிடுவென வீட்டை நோக்கி ஓடிப்போய் கதவை பூட்டிக்கொண்டாள் அவள்.
 
Last edited by a moderator:
New member
Messages
16
Reaction score
13
Points
3
வாசித்து விட்டேன் ush. ஏனோ எனக்கும் கவலை வந்துட்டு. இந்த குட்டி பிள்ளையை எல்லாரும் use பண்றங்களோ 🤔
 
  • Like
Reactions: Ush
New member
Messages
16
Reaction score
7
Points
3
அவளின் சந்தோஷத்தை ஒரே வார்த்தையில் முடிச்சி விட்டுட்டான்.இப்ப வந்து சமாதானம் பண்ணுவானோ?🤔
 
New member
Messages
17
Reaction score
9
Points
3
Rhythm memory share pannittu vanthen intha kathai link கண்ணில் பட்டது. அபய் பேர் ல இருந்து ஆரம்பிப்போம் கன்னிமாடம் க்கு அடுத்து அவராஜிதன் ஐ ஹீரோக்கு பேரா பாக்கறேன்.
RW thaan Dress anupparaanu ivaluku தெரிஞ்சு இருக்கும்ன்னு தோணுது ஆனாலும் அவளுக்கு தெரியாத போலவும் ஃபீல் பண்றாலே, Graditude one excellent form of emotion unless others use it to exploit us. நிருவ பார்த்தா அப்படித்தான் இருக்கு. He has some strict mentorship style pola. Konjam over ah iruku appo appo. Btw RW, LD kellam Eppo expansion சொல்லுவீங்க. அனி யும் கொஞ்சம் mixed feeling thaan villan nu thona மாட்டேங்குது
 
New member
Messages
6
Reaction score
8
Points
3
Nice update. Poor niru. Abhay adira la continue panradhu niru kagava? Pesama avan new company start panitu niruva anga marketing head a podalam he he. Next update pls.
 

Ush

Active member
Messages
77
Reaction score
208
Points
33
Nice update. Poor niru. Abhay adira la continue panradhu niru kagava? Pesama avan new company start panitu niruva anga marketing head a podalam he he. Next update pls.
haha Nice idea. Ill tell him :D
 

Ush

Active member
Messages
77
Reaction score
208
Points
33
Rhythm memory share pannittu vanthen intha kathai link கண்ணில் பட்டது. அபய் பேர் ல இருந்து ஆரம்பிப்போம் கன்னிமாடம் க்கு அடுத்து அவராஜிதன் ஐ ஹீரோக்கு பேரா பாக்கறேன்.
RW thaan Dress anupparaanu ivaluku தெரிஞ்சு இருக்கும்ன்னு தோணுது ஆனாலும் அவளுக்கு தெரியாத போலவும் ஃபீல் பண்றாலே, Graditude one excellent form of emotion unless others use it to exploit us. நிருவ பார்த்தா அப்படித்தான் இருக்கு. He has some strict mentorship style pola. Konjam over ah iruku appo appo. Btw RW, LD kellam Eppo expansion சொல்லுவீங்க. அனி யும் கொஞ்சம் mixed feeling thaan villan nu thona மாட்டேங்குது
Oh she knows 100 percent! dress matter la? yaarnu theriyama girls wouldn't wear..
Absolutely,,
It’s nice seeing you in the comment thread, Mano
 
Top