• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

நினைவிழை - 4

Ush

Active member
Messages
77
Reaction score
208
Points
33
4

ஒருநாள் நேசம்... ஒருநாள் கோபம்... ஒருநாள் நீயே என் எல்லாம் என்ற சரண் என என் மனமென்னும் துகிலில் பூப்பின்னலாய் உன் நினைவுகளை நெய்து விட்டு துகிலுக்கு உரிமை கோருகிறாய்! அதில் அனுதினமும் சுகமாய் பொதிந்து தூங்கும் என்னியதயம் என்ன ஆகும் என ஏன் எண்ணிப்பார்க்க மறுக்கிறாய்?

அனிருத்தன் அன்ட் கோ இல்லாத வாரம் வெகு வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது. அன்றைக்கும் அவள் போய் அரை மணி நேரத்தில் நிருவுக்கு அனிருத்தன் போன் செய்து விட்டான்.

“பாப்ஸ், ஷா அன்ட் கோ கூட சைன் ஆகியிருக்கும் பல்க் ஆர்டருக்கு தயாரிப்பு செலவு தவிர மீதி செலவுகளுக்கான நிதியை அவசரமா முடிவு பண்ணி ஆப்ரூவ் பண்ண வேண்டியிருக்கு. வழக்கமான ஐந்து பேரையும் மீட்டிங்குக்கு கூப்பிடு, லாஸர் சார் கிட்ட பேசிட்டேன். அவர் மீட்டிங்கை தலைமை தாங்கி பண்ணிடுவார். நீயும் போ, மீட்டிங் முடிச்சதும் எனக்கு மினிட்ஸ் அனுப்பி வை என்ன?”

“ஒகே பாஸ்” என்றவளுக்கு இது ஈஸி பீஸி வழக்கமான வேலை தான், அவனுடன் காலில் இருந்த போதே கூகிள் காலண்டரில் மீட்டிங் அப்பாயின்ட்மென்ட் பிக்ஸ் பண்ண ஆரம்பித்தவள் சின்ன யோசனை ஓட தயங்கி பின் “ யாராவது மேலதிகமா மீட்டிங்குக்கு தேவையா? சார்” என்று கேட்டாள்

“இல்லல்ல. மினிட்ஸ் பார்த்து எப்படியும் பைனல் ஆப்ரூவல் நான் தானே பண்ணப்போறேன். வழக்கமான ஐந்து பேரும் போதும்” அனி அந்தப்பக்கம் ஏதோ வேலையில் இருக்க வேண்டும்.. அங்கேயும் இங்கேயுமாய் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தான்.

“ஒகே சார்” சொல்லும் போதே அவளுக்கு ஒரு மாதிரியான ஏமாற்றம்

“பாப்ஸ்.. அப்புறம் Are you hanging there okay? “ அனியின் குரல் வழக்கமான துள்ளலுக்கு மாறி கரிசனமாய் வினவியது

Yes சார். எல்லாம் ஸ்மூத்தா தான் போயிட்டிருக்கு” என்று சீரியசாகவே பதிலளித்தாள் நிரு.”

“Hold the fort till I come” என்று சிரித்தவன் “பைமா I got to go” என்றபடி போனை அணைத்து விட அந்த “பைமா” கூட அவளது மனநிலையை மீட்டெடுக்கவில்லை

ஐந்து பிரிவுத் தலைவர்களுக்கும் வழக்கம் போல அழைப்பு விடுக்க எல்லாருக்கும் காலை பத்து மணி ப்ரீயாகவே இருக்க மீட்டிங் ஆரம்பித்து விட்டிருந்தது. வழக்கம் போல வட்டமேசையில் கடைசி ஆளாய் அமர்ந்திருந்தாள் நிரு.

அவளுக்கு அங்கே பேசவோ முடிவெடுப்பதில் பங்குகொள்ளவோ முடியாது அவளது வேலை குறிப்பெடுப்பது மட்டும் தானே. ஆக நடுவில் உட்கார்ந்து ஏன் மற்றவர் கவனத்தை கலைக்க வேண்டும் என்பது அவளது எண்ணம்.

எல்லாரும் தங்களுக்கு தேவையான நிதியை அண்ணளவாய் சொல்லி விட கடைசியாய் லாஜிஸ்டிக் பிரிவு தலைவர் பேசிக்கொண்டிருந்தார். “எங்களுக்கு வெறுமனே பாக்டரியில் இருந்து பொருளைக்கொண்டு போய் இறக்கும் செலவு தான். ஆனால் இந்த உடைக்கு பாக்கேஜிங் எப்படி செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியலையே..”

லேசாய் உதட்டை சுழித்தாள் நிரு. அந்த உடை எப்படி இருக்கும்? அந்த உடைக்கு உபயோகிக்கும் துணிவகை அதில் பயன்படுத்தப்போகும் அலங்காரங்கள் எந்தகையது என்று தெரிந்தால் தானே பாக்கேஜிங் பற்றி பேசவே முடியும்?

இங்கிருக்கும் தலைவர்களுக்கு அது பற்றி என்ன தெரியும்?

உண்மையில் இந்த மீட்டிங்கை தலைமை தாங்கி நடாத்த வேண்டியவனே அபராஜிதன் தானே. தலைமை டிசைனர் அவன் தான் அந்த ஆடையை பற்றிய தெளிவான சித்திரத்தை வழங்க முடியும்? அவனை அழைக்க இவர்களுக்கும் மனதில்லை. கூடச்சேர்ந்து தன் பங்களிப்பை வழங்கி கம்பனியின் ஓட்டத்தை இலகுபடுத்த அவனுக்கும் மனதில்லை. மீட்டிங்கை குழப்ப மட்டும் தான் இதுவரை வந்திருக்கிறான்.

இன்றைக்கு உண்மையில் அவன் இல்லாத தருணத்திலாவது அபயை அழையுங்கள் என்று அனி சொல்வான் என்று நிரு எதிர்பார்த்தாள். அதுவும் நேற்றைய பாஷன் காட்டலாக் மீட்டிங்கில் அவன் காட்டிய ஈடுபாடும் கொடுத்த வழிகாட்டலும் இங்கேயும் அதுவும் அனி இல்லாத நிலையில் அவனுக்கு கொஞ்சம் தன் பங்களிப்பை கொடுக்க மனம் வரக்கூடும் என்று நினைத்தாள்.

ப்ச்,,, அனிக்கு அது தோன்றவே இல்லை..

“அது..அது அபராஜிதன் சார் கிட்ட கேட்டாத்தானே தெரியும்?” என்று விழித்தவர்கள் இப்போது மொத்தமாய் திரும்பி நிருதியை பார்க்க என்னை எதுக்கு பார்க்கிறீர்கள்? என்று அவள் அவர்களையே திரும்பப்பார்த்தாள்

“நிருதிம்மா.. இந்த ப்ராடக்ட் சாதாரணமா நம்ம பண்ற ஸ்டைல் போலவா? இல்ல ஏதேனும் ஸ்பெஷல் டிசைனா? முன்னாடி அனி சார் ஏதும் பேசினாங்களா? இருந்தா சொல்லும்மா.. அப்புறமா அபராஜிதன் சார்கிட்ட தெளிவா கேட்டு தேவையான தொகையை முடிவாக்கிடலாம்” என்று லாஸர் சார் கேட்கவும் தான் ஓ இதுக்கா அந்த பார்வை! என்று தெளிந்தாள்

பட்டென்று ஷா அன்ட் கோவுடனான பழைய மீட்டிங் குறிப்புகளை தட்டிப்பார்த்ததில் விபரம் கிடைத்தது. சம்மர் ஸ்டைல் உடைகள் அதுவும் செலீன் வெளியிட்ட சம்மர் காட்டலாக்கின் இன்ஸ்பிரேஷனாக த்தான் வேண்டும் என்று தான் குறித்து வைத்திருந்ததை சத்தமாகவே படித்தாள் நிருதி.

அப்படின்னா சாதாரண பாக்கேஜிங் தான். என்ற படி அவர்கள் குறித்த தொகையை முடிவு செய்தார்கள்.

மொத்தமாய் இவ்வளவு பட்ஜெட் தான் வேண்டும் என்று முடிவானதும் எல்லாரும் கிளம்பிவிட நிரு அங்கேயே இருந்து அனிக்கு அனுப்புவதற்காய் மீட்டிங் குறிப்பை இறுதி செய்யலானாள். இரண்டே நிமிட வேலையை கையோடேயே முடித்து விட்டே போய்விடலாம் என்ற எண்ணத்தில்..

வருஷக்கணக்காய் பழகிப்போய்விட்ட வேலை என்பதால் கையோ அது பாட்டுக்கு டைப் செய்து கொண்டிருக்க மனமோ அபய் மேலே தான் இருந்தது.

யாராக இருந்தாலும் என்ன தான் கோபம் இருந்தாலும் சொந்த அப்பாவின் கம்பனியில் இப்படி ஒதுக்கி வைக்கப்பட, ஒதுங்கிப்போக எப்படி மனசு வரும்? வலிக்காதா அவனுக்கு?

குறிப்பை முடித்து அனிக்கு அனுப்பி விட்டு எழுந்து வந்தவளின் கால்கள் தானாக அபயின் கேபின் பக்கம் போய் அங்கே அவன் இல்லாமல் போக பொது ஓய்வறைப்பக்கம் நடந்தன.

அவளை ஏமாற்றாமல் அபய் அங்கே தான் இருந்தான். அவளுக்கு வெகு பரிச்சயமான காட்சி அன்றைக்கும் காணக்கிடைத்தது. கால்களை தூக்கி மோடாவில் போட்டுக்கொண்டு காட்டன் ஷர்ட்டின் இரண்டு பட்டன்கள் திறந்து கிடக்க குனிந்து டாப்பில் விரல்களை ஓட்டிக்கொண்டிருந்ததில் முடி மொத்தமாய் நெற்றியில் விழுந்திருந்தது. இப்போது அலுவலகத்தில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் எவையும் அவன் பிரக்ஞையில் இருப்பது போலத்தெரியவில்லை.

நாம் தான் தேவையே இல்லாமல் தலையில் போட்டு குழப்பிக்கொள்கிறோம் போலும். அவனது கவனத்தை கலைக்காமல் அப்படியே நழுவி போய்விடலாம் என்ற எண்ணத்தில் அவள் திரும்ப மாணிக்கம் என்ற அவன் குரல் அவளை தடுத்து நிறுத்தியது.

அச்சோ பார்த்துட்டானேஎன்று பதறி “சார்.. “ என்றாள் மெல்லிய குரலில்

தலையை நிமிர்த்தக்கூட செய்யாமல் “ஒரு காபி!” என்றானே பார்க்கலாம்

இவனை!!!

பாவம் என்று பார்க்கிறேன்..இல்லாவிட்டால்!!! என்று கருவியபடி டொக் டொக்கென்று பாதம் வைத்து நடந்து போனவள் அவனது மக்கினை எடுத்து காபியை நிரப்பி கூடவே தனக்கும் ஒரு கப்பில் எடுத்துக்கொண்டு வந்தாள்.

எப்போவாச்சும் சௌமியை அல்லது நரேனை இந்த வேலை செய்ய கேட்டிருப்பானா? இல்லவே இல்லை. நிருவை கண்டால் மட்டும் அடிமை ஜீபூம்பா போல தோன்றும் போலிருக்கிறது மாணிக்கம்.காபி,, மாணிக்கம் வடைன்னு!

மனதுக்குள் முறுமுறுத்தபடி அவனிடம் காபியை கொடுக்க “இப்படி உக்காந்து இந்த இரண்டு டிசைனையும் பார்த்து என்ன தோணுதுன்னு சொல்லு. என்று அவளிட டாப்பை நீட்டியபடி தன் பக்கம் சோபாவில் கைகாண்பித்தான் அபய்

நானா? அவளது விழிகள் விரிந்தன. எக்ஸாம் முடிந்ததும் மனுஷியாய் ப்ரொமோட் ஆகி விட்டேனோ? வழக்கமாய் திட்ட மட்டுமே செய்பவன் மீட்டிங்குக்கு கூட்டிட்டு போறான், கொஞ்சம் பேசறான், இப்போ அவன் வரைந்த டிசைனுக்கு அவளுடைய அபிப்பிராயத்தை வேறு கேட்டால் நிருவுக்கு மயக்கம் வராதா?

“கேட்கணுமேன்னு கேள்வி கேட்காதேன்னு சொல்லிருக்கேன். உன்ன தவிர இங்கே வேற யார் இருக்கா?”

படக்கென அவன் கைகாண்பித்த பக்கமாய் உட்கார்ந்து கொண்டவள் காபியை குடித்தபடியே டாப்பில் அவன் வரைந்து வைத்திருந்த டிசைன்களை பெரிது பண்ணி உற்றுப்பார்க்க ஆரம்பித்தாள்.

அவன் இப்போது தன்னையே பார்த்திருப்பது புரிய கீழுதட்டை கடித்து முகபாவனைகளை கட்டுப்படுத்தியபடி டாப்பே கவனமாய் இருந்தாள் நிரு.

“ரெண்டுமே ஒரே டிசைனோட மாறுபட்ட வடிவங்கள் தான்னு தோணுது சார்” அவள் யோசனையாய் சொல்ல.

ஹ்ம்ம்.. வேற? என்று அபய் தூண்டவும்

ஹ்ம்ம்.. ரெண்டு காலப்பகுதின்னு தோணுது சார். அம்மாவோட போட்டோ ஒண்ணுல கிட்டத்தட்ட இந்த மாதிரி பெல்ட்டும் பாக்கட்டும் வச்சு ட்ரஸ் போட்ருப்பாங்க. ஆக இது எண்பதுகளின் ஸ்டைலை பிரதிபலிக்கும் டிசைன். இது லேட்டஸ்ட் வர்ஷன் இரண்டாயிர ஆண்டுகள் .. என்று நிரு சொல்லி முடிக்கவும்

“பரவால்ல.. உனக்கே புரியுதுன்னா க்ளையன்டுக்கு கண்டிப்பா புரியும்..” என்றபடி டாப்பை அவன் வாங்கிக்கொள்ள அவசரப்பட்டு இவனுக்கு நற்சான்றிதழ் கொடுத்து விட்டோமே என்று நொந்தபடி எழுந்து கொண்டாலும் மனதுக்கு உண்மை தெரிந்திருந்ததில் சின்ன சிரிப்பு உதடுகளில் நெளிந்ததை தடுக்க முடியவில்லை.

ஆமாம்..உனக்கு சாலரி நல்லா கொடுப்பானுங்களே மாணிக்கம்?: அவன் திடும்மென் கேட்க குழம்பி போய்விட்டவள் இல்லைன்னா மட்டும் நீ கொடுக்கவா போற என்று நொடித்துக்கொண்டவள்

ஆமா சார். என்று மெல்ல சொன்னாள்

“அப்போ ட்ரஸ் வாங்கிக்க வேண்டியதுதானே.. அஞ்சு வருஷமா ஒரே டிரெஸ்ஸை போட்டு சுத்திட்டிருக்க..இதோ வெடிக்கப்போறேன்னு எனக்கே பயமா இருக்கு. நா வேணா ஷாப்பிங் கூப்டு போகட்டுமா?: அவன் கண்களில் சிரிப்பு காட்டிக்கொடுத்து விட்டது/

அத்தனை பயமும் ஓடிப்போய்விட நிமிர்ந்து நன்றாகவே முறைத்தாள் நிரு. இது அவளுடைய நலன்விரும்பி முதல் முறையாய் தேவந்தி பவனத்துக்கு அவளுக்காய் அனுப்பிய உடை.. அஞ்சு வருஷமாய் போட்டுக்கொண்டு சுற்றுவது உண்மை. அவளுக்கு ரொம்ப பிடிக்கும் என்பதும் பெரிய காரணம்.. டைட்டாவா இருக்கு? இருந்தாலும் அதை இவன் கமன்ட் பண்ணலாமா? என்ன தைரியம்!

“சார்.. ட்ரஸ்ஸை பற்றி கமன்ட் பண்றது ரொம்ப அநாகரீகம். HR ல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியிருக்கும் என்று அவள் வெடிக்க

“ஆங்.. நீ மட்டும் என்கிட்டே “ஷர்ட் போடுங்க தோழா”ன்னு சொல்றது ட்ரஸ்ஸை பத்தி கமன்ட் பண்றதுல வராதா?” அவன் கேள்வியாய் இமைகளை உயர்த்தினான்

சிரிப்பும் வந்து விட்டது அவளுக்கு. கிடுகிடுவென அந்த இடத்தை காலி செய்தவள் நேராய் வாஷ்ரூமுக்கு ஓடிப்போய்த்தான் நின்றாள்.

அப்படியும் இப்படியும் திரும்பி தன்னை பார்த்துக்கொண்டவளுக்கு அந்த உடை இன்னுமே அழகாய் தான் தோன்றியது. ஐந்து வருடம் முன் நிரு இதை விட ஒல்லியாய் இருப்பாள் என்பது உண்மை..அது தான் இப்போது இறுக்கமாய் தெரிகிறதோ..

நீ ஷர்ட் பற்றி கமன்ட் பண்ணியதுக்காய் தான் அவன் இன்றைக்கு கொழுத்தி போட்டிருக்கிறான் என்று அறிவு சொன்னாலும் எல்லோரும் தன்னையே பார்ப்பது போல பிரமை தோன்றிவிட தன் நீண்ட முடியை இரண்டு புறமும் பிரித்து முன்னே போட்ட பிறகு தான் அவளுக்கு நிம்மதியாய் உட்காரவே முடிந்தது.

அன்றைக்கு மாலையும் அவள் வீட்டுக்கு போகும் போது பவ்வியமான உடல்மொழியுடன் அந்த நாலாவது வீட்டு ராஜி பாட்டியிடம் எதையோ கொடுத்துக்கொண்டு நின்றான் அவன்.

இந்த பாட்டியிடம் நட்பா? விளங்கிடும் என்று நொடித்துக்கொண்டு எங்கோ பார்த்தபடி அவர்களை நெருக பாட்டியும் அவளையே ஓரக்கண்ணால் பார்த்தபடி “ நல்லா இருப்பா..இந்த காலத்துல பெரியவங்களுக்கு உன்னை மாதிரி யார் மரியாதை கொடுக்கறாங்க? இந்த காம்பவுன்டிலேயே சில பொண்ணுங்களுக்கு மரியாதை கொடுத்து பேசகூட தெரியாது “ என்று முறையீடு செய்தார் அவளையே ஜாடையாய் சுட்டி..

ஆமா இந்த சார் தானே.. நல்லாவே கொடுப்பார் மரியாதை..அவங்கப்பாவுக்கே, ஹி ஹி என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டவள் வராத போனை காதில் வைத்துக்கொண்டு “பாரு பாட்டி ஹாய்.. இந்த காலத்துல உங்களை மாதிரி அன்பா யார் பாட்டி இருக்காங்க..சீரியல் வில்லி பாட்டிகள் தான் அதிகம்” என்று சொல்லிக்கொண்டு கடந்து போய் விட்டாள்

ஆளுகளை பாரு!

அதற்கும் சேர்த்து அந்த பாட்டி நல்லா வெயிட்டா நிருவுக்கு சாபம் விட்டிருக்க வேண்டும்...

அன்றைக்கு கொஞ்சம் உற்சாக மனநிலையில் இருந்தவள் யூடியூபில் இருந்து அவளுக்கு பிடித்த இசைக்கோர்வை ஒன்றை ஒலிக்கவிட்டபடி ஜாலியாக சாப்பிட்டு கொஞ்ச நேரம் லாப்டாப்பில் உலாவிவிட்டு படுக்க ஆயத்தம் செய்ய முன்னறிவிப்பு எதுவுமின்றி மின்சாரம் நின்று போனது.

அவளுக்கு இருட்டு என்றால் நடுக்கம்.

போன் வேறு அறையில் இருந்தது. அதை எடுக்கப்போகலாம் என்றால் மசமச இருள் இன்னும் கண்ணுக்கு பழகாமல் பீதியளித்தது. வீட்டுக்கதவு மட்டும் அந்த இருளிலும் புலப்பட்டு பீதியளிக்க ஓடிப்போய் கதவில் முதுகை வைத்துக்கொண்டு முழங்காலை கட்டிக்கொண்டு அமர்ந்து விட்டாள். யாரேனும் திறக்க முயற்சித்தால் தடுக்கலாம் என்ற அற்ப நம்பிக்கையில்..

நிரு நிரு.. காம் டவுன்

கரண்ட் இப்போ வந்திடும்

இங்கே திருடன் எல்லாம் வர முடியாது.

உன்னுடையது தான் கடை வீடு. பின்புறம் பாக்டரி தான் இருக்கு. நீ பக்கா சேப்

சுற்றிலும் ஆளுங்க இருக்காங்க.

எல்லாம் ஜபம் போல சொல்லி அவள் தன்னைத்தானே திடப்படுத்திக்கொண்டிருக்க மனமோ கேட்க மறுத்தது

அப்போது தான் இருளைக்கிழித்துக்கொண்டு

எத்தனை தடவை சொல்றது

ஆமாடா கரண்ட் போய்டுச்சு..கொசுக்கடில வீட்டுக்கு வெளியே வந்து மல்லாக்க படுத்து வானத்தை பார்த்துட்டிருக்கேன். வேற என்ன பண்ணச்சொல்ற என்ற அபராஜிதனின் உரத்த குரல் கேட்டது

அத்தனை நேரமும் பயந்து விழித்தவளின் முகத்தில் இப்போது சிரிப்புத்தோன்றியிருந்தது.

மெல்ல ஓசைப்படாமல் கதவைத்திறந்து எட்டிப்பார்த்தாள்

இதற்கா பயந்தோம் என்று அவளே வெட்கப்படுவது போல வெளியே நிலவெறித்துக்கொண்டிருந்தது. அதற்குள் சாய்வு நாற்காலியொன்றை இழுத்துக்கொண்டு வந்து போட்டுவிட்டு நெற்றியில் கை வைத்து

வானத்தை பார்த்துக்கொண்டு படுத்திருந்தான் அபய். எப்போதும் அவன் முன்னே முகத்தை ஏறெடுத்துப்பார்க்க தயங்கும் நிருவும் இன்றைக்கு சர்வ சுதந்திரமாய் 1 இன்ச் அளவே திறந்து வைத்திருந்த கதவின் வழியாய் உள்ளிருந்து ரகசியமாய் அவனையே பார்த்திருந்தாள். நிலா இருவரையும் மௌன சாட்சியாய் பார்த்துக்கொண்டிருந்தது
.
 
Last edited by a moderator:
New member
Messages
6
Reaction score
8
Points
3
Kavidhayana update. Abay and ani are step brothers? Abay is so caring. :love: avan dhan dresses anupparana? Niru paavam loyalty nala kasta padura. ppl help and then exploit. Or has niru misunderstood something? Ani nijamale interested a niru mela? Romba kutty update🙁
 
New member
Messages
16
Reaction score
7
Points
3
அபி ஒவ்வொரு செயலிலும் மனசை அள்ளுரேயே..
 
  • Like
Reactions: Ush

Ush

Active member
Messages
77
Reaction score
208
Points
33
Kavidhayana update. Abay and ani are step brothers? Abay is so caring. :love: avan dhan dresses anupparana? Niru paavam loyalty nala kasta padura. ppl help and then exploit. Or has niru misunderstood something? Ani nijamale interested a niru mela? Romba kutty update🙁
Thanks! Yes, they are. I know, one has to be strong to navigate that situation, or else people will walk all over you. haha ill make it up to you in the coming ones
 
Well-known member
Messages
461
Reaction score
338
Points
63
அபய் தான் அவளுக்கு ட்ரெஸ் அனுப்புறானா?
 
Top