18
இனி கொஞ்ச காலம் அபய் அடிக்கடி பயணம், புது ப்ராஜக்ட் என்று பிசியாய் ஆகிவிடுவான் என்பதால் முடிக்கவேண்டிய ஆர்டர்களை எல்லாம் வேகமாய் முடித்து விடலாம் என்று இயங்கிக்கொண்டிருந்தவனை வந்து வேலையை குழப்பி இழுத்துக்கொண்டு தன்னுடைய அலுவலக அறைக்கு வந்த கதிர் அலுவலக உள்ளக வலையமைப்பை திறந்து “நான் கூட நிற்கும் போதே இதையெல்லாம் பார்த்து விட்டால் தான் உண்டு..இல்லாவிட்டால் நீ எட்டியும் பார்க்க மாட்டாய், அப்புறம் நான் போன பிறகு எல்லாம் பென்ட்டிங்கில் இருக்கும்” என்று குற்றம் சொல்லி கணனிக்கு முன்னே உட்கார வைத்திருந்தான்.
அங்கென்றால் என்னை எதற்காவது கூப்பிட்டீர்கள் என்றால் அன்றைக்கே ஓடி விடுவேன் என்று மிரட்டலாம்..சொந்த கம்பனியில் அப்படி செய்ய முடியுமா? ஒன்றொன்றாய் சரி பார்த்து, கதிரிடம் ஆலோசித்து, அவனுக்கு சரி என்று படாதவற்றுக்கு வேறு பரிந்துரைகளும் கொடுத்துக்கொண்டிருந்தவனுக்கு கையில் இருக்கும் ஆர்டர்களை முடித்தாக வேண்டுமே என்று தான் மனம் பறந்து கொண்டிருந்தது..
“ஏதாவது அப்டேட் சொல்லேன்டா.. என்னாச்சு? பேசினீங்களா? அவ கால்ல விழுந்துட்டியா?” அவன் துருவ
“இன்னொரு பொண்ணும் கூட வந்தா.. ஆபிஷியலா பேசினோம்.. அவ்வளவு தான்” என்று தோளை குலுக்கிய அபய் கண்களை கணனியிலேயே பதித்திருந்தான்
“அப்புறம்..?”
“அப்புறம் என்ன? லாப்ல இருந்து பாசிட்டிவான அறிக்கை வந்துருக்கு....உனக்கே தெரியுமே” அபய் நமுட்டு சிரிப்புடன் சொல்ல பல்லைக்கடித்தான் கதிர்.
“அது தெரியும்டா.. நிரு கூட தனியா ஒரு வார்த்தை கூட பேசலையா?”
“சந்தர்ப்பம் கிடைக்கல..” என்று சொன்னவனின் கன்னம் லேசாய் சிரிப்பில் துடித்தது..
“பொய்யா சொல்றான்!!! சொல்ல மாட்டேன்னு மூஞ்சில அடிச்ச போல சொல்ல வேண்டியது தானேடா”
.... அபய் சிரித்தானே தவிர பதில் சொல்லவில்லை..
“டேய் ஜோக்ஸ் அப்பார்ட். இந்த டைமிங் என்னமோ டூ குட் டு பீ ட்ரூ போல இருக்கு. ஜாக்கிரதையா ஒவ்வொரு அடியா பார்த்து வை..” என்று விட்டு கதிர் போய் விட்டான்.
அபய்க்கும் அப்படித்தான் பட்டது.. பாஷன் இன்டஸ்ட்ரியே தேடிக்கொண்டிருக்கும் விஷயம் இது. பழமையும் இயற்கையை சீர்குலைக்காததுமான பாஷன் வடிவங்கள் பிரபலமாய் ஆகி வரும் நிலையில் இயற்கை சாயத்தை மார்க்கட்டுக்கு தகுந்த வடிவில் யார் முதலில் கொண்டு வருகிறானோ அவன் கையில் தான் இன்டஸ்ட்ரியின் குடுமி போய் சேரும்.
ஜெலீன் கந்தசாமி கூட இயற்கை சாயம் என்று சொல்லி ஒரு போலியை கையில் வைத்துக்கொண்டு வர்ணாவோடு பார்ட்னர்ஷிப் கேட்டு வந்து மனஸ்தாபப்பட்டதும் வெகு சமீபத்தில் நடந்ததே. இப்படியெல்லாம் பலர் போராடிக்கொண்டிருக்க நிரு அங்கே தற்செயலாய் போனதும், அந்த பெண்ணை கண்டுபிடித்ததும், அதை அபயின் கையில் லட்டாய் கொண்டு வந்து சேர்த்ததும் என எல்லாமே தற்செயல் நிகழ்வுகளின் உச்சம்..
பார்த்துக்கலாம்..
இது வேறு யார் மூலமாவது இன்னொரு சந்தர்ப்பத்தில் வந்திருந்தால் இந்தளவு ஆறுதலாய் அவன் வேலை செய்வானா என்பது சந்தேகமே.. அந்த வாய்ப்பை கையகப்படுத்தி தொடர்ந்து தக்கவைக்க ஆனதெல்லாம் செய்தும் இருப்பான்,,ஆனால் இந்த சிக்கலில் நிரு இருப்பதால் அபய்க்கு அவளை தாண்டித்தான் எல்லாம்..
அவனுடைய அத்தனை இலட்சியங்களுமே இப்போதைக்கு இருவருக்கும் இடையிலான மனஸ்தாபங்களை களைந்து அவளை அவனுடையவள் ஆக்குவது மட்டுமே.. மீதியெல்லாம் நடந்தால் சந்தோஷம் நடக்காவிட்டாலும் நஷ்டமில்லை என்ற மனநிலையில் தான் அவன் அப்போது இருந்தான்.
கதிர் சொன்ன பைல்களை எல்லாம் பார்த்து அவற்றில் தன்னுடைய குறிப்புகளையும் சேர்த்து பொதுவான டிரைவில் போட்டு விட்டு எழுந்தவன் நிருவுக்கு அழைக்க மொபைலை எடுத்து விட்டு அதை விடுத்து டெக்ஸ்ட் செய்ய ஆரம்பித்தான்..
“உன் ப்ராடக்ட் நூறு வீதம் நாச்சுரல் தான். அப்படியே மார்க்கட்டுக்கு கொண்டு போக முடியாது ஆனால் வீ கான் வொர்க் வித் இட். சீக்கிரமா வர்றது போல ஒரு நாளை பார்த்து எனக்கு டெக்ஸ்ட் பண்ணு -A”
இந்தப்பக்கம் நிருவோ சனிக்கிழமை வீடெல்லாம் சுத்தம் செய்து அவனில் சிக்கனை நன்றாக ரோஸ்ட் ஆகி விட்டதா என்று பார்த்து விட்டு நகத்தை கடித்துக்கொண்டு வீட்டுக்குள் குறுக்கும் மறுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் அபய் வந்து விடுவான். ப்ளைட் லான்ட் ஆகி விட்டதாய் மெசேஜ் செய்திருந்தான்.
அபயிடம் இருந்து பாசிட்டிவ் செய்தி வந்ததுமே துளசி வீட்டுக்கு போய் விஷயத்தை சொன்னபோது அவள் அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. உறைந்து நின்றவள் பிறகு அழுதே விட்டாள்.
“இப்படியெல்லாம் நான் கற்பனை கூட செய்து பார்க்கலை..நீ யார் சாமியா?” என்றெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தவள் பிறகு “இல்லை இது நடக்காது” என்றிருந்தாள் சோர்வாய்
நிரு அதிர
“மாமா விடமாட்டார் , வேற கடைக்காரங்களுக்கு துணியை கொடுத்தா கூட கத்துவார். இப்படி அதை மொத்தமா விட்டுட்டு இதை பண்ணப்போறேன்னு தெரிஞ்சாலே பெரிய சண்டை வரும்” என்று நிராசையான முகத்தோடு அவள் சொல்லி முடிக்கும் முன்னரே பாட்டி ஆக்ரோஷமாய் ஆரம்பித்து விட்டார்.
“அட அவன் கிடக்கான். என்ன பண்ணிட முடியும் அவனால? இப்படியே பயந்து பயந்துட்டே இருந்தேன்னா என் காலத்துக்கு பிறகு அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் அடிமையா தான் கிடப்ப. கடவுளா பார்த்து உன்னை தூக்கி விட கை நீட்டும் போது தட்டி விடுவியா? அவங்களை வர சொல்லு” என்று பாட்டி அதட்டிய பிறகு தான் ஓரளவு தைரியம் வரப்பெற்று அபயை சந்திக்க சம்மதமே சொன்னாள்.
இவள் நிலையாய் நின்று விடுவாளா? அந்த மாமா ஏதாவது பிரச்சனை பண்ணுவானா? நடுவில் அபயை வேறு இந்த குழப்பத்தில் சேர்த்து விட்டுட்டோமே அவன் போடப்போகும் உழைப்பு வீணாகி விட கூடாதே என்று நிருவுக்கு பல கவலை..
எல்லாம் தாண்டி நம் வீட்டுக்குள் வருவானா? இல்லை வாசலோடு போய் விடுவானா? வந்தால் எப்படி எதிர்கொள்வது...நினைக்கவே பட படவென்று வந்தது.
நேரம் ஒன்பதே கால்.. இந்த நேரம் வந்திருக்க வேண்டுமே.. அவள் நேர்த்தையும் வாசலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருக்க பத்து நிமிடம் அவளை சோதித்த பிறகு வாசலில் காப் ஒன்று வந்து நின்றது. தொடர்ந்து காக்கி பான்ட், கறுப்பு டீஷர்ட்டில் காப்பை விட்டு வெளிப்பட்டான் அபய்..
காப் கிளம்பி மறைய வாசலுக்கு ஓடிப்போனவளுக்கு வரவேற்க கூட நாவு வரவில்லை..
பின்னே அவளை கண்டதும் லேசாய் தலை சரித்து கீழுதட்டை கடித்தபடி அவன் சிரித்தால் அதெல்லாம் எப்படி வரும்!
பாக்டரி வாசலில் இருக்கும் செக்கியூரிட்டிகளின் பார்வையை கவனித்ததும் சட்டென்று நார்மல் மோடுக்கு மாறி வாங்க வாங்க என்று வரவேற்று அவனை வீட்டுக்குள் அழைத்து கதவை தாளிட்டவளுக்கு அதற்கே அத்தனை எனர்ஜியும் ஓடி விட்டது..
ஒவ்வொரு நாளும் நிரு பார்த்துப்பழகிய காட்சிகள் தான்..ஆனால் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தவனின் பின்னணியில் புத்தம் புதிதாய் தெரிந்தன.. ஆனால் என்னமோ இந்த காட்சி ரொம்பவே பழகிப்போனது போலவும் ஒரு உணர்வு..
“சோ இவ்வளவு நாளும் இங்கே தான் ஒளிஞ்சிருந்திருக்க?” நான்கு பக்கமும் சுற்றி பார்த்துக்கொண்டே அவன் கேட்க
“நான் ஒளியலையே எங்கே இருக்கேன்னு எல்லாருக்குமே தெரியும்” என்றவள் வீட்டுக்குள் அவனை அழைத்தாள்
“மதியத்துக்கு முன்னே துளசியை பார்த்துட்டு வந்துடலாம். நீங்க பிரஷ் ஆகிட்டு வரணும்னா ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கோங்க” என்று ரெஸ்ட் ரூம் இருக்கும் பக்கத்தை கை காண்பித்த படியே சொல்ல..
அவன் தலையசைத்தான் பார்வை ஒரு மாதிரி அவளையே ஊடுருவிக்கொண்டிருந்தது.
அவன் ரெஸ்ட் ரூமை பூட்டிக்கொள்ளவும் கிச்சனுக்குள் நுழைந்தவளுக்கு நெஞ்சமோ அதி வேகத்தில் அடித்து கொண்டிருந்தது. இவ்வளவு நாளும் அவள் வாழ்ந்த வீடு அவளுக்கே அந்நியமானது போலிருந்தது..
ரிலாக்ஸ் நிரு.. அவன் வேற்றாள் இல்லை..என்று அமைதிப்படுத்த முயன்றது அவளது மனம்
அவன் வேற்றாளாக இல்லாமல் இருப்பது தான் டென்ஷனுக்கு காரணமே..மட மனமே
“காபி குடிக்கிறீங்களா?” என்று குரல் கொடுக்க
யா...” என்று மூடிய கதவின் பின்னிருந்து குரல் வந்தது
அவன் வெளியே வர முதல் கிச்சனை விட்டு ஓடிப்போய் ஹாலில் நார்மலாய் அமர்ந்து விடுவோம்.. என்று எண்ணிக்கொண்டு படபடவென்று காபி கலந்தவள் அவசரமாய் சிக்கனுக்கு ஆபரேஷன் செய்து கூடவே வெள்ளரி, சாலட் இலை, சாஸ் வைத்து ஒரு ராப் தயார் செய்து அதையும் காபியோடு வைத்து விட்டு அறைக்குள் ஓடிப்போய் தன்னுடைய கைப்பை, மொபைலை எடுத்துக்கொண்டு வர அவன் ஏற்கனவே ஹாலுக்கு வந்து காபியையும் வ்ராப்பையும் தன் பக்கமாய் நகர்த்திக்கொண்டிருந்தான்.
“தாங்க்ஸ் பார் திஸ்! நீ சாப்பிட்டியா?”
“ஹ்ம்ம்”
“சின்ன வீடு ஆனால் நல்லாருக்கு. பாக்டரி பக்கத்திலயே இருப்பது..நைஸ்”
அவன் சாதாரணமாய் பேச ஆரம்பித்ததோ என்னமோ தயக்கங்கள் கழன்று கொள்ள “ஆமாம். எனக்கு போக்குவரத்து பிரச்சனையே இல்லை. மார்க்கட், க்ரோசரீஸ் எல்லாமே பக்கத்திலேயே வாங்கிக்கலாம்” என்று புன்னகைத்தவள் பிறகு “பக்கத்துக்கு வீட்டு அக்கா வேற எனக்கு அடிக்கடி சாப்பாடு கொடுப்பாங்க..அவங்களுக்கு ரெண்டு குட்டீஸ்.. நைட் ஆகற வரை முக்கால்வாசி நாள் ஹோம் வொர்க் பண்றோம்னு இங்கேயே தான் இருப்பாங்க..” என்று பகிர
“இந்த பக்கத்துக்கு வீட்டை காக்கா பிடிக்கற பழக்கத்தை இன்னும் விடலையா நீ?” என்று கிண்டல் செய்தான் அபய்
லேசாய் முகம் சிவந்தவள் “நானாவா பண்றேன்..அதுவா அமையுது” என்று முணுமுணுத்தாள்.
“நான் பக்கத்து வீடா வந்தப்போ தான் ஷர்ட் போடுங்க தோழான்னு மிரட்டுன”
“பின்னே அப்படி ஷோ காமிச்சிட்டிருந்தா சொல்ல மாட்டாங்களா?” என்று வெடுக்கென்று சொல்லி விட்டவள் உதட்டை கடித்துக்கொண்டு வெளியே பூத்திருந்த போகன் வில்லாவில் பார்வையை பதித்தாள்
“கஷ்டம் தான்..”அவன் முணுமுணுத்தது தெளிவாகவே கேட்டது
“என்ன சொன்னீங்க?”
“நான் ஒண்ணுமே சொல்லலையே” என்று சிரித்தவனின் கண்களும் சிரிப்பில் பளபளத்து கொண்டிருந்தன.
“பழசெல்லாம் பேச மாட்டேன்னு தான சொன்னீங்க?” பழைய நிரு திரும்பிக்கொண்டிருந்தது அவளுக்கே தெரியவில்லை
“நான் ஆயிரம் சொல்வேன் நீ அதெல்லாம் நம்புவியா? கிளம்பு அந்த பொண்ணை முதல்ல பார்த்துட்டு வந்துடுவோம், அப்புறமா எங்காவது வெளியே போலாம்” என்றவன் தன் வீடு போலவே எழுந்து கிச்சனுக்குள் போய் கழுவி வைத்துவிட்டு வர,, இருவருமாய் வெளியே வந்து தெருவில் இறங்கி நடந்தனர்.
“எனக்கு மனசுல கொஞ்சம் பயமா இருக்கு” இவ்வளவு நேரமும் அவனோடு தனிமையில் இருந்த மூச்சடைக்கும் உணர்வில் இருந்து விடுபட்டதில் நிருவுக்கு பேச்சு இப்போது சரளமாய் வந்தது
“என்ன பயம் உனக்கு” இலகுவாகவே கேட்டான் அவனும்
“அந்த பொண்ணு துளசிக்கு பாட்டி மட்டும் தான் இருக்காங்க..அவ ரொம்ப பயந்த சுவாவம், அவளோட மாமா தான் இவ்வளவு நாளும் அவ ரெடி பண்ற துணிகளை கொண்டு போய் கடைல கொடுப்பான். அந்தாளா பார்த்து ஏதாவது கொடுத்தால் தான் அவளுக்கு வருமானம்..நான் போனதையே அவனுக்கு பிடிக்கலை..நேராவே சொல்லி முறைச்சான்..”
“நீ என்ன பண்ண?”
“நானும் முறைச்சேன்” என்று தோள்களை குலுக்கியவளை பார்த்து அவன் வாய் விட்டு சிரிக்கவும் தான் அவன் சிரித்துக்கொண்டிருந்திருக்கிறான் என்றே இவளுக்கு புரிந்தது
“ப்ச்..நான் சீரியஸா பேசிட்டிருக்கேன். உங்களை வேற உள்ளே கொண்டு வந்து விட்டப்புறம் அந்த பொண்ணு பின்வாங்கிட்டா எல்லாருக்குமே கஷ்டம்ல..”
“ப்ரீயா விடு..யாரையும் வற்புறுத்தி இதை பண்ணமுடியாது. அவளோட இஷ்டம் தான் எல்லாமே..”
“அது மட்டுமில்லை..நான் அவளை காப்பாத்துறேன்னு சொல்லிட்டிட்டு அதை விட பெரிய ஆபத்துல இறக்கி விடறேனோன்னும் பயமா இருக்கு”
“அப்படில்லாம் ஒண்ணும் ஆகாது..சும்மா சும்மா மண்டையை போட்டு உடைக்காதே..”
இருவருமே இடைப்பட்ட காலம் எல்லாம் மறந்து அபயும் அவளும் வழக்கடித்துக்கொண்டே நூலகத்தில் இருந்து திரும்பி நடந்து வரும் நாட்களுக்கு திரும்பி விட்டிருந்திருக்க வேண்டும். பேச்சு சரளமாய் வந்தது.
தன்னருகில் நடந்து வந்து கொண்டிருந்தவனை கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே வந்த நிரு “இந்த ரோட்டில் நேரா போய் திரும்பினா வீடு வந்துரும்” என்றாள் தன்னையே அந்த மோன நிலையில் இருந்து கலைக்கும் நோக்கில்
“நான் என்ன ஆடா மாடா?” ஒரு மாதிரி குரலில் அபயிடம் இருந்து சம்பந்தமே இல்லாமல் பதில் வர
என்ன? என்று குழப்பமாய் அவன் மேல் விழிகளை பதித்தவளின் விழிகளை அழுத்தமாய் ஊடுருவினான் அவன்..
“ஆடு மாடு கிட்ட பேசற மாதிரி பேசிட்டே வர்றே.. எனக்கு பேர் இல்லையா?”
அவ்வளவு தான் பழைய நினைவுகள் சுழற்றி அடிக்க “அதை கூப்பிடவே கூடாதுன்னு நீங்க தான் சொன்னீங்க..ரொம்ப நாள் ஆனதால எனக்கும் டச் விட்டு போய்டுச்சு” என்று தோள்களை குலுக்கினாள் நிரு.
உனக்கு குளிர் விட்டு போய்டுச்சு’ அவன் முணுமுணுத்தது தெளிவாய் கேட்டாலும் கேட்காதது போலவே கூட நடந்தாள் அவள்
“வேணும்னா நான் சார்னு கூப்பிடுறேன்..” அவன் அப்படி சொன்ன தினம் எப்படி அழுதிருப்பாள்.. இவரே குண்டு வைப்பாராம்,,இவரே எடுப்பாராம்.. நான் என்ன இளிச்ச வாயா
“நிதி..என்னை சீண்டி பார்க்காத சொல்லிட்டேன். கால் மீ அபய்..”
“அதெல்லாம் நான் நினைச்சதும் வராது..அதுவா வரும் போது தான் வரும்..”
“நான் வரவச்சாலும் வரும்..” என்று அவன் வாய்க்குள் முணு முணுக்க
பண்றதையும் பண்ணிட்டு இப்போ கோபம் வேற வருதா? என்று கடுப்பாகி விட்டவள் “எனக்கு கோபம் இருக்கு..நான் அவ்ளோ மனக்கஷ்டப்பட்டிருக்கேன்..எல்லாம் ஈசியா சரியாகாது” என்று முறைத்தாள்
“சரி மாணிக்கம் உனக்கு எப்போ தோணுதோ கூப்பிடு” என்று அமர்த்தலாய் அவன் ஒப்புக்கொண்டு விட
என்னது? உலகத்தில் அவளுக்கு பிடிக்காத வார்த்தை இப்போது அது தான் ..சாரி அப்பா.. இடுப்பில் கையை வைத்தபடி
“இப்போ எதுக்கு அப்பாவை இழுக்குறீங்க?” என்று முறைத்தாள் நிரு
“நீ இன்னும் மிஸ் மாணிக்கம் தானே..எனக்கும் பழசு டச் விட்டுப்போச்சு” என்று தோள்களை குலுக்கியவனின் கண்களில் மெல்லிய சிரிப்பின் பளபளப்பு, அது நிருவை இன்னும் கோபப்படுத்தியது
“நான் உங்களால எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கேன்.. நான் கோபப்படக்கூடாதா? நா சண்டை போட கூடாதா? நீங்க வான்னா வர்றதுக்கும் போன்னா போறதுக்கும் நான் என்ன உங்க வீட்டு பூனையா?” என்று அவள் ஆக்ரோஷமாய் கேட்க முன் பாதியை அப்படியே டீலில் விட்டவன்
“பூனை அப்படில்லாம் சொல் பேச்சு கேக்காது மாணிக்கம்” என்றபடி விழிகளை சுற்றிலும் கடந்த காட்சிகளில் பதித்து கொண்டே வேகமாய் நடந்தவனின் அருகில் வேக நடை போட்டு இணைந்து “உங்களுக்கு இது விளையாட்டா இருக்கா?” என்று சண்டையை தொடர்ந்தாள்
“ஹேய்.. இங்க பார்..உனக்கும் மனக்கஷ்டம் இருந்தது. எனக்கும் இருந்தது.. ரெண்டு பேரும் அதை மறந்து முன்னாடி போகணும்னா நான் ஒரு ஸ்டெப் எடுத்து வச்சா நீயும் ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கணும்..எனக்கு என் தரப்பு நியாயம் இருக்கு..உனக்கும் அப்படியே..அதெல்லாம் பேசி தீர்க்காம சரியா போகாது.. சண்டை போட்டுட்டே இருந்தா அங்கேயே தான் நிப்போம்..ஐ ஆம் டயர்ட் மாணிக்கம்” என்றவனை விழி விரித்து பார்த்து நின்றாள் நிரு..
நான் எப்போ இதுக்கெல்லாம் ஒப்புக்கொண்டேன்? கடைசியா பேசும் போதும் நான் எல்லாம் வயசுக்கோளாறு அதை எல்லாம் நினைக்கறதே இல்லைன்னு தான் சொன்னேன். விட்டால் என்னை சுருட்டி பாக்கட்டில் வைத்துக்கொண்டு போய்விடுவான். நான் என்ன உன் பழைய நிருதியா? என்று அவளுக்கே பூஸ்ட் ஏற்றிக்கொண்டவள்
“நீங்க என்ன பேசறீங்கன்னே எனக்கு தெரியலை..இந்த துளசி மாட்டர் இல்லைன்னா நான் உங்களை கான்டாக்ட் பண்ணிருக்கவே மாட்டேன்” என்று முணுமுணுக்க
அவளை முறைத்து பார்த்தவன் கோபமாய் முன்னே நடக்க ஆரம்பித்தான்
“வீடு தெரியாம எங்கே போறீங்க..இங்கே திரும்பணும்” என்று அவனை விட கோபமாய் சொல்லி விட்டு விடு விடுவென எதிர்ப்பட்ட வளைவில் திரும்பினாள் நிரு.. அவளுக்கு இப்போது என்ன வேண்டும் என்று அவளுக்கே புரியவில்லை..அபய் வேண்டும்தான். ஆனால் அவன் கொடுத்த காயங்களை என்ன செய்ய? புண்ணாய் இருந்தது போதும் இனி ஆறி விடு என்று சொன்னால் மட்டும் ஆறி விடுமா என்ன?

Last edited by a moderator: