• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 20

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 20

Writer : Hafa


காலையில் கண் விழித்த மதி, இரவு முழுவதும் அழுததால் தலைவலிக்க, தன் அறைக் கதவை திறந்து கொண்டு வந்து செழியனை பார்க்க அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்..

"இப்போ நாம எப்படி குளிக்க போறது?? என்னோட டிரஸ் எல்லாம் எங்க வச்சிருக்கான்னும் தெரியலையே.." என யோசித்தவள், "சரி இந்த கபோர்ட திறந்து பார்க்கலாம்.." என எண்ணி, அதை திறக்க முயற்சிக்கும் போது, மேலிருந்து ஏதோ பொருள் விழுந்தது..

அதை கையில் எடுத்து பார்த்தவள், "என்ன இது டைரி மாதிரி இருக்குது.. ஒருவேளை இவரோடதா இருக்குமோ.. இத திறக்கலாமா?? வேணாமா??" என யோசித்துக் கொண்டிருக்க, ஒரு வலிய கரம் அதை பறித்துக் கொண்டு அவள் கன்னத்தை பதம் பார்த்தது.

"ஏய் என்ன நினைச்சிட்டு இருக்க உன்னோட மனசுல, இன்னொருத்தரோட டைரியை ஓபன் பண்ண கூடாதுன்ற பேசிக் சென்ஸ் இல்ல பூல்.. உனக்கு நான் தாலி கட்டி இருக்கேன்ற ஒரே காரணத்துக்காக என்னோட பெர்சனல் லைப்குள்ள என்டர் ஆகலாம்னு நினைக்காத, ஓகே.. ஓஹோ, மேடம் நமக்குள்ள இருக்குற அக்ரீமெண்ட்ட மறந்துட்டு ஒரேடியா இங்கயே இருக்கலாம்னு பிளான் பண்ணுறீங்களா, அது ஒரு போதும் நடக்காது.. ஜஸ்ட் ஒன் இயர்க்கு தான் நாம புருஷன் பொண்டாட்டி.. அதுவும் ஊருக்கு மட்டும் தான்.. அதுக்கு அப்பறம் நீ யாரோ நான் யாரோ!! மைண்ட் இட்.." என்று வாய்க்கு வந்ததை பேசத் தொடங்க.,

"ஸ்டாப் இட்.." என்று கத்தினாள் மதி..

"ஏன்டி, எதுக்கு ஸ்டாப் பண்ணனும்.. உண்மைய சொன்னால் கோபம் பொத்துகிட்டு வருதோ.. எல்லா பொண்ணுங்களுமே ஒன்னு தான்ல, எப்போ எந்த பையன் சிக்குவான்.. அவனை எப்படி கைக்குள்ள போட்டுக்கலாம்னு அலைவிங்க.." என்று எதை பேசுகிறோம் என்று புரியாமல் பேசிக் கொண்டிருக்க, அவனை இறுக்கி அணைத்த மதி அவன் இதழ்களை சிறை செய்தாள்..

இப்படி ஒரு செயலை அவளிடம் இருந்து எதிர்பாரதவன் ஆரம்பதில் திணறித் தான் போனான்.. சில நொடிகள் இதழ்கள் இரண்டும் சங்கமித்திருக்க, அவனின் சுவாசம் சீராவதை உணர்ந்தவள் தன் பலம் கொண்டு அவனை தள்ளினாள்..

மதி தள்ளி விட்டதில் தள்ளாடிய செழியன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, "ச்சீ, இவ்வளவு கேவலமானவளா நீ?? யாருன்னே தெரியாத ஒருத்தன் கிட்ட.. ச்சீ சொல்லவே அருவிருப்பா இருக்குதுடி.." என்க,

"ச்ச்சை வாய மூடு.. என்ன பத்தி நீ பேசுறியா?? என்ன பத்தி பேச உனக்கு என்னடா தகுதி இருக்குது.. அக்ரீமெண்ட், ஒன் இயர் காண்ட்ராக்ட்னு வாய் கிழிய பேசுற, நான் என்ன உன்ன பணத்துக்காக கல்யாணம் பண்ணினேன்னு நினைச்சிட்டு இருக்கியா?? ஒருத்தனை காதலிச்சி இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிற புத்தி எனக்கில்லை.. நீ அருவிருப்பு அடையுற அளவுக்கு நான் என்ன கேவலமா பண்ணிட்டேன்.. நான் என்ன கண்டவனுக்கா முத்தம் கொடுத்தேன்.. என்னோட மனசுல இருக்குறவனுக்கு, நான் உயிருக்கு உயிரா காதலிக்கிரவனுக்கு தான் கொடுத்தேன்.. அது ஒன்னும் எனக்கு தப்பா தெரியலை.. உண்மையான காதல்னா என்னனு தெரியுமாடா உனக்கு?? ஹ்ம்ம்.. உனக்கெங்க அதெல்லாம் தெரிய போகுது.. அப்படி தெரிஞ்சி இருந்தால் நீ இந்த அளவுக்கு பேசி இருக்க மாட்ட.. ரொம்ப வலிக்குதுடா.." என்று நெஞ்சை தொட்டுக் காட்டிய மதி, தொப்பேன்று கீழே விழுந்து கால்களுக்கு இடையில் முகத்தை புதைத்துக் கொண்டாள்..

செழியனுக்கு அவள் சொன்ன, "உயிருக்கு உயிரா காதலிக்கிரவன்.." என்ற சொல்லே நாளாப் புறமும் கேட்க காதை பொத்திக் கொண்டவனுக்கு, அங்கிருப்பது மூச்சு முட்டுவது போல் இருக்க இங்கிருந்து கிளம்பினால் போதும் என்ற நினைப்புடன் அவசர அவசரமாக குளியலறைகுள் புகுந்து கொண்டான்..

குளித்து விட்டு வந்தவன், அதே நிலையில் இருந்த மதியை ஏறெடுத்தும் பார்க்காது, தன் பேக்கை கையில் எடுத்தவன், தன் கோபத்தை அறைக்கதவை சாத்தியதில் காண்பிக்க, படாரென்று பூட்டப் பட்ட கதவின் சத்தத்தில் திடுக்கிட்டாள்..

அவன் வெளியே சென்றதுமே வாய் விட்டு அழத் தொடங்கினாள் மதி, "ஏன்டா என்ன வார்த்தையாலேயே கொல்லுற?? இப்போ கூட என்னோட காதல் உனக்கு புரியலைல.. வாய் கிழிய அக்ரீமெண்ட் அக்ரீமெண்ட்னு பேசுறேல அதுல போட்டு இருந்ததுல ஒரு நாள் முடிஞ்சிது.. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ அதுக்கு அப்பறம் நீயே தேடினாலும் நான் உனக்கு கிடைக்க மாட்டேன்.." என்று உறுதி எடுத்துக் கொண்டாள்..

ஆனால் பேதை மனம் அறியவில்லை, அவள் சபதம் காற்றோடு காற்றாகிப் போகப் போகிறது என்பதை..

∞∞∞∞∞∞∞∞∞∞

டைனிங் டேபிளில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த கங்கா, மாடிப் படிகளில் இறங்கி வரும் செழியனை பார்த்து, "குட் மார்னிங் செழியா.. என்ன சீக்கிரம் எழுந்திரிச்சிட்ட?? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம்ல.." என்றார்..

"இல்லம்மா, தூக்கம் போகல, ஆபீஸ்ல கொஞ்சம் இம்போர்ட்டண்ட் ஒர்க் இருக்கு ஸோ கிளம்பியாகணும்.." என்றான் செழியன் மேலே நடந்த சண்டையை மறைத்தபடி..

ஆபீஸ் என்ற வார்த்தையை கேட்டதும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தான் சிவா..

"என்னடா மச்சான் சொன்ன ஆபீஸா?? உன்னோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா??" என்று பயத்தில் கண்களை உருட்டிய வண்ணம் கேட்க, அவனது செய்கையை பார்த்து வாய் விட்டு சிரித்தார் கங்கா..

"டேய் நான் ஆபீஸ் போகணும்னு தானே சொன்னேன் நீ ஏன் இப்படி அலறிட்டு ஓடி வர்ற??"

"செழியா, நேத்து தான் கல்யாணம் ஆச்சு, அதுக்குள்ள ஆபீஸ் போய் ஆகணுமா??"

சிவாவை பார்த்து பல்லை கடித்த செழியன், டேய் நான் உன்ன எங்கடா ஆபீஸ்க்கு வர சொன்னேன்.. நான் தானே போக போறேன்னு சொன்னேன்.. " என்க செழியனை பார்த்து அசடு வழிந்த சிவாவை, அவனுக்கு காபி கொடுக்க வந்த சக்தி, அவனின் காதை திருகி, "ஏன்யா என்னோட மானத்தை வாங்குற.. இரு உனக்கு வசிக்கிறேன்.." என்று சிவாவுக்கு மட்டும் கேட்குமாறு காதுக்குள் முனுமுனுத்தாள்..

"ஏன் செழியா, ஆபீஸ்க்கு போறியா?? நேற்று தானே கல்யாணம் முடிஞ்சிருக்கு.. இன்னும் ரெண்டு நாள் கழிச்சி போகலாம்ல.. அதுக்குள்ள போயே ஆகணுமா??" என்றார் கங்கா..

"கல்யாணம் ஆனா என்னம்மா ஆபீஸ் போக கூடாதுன்னு இருக்கா?? இன்னைக்கு நியூ டெண்டர் சைன் பண்ணி ஆகணும்.. ஸோ ஐ மஸ்ட் கோ டு தி ஆபீஸ்.." என்று கூறிக்கொண்டிருக்க, கீழே இறங்கி வந்தாள் மதி..

"வா மதி, வாம்மா.. இங்க வந்து உட்காரு, நான் உனக்கு காபி போட்டு தர்றேன்.." என்ற கங்கா, செழியனை பார்த்து, "நீ ஆபீஸ் போறது சரி இருந்து டிபனை சாப்பிட்டு போ.." என்று கட்டளை இட செழியனும் தாயின் சொல்லுக்கு மதிப்பளித்து அங்கேயே இருந்தான்.. கீழே இறங்கி வந்த மதியோ, செழியனை பார்க்காமல் சக்தியின் அருகில் போய் உட்கார்ந்தாள்..

மதியின் இந்த புறக்கணிப்பில் தான் மட்டும் அங்கு தனித்து விடப் பட்டதாய் உணர்ந்தான் செழியன்..

"இந்தாடா மதி காபி.." என்று கொடுக்க, மதியிற்கும் அது அப்போது தேவையாய் இருக்க, வாங்கி மடமடவென குடித்தாள். அவள் காபி குடித்த வேகத்தை பார்த்த சக்தி, "அப்பறம் அண்ணி நைட் எல்லாம் தூங்கல போலயே, கன்னம் எல்லாம் சிவந்து இருக்கு.. சகோ ஒரே கவனிப்போ.." என்று கேட்கவும் செழியனுக்கு புரையேறியது..

"இந்தாப்பா தண்ணிய குடி.." என்று கங்கா தலையில் தட்ட, தண்ணீரை மடமடவேன குடித்தவன், மதியை பார்க்க அவளோ அவனை முறைத்து பார்த்தபடி இருந்தாள்.. அவர்களுக்கு தானே தெரியும், அது வெட்கத்தினால் வந்த சிவப்பல்ல என்று..

"என்ன அண்ணி சத்தமே இல்ல, அப்படினா நான் சொன்னது கரெக்ட் தானே.." என்ற சக்தியை பார்த்து
சமாளிப்பாய் சிரித்து வைத்தாள்.

டைனிங் டேபிளில் உணவுக்காக காத்திருந்த செழியன், "அம்மா, டிபன வைங்க.. ஆபீஸுக்கு லேட் ஆச்சு.." என்கவும் டிபனை எடுத்து வந்த கங்கா, "மதி நீயும் உட்காருமா.. ரெண்டு பேரும் ஒன்னாவே சாப்பிட்டுடலாம்.." என்றதும்..,

"ஐயோ வேணாம் அத்தை, இப்போ தான் காபி குடிச்சேன், அப்பறமா சாப்பிட்டுக்கலாம்.. நான் அம்மா கூட பேசிட்டு வர்றேன்.." என்றவள் செல்லை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்..

மதி உள்ளே செல்லவும் அந்த நேரம் பார்த்து வாசலில் இருவரின் நிழல் தெரிய, அதை பார்த்த மற்ற நால்வரின் கண்களும் அகல விரிந்தது, செழியனோ உட்கார்ந்து இருந்த கதிரையை விட்டு எழுந்தான்..

அதற்குள் சிவா போய் வாசலில் நின்றவனின் சட்டையை பிடித்து, "டேய் நம்பிக்கை துரோகி எங்கடா வந்த?? உனக்கு இங்க வர்ற அளவுக்கு தைரியம் வந்திடிச்சா.." என்று கத்த, அவனை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றான் வினய்...

(வினய் நியாபகம் இருக்குள்ள, அதுதாங்க நம்ம செழியனோட காலேஜ் பிரண்டு.. பிளாஷ்பேக் சீன்ல கூட வந்திருப்பானே..)

"ஹேய் கூல் மச்சான், நீ ஏன் டென்ஷன் ஆகுற?? புது மாப்பிளை வேற, அப்பறம் பீபி இன்க்ரீஸ் ஆச்சுன்னா ரொம்ப கஷ்டம் ஆகிடும்.. ஸோ காமா இருந்துக்கோ.." என்றவன், "பேபி கம்.." என்று தர்ஷனாவின் கையை பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

உள்ளே வந்தவன், நேரே செழியன் முன்னால் போய் நின்று, "ஹாப்பி மேரிட் லைப் மிஸ்டர் இளஞ்செழியன்.." என்று ஒரு பூங்கொத்தை கொடுக்க, அதை முறைத்துப் பார்த்தபடி நின்றான் செழியன்..

"அட வாங்கிக்கோப்பா, ஓஹோ அப்படியா சங்கதி, நான் கொடுத்தா வாங்கிக்க மாட்ட.. ஒருவேளை என்னோட தர்ஷு பேபி கொடுப்பான்னு எதிர்பார்க்குறியோ?? என்றவன்,"பேபி இந்தா நீயே இத உன்னோட முன்னாள் காதலனுக்கு கொடுத்துடு.." என்க அவளும் நமட்டு சிரிப்புடன் அப்பூங்கொத்தை செழியனின் கைகளில் திணித்தாள்..

"டேய் என்னடா ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்க, நீ இப்போ போறியா இல்ல போலீஸ கூப்பிடவா.." என்ற சிவாவை பார்த்து சிரித்தவன், "என்ன சின்ன பாஸ் பூச்சாண்டி காட்டுறிங்களா?? இதெல்லாம் என் கிட்ட நடக்காது.." என்றவன் செழியனின் அருகில் நின்ற கங்காவை பார்த்து, "அம்மா எப்படி இருக்கீங்க.." என்க அவரோ முகத்தை திருப்பிக் கொண்டார்..

"அட என்னடா இது?? ஒருத்தவன் உங்கள வீடு தேடி வந்து இருக்கான்.. அவனுக்கு கொடுக்குற மரியாதை இவ்வளவு தானா, ஸோ செட்.." என்றவன், செழியனின் காதின் அருகில் போய், "எங்கடா உன்னோட புது பொண்டாட்டிய காணும்.. அவளையும் நான் கொத்திட்டு போயிருவேன்னு ஒளிச்சு வச்சிருக்கியா??" என்று கேட்டது தான் தாமதம் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள் மதி..

அவள் அறைந்த இடம் தீயாய் தகிக்க, கன்னத்தில் கை வைத்து நின்றிருந்தான் வினய்..

"என்ன எதிர்பார்க்கலைல, இனி நீ எதிர்பார்க்காதது எல்லாமே நடக்கும் பாரு.." என்ற மதி, தர்ஷனாவின் பக்கம் திரும்பி, "என்ன தர்ஷனா, வாங்கினதெல்லாம் மறந்து போச்சா??" என்ற மதியை முறைத்துக் கொண்டு நின்றாள் தர்ஷனா..

மதியின் செயற்பாடுகளைப் பார்த்து எல்லோரும் திகைத்து நிற்க, செழியனுக்கோ மனதில், "அத்தாடி என்னா அடி.. டேய் செழியா நல்ல வேலை காலையில நீ அடிச்ச அடிக்கு திருப்பி அடிக்காமல் இருந்தாளே.." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்..

தர்ஷனாவின் பக்கத்தே சென்ற மதி, "என்ன முறைக்கிற, உன்னோட முறைப்புக்கு எல்லாம் பயப்படுற ஆள் இல்ல, இந்த மதி.. இப்போ நீயாவே இங்க இருந்து கிளம்புறியா?? இல்ல உன்ன பத்தின உண்மை எல்லாம் படம் போட்டு காட்டவா??" என்கவும், அதை கேட்ட தர்ஷனாவுக்கோ வியர்த்து கொட்டியது..

அவளது முகம் மாறுவதை பார்த்த வினய், "ஏய் என் மேலயே கை வச்சிட்டேல்ல, உன்ன சும்மா விட மாட்டேன்டி.. டேய் செழியா, ஒரு பொண்ண வச்சி என்ன அடிச்சிட்டேல்ல, இதுக்கு நீ கண்டிப்பா வருத்தப் படுவடா.." என்றவன் தர்ஷனாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக நடந்தான்..

வினயும் தர்ஷனாவும் வெளியே சென்ற அடுத்த நொடி, "அம்மா நான் வர்றேன்.." என்ற செழியனும் தன் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.. மறந்தும் கூட அவன் மதியின் பக்கம் திரும்பவில்லை..

யாரின் கண்களுக்கும் புலப்படாத இவர்களின் விலகல் தன்மை கங்காவின் கண்களுக்கு தவறாமல் பட, மதியின் ஏதோ கேட்கப் போன சக்தியை தோள் மீது கை வைத்து தடுத்தவர், "வேணாம், அப்பறமா பேசிக்கலாம்.." என்பது போல் சைகை காட்ட, அதை புரிந்து கொண்டு மதியை தனிமையில் விட்டுச் சென்றனர்..

∞∞∞∞∞∞∞∞∞∞

மதியிடம் ஒரு வார்த்தை கூட பேசாது வந்த செழியனுக்கு, "இவளுக்கு எப்படி இவங்களை தெரியும்?? அப்போ என்ன முன்னாடியே தெரியுமா?? காலையில ரூம்ல பேசும் போது கூட உயிருக்கு உயிரா காதலிக்கிறவன்னு சொன்னாலே?? அப்படினா மதி என்ன தான் காதலிக்கிறாளா??" என்று பல கேள்விகள் அவன் தலையை குடைய, வேலை செய்யத் தோன்றாது, சோபாவில் தலை சாய்த்து அமர்ந்திருந்தான்..

"என்னடா மச்சான் நைட் முழுக்க தூங்கலை போலயே, அது தான் ஆபீஸ்ல வந்து தூங்கிட்டு இருக்க போல.!!" என்று கேபினுக்கு உள்ளே வந்தான் சிவா..

"டேய் நீ எதுக்குடா இங்க வந்த?? உன்ன தான் ஒரு வாரத்துக்கு இந்த பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல??"

"ஏன்டா என்ன வர வேணாம்னு சொல்லிட்டு நீ மட்டும் வரலாமா?? வீட்ல இருக்க மனசு கேட்கலடா, அது தான் கிளம்பி வந்துட்டேன்.. ரெண்டு பேரும் ஒன்னாவே ஒர்க்க முடிச்சிட்டு போகலாம்.. எப்படி என்னோட ஐடியா??" என்ற சிவாவை பார்த்து, "உன்ன நீ தான்டா மெச்சிக்கனும்.." என்றான் செழியன்.

"சரி, சொல்லு உனக்கும் மதிக்கும் இடையில ஏதாவது பிரச்சனையா?? மதியோட முகமே சரியில்ல.. இங்க வந்து பார்க்க நீயும் அப்படி தான் இருக்க.. என்னாச்சுடா உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா என்ன? சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன்னா வேணாம்டா.."

"சொல்லக்கூடாதுன்னு எல்லாம் இல்லடா, சில பிரச்சனைகளை வெளிய சொல்லாம இருக்குறது தான்டா நல்லது.." என்றவனை பார்த்து மெலிதாக புன்னகைத்த சிவா, "அப்பறம் செழியா, இத்தனை நாளா நம்ம கண்ணு முன்னாடி வராத வினயும் தர்ஷனாவும் இன்னைக்கு எதுக்கு வந்தாங்க??"

"சிவா, நான் கூட இத பத்தி உன் கிட்ட பேசனும்னு நினைச்சேன்.. நேத்து நைட் கூட வினய் எனக்கு போன் பண்ணி ரொம்ப நக்கலா பேசினான், அவனை இங்க வர வைக்கணும்னு சொல்லி நானும் யாருன்னு தெரியாத மாதிரியே பேசிட்டேன்.. ஆனா நான் எதிர்பார்க்கல இவ்வளவு சீக்கிரமா வருவான்னு.."

"ஏன் மாப்ள, அவங்களை எதுக்கு நீ வர வைக்கணும்னு நினைச்ச??"

"இல்லடா, அவனுக்கு தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு, இத்தனை நாளா அவனை சும்மா விட்டு வச்சிருந்தேன்.. இனிமேல் கொஞ்சம் ஆட்டம் காட்டலாம்னு இருக்கேன்..".

"சூப்பர்டா செழியா, அவங்க ரெண்டு பண்ணின நம்பிக்கை துரோகத்துக்கு நாம ஏதாவது பண்ணியே ஆகணும்.." என்றான் சிவா..

" அது சரி சிவா, மதி வினயையும் தர்ஷனாவையும் பார்த்து ரொம்ப நல்லா தெரிஞ்சவங்க போல நடந்துக்குறாள்.. ஏன் என்னோட லைப் பத்திலாம் ஏதேதோ தெரிஞ்ச மாதிரி பேசுறாள், இது எப்படி சாத்தியமாகும்.." என்ற செழியனை சிவா சந்தேகமாக பார்த்தான்..

"எதுக்குடா இப்படி பாக்குற??"

"செழியா, நீங்க காதலிச்சி தானேடா கல்யாணம் பண்ணினீங்க அப்பறம் நீயே உன்னோட பாஸ்ட் லைப் பத்தி மதி கிட்ட சொல்லி இருக்கலாம்ல.." என்க,

"அது.. அது.. வந்து.. ஆஹ்.. எங்கடா எங்களை காதலிக்க விட்டிங்க, அதுக்குள்ள கல்யாணத்தை பண்ணி வச்சிட்டு இப்போ என்ன வந்து கேட்குற.."

"நீ சொல்றதும் சரி தான், இதுக்கு அப்பறமாச்சும் மதி கிட்ட மனசு விட்டு பேசு.." என்றான் சிவா..

"ஓகேடா, இப்போ வர்றியா ஒர்க்க பார்க்கலாம்.. இன்னைக்கு டெண்டர் சைன் பண்ணி ஆகணும்.." என்றவன் தன் மனக் குழப்பங்களை ஒதுக்கி வைத்து விட்டு வேலையை கவனிக்க தொடங்கினான்..

∞∞∞∞∞∞∞∞∞∞∞

மதியோ விட்டத்தை பார்த்து யோசித்தபடி அமர்ந்திருந்தாள். தூங்கவும் பிடிக்கவில்லை, சாப்பிடவும் பிடிக்கவில்லை.. அவளது மூளைக்குள் கோபம், கவலை, வெறுப்பு ஆகியன புகுந்து பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தன.. தன்னிலை மறந்து, எதிர்காலத்தை எண்ணி கலங்கும் காரிகையாய் துவண்டு போயிருந்தாள்..

உள்ளே நுழைந்த செழியன், "என்ன இவ இப்படி உட்கார்ந்து இருக்காள்?? என்று மனதுக்குள் நினைத்தவன், "நமக்கு எதுக்குடா வம்பு.." என்று நினைத்துக் கொண்டு வாஷ்ரூமுக்குள் நுழைந்தான்..

குளியல் ஒன்றை போட்டு விட்டு வந்தவன் வெளியே வந்து பார்க்க, அதே நிலையில் இருந்தாள் மதி..

"என்ன பண்ணலாம்.." என யோசித்தவன், "ம்ம்ம்கும்.." என்று தொண்டையை செறும திடுகிட்டவளாய் தன்னிலை மீண்டாள்..

செழியனை அங்கு எதிர் பாராத மதி, முதலில் தடுமாறினாலும் பின்னர் தன்னை தேற்றிக் கொண்டவள், அவனது பார்வையை தவிர்த்தவளாய் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்..

"இப்போ எதுக்கு நம்மள கண்டு, பம்மிப் போய் ஒளியுறாள்?? சரி நானும் பார்க்கிறேனே எத்தனை நாளைக்கு தான் நீ கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுறேன்னு.. அதுக்குள்ள உன்ன பத்தின புல் டீடெயில்ஸும் கலெக்ட் பண்ணி காட்டுறேன்.." என்று தனக்கு தானே உரைத்தவனாய் தூங்கச் சென்றான்..



தொடரும்...
 
Messages
524
Reaction score
403
Points
63
அவளை பற்றி டீடெயில் கலெக்ட் பண்ணா அப்புறம் நீ அவ உன் மேலே வைத்த காதலையும் தெரிந்து கொள்ள போகிற
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Full details collect panna poraya pannu Pannu unaya tha Ava love panna solli kuda unaku puriyala
Nalla adi vinan dharshana kum venum chezlian ya cheat pannida
Sikirama ellam unmaiyum theruyadum
 
Top