• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 13

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 13

Writer : Hafa



செழியனை தேடிச் சென்ற சிவாவுக்கு கால் செய்து, அவன் வீட்டுக்கு வந்த விஷயத்தை கூற சிவாவும் வந்து சேர்ந்தான்..

குளித்து முடித்து போதை தெளிந்த செழியன், தாயைப் பார்க்கும் தைரியம் இல்லாது சிறுபிள்ளை போல் தலை குனிந்து அமர்ந்து இருந்தான்.

"இது என்ன எப்போதும் இல்லாத புது பழக்கம் செழியா?? இத நான் உன் கிட்ட இருந்து எதிர்பார்க்கயில்லை." என்றார் கங்கா..

"அம்மா.. அது.. வந்து.."

"நீ ஒன்னும் சொல்ல தேவையில்ல செழியா!! உனக்கு அப்படி என்ன விரக்தி, அதுவும் இப்படி கண் மண் தெரியாத அளவுக்கு குடிக்கிறதுக்கு??"

"எல்லாம் தெரிஞ்சும் ஏன்மா இப்படி ஒரு கேள்வி??" என்க.,

"எத்தனை நாளைக்கு தான் இதையே நீ சொல்லிட்டு இருக்க போற, நான் ரொம்ப பெருமை பட்ட விஷயம் அப்பா இல்லாத பசங்களை ரொம்ப நல்லா வளர்த்து இருக்கேன்னு ஆனா நீ இப்படி பண்ணுவேன்னு நான் கனவுல கூட நினைச்சு பார்க்கல." என்றார் ஆதங்கத்துடன்.

"அம்மா சாரிமா, ஏன் நீங்க இப்படிலாம் பேசுறீங்க?? நீங்க உங்க பசங்கள ரொம்ப நல்லா தான் வளர்த்து இருக்கீங்க.. இனி இப்படி குடிச்சிட்டு வர மாட்டேன்.. இது தான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ஓகே. இந்த ஒரு வாட்டி மட்டும் மன்னிச்சிடுங்க ப்ளீஸ்.." என்று கெஞ்சும் குரலில் கேட்டான் செழியன்..

"நீ என்ன தான் மன்னிப்பு கேட்டாலும், நீ பண்ணினது தப்பு தான்.. இன்னொரு விஷயம் நீ இப்படி குடிச்சிட்டு வர்றதுனால மட்டும் என்னோட முடிவு மாறிடப் போறதில்ல.. உனக்கு ஒரே ஒரு நாள் தான் டைம் இருக்கு. என்ன பண்ணனும்னு நீயே முடிவு பண்ணிக்கோ." என்று சென்றார் கங்கா..

செழியனோ தாய் கூறியதை கேட்டு தலையில் கையால் பிடித்தபடி சோபாவில் உட்கார்ந்தான்.

"எனக்கு மட்டும் ஏன் தான் இப்படியெல்லாம் நடக்குதோ.." என்று நிமிர்ந்தவன் சிவாவை பார்த்ததும்,

"டேய் சிவா, நீ தானே என்ன வீட்டுக்கு கூப்பிட்டு வந்த?? உனக்கு யாரு சொன்னது நான் பாதி வழியில நிற்குறேன்னு.." என்றதும் சிவாவும் சக்தியும் மாறி மாறி முகத்தை பார்த்துக் கொண்டனர்..

"டேய் நான் கேட்டுட்டு இருக்கேன், நீங்க என்ன பேசாம இருக்கீங்க??"

"மச்சான் நான் ஏதும் உன்ன வீட்டுக்கு கூப்பிட்டு வரலடா, நான் உன்ன நம்ம ஆபீஸ், பேக்டரின்னு எல்லா இடத்துலயும் தேடிட்டு இருந்தேன்.. அந்த டைம்ல தான் சக்தி போன் பண்ணி சொன்னாள் நீ வந்துட்டன்னு.."

செழியன் எதுவும் புரியாமல், "அப்படினா நான் எப்படி வீட்டுக்கு வந்தேன்??" என்று கண்களை மூடி யோசித்தான்..

சக்தி, "சகோ, யாருன்னு தெரியல ஒரு பொண்ணு தான் உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாள்.."

"என்னது பொண்ணா??" என்றான் செழியன் நம்ப முடியாமல்..

"என்ன மச்சான், ஒரு பொண்ணு கூட வந்திருக்க, அது கூட உனக்கு தெரியலையா??" என்று சிவா நக்கலாக கேட்க அவனை முறைத்தான்..

"ஆமா சகோ, ஒரு பொண்ணு தான், நீ ஏதோ அவங்க வீட்டு பக்கத்துல குடிச்சிட்டு மட்டையாகி கிடந்ததா சொன்னாங்க.. ஆட்டோ ஒன்னுல உன்ன கூட்டிட்டு வந்து கார் சாவியையும் கொடுத்துட்டு கார் பார்க் பண்ணி இருக்குற அட்ரஸும் சொல்லிட்டு போனாங்க.. அது மட்டும் இல்ல சகோ, ஏதோ உன்ன ரொம்ப தெரிஞ்சவங்க மாதிரி தான் அவங்களோட பிஹேவியர் இருந்தது." என்று நடந்ததை சுருக்கமாக கூறினாள் சக்தி.

"ஏது?? என்ன பத்தி தெரிஞ்ச மாதிரி பிஹேவ் பண்ணினாளா?? சக்தி, அவ அட்ரஸ் கொடுத்துட்டு தானே போனாள், அந்த அட்ரஸ ஒரு வாட்டி சொல்லு." என்கவும் சக்தியும் மதி கூறிய அட்ரஸை சொல்லவும்,

"இந்த அட்ரஸ்??? இது அன்னைக்கு அந்த ராட்சசிய ட்ராப் பண்ண போன அட்ரஸ்ல.. ஒரு வேளை அவள் தான் நம்மள வீட்டுக்கு தூக்கிட்டு வந்தளோ?? என்று யோசனையில் ஆழ்ந்தான் செழியன்..

∞∞∞∞∞∞∞∞∞∞

தான் குளித்து விட்டு வருவதாக கூறிய மதி தன் அறைக்கு சென்று தன் மொபைல் போனை எடுத்துப் பார்க்க அதில் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தான் செழியன்..

அவன் முகத்தை பார்த்ததுமே அவளுக்குள் ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. ஏனோ அவனையே கட்டி அணைப்பது போல போனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

"குடிகாரா.. குடிகாரா.. இப்படியா மட்டையாகுற அளவுக்கு குடிச்சிட்டு சுயநினைவே இல்லாம விழுந்து கிடப்ப.!! உன்னையே நினைச்சிட்டு இங்க ஒருத்தி கிடந்து தவிக்கிறாள், ஆனா அது எதுவுமே தெரிஞ்சிக்காது என்னைக்கோ உன்ன விட்டுட்டு போனவளை நினைச்சி குடிச்சி உன் உடம்ப கெடுத்துட்டு இருக்க.. எப்போடா என்னையும் என்னோட காதலையும் புரிஞ்சிக்க போற.. உன்ன என்னைக்கு பார்த்தேனோ அந்த செகண்டே நீ என்னோட மனசுக்குள்ள வந்துட்ட.. இத எப்படிடா நான் உன் கிட்ட சொல்லுறது.. நான் சொன்னாலும் நீ என்ன எப்படி புரிஞ்சிப்ப!! என்னோட காதல நீ தெரிஞ்சிக்கலனா கூட என்னைக்குமே உனக்கா நான் காத்திட்டு இருப்பேன்.." என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் தன் நாட்குறிப்பை எடுத்தாள்.,
அதில்..,,

முதல் பார்வையிலேயே இதயம் வரை சென்று விட்டாய்...

இது வரை உன்னை பிடிக்கும் என்று நானும் உன்னிடம் சொன்னது இல்லை...

வருடங்கள் சில கடந்தும் உன்னிடம் ஒரு முறை கூட பேச முயற்சி செய்யவில்லை...

இருந்தாலும் என் காதல் காத்திருக்கிறது...

உன் இதயத்தில் வாழ போகும் அந்த ஒரு சில நிமிடங்களுக்காக...
❤️☺️

..என்று தன் உணர்வுகளை கவிதையாய் வடித்தவள், "என்னைக்குமே நீயா என் காதலை புரிஞ்சிக்கிடுற வரைக்கும் நான் என்னோட மனசுல இருக்குறத உன் கிட்ட சொல்ல மாட்டேன்.." என்று தனக்கு தானே உறுதி எடுத்துக் கொண்டு டைரியை மூடினாள் மதி..

∞∞∞∞∞∞∞∞∞∞

தன் கேபினுக்குள் வந்த செழியனுக்கோ மனம் அமைதியில்லாமல் தவித்தது.. என்ன தான் தனக்கு காதல், கல்யாணம் என எதுவுமே வேண்டாம் என அவன் முடிவெடுத்திருந்தாலும், நேற்று கங்கா பேசிய பேச்சு அவனை நிலைகுலைய செய்தது..

"டேய் என்னடா நீ.. இன்னும் அம்மா பேசினதையே நினைச்சிட்டு இருக்கியா??" என்று தன் இருக்கையில் அமர்ந்து தலையை பிடித்தபடி இருந்த செழியனிடம் வினவினான் சிவா.

"எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல சிவா, எங்கையாச்சும் போயிரலாம் போல இருக்கு.."

"ஏய் என்னடா இப்படிலாம் பேசுற??"

"பின்ன என்ன என்னடா பண்ண சொல்லுற, அம்மாவுக்கு எல்லாம் தெரிஞ்சும் இப்படி பேசிட்டு போறாங்க??"

"விடு மச்சான், அவங்க ஆதங்கத்துல பேசுறாங்க.. சரியாயிடுவாங்க.."

"என்னவோடா எனக்கு மனசே சரியில்ல.." என்க, சிவா செழியனின் மனதை மாற்றும் நோக்கில்.,

"டேய் செழியா!! நானும் நைட்ல இருந்து ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சிட்டு யோசிச்சிட்டு இருக்கேன்டா..!! ஆனா எதுவுமே புரிய மாட்டேங்குது.."

"இப்போ எதை பத்தி நீ யோசிச்சிட்டு இருக்க?? என்ன உனக்கு புரிய மாட்டேங்குது.."

"இல்லடா உனக்கு பொண்ணுங்கனாலே பிடிக்காது.. எந்த பொண்ணு கூடயும் பேசக்கூட மாட்ட. ஆனா உன்னையும் ஒரு பொண்ணு தெரிஞ்சது மாதிரி வீட்ல வந்து ட்ராப் பண்ணிட்டு போயிருக்காளே.!! அது தான் யாரா இருக்கும்னு யோசிக்கறேன்." என்கவும் செழியனுக்கு மதியின் நியாபகம் வந்தது..

இருந்தாலும் அதை சிவாவிடம் காட்டிக் கொள்ளாது, " நானே புல் போதையில இருந்தேன்டா அப்போ எப்படி எனக்கு தெரியும்.."

"நீ சொல்லுறதும் வாஸ்தவம் தான் மச்சான்.. நீ ஒன்னும் வொர்ரி பண்ணிக்காதடா, நான் அந்த ஏரியால போய் விசாரிச்சு பார்த்து யாருன்னு கண்டு பிடிக்கிறேன்." என்று நம்பியாரை போல கையை தேய்த்துக் கொண்டான் சிவா..

"டேய் நீ எதுவுமே கிழிக்க வேணாம்.. அந்த மும்பை கிளைண்ட் கிஷோருக்கு இன்னைக்கு ப்ரோடக்ட்ஸ் டெலிவரி கொடுத்தாகனும், ஸோ நீ போய் அந்த பார்மாலிட்டீஸ் எல்லாம் பாரு.." என்று சிவாவை அனுப்பி விட்டு மதியின் கேபினுக்கு கால் செய்தான். ஆனால் அந்த அழைப்பு ஏற்கப் படவில்லை.. அவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் கால் செய்தும் அழைப்பு ஏற்கப் படாமல் இருக்க, கோபம் கொண்ட செழியன் ஆபீஸ்பாயை கூப்பிட்டு அவனிடம் மதியை அழைத்து வரும்படி கூறினான்.

∞∞∞∞∞∞∞∞∞

மதிக்கோ அன்று வேலை ஒன்றுமே ஓடவில்லை.. அவள் மனம் செழியனையே சுற்றி வந்தது.

"குடிகாரா.. குடிகாரா.. நேத்து ஒருத்தி எவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டுல கொண்டு போய் சேர்த்துக் இருக்காள். ஒரு பார்மாலிடிக்காச்சும் தேங்ஸ் சொல்லுவோம்னு தோணிச்சா உனக்கு.." என்று அவனை மனதுக்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருக்க.,

"மேடம் உங்களை எம்டி சார் அவரோட கேபினுக்கு வர சொன்னாரு.." என்று கூறவும் நடப்பிற்கு வந்தாள்.

"ஐயோ இப்போ எதுக்கு கூப்பிடுறான்.. ஒரு வேலை தேங்ஸ் சொல்லவா இருக்குமோ.." என்றதும், "ஏய் லூசு நீ தான் அவனை கூட்டிட்டு போனனு அவனுக்கு எப்படி தெரியும்." என அவள் மனசாட்சி காரித்துப்பியது.

"சரி.. சரி.. ஏதோ உன்ன கூப்பிட்டு திட்ட போறான்.. கூப்பிடுறவன் கேபினுக்கு கால் பண்ண வேண்டியது தானே.. அதென்ன ஆபீஸ்பாய் கிட்ட சொல்லி விடுறது.. அம்புட்டும் திமிரு திமிரு.." என்க,

"ஏய் இப்போ உனக்கு என்ன பிரச்சனை?? அவன் கால் பண்ணலங்குறதா?? இல்ல ஆபீஸ்பாய் வந்து சொன்னதா?? எதுவா இருந்தாலும் முதல்ல அவனை போய் பாரு இல்லனா அதுக்கும் சேர்த்து திட்டு வாங்க வேண்டியிருக்கும்." என அவள் உள்மனம் எச்சரிக்கை மணி எழுப்ப..

"கடவுளே நமக்கு எதுக்குடா வம்பு.." என்று செழியனின் அறையை நோக்கிப் போனாள்.

"மே ஐ கம் இன்..!!"

"எஸ். கம் இன்.." என்றவன் மதியை கண்டதும் கடும் கோபத்தில் இருந்தான்..

"அய்யய்யோ, கடவுளே இன்னைக்கு என்ன நடந்தாலும் நீ தான் என்ன காப்பாத்தணும்." என்று வேண்டிக்கொண்டாள் மதி.

"உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க??" உங்க கேபினுக்கு எத்தனை வாட்டி கால் பண்ணுறது.. ரெஸ்பான்ஸ் பண்ணவே மாட்டேங்குறீங்க.." என்று அவன் திட்டிகொண்டிருக்க.,

"குடிகாரா.. குடிக்காரா.. வேற எத பத்திடா யோசிச்சிட்டு இருக்க போறேன். உன்ன பத்தி தான் திங்க் பண்ணிட்டு இருந்தேன்.." என்று மனதுக்குள் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் மதி.

"ஹேய் நான் பேசிட்டு இருக்கேன்.. நீ இப்படி சைலன்ட்டா நின்னா என்ன அர்த்தம்??"

"உன்ன பிடிச்சிருக்குன்னு அர்த்தம்டா மிஸ்டர்.சிடுமூஞ்சி.." என்று மீண்டும் மனதுக்குள்ளயே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் மதி.

மதியை பார்த்து முறைத்தவன், "திமிரு திமிரு.. உடம்பு முழுக்க திமிரு.. நாம ஏதாவது கேட்டா பேசக்கூடாதுன்னு இருக்காள் அமுக்குனி." என்று வாய்க்குள் முனுமுனுத்தான்.

"என்ன சார் சொன்னிங்க.."

"இப்போ மட்டும் நல்லா பேசவரும்.." என்றவன்."நான் கேட்ட டிசைன்ஸ் எல்லாம் எங்க??" என்றதும் தன் கையில் இருந்த பைலை அவனிடம் நீட்டினாள் மதி.

அதை வாங்கி ஒரு சில பக்கங்கள் திருப்பி பார்த்தவன், "வெல்டன் மதி, ஆல் தி டிசைன்ஸ் யூ சப்மிட்டட் ஆர் குட்.. இதுக்கு அப்பறம் நம்ம கிட்ட வர்ற பிளான்ஸ் எல்லாமே நீங்க தான் டிசைன் பண்ணனும்.. " என்று பாராட்டவும் மதியே அவனை பார்த்து வியந்து தான் போனாள். இவ்வளவு நேரம் தன்னை திட்டிக் கொண்டிருந்தவனா இவன் என்று..

"தேங்க் யூ சார்.. ஐ அல்வய்ஸ் டூ மை ஒர்க் வெல்.." என்று கூறிவிட்டு வெளியேற திரும்பியவளை, "மதி ஒன் மினிட்." என்றவன் எழுந்து வந்து அவளை நெருங்க., அவளுக்கு இதயம் படபடவென துடித்தது.. மேலும் மேலும் அவளை நெருங்கியவன், அவள் காதின் அருகில் குனிந்து, "தேங்ஸ் அண்ட் சாரி, நீ நேத்து பண்ணின ஹெல்ப்புக்கு." என்றான்..

திடுக்கிட்ட மதி, "அப்போ உங்களுக்கு எல்லாமே நினைவு இருக்கா??" என்றாள்.

"இல்ல.. எனக்கு நேத்து அந்த டைம்ல நடந்த எதுவுமே நினைவுல இல்ல.. நீ கார் பார்க் பண்ணியிருக்க அட்ரஸ வச்சி ஐ கெஸ்ட்.. எனி வேய் தேங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப்.." என்றவனை பார்த்து,

"நோ நீட் சார், அந்த இடத்துல யாரா இருந்தாலும் நான் இத தான் பண்ணி இருப்பேன்." என்று மதி கூற, அவனுக்கு ஏதோ போல் ஆகியது.. சரியாக அந்த நேரம் பார்த்து அவனுக்கு கால் வர, அதில் பிஸியானான் செழியன்..

"இப்போ நான் போகவா?? இருக்கவா??" என்று மதி யோசித்துக் கொண்டிருக்க, கால் பேசி முடித்த செழியன்., "மிஸ். மதி நீங்க இன்னும் போகலையா??" என்கவும் கடுப்பாகியவள், "போடா, நீயும் உன் தேங்க்ஸும்.." என்று முனுமுனுத்தவாறு வெளியேறினாள்.

மதி வெளியேற, அவளை தொடர்ந்து உள்ளே நுழைந்தான் சிவா..

"டேய் மச்சான், என்னடா நடக்குது இங்க?? அந்த பொண்ணு என்ன கோபமா வாய்க்குள்ள ஏதோ பேசிட்டு போகுது."

"அதெல்லாம் ஒன்னும் இல்லடா, நீ போன வேலை என்னாச்சு.." என்று இருவரும் பிஸ்னஸ் பற்றிய பேச்சை ஆரம்பித்தார்கள்..

தன் கேபினுக்கு சென்ற மதி, செழியனை வசை பாடிக் கொண்டிருந்தாள்..

"சிடுமூஞ்சி, ஒரு தேங்க்ஸ கூட அன்பா சொல்லுறானா பாரு.. எப்போ பாரு முகத்துல ஒரு கடுகடுப்பு.. கொஞ்சமாச்சும் சிரிக்கலாம்ல, நீ சிரிச்சா எவ்வளோ அழகா இருக்கும்.. எதுக்கெடுத்தாலும் கோபம் தான்.. உன்னயெல்லாம் கல்யாணம் பண்ணி என்ன பாடுபடப் போறேனோ..??" என்று புலம்பிக் கொண்டிருந்தவளை, செழியன் தனது அறையில் பொறுத்தப்பட்டுள்ள சீசீடிவி கேமரா வழியாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவள் பேசுவது புரியவில்லை என்றாலும் தன்னைத்தான் திட்டுகிறாள் என்பது அவள் முகத்தை பார்க்கும் போதே தெரிந்தது..

மதியை சில நிமிடங்கள் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு ஏதோ போன் வரவும் அழுது கொண்டு எழுந்து போவது அவன் கண்களுக்கு தெரிந்தது.."

"ஆமா இப்போ அவ எதுக்கு அழுதுட்டு போறாள்.. இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தாள்!! இப்போ என்னாச்சு??" என்று யோசித்தவன்., ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து அருகில் இருக்கும் சிவாவிடம், "சிவா நீ ஆபீஸ பார்த்துக்கோ, நான் ஒரு வேலையா வெளிய போயிட்டு வர்றேன்." என்று கூறிவிட்டு மதியை பின் தொடர்ந்து சென்றான்.



தொடரும்...
 
Top