• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தீயில் விழுந்த தேனா..!! 🍂 - 12

Member
Messages
30
Reaction score
40
Points
18
Episode : 12

Writer : Hafa



"டேய் டேய் கொஞ்சம் ஸ்லோவா போடா, எனக்கு என்னமோ இதே ஸ்பீட்ல போனோம்னா பரலோகத்துக்கு தான் போய் சேருவோம்னு தோணுது." என்று சிவா புலம்ப.,

"நல்லா கத்து கதறு, நான் இப்படி தான் டிரைவ் பண்ணுவேன். அம்மா தான் ஒர்க்கோட சீரியஸ்னஸ் தெரியாம கூப்பிட்டு இருக்காங்கன்னா நீயும் அதுக்கு சரின்னு தலை ஆட்டுவியா?? அதுக்கு இது தான் உனக்கு தண்டனை."என்று காரை இன்னும் வேகமாக செலுத்தினான் செழியன்.

"கடவுளே இவனுக்கு பிரண்டான ஒரே காரணத்துக்காக இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க காத்திருக்கோ??" என்று செழியன் காதுபடவே புலம்பவும் செழியனின்
ஒற்றை முறைப்பில் வாயை மூடிக் கொண்டான் சிவா..

சிவா வாயை மூடிக் கொள்ளவும் வீட்டின் முன் கார் நிற்கவும் சரியாக இருந்தது.

வேகமாக வீட்டுக்குள் நுழைந்தவன், "அம்மா.. அம்மா.. எங்க இருக்கீங்க??" என்று சத்தம் போட, கங்காவும் சக்தியும் ஹாலுக்கு வரவும், சிவாவும் வந்து சேர்ந்தான்.

கங்கா, "என்னப்பா, வந்துட்டீங்களா?? சரி ரெண்டு பேரும் கைய வாஷ் பண்ணிட்டு வாங்க சாப்பிடலாம்.."

"அம்மா.. என்ன நீங்க இவ்வளவு அவசரமா கால் பண்ணி சாப்பிடவா கூப்பிட்டீங்க!! ஆபீஸ்ல தலைக்கு மேல இருக்கு, நீங்க என்னடான்னா அப்ட்ரோல் இந்த சாப்பாட்டுக்காக வர சொல்லி இருக்கீங்க?? என்று அன்னையுடன் கடிந்து கொண்டவனை தோளை தொட்டு சமாதானம் செய்தான் சிவா.

"நான் உங்கள சாப்பிட மட்டும் கூப்பிடலப்பா, உன் கூட கொஞ்சம் பேசணும்.. நீ தான் எங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணி பேசுறதே இல்லையே, அப்பறம் இப்படி ஏதாவது ரீசன் சொல்லி தான் உன்ன கூப்பிட வேண்டியதா இருக்கு."

"என்னம்மா நீங்க என்னோட ஒர்க்ஸ் பத்தி தெரிஞ்சும் இப்படி சொல்லிட்டு இருக்கீங்க.. ஓகே பைன், சொல்லுங்க என்ன என் கிட்ட பேசனும்."

"முதல்ல ரெண்டு பேரும் வந்து உட்காருங்க, சக்தி நீ ஜூஸ் போட்டு எடுத்துட்டு வாடா." என்கவும் அவள் இருவருக்கும் ஜூஸை கொடுக்க அதை வாங்கி குடித்தவன்..

"சொல்லுங்கம்மா, என்ன பேசனும்??" என்க கங்கா அமைதியானார்.. ஓரிரு நிமிடங்கள் பொறுமை காத்த செழியன், "அம்மா என்ன இது பேசணும்னு சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்த நான் எப்படி எடுத்துகிறது. ஜஸ்ட் ஸ்பீக் அவுட்.

"செழியா, நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன், நான் இருக்கப் போறது இன்னும் ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ தான்.. அதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி பார்த்துரனும்னு இந்த பெத்த மனசு ஏங்குது. நீ என்ன சொல்லுற??"

இதை கேட்டு அங்கிருந்த மற்ற மூவருமே அதிர்ந்தனர்..

சக்தி, "அம்மா என்ன பேசுறீங்க நீங்க?? உங்களுக்கு எதுவும் இல்ல, நீங்க இன்னும் நிறைய வருஷம் எங்க கூட இருப்பிங்க??" என்க, விரக்தியாய் ஒரு புன்னகையை உதிர்த்தார் கங்கா.

"நீ சொல்லுறது வாய் வார்த்தைக்கு வேணா சரியா இருக்கலாம்டா சக்தி, ஆனா வாழ்க்கையோட நியதின்னு ஒன்னு இருக்கு.. அதையும் நாம நினைச்சி பார்க்க தானே வேணும்.."

செழியன், "ஏன்மா கல்யாணம், பொண்ணுன்னு இவ்வளவு டார்ச்சர் பண்ணுறிங்க, மனுஷன கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்க விடறீங்களா?? இதனால தான் நான் முக்கால்வாசி நேரம் ஆபீஸ்லயே இருக்கிறேன்.." என்று சலித்துக் கொள்ள,

"செழியா, நீ என்ன பேசுற?? நீ வீட்டுக்கே வரக் கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு நாங்க என்ன பண்ணிட்டோம்.. எனக்குன்னு இருக்குறது நீங்க ரெண்டு பேரும் தான், உங்களோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறது தப்பாப்பா?? இல்லன்னா உன்னோட வாழ்க்கைல தலையிட எனக்கு உரிமை இல்லையா?? சொல்லு செழியா??"

"அம்மா உங்களுக்கு என்னோட வாழ்க்கையில எந்த விதமான முடிவும் எடுக்க உரிமை இருக்குது, ஆனா இந்த கல்யாண விஷயத்தை மட்டும் இதுக்கு மேல என்கிட்ட பேசாதீங்க.. நீங்க என்னவேனாலும் சொல்லுங்க, இப்போ எனக்கு கல்யாணம் வேணாம், இப்போ மட்டும் இல்ல எப்பயுமே எனக்கு இந்த காதல், கல்யாணம் எதுவும் வேணாம். ப்ளீஸ் இந்த பேச்சை இதோட விட்டுடுங்க."

"முடியாது செழியா, இது நாள் வரைக்கும் உனக்கு அந்த சம்பவத்துல இருந்து வெளிய வர்றதுக்கு டைம் கொடுத்தாச்சு, உன்னால தான் இவங்க ரெண்டு பேருமே இன்னும் கல்யாணம் வேணாம்னு தள்ளி போட்டுட்டு இருக்காங்க, நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது!! கடைசியா உனக்கு ஒரு நாள் டைம் தர்றேன். அதுக்குள்ள யோசிச்சு நல்ல முடிவா சொல்லு.. இல்லனா அதுக்கு மேல நான் எடுக்குற முடிவு விபரீதமா இருக்கும்.." என்ற கங்கா செழியனின் பதிலையும் எதிர்பாரமால் தன் அறைக்குள் சென்று கதவை மூடினார்.

"புல்ஷிட், யாருக்குமே என்னோட பெயின் தெரியாது.. எல்லாரும் அவங்க அவங்க இஷ்டத்துக்கு பேசுறாங்க.."என்று கத்தியபடி காரை எடுத்துக் கொண்டு வெளியேற., சக்தியும் சிவாவும் செய்வது அறியாது நின்றனர்.

சிவா, "என்ன அம்மு, எதுக்கு ஆன்ட்டி சடன்னா இவ்வளவு எமோஷனலா பேசிட்டு போறாங்க.."

"எனக்கும் கூட புரியலப்பா, அம்மா இத்தனை நாள்ல சகோ கூட இப்படி பேசி நான் பார்த்ததே இல்ல."

"என்ன பண்றதுடா அவங்களுக்கும் வயசாகிட்டே போகுதே.. செழியன் சந்தோஷமா வாழறத பார்க்கணும்னு அவங்களுக்கும் ஆசை இருக்குமே.."

"என்னவோங்க, சகோவை பார்க்கும் போதும் ரொம்ப கவலையா இருக்கு.."

"ஆமா அம்மு செழியனும் ஸ்பீடா காரை ஓடிட்டு போறான்.. நான் என்னனு போய் பார்க்குறேன். நீ ஆன்ட்டிய பாரு போயிட்டு." என்று செழியனை தேடிச் சென்றான் சிவா..

∞∞∞∞∞∞∞∞∞∞

ஆபீஸுக்கு சென்று வீடு திரும்பிய மதி சீதாவிடம், "அம்மா, நான் பக்கத்துல சூப்பர் மார்க்கெட் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்."

"எதுக்கு மதி, இப்போ தானே ஆபீஸ்ல இருந்தே வந்த அதுக்குள்ள எதுக்கு போற.. அப்பா கிட்ட சொன்னா அவரு வாங்கி தருவாருல.."

"இல்லம்மா அப்பாக்கு எதுக்கு கஷ்டம்.. நான் போனால் தான் வேண்டிய திங்ஸ் பார்த்து எடுக்கலாம்."

"அது சரி தான்.. அப்படினா வண்டிய எடுத்துட்டு போ.."

"வேணாம்மா.. பக்கத்துல தானே ஸோ நடந்ததே போயிட்டு வந்துடுறேன்." என்று சூப்பர் மார்க்கெட்டை நோக்கி நடந்தாள்.

சிறிது தூரம் நடந்து சென்றவள், அங்கு சாலையோரம் நின்றிருந்த காரை பார்க்க, "இந்த கார்.. இது அவனோட கார்ல.. இது எங்க இங்க நிற்குது?? என்று யோசிக்க, அவனோட கார் எங்க நின்னா உனக்கென்ன?? நீ வந்த வேலைய மட்டும் பாரு..? என்று அவள் உள் மனம் உத்தரவு பிறப்பித்தது.

"சரி நாம வந்த வேலைய பார்ப்போம்." என்று அவள் அவன் காரை தாண்டிச் செல்ல, அவள் மனசாட்சியோ கொஞ்சம் திரும்பி பார்க்க உந்துதல் அளித்தது. காரின் அருகில் சென்று கண்ணாடியூடாகப் பார்க்க செழியனோ, காரினுள் ஸ்டேரிங்கில் தலை கவிழ்த்து படுத்திருந்தான்.

"என்ன இவன் படுக்குறதுக்கு இடம் இல்லாமலா இங்க படுத்து இருக்கான் இடியட்.." என்று சிந்தித்து, "சரி நமக்கு எதுக்கு வம்பு நாம வந்த வழியே போயிடுவோம்." என்று நினைத்து திரும்ப ஏதோ ஒன்று அவளை தடுத்தது..

"ஏதோ சரியில்லை.." என்று அவள் உள் மனம் அச்சுறுத்த அவளுக்கே கேட்காத குரலில், "ஹலோ மிஸ்டர்.. மிஸ்டர்.." என்று கூப்பிட அவனிடம் எந்த அசைவும் இல்லை.

"என்ன இவன் எந்த ரியாக்ஷனும் இல்லாம இருக்கான்." என்றவளை காரித் துப்பியது அவளது மனசாட்சி, "இப்படி உனக்கே கேட்காத வாய்ஸ்ல கூப்பிட்டா அவனுக்கு எப்படி கேட்கும்." என்று..

"சரி சரி.. அசிங்க படுத்தாத, இப்போ இவனுக்கு என்னனு பாப்போம்.. அசைவே இல்லாம கிடக்குறான்.." என்று கார் கதவை திறந்து பார்க்க., செழியனின் நல்ல நேரம் அது லாக் செய்யப் படாமல் திறந்து கொண்டது..

கதவை திறக்க மதிக்கோ அவன் அருந்தியிருந்த மதுவின் வாடை அவள் குடல் வரை சென்று அவளுக்கு வயிற்றைப் பிரட்டியது.

"ச்ச்சை குடிகாரா, குடிகாரா.. பாரு எப்படி மூக்கு முட்ட குடிச்சு இருக்கான்னு. இவனுக்கு நீ ஹெல்ப் பண்ண போறியா?? எதுவும் வேணாம்.. முதல்ல இங்கிருந்து கிளம்பு மதி." என தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள், அங்கிருந்து செல்ல எத்தனிக்க, இதுநாள் வரை அவளுக்கு அவன் உதவிய தருணங்கள் நியாபகத்திற்கு வரவும் அங்கேயே நின்றாள்.

காதல் தோல்வியின் போது கூட மதுவின் பக்கம் நெருங்காதவன், இன்று மனம் உடைந்து போய் அதனை நாடியிருந்தான். தடுப்பார் யாரும் இல்லாமல் முதற் தடவையே அளவுக்கு அதிகமாய் குடித்து விட்டு கார் ஓட்ட., அவன் செய்த நல்ல நேரம் அது பெட்ரோல் இல்லமால் நின்றது..

"மிஸ்டர். செழியன்.. ஹலோ மிஸ்டர்.." என்று கூப்பிட்டு கடுப்பான மதி, "யோவ் கூப்பிடுறது எதுவும் காதுல விழயில்லயா?? காரை எடுத்துட்டு வீட்டுக்குப் போங்க.." என்க..,

"கார்ர்.. ஸ்டார்ட்ட்ட்.. ஸ்டார்ட்ட்.." என்றான் மதுவின் பிடியில் குளறியபடி. அவனுக்கும் தெரியவில்லை தன் முன் நிற்பது யாரென்று.

சூரியன் தன் அந்த நாளுக்கான சேவையை முடித்துக் கொள்ளப் போவதை உணர்த்த, "இப்ப என்ன பண்ணலாம்.. இவனை இப்படியே விட்டுட்டும் போக முடியாது.."என்று யோசித்தவள், ஒரு முடிவுக்கு வந்து, அருகில் இருக்கும் ஒரு ஆட்டோவை ஆட்டோவை அழைத்தாள்.

"ஹேய் மிஸ்டர் இறங்குங்க.." என்க அவனோ தலையை தூக்கிப் பார்த்தவன் மீண்டும் ஸ்டேரிங்கில் தலையை சாய்த்தான்.

"இது சரி பட்டு வராது.." என்றவள் அவன் கைகளை பிடித்து தூக்க, அவனோ தட்டுத் தடுமாறி அவள் மேலேயே விழுந்தான். அவள் தோளில் செழியன் சாய்ந்திருக்க, அவனது நெருக்கம் அவளை ஏதோ தொந்தரவு செய்தது.

அவனை தன் பலம் கொண்டு தூக்கி காரின் மீது சாய்த்தவள், "அண்ணா.." என்று ஆட்டோக்காரை அழைத்து "இவர கொஞ்சம் ஆட்டோல உட்கார வைங்க.." என்று கூறி விட்டு காரை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறவும், ஆட்டோக்காரர், "இந்தாம்மா, எங்க போகணும்??"என்கவும் தலையில் கையை வைத்தாள் மதி.

"அட, அட்ரஸ் தெரியாமலா இவனை வீட்ல விடலாம்னு நினைச்சோம்.. இப்போ என்ன பண்ணுறது.." என யோசித்தவளுக்கு சந்திரனுக்கு அழைக்கலாம் எனத் தோன்றியது..

உடனே சந்திரனுக்கு அழைத்து, "அப்பா நம்ம எம்டியோட வீட்டு அட்ரஸ் என்னனு சொல்லுங்களேன்." என்க, அவர் அவளது அவசரத்தை புரிந்து கொண்டு, "நாளை ஆபீஸில் என்னவென்று விசாரித்துக் கொள்ளலாம்." என நினைத்தபடி அட்ரஸை சொல்லவும் அதை ஆட்டோக்காரரிடம் சொல்ல ஆட்டோ புறப்பட்டது.

"நீ... நீ.. என்ன.. எங்க.. எங்க.. கடத்திட்டு போற.." என்று அவளை பார்த்துக் கூறவும் முகத்தை சுளித்து, "அது ஒன்னு தான் இப்போ குறைச்சல்." என்று வாய்க்குள் முனுமுனுத்தாள்.

"அது.. அது.. யாருக்க்க்க்குமே என்ன்னோட நிலைமைமைமை ப்ப்புரிய மாட்ட்ட்டுது.. அவ.. அவ.. என்ன்ன ஏமாத்திட்ட்டு.. ஏமாத்திட்ட்டு.. அவன் கூட.. போய்ட்ட்டா..." என்று ஏதோ உளறியபடியிருக்க, மதிக்கு அவன் கடைசியாக கூறியதில் ஏதோ மனம் வலித்தது.

அதற்குள் அவனது வீடு வந்து விட, ஆட்டோவை விட்டு இறங்கிச் சென்று வாட்ச்மேனைக் கூப்பிட, யாரும் வரவில்லை. ஓரிரு நிமிடங்கள் காத்திருந்து பார்த்தவள் வீட்டிற்குள் சென்று காலிங் பெல்லை அழுத்த கங்கா கதவை திறந்தார்..

"வாம்மா.. யாருமா நீ?? என்ன வேணும்??"

"அது.. வந்து.. உங்க பையன்.." என்று இழுக்க..

"என்னோட பையன், ஆமா அவனுக்கு என்ன ஆச்சு?? சக்தி.. சக்தி.. இங்க வா.." என்று பதறினார்.

"ஐயோ ஆன்ட்டி அவருக்கு எதுவும் இல்ல!! புல்லா குடிச்சிருப்பாரு போல, எங்க வீட்டுக்கு பக்கத்து தெருவுல தான் கார் நின்னுட்டு இருக்கவும், நான் தான் ஆட்டோ பிடிச்சி கூப்பிட்டு வந்தேன்." என்று சொல்லி முடிக்க சக்தியும் வந்திருந்தாள்.

"அம்மா, எதுக்கு கூப்பிட்டீங்க?? யாரு இவங்க??"

"சக்தி, செழியன் ஏதோ குடிச்சிட்டு.. இருக்கானாம்.." என்று ஆட்டோவுக்கு ஓட, அவர் பின்னால் சக்தியும் அவளுக்கு பின் மதியும் சென்றனர்.

செழியனை அந்த கோலத்தில் பார்க்க பெற்ற மனம் பதைபதைத்தது. செழியனும் அந்த போதையிலும் தாயை நிமிர்ந்து பார்த்தவன், தலையை குனிந்து கொள்ள அதை பார்த்த மதிக்கு சிரிப்பை அடக்குவது பெரும் பாடாய் இருந்தது அவனது சிறுபிள்ளை தனத்தை பார்த்து.

சக்தியும் கங்காவும் சேர்ந்து ஆட்டோவுக்குள் இருந்த செழியனை தூக்க இயலாமல் இருக்கவும் பக்கத்தில் நின்றிருந்த மதியையும் கூப்பிட்டு மூவருமாய் அவனை வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்தனர்.

செழியனை வாஷ்ரூமுக்குள் தள்ளிய கங்கா, "ஒழுங்கா குளிச்சிட்டு வெளிய வா." என்று விட்டு மதியிடம் வந்தவர்.,

"ரொம்ப நன்றிமா."

"ஐயோ அதெல்லாம் பரவாயில்லை ஆன்ட்டி, இந்தாங்க கார் சாவி, வீட்டுல என்னக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. நான் கிளம்புறேன் ஆட்டோ வெளியில வெயிட் பண்ணுது."

"இருந்து ஒரு காபி கப் சாப்பிட்டு போமா, சக்தி காபி எடுத்துட்டு வா."

"ஐயோ இல்ல சிஸ்டர் இருங்க, கண்டிப்பா நான் இன்னொரு நாளைக்கு வந்து காபி சாப்பிடுறேன் ஆன்ட்டி. இப்போ கிளம்புறேன்." என்று கிளம்பினாள்.

ஆட்டோவுக்குள் இருந்தவளுக்கு, அவனை தோளில் சாய்த்து அழைத்து வந்ததால் அவளுக்குள் ஏற்பட்ட குறுகுறுப்பு மட்டும் அடங்க மறுத்தது. கஷ்டப் பட்டு அதை ஒதுக்கி வைத்தாள் மதி..

∞∞∞∞∞∞∞∞∞∞

"ஏங்க என்னங்க இந்த பொண்ண இன்னும் காணயில்ல?? பக்கத்துல சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிட்டு வர்றேன்னு போனவள் இருட்டின அப்பறம் கூட வீட்டுக்கு வரலையே.!! எங்க போனாளோ?? இல்லனா ஏதாவது பிரச்சனைய இழுத்து விட்டிருப்பாளோ??" என்று பதற..,

"சீதா நீ பயப்படாத, அவ நம்ம பொண்ணு என்ன பிரச்சனை வந்தாலும் அவளுக்கு எப்படி மேனேஜ் பண்ணிக்கணும்னு தெரியும்." என சொல்லிக் கொண்டிருக்க, வாசலில் ஆட்டோவில் வந்து இறங்கினாள் மதி.

"இதோ பாரு சீதா மதியே வந்துட்டாள், மதிமா வாடா, வா.." என்று மதியை அழைக்க எதையோ யோசித்துக் கொண்டு வந்தவள், தந்தையின் சத்தத்தை கேட்டு ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள் அவரை.

"எங்கடா போய் இருந்த?? ரொம்ப நேரமா உன்ன காணும்னு உன்னோட அம்மா தவிச்சு போய் இருக்காள்.!!"

"ஐயோ, அம்மா நீங்க டென்ஷன் ஆகுற மாதிரி எதுவும் இல்லை, நான் ஒர்க் பண்ணுற ஆபீஸ்ல ஒர்க் பண்ணுற ஒருத்தர் காரை மரம் ஒன்னுல மோத விட்டு விழுந்து கிடந்தாருமா, அது தான் அப்படியே விட்டுட்டு போக மனசில்லாமல் அவரு வீட்டுல போய் விட்டுட்டு வந்தேன்." என்று பாதி உண்மையும் பாதி பொய்யுமாய் பெற்றோரிடம் உரைத்தாள். ஏனோ ஒரு குடிகாரனாய் செழியனை தன் பெற்றோரிடம் சித்தரிக்க அவள் விரும்பவில்லை.

சீதா, "அய்யய்யோ இப்போ எப்படி இருக்காரு?? அடி ஏதும் பெருசா??"

"என்னது அடியா??" என்று திகைத்தவள், உடனே சுதாகரித்துக் கொண்டு, "இல்லம்மா, அடி ஏதும் இல்ல.. அதுனால தான் அவரு வீட்லயே விட்டுட்டு வந்தேன்."

"ரொம்ப நல்ல விஷயம் பண்ணி இருக்கா, பார்த்தியா சீதா என்னோட பொண்ண.." என்று மதியின் தலையை நீவி விட்டார் ரவி.

"அப்பா, நான் போய் பிரெஷ் ஆகிட்டு வந்துடுறேன்." என்று வேகமாய் தனது அறைக்கு சென்ற மதி, தனது மொபைல் போனை எடுத்து பார்க்க., அதில் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தான் செழியன்...




தொடரும்...
 
Top