• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

திருமணம்

Administrator
Staff member
Messages
912
Reaction score
2,633
Points
93
தூங்காமல் புரண்டு புரண்டு படுத்துட்டு இருந்தேன். போனை எடுத்து டைம் பார்த்தேன். 2.00am னு காட்டுச்சு. எல்லாரும் தூங்கிட்டாங்களா? என்று பார்த்துவிட்டு, சத்தமே இல்லாமல் எழுந்து, என்னோட லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு பின்வாசல் வழியா வெளியே வந்து, ஒரு ஆட்டோவை பிடித்து ஏர்போர்ட்டுக்கு போயிட்டு இருக்கேன்.


என் பேரு நேயா. நான், இன்ஜினியரிங் முடித்துவிட்டு, பெங்களூர்ல ஒரு பிரபலமான பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். போனவாரம் கால் பண்ணி என் அப்பா அவசரமாக என்னை வர சொன்னார். நானும் கிளம்பி போனேன். என்னன்னு பார்த்தா, எனக்கு கல்யாணமாம் அடுத்த வாரம்... நான் வேண்டாம் என்று சொன்னேன். சண்டை போட்டேன்.


என் அப்பா, "பையன் ஜாதகத்துல இன்னும் ஒரு வாரம்தான் கல்யாண யோகம் இருக்காம்... அதுக்குள்ள கல்யாணம் பண்ணனும். இல்லன்னா இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்" என்று சொன்னார். "அதுக்கு நான் என்ன பண்ண? நான் தான் கிடைச்சனா..?" அதான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். இப்போ பெங்களூருக்கு பிளைட்ல போயிட்டு இருக்கேன்.


முகமே தெரியாத அந்த மாப்பிள்ளை மேல எனக்கு கோவம் வந்துருச்சு. எல்லாம் அவனாலதான். அவனால தான் நான் என் அப்பா அம்மாவை கஷ்டப்படுத்தி இப்படி ஓடி வந்தேன். நான் பெங்களூர் வந்துட்டேன். என் போனை ஆன் பண்ணுனேன், 100 மிஸ்டுகால் காட்டுச்சு. நான் திரும்பி போன் பண்ணல.

நான் என் பிரண்டுக்கு கால் பண்ணி என்ன ஆச்சுன்னு கேட்டேன். கல்யாணம் நின்னுருச்சுன்னு அவ சொன்னாள். என் அப்பா அம்மா என் மேல் செம கோபமா இருக்காங்க என்று சொன்னாள். கொஞ்ச நாள் வீட்டு பக்கம் வராதன்னு என்று சொல்லிட்டாள்.

அப்புறம் நாள் வேகமா போச்சு. என் ரொட்டீன் லைஃப் ஸ்டார்ட் ஆயிடுச்சு. என் ஆபீஸ்ல புதுசா ஒரு பையன் ஜாயின் பண்ணி இருக்கான். அவன் அழகா இருக்கான்னு ஆபிஸே பேசுது. அது எனக்கு எரிச்சலா வருது. யாரைப் பார்த்தாலும் இதே பேச்சு தான். அப்படி என்னதான் அழகா இருக்கான்னு, நான் எம்.டி ரூமுக்கு போற மாதிரி போய் பார்க்கலாம்னு போனேன்.

நல்லாத்தான் இருக்கான். ஆனால், அவ்வளவு சீன் இல்லைன்னு தோணுச்சு. என்னோட கேபின் பக்கத்துல தான் அவனுக்கும் கேபின் கொடுத்திருக்காங்க. அவன் தான் முதலில் பேசினான். அவனும் என்னோட ஊர் கோவை தானாம். அவன் நேம் நிதின் என்று சொன்னான். நாங்க ரெண்டு பேரும் நல்ல ப்ரண்ட்ஸ் ஆனோம்.


ஒரு தடவை ஹாலிடே வந்துச்சு, எல்லோரும் ஊருக்கு போனாங்க.
நான் மட்டும் போகல. நிதின், நான் ஏன் போகல என்று கேட்டான். நாங்க ரெண்டு பேரும் இப்போ ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். அதனால சொன்னேன், கல்யாணத்தை நிறுத்தி விட்டு ஊர்ல இருந்து ஓடி வந்துட்டேன் என்று சொன்னேன்.

அவன் கேட்டான், "நீ யாரையாவது லவ் பண்றியா....?" என்று,

"நான் இல்லைன்னு..." சொன்னேன்.

"அப்புறம் ஏன் கல்யாணத்தை நிறுத்துன?" என்று கேட்டான்.

நான் சொன்னேன், "எனக்கு அரேஞ்ச் மேரேஜ்ல நம்பிக்கை இல்லை. எனக்கு லவ் மேரேஜ் பண்ணிக்க ஆசை. ஆனால், எனக்கு யாரும் மேலையும் காதல் வரலை" என்று சொன்னேன்.

அவன் உடனே, "எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு... ஐ லவ் யூ, நம்ம லவ் பண்ணலாமா?" என்று கேட்டான். நான் என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சேன்.

அவன் என் ரியாக்க்ஷன பார்த்துவிட்டு, "உடனே நீ பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. யோசிச்சு சொல்லு" என்று சொல்லிட்டு போயிட்டான்.

நானும் நல்லா யோசிச்சு பார்த்தேன். எனக்கு அவன ரொம்ப பிடிக்கும். நல்ல பையன்தான். யோசிச்சேன், சரின்னு சொல்லிட்டேன். நாங்க ரெண்டு பேரும் நல்லா லவ் பண்ணோம். ஊர் சுத்தனோம், என்ஜாய் பண்ணோம். நாள் வேகமாக போயிடுச்சு.

நான் வீட்டிலிருந்து ஓடி வந்து ரெண்டு வருஷம் ஆகப்போகுது. எனக்கு என் வாழ்க்கை பற்றி கவலை வந்துச்சு. நான் அவகிட்ட சொன்னேன். அவன் அவங்க வீட்டுல நம்ம லவ்க்கு ஓகே சொல்லிட்டாங்க. அதனால, நம்ம ரெண்டு பேரும் உங்க வீட்டுக்கு போயி பேசலாம் என்று சொன்னான். சரி நாங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு போனோம்.


என் அம்மா போன உடனே என்னை கட்டிப் பிடித்து அழுதுதாங்க. எனக்கு நடக்கிறது கனவான்னு தோணுச்சு. நான் அடிவாங்க கன்னத்தை ரெடி பண்ணிட்டு வந்தேன். ஆனால், யாரும் என்னை திட்டல. அப்பா மட்டும் கொஞ்சம் வருத்தப்பட்டாரு.

என்னை எல்லாரும் பாசமா பார்த்துக்கிட்டாங்க. நான் நிதின்னை லவ் பண்றேன்னு சொன்னேன். எங்க வீட்டுல யோசிக்காமல், எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்லிட்டாங்க.

எனக்கு ஒரே ஆச்சரியம்! என் கையை கூட கிள்ளிப் பார்த்தேன், வலிச்சது. இது உண்மைதான். என் அண்ணா கிட்ட கூட கேட்டேன். அதுக்கு அவன், "நாங்க பார்த்த பையன் தான் உனக்கு பிடிக்கல. அதான் உனக்கு பிடிச்ச பையன உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்.." என்று சொன்னான்.


எங்க வீட்ல எல்லாருக்கும் நிதின்ன ரொம்ப பிடிச்சிருச்சு. எல்லாமே வேகமாக நடந்துச்சு. அவனோட பேரண்ட்ஸ் வந்து எங்க வீட்டுல பேசினாங்க. எனக்கு அவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி ஞாபகம். யோசிச்சு பார்த்தா ஞாபகம் வரல. நான் நிதின் கிட்ட கேட்டேன். "நீ அவுங்களை என் போன்ல பாத்து இருப்ப..." என்று சொன்னான். நானும் அப்படித்தான் இருக்கும்னு நினைச்சு விட்டுட்டேன்.


வேகமா என் கல்யாண வேலை நடந்தது. எனக்கு, முன்னாடி கல்யாணம் ஏற்பாடு பண்ண அதே கல்யாணம் மண்டபத்தில்தான் கல்யாணம். நாளைக்கு கல்யாணம். எல்லாரும் இன்னைக்கே ஹாலுக்கு வந்துட்டோம்.

என் ஃப்ரெண்ட் கவிதா என்னைப் பார்க்க வந்தாள். அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, ப்ரெக்னன்டா இருந்தா. நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசுனோம். என் லவ் ஸ்டோரியை கேட்டா, சொன்னேன். நிதின் போட்டோ கேட்டாள். நான் என் மொபைல்ல நாங்க ரெண்டு பேரும் எடுத்த செல்பியை காட்டினேன்.

அவள், "ஏன்டி இவரையா காதலிக்கிற..?" என்று கேட்டாள்.

நான் "ஆமா... ஏன்?" எனறு கேட்டேன்.

"ஏன்டி உங்க வீட்டில ஒண்ணுமே சொல்லலயா?" என்று கேட்டாள். பின் இவர் தான் உனக்கு ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை" என்று சொன்னாள். நான் அதிர்ச்சி ஆகிட்டேன்.


எனக்கு இப்பத்தான் நிதினோட அம்மா அப்பா அந்த கல்யாணத்துல பார்த்தது ஞாபகம் வந்தது. எனக்கு இப்பதான் எல்லாமே புரிந்தது. எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல, கோவமா வந்துச்சு.

நான் உடனே நித்தின் கிட்ட போய் சண்டை போட்டேன். என்னை ஏன் ஏமாத்தினன்னு கேட்டேன்.

அவன், "உன்னை எனக்கு போட்டோவில் பார்த்த உடனே ரொம்ப பிடிச்சிருச்சு. அதான் உன்னை தேடி வந்து காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்தேன்..." என்று சொன்னான்.

எனக்கு அவன் பதில ஏத்துக்க முடியல . அவன் என்கிட்ட சொன்ன பொய்யை என்னால ஏத்துக்க முடியல. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு கோவிச்சுக்கிட்டு, அதே பின்வாசல் வழியா போகப் போனேன்.

என் அப்பா என்னை கூப்பிட்டார். நான் திரும்பி பார்த்தேன், கூட என் மொத்த குடும்பமே நின்னுட்டு இருந்துச்சு.

என் அப்பா நிதின் கையை என் கைல வச்சு , "திரும்பவும் ஓடிப்போனா இவனையும் கூட்டிட்டு ஓடிப்போயிரு... திரும்பவும் என்னால உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது" என்று சொன்னார்.

நிதின் என்னை பார்த்து பாவமா மூஞ்சிய வைத்திருந்தான். எனக்கு சிரிப்பு வந்துருச்சு. அவனை 2 அடி அடித்துவிட்டு, என் அப்பா மேல சாஞ்சுகிட்டேன். அப்புறம் எல்லாரும் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. அப்பா அம்மா பார்த்த அதே பையன், எனக்கு பிடிச்ச பையன் . யாருக்கு இது கிடைக்கும்? எனக்கு இருந்த குற்ற உணர்ச்சி எல்லாம் போயிடுச்சு. இப்ப இந்த உலகத்தில் அதிகமா சந்தோஷமா இருக்கிறது நான் தான்னு தோணுது.

சுபம் ❤️
 
Last edited:
Top