• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

காரிருள் கல்லூரி - 9

Member
Messages
37
Reaction score
2
Points
8
மாலை ஆறு மணி.... சாரதா கல்லூரியில் வானம் சூரியனை மறைத்து மேகங்கள் இருளை மழைத்துளி வழியாக பொழிந்து கொண்டு இருந்தது.
"மழை வேற நல்லா பெய்யுது... இப்போ என்ன பண்றது"என குமார் யோசித்து கொண்டு இருக்கிறான். அப்போது அங்கு குடையுடன் வந்த ராம் குமாரை பார்த்து,
"என்னடா குடை எடுத்துட்டு வரலையா... இங்கெல்லாம் இந்த மாசம் இப்படித்தான்...தினமும் இனி குடை கொண்டு வா... இன்னிக்கு வேனா என்கூட வா...நா குடை வெச்சிருக்கேன்"
ராமை பார்த்த குமார்,"இவன் நம்ம கிளாஸ்ல முன்னாடி desk ல இருக்க பையன்தான"என எண்ணி கொண்டு,
"சரி...போலாம்"என கூறிவிட்டு ராமுடன் குமார் நடந்து கல்லூரியின் முன் பகுதிக்கு வருகிறான்.
"ராம் நான் ஒன்னு கேக்கவா...?"
"என்ன..?"என ராம் குமாரை பார்க்க,
"மீரா ஏன் இன்னிக்கு வரல..."
ராம் பயத்துடன் குடையை சற்று அதிகமாக பற்றி, " இந்த உலகத்துல இல்லாத விஷயத்த பத்தி நீ ஏன் கேக்கறே"...என சற்று கோவமாக கேட்கிறான்.
பின்னால் வந்து கொண்டிருந்த நவீன் சூழ்நிலையை புரிந்து கொண்டு,
"குமார்...நீ அதை பத்தி ரொம்ப நினைக்காத...இல்லாத விஷயத்த நினைச்சு ஒரு பலனும் இல்ல...நீ இந்த மாசம் பொறுமையா இரு... நான் உனக்கு அடுத்த மாசம் சொல்லறேன்..."
"சரி...இந்த காலேஜ் ல இருவது வருசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு செத்தும் எடுத்த photo ல வந்துச்சா...?"என குமார் நவீனிடம் கேட்கிறான்.
நவீன் பெரு மூச்சுடன்..."சரி உனக்கு என்ன என்ன தெரியும் எல்லாம் சொல்லு..."என கேட்க,
"இருபது வருசத்துக்கு முன்னாடி நம்ம படிச்ச இதே கிளாஸ்ல ஒரு பொண்ணு இறந்தும் photo ல இருந்ததா சொல்றாங்க..."என குமார் நவீனிடம் சொல்லி கொண்டிருக்கும் போது அவர்கள் ஆசிரியர் ஆசைத்தம்பி வருகிறார்.
"நீங்க இங்க என்ன பேசிட்டு இருக்கீங்க...இங்க இதெல்லாம் பேச கூடாது... எல்லாரும் கிளம்பி வீட்டிற்கு போங்க..."என கூற,
வேறு வழியின்றி குமார் வீட்டிற்கு கிளம்புகிறான்.
மறுநாள்...குமார் காலேஜ் இடைவெளியில் வகுப்பிற்கு வெளியே வந்து பார்க்கிறான். காலேஜ் மொட்டை மாடியில் மீரா நிற்பதை பார்த்து, அன்று சொல்ல வந்ததை கேட்கலாம் என மாடிக்கு குமார் செல்கிறான்.
குமார் மாடிக்கு சென்று மீராவை பார்க்க, குமாரின் கைபேசி அலறுகிறது. குமார் கைபேசியை எடுத்து பேச,
"இந்த உலகத்துல இல்லாத விஷயத்த பத்தி நீ பேசவே கூடாது...அத பத்தி நீ நினைக்கவும் கூடாது...இது உன் நல்லதுக்கு மட்டும் இல்ல...நம்ம ஒட்டுமொத்த கிளாஸ் நல்லதுதான்..."என நவீன் சொல்லிவிட்டு போனை கட் செய்கிறான்.
குமார் கைபேசியை வைத்து விட்டு திரும்பி மீராவை பார்கிறான்...மீரா அங்கு இல்லை....

images (68).jpeg

(இருள் சூழும்.....)
 
Top