Administrator
Staff member
Messages
186
Reaction score
270
Points
63
அத்தியாயம் 22


அந்த குரலில் சர்வமும் அடங்கி சமைந்து நின்றுவிட்டவள் அவனை ஏறிட்ட பார்க்க,


கலங்கிய விழிகளுடன் சொல்லவென்னா துயரத்தை தாங்கி அவளை பார்த்தவன் அப்படியே மடங்கி அமர்ந்து அவளை இடையோடு கட்டி கொண்டான்.


ப்ரஷாந்தி ஏதும் பேசாமல் இன்னும் அவனது வார்த்தையின் தாக்கத்திலிருந்து வெளிவராமல் இருந்தாள்.


அவளது இடையில் முகத்தை புதைத்ததவன், "நாளுக்கு நாள் அநாதையாவே செத்து போயிடுவேனோன்ற பயம் அதிகமாகிட்டே இருக்கு டி. என்னால முடியல. போராட முடியலை. என்னை விட்டு போயிடாத…" என்றவனின் கண்ணீர் அவளது இடையை நனைத்தது.


"தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசை என்னன்னு கேட்பாங்க. ஆனால் எனக்கு நீ அந்த வாய்ப்பை கூட தரலையே…" என்றவனின் குரலில் அவளது கண்ணீர் அவனது தோளில் மோட்சமடைந்தது.


"என்னோட நிலைமைய மனநிலைய உனக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலை. உனக்கு என் வாழ்க்கையோட ஒரு பக்கம் தான் தெரியும் அநாதைன்ற அடைமொழியோட சுத்திட்டு இருந்த எனக்கு இன்னொரு அடைமொழி கூட இருந்தது. அது என்ன தெரியுமா ஏழை இல்லையில்லை எதுவுமில்லாதவன்"


"..."


"பார்ன் வித் சில்வர் ஸ்பூனான உனக்கு என்னோட நிலைமையை எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலை. பணம் அது வாழ்க்கைக்கு எவ்ளோ கஷ்டம்னு எதுவுமே தெரியாத வயசுலயே தெரிஞ்சுக்கிட்டேன். கேட்காமலே எல்லாம் கிடைச்சிட்ட உனக்கு ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் போராடுன என் வாழ்க்கை புரியாது. ஆடம்பரமான எல்லாமே உடனே அடையிற வாழ்க்கையில இருக்கவங்களுக்கு அத்தியாவசிய பொருளுக்காக போராடுறவங்களோட
மனநிலை புரியாது…"


"..."


"பிறந்ததுல இருந்தே அநாதைன்ற அடைமொழி என்ன துறத்துச்சுனா ஏழை பிச்சைக்காரன் எதுவுமில்லாதவன்ற அடைமொழி வளர வளர துறத்துச்சு. சின்ன வயசா இருக்கும் போது ரெண்டு வேளை தான் சாப்பாடு ஆசிரமத்துல கொடுப்பாங்க. மதியம் ரொம்ப பசிக்கும் ஆனால் அதை சொல்ல கூட ஆள் இல்லை. ரெண்டு வேளை தான் எல்லாரும் சாப்பிடுவாங்கன்னு நினைச்சிட்டு இருந்த எனக்கு கொஞ்சம் வளர்ந்த பிறகு தான் அது மூனு வேளைன்னும் ஆசிரமத்தோட நிதி நிலைமைன்னும் தெரிஞ்சது"


"..."

"ஒரு மனிதனோட அத்தியாவசியமான உணவு உடை இருப்பிடம் அதுக்கு போராடுற நிலைமை எவ்ளோ கொடுமைன்னு அதை அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும். நிறைய நாள் ஒரு வேளை சாப்பாடு கூட இல்லாம தண்ணியை குடிச்சிட்டு பட்டினியோட கிடந்திருக்கேன். பசி கொடுமை அறியாத வயசுல யாருக்கும் வர கூடாத ஒன்னு. யாராவது பணக்கார வீட்டு பசங்களுக்கு பிறந்த நாள்னா எங்களுக்கு சாப்பாடு போட வருவாங்க. அப்போ நல்ல சாப்பாடு சாப்பிட போறோம்னு அவ்ளோ சந்தோஷமா இருக்கும். இனிமே எப்போ இது மாதிரி கிடைக்குமோன்னு நினைச்சிட்டு அப்படி சாப்பிடுவோம்…"


"கொஞ்சம் வளர்ந்ததும் சுழ்நிலையை புரிஞ்சிக்கிட்டு பசியை கட்டுபடுத்திக்கிட்டு வாழ பழகிகிட்டேன். என்னோட வலியோட உச்சம் ஒரு நாள் நடுராத்திரி நாங்க இருந்த ஆசிரம பில்டிங் இடிஞ்சு விழுந்திடுச்சு. எல்லாரும் உயிரை கையில பிடிச்சிட்டு வெளியே ஓடி வந்துட்டோம். போக போக்கிடம் இல்லாத அநாதைங்க எங்க போக முடியும். நைட் புல்லா ரோட்ல தான் உட்கார்ந்து இருந்தோம். அதுக்கப்புறமும் பல வாரம் இருக்க இடமில்லாம சாப்பிட சாப்பாடு இல்லாம அகதி மாதிரி ரோட்ல திரிஞ்சோம்"


"..."


"அந்த செகெண்ட் பணத்தோட முக்கியத்துவம் எனக்கு தெரிஞ்சது. வாழ்க்கையில நிறைய சாம்பாதிக்கணும் பணம் பணம் பணம்னு அது மேல ஒரு வெறி வந்துச்சு. பணம் சம்பாதிக்க என்கிட்ட இருக்க ஒரே வழி நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகணும். பேய் மாதிரி படிச்சேன். ஓரளவுக்கு நல்ல மார்க்கே வாங்குனேன். அப்பவும் என்னோட துரதிர்ஷடம் என்னை விடலை. நான் படிக்க ஆசைப்பட்ட கம்பியூட்டர் இன்ஜினியரிங் எனக்கு கிடைக்கலை. அங்கேயும் பணம் கேட்டாங்க. படிக்க ஸ்காலப்ஷிக் கேட்டு நாய் மாதிரி நிறைய பேர் வீட்டு முன்னாடி கிடையா கிடைந்தேன்."


"..."


"எல்லாருமே முதல் நம்பிக்கையா பேசி பின்னாடி கையை விரிச்சுட்டாங்க. என்னடா இது பிச்சைக்காரன் மாதிரி அலைஞ்சு கூட ஆசைப்பட்டதை படிக்க முடியலையேன்னு வாழ்க்கை மேல அப்படி ஒரு வெறுப்பு. இப்படி ஒரு நிலைமைல இருக்க நீயெல்லாம் வாழ்ந்து தான் ஆகணுமா…? வாழ்ந்து என்ன செய்ய போறன்னுலாம் கேள்வி வந்துச்சு மனசுல. வாழலாமா…? வேணாமான்னு…? யோசிச்சிட்டு இருந்தப்போ தான் ஒருத்தர் கடவுள் மாதிரி வந்து எனக்கு உதவி பண்ணாரு. படிக்க பணம் கொடுத்தாரு. ஹாஸ்டல் பீஸ் காலேஜ் பிஸ் எல்லாமே கட்டுனாரு. என்னை பொருத்தவரை அவர் அப்போதைக்கு தெய்வமா தெரிஞ்சாரு. பணம் இருக்கிற எத்தனை பேருக்கு செய்ய மனசு வரும். அவருக்கு இருந்துச்சு…"


"..."


"அந்த செகெண்ட் புதுசா ஒரு நம்பிக்கை பிறந்துச்சு. வாழ்க்கை எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்குனு தோணுச்சு. நல்லா படிச்சேன். அந்த பீஸ் எல்லாம் போக புக் வாங்க கிளாஸ் ஃபண்ட், என்னோட சொந்த செலவுக்கு பணம் தேவைப்பட்டது. அலைஞ்சு திரிஞ்சு ஒரு ஹோட்டல்ல பார்ட் டைம் சேர்ந்து சம்பாதிச்சுக்கிட்டே படிச்சேன். படிச்சு முடிச்சிட்டு லோன் வாங்கி பிஸ்னஸ் ஆரம்பிக்கணும்னு நிறைய கனவு வச்சிருந்தேன். அதை நினைவாக்கிக்க வாழ்க்கையோட கொஞ்ச நேரத்தை கூட வீணாக்காம படிச்சிட்டு இருந்தேன். அப்போ தான் உன்னை பார்த்தேன். பார்த்ததும் உன்னோட க்யூட்னஸ் அந்த இன்னெசென்ட் பேஸ் எல்லாமே எனக்கு பிடிச்சது"


"..."


"உன்னை பார்த்த பிறகு தான் ஒரு மனுசனுக்கு இருக்க எல்லா சாதாரண உணர்ச்சியும் எனக்கு இருக்குதுன்னு புரிஞ்சது. அது வரைக்கும் ஒரு இயந்திரம் போல வாழ்க்கையில ஒடிட்டு இருந்த நான் ஒரு நொடி நின்னு நிதானமா உன்னை ரசிச்சேன். ஆனால் நீ என்னை கண்டுக்காம போன பிறகு தான் நிதர்சனம் புத்திக்கு உரைச்சது. நிலா அழகா இருந்தா அதை ரசிக்க மட்டும் தான் முடியும் அதை கையில எல்லாம் பிடிக்க முடியாது. அது மாதிரி நான் உன்னை எட்ட நின்னு ரசிக்கிற தூரத்துல தான் இருக்கேன்.‌ உன் மேல ஆசைப்படலாம் கூடாது. அதுக்கு எனக்கு எந்த தகுதியும் இல்லைன்னு புரிஞ்சது. கஷ்டமா தான் இருந்தது. ஆனால் சாப்பாட்டுக்கே வழியில்லாத உனக்கு படிக்க வாய்ப்பு கிடைச்சதே பெருசு. இதுக்கெல்லாம் ஆசை பட ஒரு தகுதியும் இல்லைன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். இங்கிலிஷ்ல ஒரு பழமொழி இருக்கே, 'பெக்கர்ஸ் ஆர் நாட் சூசர்ஸ்' அதுக்கு அர்த்தம் எனக்கு அப்போ தான் உரைச்சது"


"..."


"காதல் ஒரு இயல்பான மனித உணர்வு. ஆனால் அது கூட பணமில்லாத ஒரே காரணத்தினால மறுக்கப்பட்றது எவ்வளவு கொடுமையான விஷயம். பணம் ஒரு உயிரில்லாத பொருள். அது உயிர் உள்ள ஜீவனோட வாழ்க்கையில எப்படி விளையாடுது. மனித உணர்வுகள் எல்லாருக்கும் பொதுவானது தான். ஆனால் பணமிருக்கவங்களுக்கு தான் அதை நிறைவேத்திக்கிற வாய்ப்பு இருக்கும் போல…" என்றவனின் குரலில் இருந்த வேதனை அவளை உலுக்க செய்திருந்தது.


"என் ஆசையெல்லாம் மனசுக்குள்ள புதைச்சுக்கிட்டு இயந்திர தனமா வாழ கத்துக்கிட்டேன்.‌ இருந்தும் அப்பப்போ கிடைக்கிற உன்னோட தரிசனம் பாலைவனத்துல கிடைக்கிற தண்ணீர் மாதிரி உள்ளுக்குள்ள சொல்ல முடியாத சந்தோஷம். நீ என் வாழ்க்கைக்குள்ள வர எந்த வாய்ப்பும் இல்லைனு நினைச்சிட்டு இருந்த என் நினைப்பை உன்னோட வரவு பொய்யாக்கிடுச்சு. கூடாரத்துல இருந்த எனக்கு கோபுரத்துல இருந்த நீ கிடைச்ச எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா. என் வாழ்க்கையிலே நான் அதிகமா சந்தோஷப்பட்டது நீ வந்தப்போ தான்…"


"..."


"என்னோட விருப்பமில்லாம அனுமதியில்லாம வந்திட்டிருந்த மாற்றத்துக்கு நடுவுல எனக்கு பிடிச்ச மாதிரி அழகான மாற்றம். நான்னு மட்டுமே சிந்திச்சிட்டிருந்த வாழ்க்கையில நாமன்னு புதுசா யோசிக்க ஆர்ம்பிச்சேன். நான் பணம் சம்பாதிச்சு பெரிய ஆளா வரணும்னு நினைச்சிட்டு இருந்த நினைப்பு உனக்கு ஒரு வசதியான வாழ்க்கையை கொடுக்கணும்னு மாறிச்சு. தென் இன்னும் ரொம்ப வேகமாக வாழ்க்கையில ஓட ஆரம்பிச்சேன். எனக்குன்னு யாரு இருக்கான்னு ஓடிட்ட இருந்த வாழ்க்கையில முதல் முறையா எனக்காக ஒரு ஜீவன் இருக்குனு சந்தோஷமா வாழ ஆரம்பிச்சேன். நிறைய கனவு. நல்லா படிச்சு முடிச்சிட்டு லோன் வாங்கி பிஸ்னஸ் ஆரம்பிச்சு பெரிய இடத்துக்கு வந்து உன்னை உன் வீட்ல பாத்துக்கிறதை விட நல்லா பாத்துக்கணும்னு ஆசைப்பட்டேன்"


"..."


"ஆனால் அவ்ளோ பெரிய கனவு ஆசையெல்லாம் வளர்த்துக்கிற‌ அளவுக்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை போல. காலேஜ் முடிஞ்சதும் கேம்பஸ்ல வேலைக்கு சேர்ந்திட்டு சேர்த்து வச்சிருந்த பணத்தை வச்சு பிளாட்டை ரென்ட்க்கு எடுத்து அங்க இருந்து வேலைக்கு போகிட்டே பிஸ்னஸ்க்காக லோனுக்கு அலைஞ்சிட்டு இருந்தேன்"


"..."


"அப்போ தான் திடீர்னு நீ உன் வீட்டுல சண்டை போட்டு என்னை தேடி வந்த. உனக்கு எவ்ளோ நம்பிக்கை இருந்தா அந்த நைட் நேரத்துல எல்லாரையும் உதறிட்டு நான் மட்டும் போதும்னு என்னை தேடி வந்திருப்ப. அந்த விநாடி என்னோட சந்தோஷத்தை வடிக்க வார்த்தையே கிடைக்கலை. வானத்தில பறந்திட்டு இருந்த நான் திடீர்னு சிறகெல்லாம் உடைஞ்சு கீழ விழுந்த பிறகு தான் நிதர்சனம் புரிஞ்சது. அந்த நேரம் என்கிட்ட எதுவுமே இல்லை. என் வாழ்க்கையில இன்னும் எதுவும் மாறலை. உங்க வீட்ல உனக்கு குடுத்த வாழ்க்கையில ஒரு கால்வாசி கூட என்னால கொடுக்க முடியாதுன்னு தெரிஞ்சது…"


"..."


"இருக்கதுலே ரொம்ப கொடுமையான விஷயம் நம்மல நம்பி வந்தவங்களை காப்பாத்த முடியாம போறது. நம்ம மேல வச்ச நேசத்தை நம்பி ஆசையா நம்மள தேடி வர்றவங்களை ஏத்துக்க முடியாத சூழ்நிலை ரொம்ப கொடூரமானது. உன்னை அப்போ நிராகரிக்க வச்ச என் சூழ்நிலையை அறவே வெறுத்தேன். உன்னை என் கூடவே வச்சிக்கணும்னு வார்த்தையால அடங்காத ஆசை. ஆனால் என்னோட ஏழ்மை நிலை அப்படி என் ஆசையை நிரைவேத்திக்க தடுத்தது. ஆனாலும் நீ ரொம்ப உறுதியா நின்னப்போ அவளுக்கே உன் மேல இவ்ளோ நம்பிக்கை இருக்கு. உனக்கு இல்லையான்னு கேட்டு தைரியமாக உன்னோட வாழ்க்கையை இணைச்சிக்கிட்டேன்…"


"..."


"ஆனால் அதுக்குப்புறம் தான் என் வாழ்க்கையோட போராட்டமே ஆரம்பிச்சது. இது வரைக்கும் நீ பார்த்தது ஒன்னுமில்லை. இனிமே நான் நீ பார்க்க போறேன்னு விதி சிரிச்சிருக்கும் போல. உன்னை நல்லா பாத்துக்கணும்னு அப்படி ஒரு ஓட்டம் வாழ்க்கையில. ஆனால் நாலு பேர் சேர்ந்து வந்தா உட்கார சேர் கூட இல்லைன்னு புரிஞ்சப்போ தான் நிதர்சனம் மூஞ்சில அறைஞ்ச மாதிரி இருந்துச்சு. இருந்தும் கடன் வாங்கியாவது வீட்ல ஃப்ரிட்ஜ் அண்ட் மத்த பொருள் எல்லாம் வாங்கி வச்சேன். கல்யாணத்துக்கு செலவும் பண்ணேன். ஆனால் அந்த கடனை அடைக்கவே எனக்கு பல மாசம் ஆகும்னு தெரிஞ்சதும் ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்."

"..."


"இருந்தும் நம்பிக்கையோட லோன் கேட்டு நாயா பேங் பேங்க்கா அலைஞ்சேன். ஆனால் பேருக்கு கூட சொல்லிக்க எதுவுமில்லாதவனுக்கு லோன் கொடுக்க எந்த பேங்க்கும் முன் வரலை. நான் நினைச்ச விஷயத்தை அவ்ளோ ஈசியா அடைய முடியாதுன்னு புரிஞ்சதும் மனசுக்குள்ள பெரிய போராட்டம். மன உலைச்சல்.‌ நம்மள நம்பி வந்தவளை நல்லா பாத்துக்க முடியலையேன்னு குற்றவுணர்ச்சி"


"உலகத்திலே மிகப்பெரிய தண்டனை குற்றவுணர்ச்சின்னு கேள்விப்படிருந்த நான் அப்போ தான் உணர்ந்தேன். ஒவ்வொரு விஷயத்திலயும் உணர்ந்தேன். பென்ஸ் கார்ல ஏசில போய்ட்டு வந்திருந்த பஸ்ல கூட்டத்துல நசுங்கி வெயில்ல நடந்து வர்றதை பார்க்கும் போதும. ஏசியிலயே பிறந்து வளர்ந்த நீ பேன் காத்துல கொசு கடியில படுத்து தூங்கும் போதும். பல ஆயிரத்துல ட்ரெஸ் நினைச்ச நேரம் சினிமா பீச்னு வாழ்ந்திட்ட இருந்த நீ அதில பத்து பர்சண்ட் கூட இல்லாத பணத்துல ட்ரெஸ் வாங்கி போடும் போதும்.""பங்களா மாதிரி வீட்ல இருந்திட்டு வெறும் சிங்கில் பெட் ரூம் அபார்ட்மெண்ட்ல இருந்த போதும். காஃபி கப்பை கூட எடுத்து வைக்க வொர்க்கர்ஸ் இருக்கிற ஒரு லக்ஷரியஸ் லைஃப் வாழந்திட்டு இருந்த நீ காலையில ஐஞ்சு மணிக்கே எழுந்து சமையல் முதற் கொண்டு எல்லா வேலையையும் பார்க்கும் போதும்… இன்னும் சொல்லிட்டே போகலாம். நீ எனக்காக அஜ்ஜெஸ்ட் பண்ணிட்டு போன ஒவ்வொரு விஷயத்திலும் என் குற்றவுணர்ச்சி அதிகமாகி கொல்லாம கொன்னுச்சு…""..."


"மனசு முழுக்க வேதனை குற்றவுணர்ச்சியோட உன் முன்னால சந்தோஷமா நடிக்க அவ்வளவு கஷ்டமா இருந்திச்சு. என்னால உனக்கு நல்ல வாழ்க்கை கொடுக்க முடியாது. போய்டு என்னை விட்டு போய்டுன்னு உன்கிட்ட கத்தணும்னு போல ஒரு சமயம் தோணும். ஆனால் கத்த முடியாது. இயலாமை என்னோட இயலாமை எல்லாம் சேர்ந்து ஒரு பைத்தியம் பிடிக்காத குறை தான். கோபுரத்துல வாழ்ந்திட்டு இருந்தவளை அழைச்சிட்டு வந்து இப்படி குடிசையில வாழ வச்சிட்டியே. உன்னோட பிச்சக்கார வாழ்க்கையை அவளுக்கும் கொடுத்திட்டியேன்னு என் மேலயே எனக்கு கோபம். முகத்தில சப்பு சப்புன்னு அறைஞ்சுக்கலாம் போல ஒரு கோபம். உனக்குலாம் எதுக்குடா காதல். ஒரு காதல் வாழ வைக்கும்.‌ உன்னோட காதல் இவளை இப்படி கஷ்டப்படுத்துதேன்னு மனசுக்குள்ள எப்போதுமே யாரோ கத்துற மாதிரி இருக்கும்."


"..."


"என்னால இங்க இருந்து கஷ்டப்பட முடியலை. எனக்கு அது வேணும் இது வேணும்னு நீ சண்டை போட்டிருந்தா கூட என் மனசு கொஞ்சம் சமன்பட்டிருக்குமோ என்னவோ. ஆனால் நீ எதையும் கேட்காம அட்ஜஸ்ட் பண்ணிட்டு போனதுல என் குற்றவுணர்ச்சி உச்சப்ட்சத்துக்கு போயிடுச்சு.‌ இருபத்தி நாலு மணி நேரமும் இதே நினைப்பு தான். குற்றவுணர்ச்சி குற்றவுணர்ச்சி குற்றவுணர்ச்சி அது மட்டும் தான் என்னை வதைச்சிட்டு இருந்திச்சு"


"..."


"அப்போ தான் நீ நம்ம குழந்தையோட வரவை பத்தி சொன்ன.‌ அதை கேட்ட விநாடி சந்தோஷத்துக்கு பதிலா பயம் பயம் தான் வந்திச்சு. உன்னை நம்பி வந்த பொண்ணையே உன்னால ஒழுங்கா பாத்துக்க முடியலை. உனக்கு வர்ற போற குழந்தையை எப்படி பாத்துக்க முடியும்னு மனசுக்குள்ள ஒரு கேள்வி பூதகரமா முளைச்சது. வேண்டாம் என்னோட பிச்சைகார வாழ்க்கை என் பிள்ளைக்கு வேண்டாம். என்னால அவனுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்க முடியாது. என்னை மாதிரியே என் பிள்ளையும் வாழ்க்கையில சின்ன சின்ன விஷயத்துக்கும் போராட வேணாம். அதீத பயம் தான் என்னை வார்த்தையை சொல்ல வச்சது. அந்த ஒரு வார்த்தையை சொல்லி முடிக்கிறதுக்குள்ள நான் கோடி முறை செத்துட்டேன்.‌ என் வார்த்தையை கேட்டப்போ அந்த கணம் உன் கலங்குன கண்ணை பார்த்து என்னையோ நான் உட்சபட்சமா வெறுத்தேன். கண்கலங்காம பார்த்துக்கணும்னு நினைச்ச என்னாலயே உன் கண்ணுல கண்ணீர் வேதனை."


"..."


"போயிடு என்னை விட்டு என்னால நம்ம குழந்தையை நல்லா பார்த்துக்க முடியாது. இந்த ஒன்னுமில்லாதவனோட உன் வாழ்க்கை முடிஞ்சு போயிட வேணாம்னு வெறி பிடிச்ச மாதிரி கத்த தோணுச்சு. உன்னை அந்த நிலைமையில பார்க்க முடியலை. அன்னைக்கு நைட் எனக்கு ரொம்ப கொடுமையான இரவா இருந்திச்சு. கருவுல வளர்ற குழந்தையை வரவேற்க கூட தகுதியில்லாத நான்லாம் என்ன அப்பா. உறவுகள் வேணும்னு கடவுள் கிட்ட மன்றாடிட்டு அவர் உறவுகளை கொடுக்கும் போது அவங்களை காப்பாத்த முடியாத கோழையா நிக்கிறேன். இதுனால தான் கடவுள் எனக்கு யாரையும் குடுக்காம அநாதையாவே வளரவிட்டாரு போலன்னு கூட தோணுச்சு"


"..."


"லக்ஷி ஆன்டி நீ கீழ விழுந்து உனக்கு அபார்ட் ஆகிருச்சுன்னு சொன்னப்ப உயிரை கையில பிடிச்சுக்கிட்டு ஓடி வந்தேன். ஹாஸ்பிட்டல்ல உன்னை பார்த்த நொடி நான் முழுசா செத்த போயிட்டேன். உனக்குலாம் எதுக்குடா குடும்பம்னு விதி என்னை பார்த்து சிரிச்ச மாதிரி இருந்தது. நான் வேணாம்னு சொன்னதுனால தான் நம்ம குழந்தை நம்மள விட்டு போயிடுச்சுன்னு புதுசா ஒரு குற்றவுணர்ச்சி தலைதூக்குச்சே அப்போ ஆயிரம் பாகமா‌ உடைஞ்சு போயிட்டேன். நான் நினைச்ச மாதிரியே நீயும் நம்ம குழந்தை இறப்புக்கு நான் தான் காரணம்னு சொல்லவும் மொத்தமா உடைஞ்சு எதுவுமில்லாம போயிட்டேன். என்னோட கையாலாகத தனம் தான் எல்லாத்துக்கும் காரணம். நீ என்னை கொலைகாரன்னு சொல்லும் போது ஊசிய வச்சு நெஞ்சுல குத்துன மாதிரி ஒரு வலி. இல்லை நான் கொல்லலை. நான் கொல்லணும்னு நினைக்கலை. என்னை மன்னிச்சிடுன்னு உன்கிட்ட மடியில விழுந்து ஆறுதல் தேடணும்னு மனசு கிடந்து அடிச்சுக்கிச்சு. ஆனால் நீ என்னை கிட்டவே விடலை. நான் ஆசைப்பட்ட வார்த்தை போயிடு என் வாழ்க்கையை விட்டு போயிடுன்னு நீ சொன்ன ஆனால் கேட்ட நான் தான் மரிச்ச போயிட்டேன்…"


"தூக்கு தண்டனை கைதிக்கு கூட கடைசி ஆசையை கேட்பாங்க.‌ ஆனால் நீ அந்த வாய்ப்பை கூட எனக்கு கொடுக்கலை. உன்னோட வாழ்க்கை அவ்ளோ தான் அநாதையாவே செத்துப்போயிடுனு ஒரு குரல் உள்ளுக்குள்ள கத்திட்டே இருந்திச்சு. வாழ்க்கை முன்னை இருந்ததை விட ரொம்ப வஞ்சிக்கப்பட்டதா மாறிடுச்சு. நைட் கண்ணை மூடுனா தூக்கம் வரமாட்டுது. நம்ம குழந்தை கனவுல வந்து ஏன்பா என்னை கொலை பண்ணேன்னு கேள்வி கேட்கிது கண்ணை மூடவே பயமாயிருக்கு டி. அந்த இருட்டுல குற்றவுணர்ச்சியோடவே தொலைஞ்சு போயிடுவேனோன்னு பயமா இருக்கு.‌ என்னை காப்பாத்திடு ப்ரஷாந்தி"


"..."


"நீ சொன்ன மாதிரி அநாதை ஆசிரமத்துல யாருமில்லாம அநாதையாவே வாழ்ந்திட்டு இருந்ததால உறவுகளோட அருமை எனக்கு தெரியாம போயிடுச்சு போல…" என்றவன் மடங்கி அமர்ந்துவிட்டான்.


அவனது இறுதி வார்த்தையில் சுக்கு சுக்காய உடைந்தவள் மடங்கி அமர்ந்து கதறி அழ தொடங்கியிருந்தாள்.


தான் கோபத்தில் கூறிய வார்த்தைகள் ஒருவனை இன்றுவரை உயிரோட வதைத்து கொண்டிருப்பதை உணர்ந்தவள் விக்கித்து போனாள்.

என்ன தான் ஒருவர் உன்னுடனே எப்போதும் இருந்தாலும் நீயறிந்த பிம்பத்தை தாண்டி அவர்களுக்குள்ளாக தனியே பல மனப்போராட்டங்கள், உணர்ச்சிகள், எண்ணங்கள் நிரம்பிய உலகம் இருப்பதை அவர்களாகவே கூறும் வரை உனக்கு தெரிய போவதில்லை…


தொடரும்…

இவள் மீரா க்ரிஷ் ♥️♥️ 
Active member
Messages
216
Reaction score
159
Points
43
ஹரி ரொம்ப பாவம் எவ்ளோ கஷ்டம் அவனுக்கு
 
Active member
Messages
178
Reaction score
105
Points
43
Hari ne romba pavom da evalayu kastam kekkavaay kastama eruku yarum aanathai la illa ne feel pannatha unnoda prashanthi unkuda tha erupa paru vali anbathu oru vairthai la solla mudiyathu😭😭😭
 
Administrator
Staff member
Messages
186
Reaction score
270
Points
63
Hari ne romba pavom da evalayu kastam kekkavaay kastama eruku yarum aanathai la illa ne feel pannatha unnoda prashanthi unkuda tha erupa paru vali anbathu oru vairthai la solla mudiyathu😭😭😭
Thank you so much dr😍😍😍
 
Top