கவிதை - 02

New member
Messages
5
Reaction score
5
Points
3
கருவில் உண்டான குழந்தை கதறி அழுகின்றது இந்த நாட்டினிலே
மென்மையான உன் விரல்களிலே
மெய் மறந்து போனேன் உன் சிரிப்பினிலே
நீ முதல் முதலில் பேசிய சொற்களிலே
ஆசையை தூண்டும் உன் அழகினிலே
ஆண்டவன் படைத்த படைப்பினிலே
கருவில் உன்னை சுமந்த நேரத்திலே
எட்டி உதைத்த உன் கால் வலியினிலே
உன்னை முத்தமிட காத்திருக்கும் என் உதடுகள் ஈரம் காய்ந்து போகுமா

நீ நடைப்பயிலும் நேரத்தில் பல தடைகள் உன்னை தடுக்குமோ

நீ கதறி அழுகிற நேரத்தில் தாயின் முத்தம் உன் கண்ணீரை பொன் சிரிப்பாக மாற்றிடுமோ

உன்னை பெற்ற தாயின் இதயத்தை மறு இதயமாக இறைவன் உனக்காக படைத்திருப்பாரோ
 
Top