• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

எபிலாக்

Administrator
Staff member
Messages
499
Reaction score
706
Points
93
எபிலாக்


ஆர்யாவிற்கும் மீராவிற்கும் திருமணம். தியா ஐந்து மாத கர்ப்பமாக இருக்க அதி தான் ஜுஸ் டம்பரை தூக்கிக் கொண்டு அவள் பின்பே கெஞ்சிக் கொண்டு சுத்தினான்.

எல்லோரும் அவனை கண்டு சிரிக்க, "ஏதுக்கு சிரிக்கிறீங்க. என் பொண்டாட்டியும் பிள்ளையும் நான் தான் ஹெல்தியா பார்த்துக்கனும்" என்றவன் மீண்டும் அவள் பின்பு சென்றான்.

அதை பார்த்த புவனாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி. இப்போது எல்லாம் புவனா எல்லா விஷேஷங்களுக்கும் செல்கிறார். முன்பு போல் ஒதுங்குவதில்லை. மீண்டும் பழைய புவனாவை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டிருந்தார்.

மருதுவிடம் நிறைய பேசினார். அவர்க்கும் புவனாவின் பேச்சு நிறைவை கொடுத்தது. மருது, வேணி, புவனா, பானுமதி, சீனிவாசன் எல்லோருமே வீட்டில் அமர்ந்து நிறைய பகிராத விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். வீடு ஏப்போதுமே கலகலப்பாக இருந்தது.

மீரா,ஆர்யா திருமணம் சிறப்பாக நடைபெற்றது.


சில வருடங்களுக்கு பின்பு,

புவனா ஒரு குழந்தையை தூக்கி உணவு ஊட்டிக் கொண்டிருக்க பானுமதி மற்றொரு குழந்தையை கையில் வைத்திருந்தார்.

ஆம் தியாவிற்கு இரட்டை குழந்தை. அதியால் மூன்று குழந்தைகளை கவனிக்க முடியாமல் டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வந்து இங்கேயே செட்டிலாகி விட்டான். பானுமதியும் புவனாவும் ஆளுக்கு ஒரு குழந்தையை பார்த்துக் கொள்ள அவனது பெரிய குழந்தையை மட்டும் தற்போது அவன் கவனித்து கொண்டிருக்கிறான்.

மீரா நிறைமாத கர்ப்பமாக இருக்க பிரசவத்திற்காக தன் தாய் வீட்டிற்கு வர ஆர்யாவும் அவளை பிரிந்திருக்க முடியாமல் அவள் பின்பே அங்கு வந்து விட்டான்.

வேணி அவளை அதட்டி உணவு ஊட்டி முடிக்க ஆர்யா அவளை தங்களின் அறைக்கு அழைத்து சென்று கால்களை பிடித்து விட்டு கொண்டிருந்தான்.

அங்கு வந்த தியா ஆர்யாவை பார்த்து சிரிக்க, "எதுக்குடி சிரிக்கிற. என் பொண்டாட்டிக்கு தான கால் பிடிச்சு விடுறேன்" என்றான் பெருமையாக.

"இல்லடா, இங்க ஆர்யா ஆர்யானு ஒரு போலீஸ் ஆபீசர் இருந்தார். நல்லா விறைப்பா இருப்பார். அவரை தான் தேடிக்கிட்டு இருக்கேன்" என்று தேடுவது போல் பாவனை செய்ய, "அடிங்ங்ங்க..." என அவன் எழுந்து கொள்ள வேகமாக வெளியே ஓடி வந்து விட்டாள்.

அவள் ஒடி வருவதை பார்த்த புவனா, "ஏன்டி, பிள்ளை அழுதுட்டு இருக்கு. நீ ஓடி பிடிச்சு விளையாடிட்டு இருக்க" என கடிந்து கொள்ள அவசரமாக குழந்தையை தூக்கி சமாதானம் செய்ய, சுடு தண்ணீர் எடுக்க வந்த ஆர்யா அவளை பார்த்து சிரிக்க அவனை முறைத்தாள்.


எல்லோரும் உறங்கி விட குழந்தைகளை உறங்க வைத்தவள் அதிக்காக காத்திருந்தாள். இரவில் தாமதமாக வந்தவன், "தூங்க வேண்டியது தான, எதுக்கு இவ்வளவு நேரம் முழிச்சிருக்க. அப்புறம் உடம்பு கெட்டு போயிடும்" என கடிந்து கொள்ள அவனை புன்னகையுடன் அணைத்து கொண்டாளே தவிர பதில் கூறவில்லை.

அவளை பார்த்து புன்னகைத்தவன் அவளது நெற்றியில் இதழ் பதித்து விலக்கி விட்டு ப்ரெஷ்ஷாகி சாப்பிட அமர்ந்தான்.


அவனுக்கு உணவு பரிமாறியவள் எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டு வர அதி அமர்ந்து உறங்கும் குழந்தைகளை இரசித்துக் கொண்டிருந்தான்.

உள்ளே நுழைந்த தியா அவனது மடியில் படுத்துக் கொள்ள ஆதரவாக அவளது தலையை வருடினான்.

சிறிது நேரத்தில் அவன் உறங்குவதற்காக படுத்து விட அவனது மார்பில் தலை வைத்து அவனை அணைத்து படுத்துக் கொண்டவள் அவனிடம் பேசிக் கொண்டேயிருந்தாள்.

"எதுக்கு முழிச்சுருக்கனு கேட்டீங்கல்ல. உங்ககிட்ட பேசனும். இப்ப எல்லாம் நீங்க என் கூட டைம் ஸ்பென் பண்ணவே மாட்றீங்க. காலையில நான் முழிக்கிறதுக்குள்ள கிளம்பிடுறது. அப்புறம் நான் தூங்குன பின்னாடி வரது" என குறைப்பட்டு கொள்ள, "தியா, ப்ளீஸ் தூக்கம் வருது. காலையில சீக்கிரம் எழுந்து வேலைக்கு போகனும்" என்றான்.

எம்பி அவனது கன்னத்தை வலிக்குமாறு கடித்தாள்.

"ஸ்ஸ்..ஆஆ... வலிக்குதுடி" என கன்னத்தை தடவ, "நான் எவ்வளவு பீல் பண்ணீ பேசிட்டு இருக்கேன். ஒரு ரெண்டு நாள் லீவ் போட்டு என்னை வெளியில அழைச்சுட்டு போகலாம்னு நினைக்காம திரும்பியும் வேலைக்கு போறத பத்தியே பேசுறீங்க" என அவனிடம் சண்டைக்கு கிளம்பினாள்.

நேரத்தை பார்த்தவன், 'இவளை சும்மா விட்டா பேசிட்டே தான் இருப்பா. என்ன பண்றேனு பார்' என நினைத்தவன் பேசிக் கொண்டிருந்தவளின் இதழை சிறை செய்தான்.



முற்றும்....

 
Well-known member
Messages
509
Reaction score
368
Points
63
Superrrrrrrrr superrrrrrrrr
Happy ending 😀😀😀
Adhi dhiya
Aarya Meera va romba miss pannuven
 
Active member
Messages
104
Reaction score
65
Points
28
Adi pavam moonu pappa samalika kasta padran athuvum indha periya pappa than over attagasam
 
Top