• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
633
Reaction score
2,117
Points
93
எண்ணம் – 19 ❤️

மலர்விழிக்கு கல்லூரி மீண்டும் ஆரம்பமாகிவிட, அவளுடைய நாட்கள் படிப்பில் தொலைந்தன. தனாவிற்கும் வேலை பளு கொஞ்சம் அதிகம்தான்.

ஆனால், அதற்காகவெல்லாம் மனைவியை கொஞ்சுவதை அவன் விடவில்லை. அவ்வப்போது அவள் சிலிர்த்துக் கொள்வதும், இவன் சமாதானம் செய்வதும், மிக மிக அரிதாக தனா முறுக்கிக் கொள்வதும் மலர் சமாதானம் செய்வதும் என நாட்கள் அவர்களுக்கு சின்ன சின்ன ஊடலும் கூடலுமாய் நகர்ந்து கொண்டிருந்தன.

ஒரு வார இறுதி தனஞ்செயன் வீட்டிலும் மறுவார இறுதி மலர் வீட்டிலும் என பங்குப் பிரித்து இரண்டு பெற்றவர்களையும் இருவரும் சரிசமமாய் பார்த்துக் கொண்டனர். அது மனைவியின் விருப்பமும், கணவன் ஆசையும் கூட‌.

திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் முடிந்திருக்க, மகளுக்கு தாலி பிரித்துக் கோர்க்க வேண்டும் என லோகநாயகியும் சாரதியும் தனாவின் பெற்றோரிடம் பேசினர்.

லீலாவும், “நானும் சொல்லணும்னு நினைச்சேன் லோகு. இந்த மாசத்துல நல்ல முகூர்த்தமா பார்த்துப் பண்ணிடலாம்...” என தன் மனதில் இருப்பதை உரைக்க, இருவீட்டுப் பெற்றவர்களும் சேர்ந்து வரும் வாரத்திலே தாலி பிரித்துக் கோர்த்துவிடலாம் என முடிவு செய்திருந்தனர்.

லோகநாயகிதான் முதலிலே அழைத்து மலர்விழியிடம் விஷயத்தைக் கூற, எதுவும் எதிர்ததெல்லாம் அவள் கூறவில்லை. “சரி மா, உங்க இஷ்டப்படி பண்ணுங்க. பார்த்து, ரொம்ப செலவு பண்ணாதீங்க. சிம்பிளா செஞ்சாலே போதும்!” என்றதோடு நிறுத்திக் கொண்டாள். காரணம் தனஞ்செயன்தான். லீலாவதி ஏற்கனவே அவனிடம் இதைப் பற்றி பேசியிருக்க, மலர்விழியிடம் உரைத்திருந்தான்.

“விழி, அத்தை கால் பண்ணி அம்மாகிட்டே பேசுனாங்களாம். உனக்கு டேட் ஓகே வா? லீவ் கிடைக்குமா?” என மலரிடம் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொண்டவன், “அவங்க எதுவும் பேசுனா, பதிலுக்கு பதில் பேசாத விழி. அவங்க ஆசைக்காகப் பண்றாங்க. எடுத்ததும், எதுக்கு, ஏன்னு கேட்டு அத்தையை கஷ்டப்படுத்தக் கூடாது. அம்மாவேவா இருந்தாலும், அவங்ககிட்ட நீ ரொம்ப ஹார்ஷா நடந்துக்கிற மா. எதுனாலும் பொறுமையா ஹேண்டில் பண்ணப் பழகு. அப்படி முடியலைன்னா என்கிட்டே சொல்லு. நான் பார்த்துக்குறேன்!” என்று அறிவுருத்தியிருந்தான். அப்போது தனா கூறியதற்கு முறைத்து சண்டையிட்டு என கணவனைப் பாடாய்ப்படுத்தி இருந்தாலும், ஏனோ அவன் கூறிய வார்த்தையை இஷ்டமும் கஷ்டமுமாய் பின்பற்றியிருந்தாள். அதை கவனித்த தனாவுக்குப் புன்னகை கூடப் பிறந்தது.

சாரதியும் லோகநாயகியும் ஒரு நாள் சென்று நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் வாங்கி வந்திருந்தனர். அந்த வார வெள்ளிக்கிழமை தாலியைப் பிரித்துக் கோர்ப்பதாய் இருக்க, வியாழன் அன்றே தனாவும் விழியும் இந்த வீட்டிற்கு வந்துவிட்டனர்.

“நாளைக்கு மட்டும் கொஞ்சம் சீக்கிரம் எழுந்திரி டா விழி. காலைல 8 டூ 9 நல்ல நேரம். அதுக்குள்ள தாலியைப் பிரிச்சு கோர்த்துடலாம்...” லீலாவதி முதல்நாள் இரவு கூறியிருந்தார்.

அதன்படியே காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்து முடித்த விழி, சேலையைக் கழிவறைக்குள்ளே கட்ட முடியாமல் திணறி, வெளியே எட்டிப் பார்க்க, தனா நல்ல உறக்கத்திலிருந்தான்.

கழிவறையிலிருந்து வெளியே வந்தவள், பொறுமையாய் அழகாய் மடிப்பெடுத்து இடுப்பில் சொருகினாள். பின்னர் முந்தானையின் மடிப்பை கசங்காது தோளில் போட்டு ஊக்கைக் குத்தி நிமிர, தனா குறும்பாய் அவளைத்தான் பார்த்திருந்தான். ‘எப்போது இவர் எழுந்தார்?’ என திகைப்புடன் அவனை நோக்கினாள் மலர்விழி.

தலைக்கு குளித்து தலையை ஒரு துண்டில் அடக்கி கொண்டிருந்தவள் சேலை கட்டுவதைத்தான் சத்தம் வராது ரசித்துக் கொண்டிருந்தான் தனஞ்செயன்.

“காலைலயே இவ்வளோ அழகா பொண்டாட்டியோட தரிசனம். கொடுத்து வச்சவன் டா நீ...” தனக்குத் தானே கூறி சிரிப்பை அடக்க முயன்றவனை பார்த்து மனைவி முறைத்தாள்.

“எப்போ எழுந்தீங்க?” இவள் கையை அவன் முன்னே நீட்டி அதட்டலாய்க் கேட்க, தனாவின் இமை நீண்ட புன்னகை பெரிதானது.

“நீ எழும்போதே எழுந்திட்டேன்...” சாவகாசமாகக் கூறி எழுந்து சோம்பல் முறித்தவனின் பார்வை முழுவதும் மனைவியிடம்தான். அத்தனை நேர்த்தியாய் புடவையைக் கட்டியிருந்தவளின் குளித்த முகம் பளிச்சென மின்னியது. அழகாய் மிளிர்ந்தாள் விழி.

ரசனையாய் தன்னை நோக்குபவனை முறைக்க முயன்று தோற்றவள், “போய் குளிச்சிட்டு வாங்க...” என்றாள்.

“ஹம்ம்... குளிக்கலாமே!” என்றவன் கையை லேசாய் தேய்த்துக்கொண்டு அருகில் வரவும், அவனின் எண்ணம் உணர்ந்தவள், “சேட்டை ஓவராகிடுச்சு உங்களுக்கு...” என மலர் உடையைக் கொடுத்து கழிவறைக்குள் அவனை தள்ளிவிட, சிரிப்புடன் தனா தலையை அசைத்தான்.

அவன் குளித்து வருவதற்குள் மலர் தலையை நன்றாக காய வைத்திருந்தாள். கதவு தட்டும் ஓசைக் கேட்க, எழுந்து போய் திறக்க, லீலாவதிதான் நின்றிருந்தார்.

“குளிச்சிட்டீயா மலர். நான் எழுப்பலாம்னு வந்தேன்!” என்றவர் கையிலிருந்த சில நகைப் பெட்டிகளை அவளிடம் கொடுத்தார்.

“சீக்கிரம் தலையைக் காய வச்சு வாரீட்டு, இந்த நகையெல்லாம் போட்டுக்கோ மலர்!” என அவர் நகர, கதவை சாத்திவிட்டு அந்த நகையைப் பார்த்தவாறே திரும்ப, தனா குளித்து வெளியே வந்தான். அவனின் பார்வை மனைவியிடம்தான். இத்தனை நேரம் முகத்திலிருந்த புன்னகையும் மினுமினுப்பும் குறைந்திருப்பதை அவனின் கண்கள் அளவெடுத்தன. கையிலிருந்த நகையை அவள் வெறிக்க, இவன் தலையை துவட்டிவிட்டு உடையை மாற்றினான்.

மலர்விழி மீண்டும் கண்ணாடி முன்பு அமர்ந்து தலையை வாரி பின்னலிட்டாள். முகத்தில் லேசாய் முகப்பூச்சை பூசி பொட்டையிட்டு, நேற்று லீலா கட்டிக் கொடுத்த பூவை தலையில் வைத்தாள்.

அவளது செய்கைகளைத் தனஞ்செயனும் அமைதியாய்க் கவனித்தான். அந்த நகைப் பெட்டியைத் திறக்கும் போது வளைந்த இதழ்கள் கூறின அவளின் விருப்பமின்மையை.

இவனது உதட்டில் மென்னகை படர, மலர்விழியின் அருகே சென்று அவள் கையிலிருந்த நகைப்பெட்டியை வாங்கி தூர வைத்துவிட்டு, மேஜையில் ஒரே தாவாக தாவி அமர்ந்தான்.

“என்னாச்சு விழிக்கு. ஏன் டல்லாகிட்ட?” என அவள் முகத்தைப் பார்த்து வினவினான்.

“நல்லாதான் இருக்கே...” விழி கண்ணாடியைப் பார்த்தவாறே கூற, அவள் நாடிப் பிடித்துத் தன்புறம் திருப்பியவன், “இந்த நகையெல்லாம் போட்டாதான் என் பொண்டாட்டி அழகுன்னு இல்லை. அவ இயற்கையாவே பேரழகுதான். உனக்கு விருப்பம் இல்லேன்னா, ஏன் அதையெல்லாம் போடணும்?” வினவினான்.

அவனை சில நொடிகள் நோக்கியவள், “அத்தைதான் போட சொன்னாங்க!” என்றாள் எந்த உணர்வும் இன்றி.

“அவங்க போட சொன்னாங்க சரி. உனக்குப் பிடிக்கலைன்னா, அவங்ககிட்டே சொல்ல வேண்டியதுதானே?” என இவன் வினவினான்.

“உங்க வீட்டோட மரியாதை நான் போட்ற நகையில்தான் இருக்குன்னு உங்க அம்மா நம்புறாங்க. நான் என்ன பண்றது?” அவள் குரலில் என்ன இருந்தது என தனாவால் கண்டறிய முடியவில்லை. அவன் தூர வைத்த நகையை எடுக்கச் சொன்றாள் விழி.

அதைத் தடுத்தவன், “விழி, என்னை பாரு ஒரு நிமிஷம்...” என்றான். அவனை என்ன என்பதாய் பார்த்தாள் மலர்.

“விழி, என் அம்மாவே கொடுத்தாலும் உனக்குப் பிடிக்கலைன்னா, கண்டிப்பா போட வேண்டாம். நம்ம வீட்டு மரியாதை நீ போட்ற நகையில கிடையாது. அது உன் குணத்துல, என் அம்மா அப்பாவை நீ மதிக்கிறதுலதான் இருக்கு. என்னையும் என் அப்பா, அம்மாவையும் இது வரைக்கும் என் விழி எங்கேயுமே மரியாதை குறைவா நடத்துனது இல்லையே! சோ, அந்த எண்ணத்தை முதல்ல அழி. அம்மாகிட்ட நான் பேசுறேன் விழி, அவங்க அந்தக் காலத்து மனுஷிதான். இருந்தும், சொன்னா புரிஞ்சுக்குவாங்க...” என அவளுக்குப் புரிய வைக்க முயன்றான். தலையை மட்டும் அசைத்தாள் மலர்.

“விழி, இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட். உனக்கு எது பிடிக்கலைனாலும், என்கிட்ட வாயைத் தொறந்து சொல்லணும். கண்ணைப் பார்த்து, முகத்தைப் பார்த்து கண்டு பிடிக்கிற அளவுக்கு உன் புருஷன் எக்ஸ்பெர்ட் இல்லை மா!” என்றான் குறும்பாய். அதில் இவளுக்கு மெல்லிய புன்னகை படர்ந்தது.

“தெரியுமே! நீங்க ஒரு ட்யூப்லைட்டுன்னு...” விழி உதட்டை வளைக்க, “அடிங்க...” என அவள் தலையில் கொட்டச் சென்றான் தனா. இருவருக்கும் சிரிப்பு வந்தது.

‘தான் பெரிதாய் நினைத்த விஷயத்தை எத்தனை எளிதாய் இவன் கையாண்டுவிட்டான். முன்பும் இதற்குத்தானே இவனுடன் தான் சண்டையிட்டோம்? அப்போதும் இப்படி பொறுமையாய்க் கூறி பிரச்னைகளைத் தவிர்த்து இருக்கலாமோ? தான் தான் பொறுமை இழந்து விட்டோமே?’ விழியின் மூளையும் மனதும் தாமதமாய் அறிவுரை கூறியது. அருகில் அமர்ந்திருந்த மனம் நிறைந்தவனை மனதுக்குள் வாரி சுருட்டிக் கொண்டாள் பெண்.

“நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன் விழி. இப்போ உனக்கு என்ன ஜ்வல் வேணுமோ, அதை மட்டும் போட்டுக்கோ!” அவளது தலையைக் கலைத்துவிட்டவனின் குரல் முழுவதும் மலருக்கான புரிதலும் நேசமும்தான். அந்த வாஞ்சையான குரலில் இவளுள் ஏதோ ஒன்று அடங்கிப் போனது. விழிகளும் மனதிலும் நிறைந்து போயிருந்தான் இந்த தனஞ்செயன்.

ஆசையாய்க் காதலாய் கணவனை நோக்கிய விழி, “அந்தக் கதவை நல்லா சாத்திட்டு வாங்க...” என்றாள். அறைக் கதவு பாதி திறந்துதான் இருந்தது.

எதற்கென கேட்காது தனஞ்செயன் கதவை முழுவதும் சாற்றிவிட்டு வர, மாறன் வாங்கிக் கொடுத்த நகை ஒன்றை மட்டும் அணிந்த விழி, எளிதான ஒப்பனையில் எழுந்து நின்று கண்ணாடியைப் பார்த்தாள்‌. ஒருமுறை சுற்றி முற்றிப் பார்த்தவள், தன்னில் திருப்தி அடைந்து, “எப்படி இருக்கேன்?” என தனாவிடம் வினவினாள்.

“ரொம்ப அழகா இருக்க டி பொண்டாட்டி....” சன்னமான சிரிப்புடன் கூறியவன் அருகே வர, மென்னகையுடன் அவனைப் பார்த்தாள். தன் முகத்தைப் பார்த்து மனதறிந்த இந்த தனஞ்செயனை இன்னும் ஆயிரம் முறை காதல் செய்தால் கூட, அவளுடைய நேசம் தீராது போல. விழியின் தனாவுக்கான நேசம் என்பது அட்சயப் பார்த்திரம் போன்றது.

தனா அருகே வரவும், அவன் சட்டையின் நுனியைப் பிடித்திழுத்து முகத்தைத் திருப்பிய விழி, அழுத்தமாய் தாடியடர்ந்த கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்தாள். அவள் உதட்டிலிருந்த வெப்பமும் அவனது கன்னத்தோடு தணிந்து போனது. “ஐ லவ் யூ ஜெய்! லவ் யூ சோ மச்...” என்றாள் காதலாக. மனம் அந்நொடி கணவனின் அருகில் நெகிழ்ந்து போயிருந்தது, உள்ளமும் கூட!

மலரின் செய்கையில் அந்த வார்த்தையில் அந்த பாவனையில் தனஞ்செயன் மொத்தமாய் சிலிர்த்துப் போனான். உடலில் புதிதாய் ஏதோ பாய்ந்ததைப் போல இருந்தது. ஒரு வழியாய் அவனைக் காதலிப்பதை வாய் வார்த்தையாக நேரடியாய் உடைத்துவிட்டாள் மனைவி. உடலும் உள்ளமும் ஒரு நொடி துடித்து அடங்கியது.

பரபரப்பும் ஆச்சர்யமுமாய் அவளைப் பார்த்தவன், “ஹே... விழி...” என்றான் வார்த்தை வராது. அவனது முகத்தையும் அதிலிருந்த பாவனையும் உள்வாங்கியவள், “ரெடியா, போகலாமா?” என வினவினாள் எதுவும் நடக்காதது போல.

“அடிப்பாவி... சும்மா இருந்தவனை ஏன் டி உசுப்பேத்துன?” தனா முறைக்க, விழிக்கு சிரிப்பு பொங்கியது.

“என்ன... என்ன உசுப்பேத்துனாங்க?” இவள் மிதப்பாய் வினவினாள்.

அவளை ஏகத்துக்கும் முறைத்தவன், “ஏன் டி... உனக்கு இதை சொல்ல வேற நேரமே கிடைக்காதா? இப்போ ஒன்னும் பண்ண முடியாதே!” என்றவன் காலை தரையில் உதைத்தான். அவனது பேச்சில் சிவந்து போனவள், “பிச்சுப்புடுவேன். ஒழுங்கா வாங்க. நேரமாச்சு!” என அவள் ஓடப் பார்க்க, “நோ... ஐ வாண்ட் அ டைக் ஹக்!” என்றான் அடமாய்.

“ஐயோ! சேலை கசங்கிடும். முடியாது!” என அவள் இருபுறமும் முடியாது என தலையை அசைக்கும் முன்னே தனா மனைவியை இறுக அணைத்து அவளது நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

“லவ் யூ டூ டி பொண்டாட்டி...” காதோரம் தவிப்பும் கிறக்கமுமாய்ப் பேசியவன் இவளுக்குள் பல வர்ணங்களை அள்ளித் தெளித்தான். எதுவும் கூறாது அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் விழி. இருவருக்குமே அந்நொடி தித்திப்பிலிருந்து மீள மனதில்லை.

நேரமாவதை உணர்ந்து அவளிடமிருந்து விலகிய மலர்விழி, கணவனை முறைத்தாள். சேலை அவன் படுத்தியபாட்டில் கசங்கிப் போயிருந்தது.

“சாரி... சாரி!” கையைத் தூக்கிக் காதில் வைத்துக் கண்ணைச் சுருக்கி கெஞ்சியவனின் கன்னத்து தசைகள் அழகாய் வரிவரியாய் நீண்டிருந்தன. இவளது முறைப்பு மென்முறைப்பாய் மாற, “நானே சரி பண்றேன் விழி...” என அவளது காலடியில் அமர்ந்து சேலையின் மடிப்பை சரிசெய்தான்.

“இங்க... இதோ அங்க... இதை இப்படி இழுத்து விடுங்க!” அவள் கூறிய அத்தனையும் செய்தவனின் முகத்தில் சுகமான சலிப்பும் அலுப்பும்தான்.
இன்னுமே அழகாய் மனைவியின் சேலையின் மடிப்பை நீவிவிட்டுக் கொண்டிருந்த தனாவை ஆசையாய்ப் பார்த்தவள், “சரியான ஆள்மயக்கி‌...” என்றாள் மெல்லிய முணுமுணுப்புடன். தனஞ்செயன் செவியிலும் விழந்தது, மென்னகையுடன் அவளை நிமிர்ந்து பார்த்தவன், “நீதான்டி ஆள் மயக்கி. நான் இல்லை... என்னை மொத்தமா மயக்கி வச்சிருக்க...” உதட்டை மெதுவாய் அசைத்து கிசுகிசுத்தவனின் பார்வையில் விழி அசந்துதான் போனாள். அந்தப் பாவனையில் மனைவி அவனைக் கொஞ்சம் கிறுகிறுக்க வைத்தாள். மெல்லிய சிவப்பு அவளது கன்னத்தில் படர்ந்தது.

“போதும் விடுங்க. மடிப்பு அப்படியே இருக்கட்டும்!” இவள் கூறியும் மீத மடிப்பை சரிசெய்தான் தனா.

“டேய் தனா...” மலர்விழியின் வீட்டிலிருந்து எல்லோரும் வந்துவிட, மாறன் நண்பனைத் தேடி எந்த நினைவுமின்றி அறைக்குள் பட்டென நுழைந்துவிட்டான். அவன் கண்ட காட்சியில் கண்கள் விரிய, “தனா...” என்றான் ஆச்சர்யமாய். அவனறிந்த தனஞ்செயன் இவனில்லையே!

மாறனைக் கண்டதும் விழி, “போதும் எழுத்துரீங்க...” என்றாள் சங்கடமான குரலில்.

அதையெல்லாம் அசட்டை செய்தவன் சாவகாசமாய் செய்த வேலையை முடித்துவிட்டே நிமிர்ந்தான். “டேய்! இது கனவா? நிஜமா?” மாறனின் ஆச்சர்யம் இன்னும் விலகவில்லை. குரலில் எதிரொலித்தது.

“ப்ம்ச்... புதுசா கல்யாணமானவங்க ரூம்க்குள்ள வரும்போது கதை தட்டிவிட்டு வரமாட்டீயா டா டால்டா!” மாறன் தலையில் ஒரு கொட்டை வைத்தவாறு அவனை வெளியே அழைத்துச் சென்றான் தனா. அவன் கேள்வியில் விழிதான் தலையில் அடித்துக்கொண்டாள்.

“யே! எப்பிட்றா?” மாறன் விடாது வினவ, “அதெல்லாம் உன்னை மாதிரி சின்னப் பசங்ககிட்டே சொல்ல மாட்டேன் டா‌... போய், போய் குச்சிமிட்டாயா வாங்கி சாப்பிடு...” என அவனைவிட்டு அகலச் சென்ற தனா, ஒரு நிமிடம் திரும்பினான்.

“நீ செஞ்சதுலயே நல்ல காரியம் எதுன்னு தெரியுமா டா மச்சான்?” தனஞ்செயன் வினவ, “என்ன டா?” மாறன் புரியாது விழித்தான்.

“பத்து நிமிஷம் லேட்டா வந்தது...” என தனா நக்கலாகக் கூறி செல்ல, மாறன், ‘லூசா இவன்?’ எனப் பார்த்து வைத்தான். பாவம், இன்று வரை அறியவில்லை மாறன், அவர்களுக்கு இடையில் தான் தான் கரடியென்று.

“ம்மா... கிளம்பீட்டிங்களா?” என லீலாவதியின் அறைக்குச் சென்றான் தனா.

“இதோ... கிளம்பிட்டேன் டா. சமையல்கட்டுல நின்னுட்டு இருந்ததால, லேட்டாகிடுச்சு!” என கூறியவரின் இடது கை பூவை தலையில் சூட, வலது கையை ஊசியை சொருகியது.

“இன்னும் அரைமணி நேரம் இருக்கு. பதட்டப்படாதீங்க!” என்றவன், அவரது கையில் நகைப்பெட்டியை வைத்தான்.

“இதெல்லாம் உள்ள வச்சிடுங்க மா. என் பெண்டாட்டி சிம்பிளா ஒரு செயின்லயே அம்சமா இருக்கா. இந்த நகையெல்லாம் அன்வான்டட்...” என்றான்.

“டேய், இந்த நகையெல்லாம் போட்டாதான் நல்லா இருக்கும்.‌ முதல்ல அவகிட்ட கொடு டா!” லீலாவதி மகனை முறைக்க,

“கோபப்படாத மா...” என அவரை லேசாய் அணைத்தவன், “இந்த நகையிலதான் நம்ம வீட்டு பாரம்பரியம், மரியாதை இருக்குன்னு சொல்லாத மா. அதெல்லாம் அந்தக் காலம். நம்ம வீட்டோட மரியாதை அவ போட்ற நகையில இல்லை. நாலு பேர் முன்னாடி என் பொண்டாட்டி உங்களை மதிக்கிறதுல இருக்கு. அந்த வகையில விழி உங்க மேலயும் அப்பா மேலயும் அதிகமான பாசமும், மரியாதையும் வச்சிருக்கா!” என்றான்.

அவன் கூறுவதைக் கேட்டவர், “அதில்லை டா தனா. எல்லாரும் வருவாங்க. அவ கழுத்து நிறைய நகையோட இருந்தால்தான் நல்லா இருக்கும்‌...” லீலா தன் பிடியிலே நின்றார்.

“என்னம்மா நீ... நான் சொல்றதை கேட்க மாட்டீயா!” உச்சஸ்தானியில் ஆரம்பித்தவன், அவரது கன்னத்தில் முத்தமிட்டு, குரலை தழைத்திருந்தானா. “என் செல்ல அம்மா இல்ல? பங்சனுக்கு டைமாச்சு. போ மா!” என்றான் கெஞ்சலாய். நீண்ட நாட்கள் கழித்து தனா தாயிடம் கொஞ்சினான். லீலாவிற்கு பேச்சே வரவில்லை. சிறுவயதில் தாயை சுற்றித்தான் நகரும் தனாவின் நாட்கள். வாலிப வயது வர வர குழந்தைகள் பெற்றவர்களிடமிருந்து ஒதுக்கம் பெறுவார்கள். அதற்கு அவர்களுடைய வயது கூட காரணம். ஒற்றைப் பிள்ளையென லீலா மகன் ஒதுங்கினால் கூட, தானே அவனிடம் போய் பேசுவார். அதற்காக தாய், தந்தையிடம் அவன் ஒதுக்கத்தை காண்பிக்கவில்லை. வேலை தொழில் என அவனை இழுத்துக்கொண்ட வஸ்துகள் ஏராளம்.

நீண்ட நாட்கள் கழித்து தனஞ்செயன் லீலாவதியைக் கட்டியணைத்து முத்தமிடவும், அவருக்கு கண்கள் கலங்கின.‌ மகன் தலையைக் கோதினார் பெண்மணி.

“ஹக்கும்... எமோஷனலாகாதீங்க மா...” என அவரை அணைத்து விடுவித்தான் தனா.

“சரி டா... போ. நேரமாகுது பாரு. நான் வரேன்!” முகம் கொள்ளா புன்னகையுடன் லீலா கூற, அவரைச் சின்ன சிரிப்புடன் பார்த்தவன், கண்டிப்பாக இனி அவருக்காக நேரம் கொஞ்சம் அதிகமாக ஒதுக்க வேண்டும் என நினைத்தான். தாயையும் தாரத்தையும் முத்தம் கொடுத்தே சமாளித்திருந்தான் தனஞ்செயன்.

மலர்விழி வந்திருந்த உறவினர் யாரோ ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தாள். யாருடைய பார்வையோ இவளை குறுகுறுக்கச் செய்ய, விழிகளை சுழற்றினாள். தனஞ்செயன் தான் அவளைப் பார்த்து யாரும் அறியா வண்ணம் உதட்டை குவிக்க, இவள் அவனை முறைத்தாள்.

எதேச்சையாக திரும்பிய மாறன் இதை கவனித்துவிட்டான். “ஏன் மலர், இப்போதான் கொஞ்சீட்டு இருந்தீங்க. அதுக்குள்ள சண்டையா? எதுக்கு அவனை முறைக்கிற நீ” காதருகே மெலிய குரலில் அவளை அதட்டவும், மெதுவாய் அவனைத் திரும்பிப் பார்த்து ஏகத்திற்கும் முறைத்தாள்.

“மாறா, இந்த ஜென்மத்துல உனக்கெல்லாம் கல்யாணம் நடக்காது. வந்ததுல இருந்து ஒருத்தி நீ பார்ப்பன்னு, பட்டு சேலை கட்டிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துட்டு இருக்கா. நீ இன்னும் என் மூஞ்சியைப் பார்த்து சண்டையான்னு கேட்டுட்டு இருக்க‌...” என்றவளின் கூற்றில் மாறன் அசடு வழிந்தான்.

“ஓடு... போ, போய் பொண்ணையும் அவங்க அம்மாவையும் கரெக்ட் பண்ற வழியைப் பாரு!” என அவனை துரத்தியவளுக்கு மாறனை நினைத்து முகத்தில் புன்னகை பிறந்தது. கணவனும் சரி, தமையனும் சரி. இருவருமே என் முக மாற்றத்தைக் கவனிப்பதைதான் பிரதான வேலையாக வைத்திருக்கிறார்களா? என்ற கேள்வியில் மனம் சுகமாய் அலுத்துக் கொண்டது. மாறன் எப்போதுமே அப்படித்தான். அவன் எப்போதும் தங்கைக்குத்தான் முதலிடம் கொடுப்பான். இப்போது கணவனுக்கும் அப்படித்தான் நான் என நினைக்கையில் மனம் நிறைந்து போனது.

“அக்கா...” மலர்விழியின் இரண்டு கரங்களும் பஞ்சு பொதி போல இருவேறு குட்டிக் கைகளுக்குள் பொதிய, சின்ன சிரிப்புடன் குனிந்து பார்த்தாள். அபியும், க்ருத்தவும் நின்றிருக்க, அவளைப் பார்த்தவாறே தேவி லீலாவதியின் அறைக்குள்
நுழைந்தார்.
தனா அவரைக் கேள்வியாகப் பார்க்க, அப்போதுதான் அவன் மண்டைக்குள் மணியடித்தது.

அடுத்த பஞ்சாயத்து 😆

தொடரும்...





 
Messages
439
Reaction score
343
Points
63
இந்த ஜானு மாக்கு பஞ்சாயத்து கூட்டுறதே வேலை மாறா உனக்கு கரடின்னு பேர் வைச்சது தப்பே இல்லை
 
Active member
Messages
101
Reaction score
48
Points
28
lovely 🥰🥰🥰

தனா சூப்பர்... விழியை லவ்வை சொல்ல வச்சிட்டான்... கண் பார்த்து நடக்குறான்... 🤩

கரடி இன்னைக்கு லேட்.... 🤣 பாவம் மாறன்... ரொம்ப தான் ஓட்டுறாங்க புருஷனும் பொண்டாட்டியும்... 🤭

வில்லங்கம் வந்தாச்சு... 😂 தனா அலெர்ட் ஆயிட்டான்.. 😄
 
Well-known member
Messages
428
Reaction score
255
Points
63
At last malar unnoda love ya sollita 😍avala sollala intha dhana (Jai) solla vaajudan super ruuu💕💕💕
Maran nalla pandra ne eppo late y vanthudan crt ya 😹
Next fighting start poola dhana alert da 🤭🤭🤭
 
Active member
Messages
131
Reaction score
28
Points
28
விழிய விட தனாவை ரொம்ப பிடிக்குது 😍😍
 
Top