இரவு - 26 ❤️

Administrator
Staff member
Messages
317
Reaction score
840
Points
93
(எடிட் பண்ணலை. மிஸ்டேக் இருந்தா, மன்னிச்சிடுங்க மக்களே!)

இரவு - 26

"வாங்க சித்தப்பா, வாங்க மாமா!" என அழகர் வரவேற்க, வந்தவர்கள் அமர நீள்விருக்கையில் இடம் போதவில்லை. அறையிலிருந்த நாற்காலிகளை எடுத்து வந்தார் ஆனந்தி.

கோகிலா முன்னே நிற்க, அவரருகில் வாஞ்சிநாதன் நின்றிருந்தார். அவர்களின் கண்கள் சாந்தியையுய் யுகியையும் அளவெடுத்தது.

"என்ன சித்தப்பா, என்ன சாப்ட்றீங்க?" என ஆனந்தி வினவ, "சாப்ட்றது அப்புறம் பார்த்துக்கலாம்த்தா. இப்ப நடந்த விஷயத்துக்கு வருவோம்!" என்றார் சங்கர்.

"ஏத்தா ஆனந்தி, அழகரு... வீட்ல பெரியவங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம். எதுனாலும் நீங்களே முடிவு செஞ்சுப்பீங்களா?" தன் தோளிலிருந்த துண்டை சரி செய்து கொண்டே வினவினார் அவ்வீட்டின் மூத்தவர் உத்தமன். அழகருடைய தந்தையின் ஒன்று விட்ட பெரியப்பா மகன்.

"இல்லைங்க மாமா, இதுல பஞ்சாயத்து பண்ண எதுவும் இல்லைன்னு தோணுச்சு. ஆயிரம் இருந்தாலும் நம்ம குடும்ப விஷயம். வெளியே யாருக்கும் தெரிய வேணாம்னு தான் சொல்லலை மாமா!" ஆனந்தி தான் பதிலளித்தார். அழகர் என்ன பேசுவது என தெரியாமல் மனைவியின் முகத்தைப் பார்த்தார்.

சாந்திக்கும் யுகிக்கும் புரிந்தது இந்த பேச்சு எல்லாம் தங்களை கொண்டு தான் என. இவற்றை எதிர்பாராத நிவி, சில நிமிடங்கள் முன்னே நடந்து முடிந்த நிகழ்வில் உறைந்திருந்த தன்னை மீட்டுக் கொண்டு, தடதடக்கும் இதயத்துடன் நடப்பவற்றை வேடிக்கைப் பார்த்தாள். வீரபாண்டி கூட, தன் தங்கையை எதுவும் குற்றம் சாட்ட விட கூடாது என எண்ணி, நடப்பவற்றை அவதனித்துக் கொண்டிருந்தார்.

"என்னம்மா இது... மாமா, சித்தப்பான்னு வாய் நிறைய கூப்ட்றது எல்லாம் வெறும் பேச்சுக்கு மட்டும் தானா? கண்டவங்க எல்லாம் உரிமை கொண்டாட விட்ற அளவுக்கு இருக்கா நம்ம வீடு?" என உத்தமன் கோபமாக வினவ,

"பெரியப்பா வார்த்தையை அளந்து பேசுங்க!" என அழகர் இப்போது வாயை திறந்தார்.

யுகி தன் பொறுமையை கைகளை மடக்கிக் காத்துக் கொண்டிருக்க, "யுகி, நம்ம கிளம்பலாம் வா!" என சாந்தி அவ்விடத்தை விட்டு அகல முயல,

"ஏம்மா! நில்லு முதல்ல... உங்க ரெண்டு பேரையும் வச்சு தானே பேச்சு ஓடுது. நீ இப்படி கிளம்பலாமா?" என்ற சங்கரின் வார்த்தைகளை கேட்ட சாந்தி, "எனக்கு யார் கூடவும் சண்டை போட விருப்பம் இல்லை. தேவையில்லாம வார்த்தையை விடாதீங்க ஐயா! உங்க குடும்ப பிரச்சனை இது. நாங்க எதுக்கு மூனாவது மனுஷங்க?" என வினவினார்.

"ஏம்மா! நல்லா பேசுற நீயு... நல்லா இருந்த குடும்பத்துல வந்து பிரச்சனையை உண்டு பண்ணதே நீ தானே? எப்படி உன் பையனுக்கும் நீ தான் சொல்லிக் கொடுத்து தான் வளர்த்தீயா? பணக்கார ஒருத்தனை அப்பன்னு நான் கைக்காட்டுவேன். நீயும் சொத்துல பங்கை கேளுன்னு?" அவர் கேட்ட கேள்வியில் சாந்தி விதிர்விதிர்த்துப் போனார்.

"யோவ்! வார்த்தையை அளந்து பேசு. எங்கம்மாவை பத்தி பேச எல்லாம் உங்களுக்கு எந்த வித உரிமையும் இல்லை. தேவையில்லாம பேசுனா, வயசுக்கு கூட மரியாதை இருக்காது!" என யுகியின் கண்கள் கோபத்தில் சிவந்திருக்க,
முட்டி வரை இருந்த சட்டையை மேலேற்றினான்.

"மாமா, உங்க கிட்ட சொல்லாதது தப்பு தான். சொன்னா, இப்படி பஞ்சாயத்துன்னு நானும் என் புருஷனும் வாழ்ந்த இத்தனை வருஷ வாழ்க்கை விமர்சிக்கப்படும். அதை விரும்பாம தான் நாங்க சொல்லலை. வீட்டு பெரியவங்களா நீங்க கோபப்பட்றது நியாயம் தானே. ஆனால், எங்களுக்குள்ள இருக்க பிரச்சனையை நாங்க தீர்க்த்துக்குறோம்!" என ஆனந்தி முன்னே வந்து கையைக் கூப்பினார்.

"ஆனந்தி, என்ன பேசுற நீ?
கண்ட நாய் எல்லாம் அப்பன், ஆத்தான்னு சொந்தம் கொண்டாடிட்டு சொத்துல பங்கு கேட்டுட்டு வரும். அதுக்கு தலையை தலையை ஆட்ட சொல்றீங்களா? அப்பன் பேர் இல்லாத ஊர் பேர் தெரியாத எல்லாருக்கும் எங்க அண்ணன் அப்பாவாக முடியாது. முதல்ல இவங்களுக்கும் நமக்கும் எதுவும் இல்லைன்னு எழுதி வாங்குங்க!" என்ற கோகிலாவை, "ஏய்!" என அடிக்க கை ஓங்கியிருந்தான் யுகி.

"மாமா, வேண்டாம்!" என அவன் கையை பிடித்து அழுத்தியிருந்த வித்யா, "ம்மா... வார்த்தையை அளந்து பேசும்மா!" என விழிகளில் நீர் வழிய கூறினாள்.

"ஏங்க, என்ன பேசுறீங்க நீங்க? என் தங்கச்சியை பேசுறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை! அப்பன் பேர் தெரியாதவன்னு சொல்றீங்களே! அதுக்கு உங்க தம்பி தான் காரணம். உங்க தம்பியை கேளுங்க!" என்று கூறிய வீரபாண்டிக்கும் கோபம் தாறுமாறாக வரத்துவங்கியது. தன் பெண்ணின் வாழ்க்கை எண்ணி இவ்வளவு நேரம் பொறுமை காத்தார். ஆனால், தன் தங்கை வாழ்க்கை இத்தனை பேரின் முன்பு கேலிப் பொருளாவதை அவர் விரும்பவில்லை.

எல்லாவற்றையும் கேட்ட சாந்தியின் முகத்தில் விரக்தி புன்னகை. இது எல்லாம் அவருக்கு பழக்கப்பட்ட ஒன்று. ஆனால் இத்தனை பேரின் முன்பு தன்னுடைய வாழ்க்கை விமர்சிக்கப்படுவதை எண்ணியவருக்கு மனம் கனத்ததது. இவ்வாறு எல்லாம் நடக்க கூடும் என கணித்து தானே
இங்கே வர கூடாது என நினைத்திருந்தார். நிவியின் பார்வை தவிப்புடன் தன் அத்தை மீது குவிய, அவரும் இப்போது அவளை பார்த்தார். 'இதற்காக தான் நீ ஆசை கொண்டாயா?' என வினவுவது போலிருந்த பார்வையை சந்திக்க முடியாது தலையை தாழ்த்திக் கொண்டவளின் விழிகள் திரையிட்டது.

"ஆமா! உங்க தங்கச்சி பையன் என் அண்ணனுக்கு தான் பொறந்தான்னு என்னங்க நிச்சயம்? அதுக்கு எதுவும் ஆதாரம் இருக்கா? இல்லை! இதே தான் பொழப்பா வச்சுட்டு சுத்தீட்டு இருக்கீங்களா? அசிங்கமா இல்லை உங்க குடும்பத்துக்கு... இப்படி தங்கச்சியை வச்சு பொழப்பை நடத்துறீங்களே!" என கேட்ட கோகிலாவின் கன்னத்தில் இடியென இறங்கியது அழகரின் கைகள். அவரை அடிக்க சென்ற யுகியின் கைகள் அப்படியே நின்றன.

"அக்கா! இதுக்கு மேல ஒரு வார்ததை, இந்த தம்பி செத்துட்டான்னு நினைச்சுக்கோ! சாந்தி, என் சாந்தி அவ. ஆமா! யுகி எனக்கு பொறந்தவன் தான்! என் பையன் அவன். அதுக்கு சாட்சி எதுவும் தேவையில்லை. ஏன்னா, என் சாந்தி அத்தனை தூய்மையானவ! அவளைப் பத்தி இப்படி பேசாத!" என்ற அழகர் விறுவிறுவென சாந்தியின் அருகே சென்று அவரை நடுக்கூடத்திற்கு அழைத்து வந்தார்.

"மாமா, சித்தப்பா, பெரியப்பா! எல்லாரும் கேட்டுக்கோங்க. இந்த சாந்தி நான் காலேஜ் படிக்கும் போது காதலிச்சவ. யுகி என் பையன். என்னோட ரத்தம் அவன். என் சொத்துல, என் வாழ்க்கைல எல்லாத்துலயும் அவங்களுக்கு பங்கு இருக்கு!" என உறுதியாக உரைத்தார். தன்னை இத்தனை பேரின் முன்பு கைநீட்டி அடித்த தம்பியை பார்த்து கொதித்துப் போன கோகிலாவுக்கு, அவர் வார்த்தைகள் இன்னும் கோபமேற்றியது.

"ஏன்டா அழகரு! அப்படி என்ன இவ மயக்கிட்டான்னு இந்த குதி குதிக்கிற? இந்த வயசுல இதெல்லாம் தேவையா?" என கேட்ட கோகிலாவின் வார்த்தைகள் சாந்திக்கு அமிலத்தை குடித்ததைப் போல இருக்க, மனம் அருவருத்துப் போனது. உடல் கூச நின்றவர், அழகரின் கைகளை உதறினார்.

"போதும்! இதுக்கும் மேல வேற வார்த்தைகளை கேட்க என் உடம்புல தெம்பு இல்லை. நீங்க இல்லாம இத்தனை வருஷத்துல நானும் என் புள்ளையும் செத்தா போய்ட்டோம். நல்லா தான் வாழ்ந்தோம். இதை விட நான் வாழ்ந்த வாழ்க்கையை அசிங்கப்படுத்த முடியாது. இப்படி எல்லாம் நடக்க கூடாதுன்னு தான் நான் கண்காணத ஒரு இடத்துல இருந்தேன். அப்பவும் இப்பவும் எப்பவுமே உங்களால என் நிம்மதியும் வாழ்க்கையும் போச்சு. வயசான காலத்துல கூட என்னை நல்லா இருக்க விட மாட்டீங்களா? என்னால முடியலை. விட்ருங்க!" என அழகரை நோக்கி கையெடுத்து கும்பிட்ட சாந்தி சரிந்து அமரப் போக, "ம்மா... ம்மா. ஒன்னும் இல்லைம்மா. நம்ம கிளம்பிடலாம் மா!" என அவரை தன் கைகளில் தாங்கிக் கொண்ட யுகயின் விழிகளிலிருந்து வழிந்த நீர் தாயை நனைத்தது. இந்த கோலத்தில் தன் தாயை காணவா இங்கே வந்தேன் என தன்னையே வெறுத்தான். இப்படி ஒரு வாழ்க்கை என நினைக்க நினைக்க உடல் கூசியது ஆடவனுக்கு. பிறந்ததிலிருந்து எந்த தவறும் செய்யாது இப்படி வாழும் ஒரு வாழ்க்கை என்ன இது என மனது விட்டுப் போனது ஆடவனுக்கு.

தன் தாயை பிடித்திருந்த கைகள் நடுங்க, அவரை இறுக அணைத்துக் கொண்டவன், "ம்மா... இவங்க எல்லாம் சாக்கடைம்மா. கல்லை எறிஞ்சா நம்ம மேல தான் விழும். என்னோட அம்மா தப்பானவங்க இல்லைன்னு நான் யாருக்கும் நிரூபிக்க வேணாம். நீங்க எழுந்திரீங்க!" என்றவனுக்கு தொண்டை அடைத்தது. கோபம், ஆத்திரம் எல்லையை கடந்து விட்டது.

"ஏன் பா! உங்க அம்மா மேல தப்பே இல்லாத மாதிரி பேசுற? படிக்குற வயசுல ஒழுங்கா படிக்காம ஊர் மேஞ்சு வயித்துல உன்னை வாங்கியிருக்கா! அதுலயே அவ லட்சணம் தெரிய வேணாம். ஆம்பளைன்னா அப்படி இப்படி தான் இருப்பான். உங்க அம்மாவுக்கு எங்க போச்சு புத்தி. பணத்தை பார்த்து மயங்கிட்டாளா?" என பெரியவர் ஒருவர் வினவ, அவர் சட்டையை கொத்தாக பிடித்து இருந்தான் யுகி.

"என்னய்யா சொன்ன? எங்கம்மா ஒழுங்கா இல்லையா? உங்க புள்ளையை ஒழுங்கா வளர்த்தீங்களா நீங்க? அவர் பண்ணது எல்லாம் நியாயமா?" என கேட்டவனின் கைகளைப் பிடித்து இழுத்திருந்தான் சந்த்ரு.

"தாத்தா, என்ன பேசுறீங்க நீங்க? உங்க வீட்டு புள்ளைன்னா, எங்க அப்பா செஞ்ச தப்பு தப்பு இல்லைன்னு ஆகிடுமா? நானும் பெரியவங்க பேசுறீங்கன்னு பொறுமையா இருந்தேன். எப்படி நீங்க சாந்திமாவை மட்டும் குறை சொல்றீங்க?" என கோபமாக வினவினான் சந்த்ரு.

"ஏன் சந்த்ரு, உங்களுக்காக தான் நாங்க பேசிட்டு இருக்கோம். நீ சின்ன பையன். உனக்கு ஒன்னும் தெரியாது. மனுஷங்களை பத்தி உனக்கென்ன தெரியும். அமைதியா நில்லு!" என அவனை கையை பிடித்து இழுத்தார் சங்கர். அவனால் எல்லோரையும் முறைக்க மட்டுமே முடிந்தது.

சாந்தியை தாங்கியிருந்த நிவி, "என்னை மன்னிச்சிடுங்க அத்தை, உங்களோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்." என்றவளுக்கு நிற்காமல் நீர் வழிந்தது.

யுகி நடப்பதை வெற்றுப் பார்வை பார்த்தான். இதற்கு மேல் எப்படி வார்த்தைகளால் வதைக்க முடியும்? அதுதான் வார்த்தை என்னும் ஆயுதத்தால் கொன்று விட்டார்களே தன் தாயை! அழகரை அவன் பார்வை சுட்டது. வித்யா அருகில் வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
அவளைப் பார்த்தான் ஆடவன். முகமெல்லாம் அழுதழுது சிவந்து இருந்தது. அவனை அந்த நிலையில் பார்க்கும் திராணியில்லை பெண்ணிடம். அவளால் ஒன்றும் சொல்ல இயலாத நிலை. தன் உயிரானவனின் விழிநீர் ஒவ்வொன்றும் அவளை மரிக்க செய்து கொண்டிருந்தது.

"நடந்தது நடந்து போச்சு. வீட்ல ஆம்பளை அப்படி இப்படி இருக்கது சகஜம் தான். ஏம்மா ஆனந்தி, உன் புருஷனை நீ தான் கைக்குள்ள போட்டு வச்சுக்கணும். இத்தனை வயசுக்குப் பிறகு இந்த பஞ்சாயத்து எல்லாம் தேவையா? அவங்க கிட்ட ஒரு பேப்பர்ல எழுதி வாங்குங்க. அந்த பையனுக்கும் அந்தம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு எழுதி வாங்குங்க. பஞ்சாயத்தை இதோட முடிச்சுப்போம்!" என கூறியவரை அற்ப ஜீவனைப் போல பார்த்த நிவி, "வித்யா, அத்தையை பிடி!" என அவ்விடத்தை விட்டு நகரப்பார்க்க, அவள் கைகளை அழுத்தமாக பற்றி இருந்தார் சாந்தி.

அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பெண். "வேணாம் நிவி, நீ வாழ வேண்டிய பொண்ணு. யார் வாய்லயும் விழுந்துடாத!" என்ற சாந்தியின் கையை உதறினாள் நிவி.

அவளருகில் நின்றிருந்த ஜோதி, "நிவி, நீ மேற்கொண்டு எதுவும் பிரச்சனையை பண்ணாத. இது எல்லாம் நீ தான் இழுத்து வச்சது? உங்க அத்தையும் யுகியையும் இப்படி எல்லாரும் பேசுற மாதிரி செஞ்சுட்ட!" என்ற ஜோதிக்கு மகள் மீது அளவுகடந்த ஆத்திரம் வந்தது.

அவரின் வார்த்தைகளை கேட்டதும் இத்தனை நேரம் நின்றிருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுத்தது. அதை புறங்கையால் துடைத்துக் கொண்டே எல்லோருக்கும் நடுவில் சென்று நின்றவளின் முகத்தில் ஏளனப்புன்னகை.

"ஐயா! நீங்க எல்லாம் வயசுல பெரியவங்க. இத்தனை வருஷம் அனுபவம் இருக்கும். அதனால தானே உங்களை இங்க பஞ்சாயத்து பண்ண கூப்ட்டு இருக்காங்க?" என கேட்டாள்.

அதில் சிலர், "என்னம்மா இப்படி கேட்குற? என்னோட வயசு எழுவது. எத்தனை பஞ்சாயத்தை பார்த்து இருக்கேன் தெரியுமா?" என வினவினார்.

"அட! பரவாயில்லைங்கய்யா! உங்க வயசு எழுபது. ஆனால், உங்க புத்தி மட்டும் ஏன் இப்படி சின்னதா இருக்கு?" என வினவ,

"ஏம்மா ஏய்! யாரை பார்த்து என்ன பேசுற நீ?" என மற்றொருவர் எகிறினார்.

"இந்த வீட்டோட பெரியவர் கிட்ட தான் பேசுறேங்க...எப்படி எப்படி உங்க வீட்டு ஆம்பளைங்க இப்படி தான் இருப்பீங்க. பொம்பளைங்க சரியா இருக்கணும்? சீ! உங்க வயசுக்கு இப்படி பேச உங்களுக்கு கூசலையா? அடுத்த வீட்டு பொண்ணு மேல இப்படி அபாண்டமா பழி போட்றீங்களே! இதுவே உங்க வீட்டு பொண்ணுக்கு இப்படி ஒரு அநியாயம் நடந்தா அமைதியா இருப்பீங்களா? தைய தக்கான்னு குதிச்சு இருக்க மாட்டீங்க? உங்க வீட்டுல பையனை ஒழுங்கா வளர்த்து இருக்கீங்களா? அடுத்தவங்களை பத்தி பேச வந்துட்டீங்க?" என கேட்டவளின் வார்த்தைகள் அனல் பறந்தது.

"ஏம்மா! நீ இந்த வீட்டு மருமக. அதை முதல்ல நியாபகம் வச்சுக்கோ! இந்த வீட்ல தான் காலம் முழுக்க நீ வாழணும்?" என சங்கர் கூற,

"என்ன மிரட்டுறீங்களா? ஒரு பொண்ணை பொண்ணா மதிக்க தெரியாத உங்க குடும்பத்துக்கு கௌரவம் ஒரு கேடு. என் அத்தையும் மாமாவையும் பத்தி ஒரு வார்த்தை இனிமே பேசுனீங்க, அவ்ளோ தான்." என கையை நீட்டி மிரட்டியவளின் கண்கள் கனலை கக்கியது.

"என்னம்மோ கேட்டீங்ளே! ஆங்...எந்த தொடர்பும் இல்லை. சொத்துல பங்கு இல்லைன்னா கேட்டீங்க! இதுவரைக்கும் சொந்தம் பந்தம் பாசம்னு நான் கூவிட்டு இருந்தேன். என் அத்தைக்கு நியாயம் கிடைக்கணும், யுகி மாமாவுக்கு அப்பான்ற உறவு வேணும், குடும்பத்தை சேர்க்கணும்னு மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தேன். பட், இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. என் புருஷனுக்கு இந்த சொத்துல எவ்ளோ பங்கு இருக்கோ, அதே பங்கு என் மாமாவுக்கும் இருக்கு. கோர்ட்ல கேஸ் போடுவேன். சட்டப்படி முறையா அழகர் மாமா தான் யுகி மாமாவோட அப்பான்னு நிரூபிச்சு, சொத்துல பங்கு வாங்குறோம். அப்போ உங்க பஞ்சாயத்தை எல்லாம் நீங்க கோர்ட்ல பார்த்துக்கோங்க பஞ்சாயத்து தலைவரே!" என்ற நிவியின் எள்ளல் பேச்சில் சினம் மூண்டது அவருக்கு.

"ஏம்மா ஆனந்தி, உன் மருமக பேசுறதை பார்த்துட்டே அமைதியா இருக்க? என்னென்னு கேளுமா!" என்க,

"மாமா, நீங்க பேசும் போது நடுவுல எதுவும் பேச கூடாதுன்னு சொன்னீங்க. அதே மாதிரி தான் இப்ப வரைக்கும் அமைதியா இருக்கேன் மாமா!" என்றார். அவருக்கும் அத்தனை ஆத்திரத்தை உண்டாக்கியிருந்தது அனைவரது பேச்சும். கோகிலாவிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

"ஏய்! என்னடி? இப்படி உன் மாமானுக்கு சொத்தை புடுங்குறதுக்காக தானே பிளான் பண்ணி என் தம்பி வீட்டுக்குள்ள நுழைஞ்ச?" என்ற கோகிலா நிவியின் முட்டியை அழுத்தமாக பற்றினார்.

(தொடர்ந்து கீழே படிக்க)
 
Administrator
Staff member
Messages
317
Reaction score
840
Points
93

"ப்ம்ச்!" என அவர் கையை அசால்ட்டாக தட்டி விட்டாள், "இன்னும் நீங்க பாக்கி இருக்கீங்களோ? மறந்துட்டேன் பாருங்க. இங்க நடக்குற எல்லா பிரச்சனைக்கும் காரண கர்த்தாவே நீங்க தானே?" என வினவினாள்.

"ஏய்! என்ன புது கதை. நீயும் உங்க குடும்பமும் பண்ற அநியாயத்தை தட்டிக் கேட்டா, நான் தான் தப்பு பண்ணவளா?" என வினவினார் கோகிலா.

"அட! நீங்க இப்ப பண்ண பஞ்சாயத்தை சொல்லலைங்க. 28 வருஷத்துக்கு முன்ன இவரை கூட்டீட்டு ஓடி போனீங்களே! அதை சொன்னேன். நீங்க பண்ண காரியத்தால தானே அழகர் மாமாவுக்கும் ஆனந்தி அத்தைக்கும் கல்யாணத்தை அவசர அவசரமா பண்ணாங்க. அப்போ நீங்க தானே கார கர்த்தா?" நிவி கேள்வியில் கோகிலா என்ன பேசுவதென்று தடுமாறினார்.

"ஏய்... அது... இப்ப நீ ஏன் பழசை எல்லாம் கிளறுற?" தடுமாறியபடி தன் கோபத்தை வெளிப்படுத்தினார் கோகிலா.

"ஓஹோ... நீங்க பண்ண தப்பை சொன்னா, பழசை கிளறுறோம். அப்போ இவ்ளோ நேரம் என் அத்தையை உங்க குடும்பத்துக்கு மூத்த மக்கள் பேசுனாங்களே! அதெல்லாம் எந்த கணக்குல வரும்?" என இகழ்ச்சியாக கேட்டாள்.

"என்ன அழகரு, நீயும் உன் பொண்டாட்டியும் உன் மருமகளை பேச வீட்டு வேடிக்கைப் பார்க்குறீங்களா?" என அவர்கள் புறம் திரும்பி கோபப்பட்டார் கோகிலா.

"அட! இந்த கேள்வியை எல்லாம் எப்பவோ கேட்டு, உங்களை இருக்க வேண்டிய இடத்துல வச்சு இருந்தா, இவ்ளோ தூரம் நீங்க வாலாட்டி இருக்க மாட்டீங்க இல்ல? ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் உங்களை இங்க யாருமே பஞ்சாயத்து பண்ணவே கூப்டலை. நீங்களா இப்படி பண்ணது பெரிய தப்பு... ஆமா! அதான் உங்க பங்கு சொத்தை எல்லாம் அழகர் மாமா பிரிச்சு கொடுத்துட்டாரே! அதை உங்க ஊதாரி புருஷன் வித்து வாய்ல போட்டதும், மறுபடியும் வந்து கெஞ்சி, எங்க மாமாவோட சொத்தை தானே இப்போ பார்த்துட்டு இருக்காரு. அப்புறம் என்ன உங்களுக்கு எங்க மாமா சொத்து மேல அக்கறை? அதான் உங்க பொண்ணை கட்டிக் கொடுத்து சொத்தை அபகரீக்க பார்த்திங்க. முடியாம போச்சுன்ற பொறாமையோ இது?" என கேட்ட நிவியை நோக்கி கோகிலா அடிக்க கையை ஓங்க, அவர் கையை தடுத்து நிறுத்தியவள், "அட! கையெல்லாம் ஓங்குறீங்க? உங்க கையை தட்டி விட்டுட்டு, அதே மாதிரி உங்களை கை ஓங்க எனக்கு ஒரு நிமிஷம் ஆகுமா? வயசுக்கு மரியாதை கொடுத்து பொறுமையா இருக்கேன். அதை நீங்களே கெடுத்துக்காதீங்க!" என்றாள்.

அவள் கையை பிடித்து இழுத்த ஆனந்தி, "நிவி! போதும்" என்றார்.

"என்னை மன்னிச்சிடுங்க அத்தை. நான் வேணும்னு இப்படி பேசலை. நாக்குல நரம்பு இல்லைன்னா, யாரை வேணா எப்படி வேணா பேசலாமா அத்தை? நம்ம பேசுற ஒவ்வொரு வார்த்தையும் நம்மளை அடுத்தவங்க பேசுனா, எப்படி வலிக்கும்னு யோசிச்சு பேசணும் தானே அத்தை?" என கேட்ட நிவியின் கண்களிலிருந்து நீர் நிற்காமல் வழிந்தது.

"நிவி, வா நம்ம போகலாம்!" என்ற யுகி அவள் கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றான்.
"மாமா!" என எதோ பேச வந்தவள், "அமைதியா வர்ற நீ!" என்றவனின் வார்த்தைகளின் அழுத்தம், அவளை பேசவிடாமல் செய்ய, கணவனை மனம் கசங்க திரும்பி பார்த்தாள். கோர்த்திருந்த அவர்கள் கையை தான் வெறித்துப் பார்த்துக் கொண்டாருந்தான் சந்த்ரு. மறந்தும் அவன் பார்வை பெண்ணின் முகத்தை சந்திக்கவில்லை.

"அம்மா, வாங்க!" என சாந்தியை முன்னே அனுப்பினான். வித்யா அவரை பிடித்துக் கொண்டு நடந்தாள்.

"வித்யா!" என கோகிலா கத்த, அவரை திரும்பி முறைத்தவள், சாந்தியுடன் மகிழுந்தில் ஏறி அமர்ந்தாள். ஜோதியும் வீரபாண்டியும் ஏற, யுகியும் நிவியும் ஏறினர்.

ஓட்டுநர் கிளம்ப ஆயத்தமாக, "வித்யா, நீ இறங்கு டி!" என்றான் யுகி. அவனைப் பார்த்து தலையை இடம் வலமாக அசைத்தவளின் கண்களில் இறைஞ்சுதல்.

அதை கண்டுக் கொள்ளாதவன், "இருக்க பிரச்சனை போதாததுன்னு நீ வேற. முதல்ல இறங்கு!" என அவள கையை பிடித்து இழுத்து வெளியேற்றியவன், "அண்ணா! வண்டியை எடுங்க!" என்றான். திரும்பி பார்க்கவில்லை பெண்ணை. பார்த்தால் அவள் விழிநீர் தன்னை பலவீனப்படுத்தும் என அவன் அறிந்ததே!

விழிகளில் நீருடன் நின்றவள், வழியில் செல்லும் வாகனத்தை கையைக் காட்டி நிறுத்தி அவர்கள் பின்னே சென்றாள்.

நிவி குடும்பத்தை தவிர மற்றவர்கள் அனைவரும் வீட்டிலிருக்க, "என்னம்மா ஆனந்தி, உனககும் உன் புருஷனுக்கும் நல்லது செய்ய தானே நாங்க எல்லோரும் பேச வந்தோம். இப்படி அசிங்க படுத்துறீங்க சின்ன புள்ளையை பேச விட்டிட்டு இருக்கீங்க?" என வினவினார் உத்தமன்.

"மாமா, இது என்னோட, என் கணவரோட தனிப்பட்ட வாழ்க்கை.
மூனாவது மனுஷங்க வந்து பஞ்சாயத்து பண்ற வயசு இல்லை எங்களுக்கு. நாங்களாக பேசி தீர்த்து இருப்போம். என்கிட்டயும் சாந்தி அக்கா கிட்டேயும் இருக்க முதிர்ச்சி கூட உங்க கிட்ட இல்லைன்னு நினைக்கும் போது வேதனையா இருக்கு. சொந்தக்காரங்கன்றதுக்காக நீங்க பேசுன எல்லாத்தையும் என்னால நியாயப்படுத்த முடியாது. ஒரு பொண்ணை பத்தி அவதூறா பேசுறது நல்ல விஷயமா? என் புருஷன் மேல தான் தப்புன்னு அவரே ஒதுக்குக்கிட்டாரு. நானும் அதை ஏத்திக்கிட்டேன். அப்படி இருக்கும் போது நீங்க பண்ணது எதுவும் சரியில்லை. கோகிலா அண்ணி பேச்சை கேட்டு இருக்க வேலையை எல்லாம் விட்டுட்டு நீங்க வந்து இருப்பீங்க. இப்ப கிளம்புங்க!" என்ற ஆனந்தியின் வார்த்தையில் மூஞ்சியிலே அறை வாங்கிய உணர்வு. எதுவும் பேசாதவர்கள் கிளம்பி விட்டனர்.

இந்த உறவுகளெல்லாம் தனக்கு தேவையே இல்லை! என்ற மனநிலை ஆனந்திக்கு. அவர்கள் விடை பெற்றதும் கோகிலாவை நோக்கி அவர் பார்வை திரும்பியது.

"ஏன் அண்ணி, இப்போ உங்களுக்கு சந்தோஷமா? உங்க தம்பியும் தம்பி பொண்டாட்டி வாழ்ந்த வாழ்க்கையை பத்தி ஊரே பேசுற மாதிரி செஞ்சுட்டீங்கல்ல? இப்போ உங்களுக்கு மனசு நிறைவா இருக்கா?" என காட்டமாக வினவினார் ஆனந்தி.

இதுவரை தன்னை எதிர்த்துப் பேசியிறாத ஆனந்தி, தன்னை எதிர்த்து கேள்வி கேட்டதை பொறுக்க முடியாத கோகிலா, "ஆனந்தி, என்ன பேசுற நீ? கண்டவங்க எல்லாம் வந்து உரிமை கொண்டாட இது சத்திரம் இல்லை. என் தம்பி வீடு. அவனுக்காக தான் நான் எல்லாரையும் கூட்டீட்டு வந்தேன்!" என்றார்.

"அக்கா, யாரை நீ கண்டவங்கன்னு சொல்ற? சாந்தியை வா? அவ என்னோட காதலி. யுகி என் பையன். நான் செஞ்ச துரோகத்தை வெளிய யார்கிட்டேயும் சொல்ல கூட இல்லாம இத்தனை வருஷம் அவ வாழ்ந்த வாழ்க்கையை பத்தி உனக்கு தெரியுமா? சொல்லு? பெத்த அப்பன் யாருன்னு தெரியாமல் இத்தனை நாள் கஷ்டப்பட்ட என் பையன் யுகியைப் பத்தி தெரியுமா? எதையும் முழுசா தெரியாமல் பேச கூடாது. நீ முதல்ல மாமாவை கூப்ட்டு கிளம்பு!" என்ற அழகரின் வார்த்தைகள் கோகிலாவை அவமானப்படுத்தியது.

"யாரோ ஒருத்திக்காக கூட பொறந்த பொறப்பையே வேண்டாம்னு சொல்ற அளவுக்கு வந்துட்டல்ல? பார்த்துக்குறேன் டா!" என்ற கோகிலா விறுவிறுவென வெளியே செல்ல, வாஞ்சிநாதனும் அவர் பின்னே சென்றார்.

நடந்த களோபரம் முற்றுப் பெற்றதில் ஓயந்து போய் அழகர் அமர்ந்து விட்டார். சாந்தியின் குற்றம் சாட்டிய குரல் இப்போதும் செவிகளில் எதிரொலித்து சர்வ அவையங்களையும் நடுங்க வைத்தது அவரை. இத்தனை நாட்கள் தன் முகத்தைக் கூட காணாத சாந்தி, இன்று தன்னைப்
பார்த்து பேசியதை எண்ணி மகிழ கூட முடியாது அவர் விழிகளில் தேங்கி நின்ற கண்ணீர் விழிகளை இப்போதும் நிறைப்பது போல பிரம்மை. தளர்ந்து போய் அமர்ந்திருந்த மனிதரின் முன்னே தேநீரை வைத்து விட்டு நகர்ந்தார் ஆனந்தி. கண்கள் லேசாக பனித்தது அவருக்கு. பேசாது போனாலும் இந்த ஒரு வாரமும் தனக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் சரியாக செய்யும் மனைவியை எண்ணி.

சந்த்ரு அமைதியாக அறைக்குள் அடைந்து கொண்டான். மனம் வலித்தது. ஆசையாய் காதலித்து மனம் புரிந்த மனைவியை பிரியப்போவதை எண்ணி வலித்தது. ஆனால், இப்போதும் கூட யுகி அவளை அழைத்து செல்லும் போது ‌கோபம் வரத்தான் செய்ததது. அவள் என்னுடையவள் என கத்தி கூற மனது விழைந்தாலும், உணர்வுகள் துடைக்கப்பட்ட முகத்துடன் அவளைப் பார்த்தான் ஆடவன். எதோ திசையறியா கானகத்தில் தன்னை தொலைத்து விட்டது போல ஒரு எண்ணம். மனது பாரத்தை தாங்காது விழிகளில் நீர் வழிய, நிவியின் புடவை ஒன்றை எடுத்து அதை அணைத்து அவள் வாசத்தை சுகிக்க முயன்றான். வேண்டாம் என தள்ளி நிறுத்திய போதும், தன்னை அணைத்து காதல் சொன்ன மனைவியின் குரலும் உடலும் தன்னருகே இருப்பது போல தோன்றியது. எதுவும் பேசவில்லை. அவள் மீதிருந்த கோபம் காதலை மிஞ்சி விட, வாய்விட்டு கேட்டுவிட்டான் விவாகரத்தை. ஆனால், அதை எண்ணி எண்ணி இப்போது மருகிக் கொண்டிருக்கிறான் சந்த்ரு, நிவியின் கணவன்.


அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்க, எழுந்து சாந்தியின் காலருகே குனிந்த நிவி, "என்னை மன்னிச்சுடுங்க அத்தை. எனக்கு தெரியலை. இப்படி எல்லாம் கூட மனுஷங்க இருப்பாங்கன்னு. நான் ஆசைப்பட்டது எல்லாம் என் அத்தையும் என்னோட யுகி மாமாவும் இனியாவது சந்தோஷமா இருக்கட்டும்னு. ஆனால், இப்ப உங்க கண்ல வர்ற கண்ணீருக்கு நான் தான் காரணம்னு நினைக்க நினைக்க என்னை என்னால மன்னிக்க முடியலை. அவங்க உங்களை பேசுறதுக்கு நானே ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துட்டேன் இல்ல அத்தை? நான் தப்பு பண்ணிட்டேன் அத்தை.‌ என்னை திட்டுங்க அத்தை! என்னை அடிங்க அத்தை!" என சாந்தியின் கைகளைப் பிடித்து தன் முகத்தில் அறைந்தாள் நிவி.

அவளை இழுத்து அணைத்துக் கொண்டார் சாந்தி. "என்னோட மருமக இன்னைக்கு தைரியமா எல்லார் முன்னாடியும் எனக்காக பேசுனா. அதை விட வேற என்ன வேணும்? அவங்க அவங்க பண்ண பாவத்துக்கு அவங்க அவங்க அனுபவிப்பாங்க டா!" என்ற சாந்தி இப்போது ஓரளவுக்கு நிதானத்திற்கு வந்திருந்தார்.

அவரிடமிருந்து பிரிந்தவள், யுகி அருகில் சென்றாள். தாய் அடித்ததும் அவளை அழுது கொண்டே அணைக்கும் குழந்தையின் முகத்தை வைத்திருந்தவள், யுகி அருகில் சென்று நின்றாள். அவன் எதுவும் கூறாது நிற்க, அழுகைப் பொங்க, "மாமா!" என அழைத்தவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.

"சாரி மாமா! சாரி!" என சொன்னதையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தவளை சமாதானம் செய்தான் யுகி. ஆனால், அவன் மனதின் காயத்தை சமாதானம் செய்ய ஒருவரும் இல்லாது போயினர்.

வீரபாண்டியும் ஜோதியும் மகளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"அண்ணி, மதியத்துக்கு எதாவது சமைங்க. புள்ளைங்க காலைலயும் சாப்டலை!" என கூறிய சாந்தியை இப்போதும் வியந்துக் கொண்டாள் நிவி.

எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வித்யாவிற்கு தெரியும் யுகியின் மனம் எத்தனை வேதனையை தன்னுள் சுமந்து கொண்டிருக்கிறது என. தன் தாயின் செயலை எண்ணி அவளே அருவருத்துப் போனாள்.‌ ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு தாய்? என எண்ணுமளவிற்கு இருந்தது கோகிலாவின் செயல்.

"அத்தை, நீங்க ரூம்ல வந்து ரெஸ்ட் எடுங்க!" என நிவி சாந்தியை அறைக்கு அழைத்துச் செல்ல, வீரபாண்டி கடைக்குச் சென்றார்.

தனித்து விடப்பட்டனர் யுகியும் வித்யாவும். அவளருகில் வந்தவன், "நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு!" என அவள் கைகளை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றான்.

"மாமா, என் கையை விடுங்க. நான் எங்கேயும் போக மாட்டேன்!" என அவன் சட்டையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

"ஏன் டி? உங்க அம்மா செஞ்சது பத்தலைன்னு உன் பங்குக்கு இப்ப நீ செய்றீயா?" என கேட்ட யுகி மொத்தமாக அவள் முன்னே உடைந்து போனான். இத்தனை நேரம் எல்லார் முன்பும் இருந்த மனதைரியம் எல்லாம் இவள் முன்பு உடைந்து போய்விட்டது. மறுபுறம் திரும்பி கொண்டவன், "ப்ளீஸ் டி... இங்கேயிருந்து கிளம்பிடு!" என அறைக்குள் சென்று விட்டான்.

அவன் பின்னே அறைக்குள் நுழைந்த வித்யா, "மாமா, என் அம்மா பேசுனதை வச்சு என்னை வெறுத்துடாத! அவங்க பேசுனத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவங்க பேசுனதை எந்த காலத்திலும் நியாயப்படுத்த மாட்டேன். இதை வச்சு என்னை விட்றலாம்னு நினைக்காத! நான் முன்னாடியே சொன்னது தான்!" என! கூறிய வித்யா தன் கண்களை துடைத்துக் கொண்டாள்.

அவளை நிமிர்ந்து பார்த்த யுகியின் விழிகளில் நீர் தேங்கி நிற்க, ஒரு நொடி தவித்துப் போனவள் அவனருகில் சென்றாள். "மாமா!" என அவன் தலையை தன் வயிற்றில் அழுத்த, இத்தனை நேரம் யாரிடமும் கூற முடியாத துக்கங்கள் எல்லாம் இவளிடம் கொட்டி விட முனைந்தான் வார்த்தைகளால் அல்ல! விழி நீரால்!

சில நொடிகள் கழிய, அவளிடமிருந்து பிரிந்தவன், "என்னை நீ ரொம்ப பலவீனப்படுத்துற டி." என்றான் குரல் கரகரத்திருந்தது.

"மாமா, நான் உன்னோட பலவீனம் இல்லை. பலம்! அதை புரிஞ்சுக்கோ!" என்ற வித்யாவின் குரல் இப்போது தெளிவாக வெளிவந்தது.

"முதல்ல கிளம்பு டி. இங்க வந்ததுக்கு உங்க அம்மா என்ன பண்ண போறாங்களோ?" என்றவனின் பேச்சு கேலியாக வெளி வந்தன.

"என்னைப் பெத்த அம்மா தானே? கொலை எல்லாம் பண்ண மாட்டாங்க. நான் பார்த்துக்குறேன். உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்க பஞ்சாயத்துல என்னை நீ இன்வால்வ் பண்ண கூடாது மாமா. அதை புரிஞ்சுக்கோ!" என அவன் முன்னே கையை நீட்டி மிரட்டியவளைப் பார்த்து அவனுக்கு புன்னகை அரும்பியது.

"உன்னை கல்யாணம் பண்ணா, உங்க அம்மா தான் எனக்கு மாமியார்! அப்போ எப்படி இன்வால்வ் பண்ணாம இருக்கது?"

"மாமா, உனக்கு நல்ல சான்ஸ். என்னைக் கல்யாணம் பண்ணி, எங்கம்மாவை நீ எப்படி வேணா ஆட்டி வைக்கலாம். மருமகன் கொடுமை படுத்து!" என கூறியவள், விழியோரம் வழிந்த நீரை துடைத்தாள். அவள் கூறியதில் இத்தனை நேரமிருந்த அழுத்தம் குறந்ததை போல உணர்ந்தவனின் இதழ்கள் லேசாக புன்னகைக்க, அதை பார்த்து மனம் நிறைந்தவள், "வரேன் மாமா!" என விடை பெற்றாள்.

இரண்டு நாட்கள் கழிந்திருக்க, மற்றவர்கள் எல்லோரும் ஊருக்கு செல்ல ஆயத்தமாக, நிவியும் உடன் வந்தாள்.

"நிவி, நீ எதுக்கு மறுபடியும் அங்க. அப்புறம் இங்க ரெண்டு நாள் கழிச்சு வருவ. ஒழுங்கா உன் வீட்டுக்கு போ!" என்ற ஜோதியிடம்,
"ம்மா... இனிமே நம்ம வீடு தான் என் வீடு. நான் அங்க போறதா இல்லை!" என்றாள்.

அதிர்ந்த வீரபாண்டி, "நிவி, என்னம்மா சொல்ற?" என வினவினார்.

"ப்பா... இது நான் எடுத்த முடிவு இல்லை. உங்க மாப்ளை எடுத்த முடிவு தான். அவருக்கு என் கூட வாழ விருப்பமில்லையாம். டிவோர்ஸ் கேட்டாரு. தரேன்னு சொல்லிட்டேன்!" செய்தி வாசிப்பதை போல கூறியவளின் நெஞ்சம் அவனுடைய வார்த்தைகள் கேட்டு விம்மித் துடித்த கணங்கள் கண்முன்னே வந்து போயின.

"அடிப்பாவி! என்ன டி சொல்ற? மாப்ளை எதோ கோபத்துல பேசி இருப்பாரு. நானும் உங்க அப்பாவும் போய் பேசுறோம்!" என ஜோதி பதறினார்.

"என்ன பேச போற மா? என் புள்ளை வாயும் வயிறுமா இருக்கா, வாழ்க்கை பிச்சை போடுங்கன்னா... அப்படி ஒன்னும் நீ கேட்க தேவையில்லை. இது அவரா எடுத்த முடிவு. அதை நான் மதிக்கிறேன். என் பேச்சை மீறி யாரும் அந்த வீட்டுக்குப் போய் பேசுனீங்க, உங்களுக்கும் நான் பாரமா இருக்கேன்னு நினைச்சு எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போய்டுவேன்!" என அழுத்தமாக கூறியவளின் கண்கள் கலங்கி இருக்க, அதை யாருக்கும் காட்டாது மறுத்து விட்டாள்.

அதன் பின்னர் யார் சொல்லியும் கேட்காதவள், சந்த்ரு அனுப்பிய விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு, சம்மதம் தெரிவித்து விட்டாள். ஆறு மாதங்களில் நீதிமன்றம் அவர்களுடைய விவாகரத்தை உறுதி செய்தது. ஆனந்தி எத்தனை கெஞ்சியும், அழகர் கூறுவதை காதில் வாங்காத சந்த்ரு நிவியிடமிருந்து மணவிலக்கைப் பெற்றிருந்தான்.

"நிவி, நிவி... சென்னை வந்துடுச்சு டி!" என கூறிய ஜோதியின் குரலில் நிழலிருந்து நிஜத்திற்கு வந்தவள், "ஹம்ம்...இதோ வரேன் மா!" என சென்னை எழும்பூரில் மீண்டும் காலடி எடுத்து வைத்தாள்.

தொடரும்...
 
Member
Messages
99
Reaction score
69
Points
18
அடப்பாவிகளா இவங்களே பேசி தீர்த்திருக்கும் பிரச்சனைய பெருசு பண்ணி அசிங்கம் படுத்திட்டாங்க. இந்த கோகிலாவை அழகர் மட்டுமில்ல ஆளாளுக்கு ஒரு அறை விட்டிருக்கலாம்
 
Messages
69
Reaction score
43
Points
18
பஞ்சாயத்து பெருசுங்களுக்கு இதே வேலையா இருந்திருக்குமோ எடக்கு முடக்கா பேசுறது 😡😡😡😡😡😡😡😡
 
Active member
Messages
216
Reaction score
159
Points
43
இந்த கோகிலா தேவையில்லாத வேலை பண்ணி வைத்து இருக்கு 😠😠😠
 
Active member
Messages
178
Reaction score
105
Points
43
Avaga family pesi mudiga veydiya visayatha eppadi entha kogila panchayat panni vajuda☹️☹️ alagar inum 4 adi Sethu kuduthu eruganum . Nivi pesunathu ellam crt tha . Yuki shanthi Amma pavom tha Chandru shanthi Amma ku pesuran😭😭 . Vidhya yuki nalla pair tha entha kokila avaga love pandrathu theruja enna pannumo . Chandru nivi ya pakka chennai ku varuvana enna 😩😩
 
Top