• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 9

Administrator
Staff member
Messages
525
Reaction score
717
Points
93
அத்தியாயம் - 9


சாஹி முறைத்துக் கொண்டே வர அருள் உல்லாசமாக சிரித்துத் கொண்டும் அவளை சீண்டிக் கொண்டு வந்தான்.

விஷாலி தான் நிறைய பேசிக் கொண்டே வந்தாள் இருவரிடமும்.

காரை ஒரு வீட்டின் முன் நிறுத்தியவன் கீழிறங்கி விஷாலியை தூக்கிக் கொள்ள சாஹி அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.


"இறங்கு டி, உனக்கு மட்டும் தனியா சொல்லனுமா" என்றிட,

"எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க? இது யார் வீடு" என்றாள்‌.

"சொன்னா தான் இறங்கி வருவியா?உள்ள போய் பார்த்தா தெரிய போகுது, வா" என்றவன் முன்னே நடக்க, "நம்ம கேட்டா எதுக்குமே பதில் வராது. நம்ம மட்டும் இவங்க சொல்றதை கேட்டு பின்னாடியே போகனும். திமிர் எல்லாம்" என முணங்கியவள் இறங்கி அவன் பின்பு செல்ல வாசலிலே ஒரு வயதானவர் வந்து, "வாங்க" என வரவேற்றார்.

தலையை அசைத்த அருள் சாஹியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று அமர்ந்தவன் அவரிடம், "இவங்க என்னோட மனைவி, இது பொண்ணு" என விஷாலியை காட்ட அந்த பெரியவர் சாஹியை பார்த்து சிரிக்க அவளும் புன்னகைத்தாள்.


விஷாலியை தூக்கிக் கொண்ட அந்த பெரியவர் அபிம்மா, "காபி கொண்டு வா" என குரல் கொடுத்து விட்டு விஷாலி கூட்டிச் சென்று அவள் கையில் சில சாக்லேட்டுகளை கொடுத்தார்.

சாஹிக்கு எதுவுமே புரியாதிருக்க ஒரு மாதிரி அமர்ந்திருந்தாள்.

அருள், "சாஹி, ஷாப்பிங் மால் கட்டலாம்னு முடிவெடுத்திருக்கேன் விஷாலி பெயர்ல. அதான் இடத்துக்கு அட்வான்ஸ் கொடுக்க வந்திருக்கோம். இவங்க தான் ஓனர். இவரோட பசங்க எல்லாம் பாரின்ல செட்டில் ஆகிட்டாங்க" என விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க வயதான பெண்மணி காபியுடன் வந்து இருவருக்கும் கொடுத்து விட்டு அருகில் அமர்ந்தார்.

அந்த வயதானவரும் விஷாலியுடன் வந்து விட அந்த பெண்மணி சாஹியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்க அவளும் பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

அருள், "சரிங்க சார், டைமாகிடுச்சு" என்றவன் கையில் வைத்திருந்த செக்கை சாஹியிடம் கொடுத்து அவர் கையில் கொடுக்குமாறு கூறினான்.

வேறு இடம் என்றால் அவனிடம் ஏதாவது பேசி வம்பிலுத்திருப்பாள். நல்ல காரியம் என்பதால் எதுவும் கூறாது கையில் வாங்கியவள் கடவுளை வணங்கி விட்டு அவர் கையில் கொடுக்க, "நீங்க கண்டிப்பா பெரிய அளவுக்கு வளரனும்" என்று கூற அருள், "ரொம்ப நன்றி சார்" என்றான்.

அவன் கிளம்புவதற்காக விஷாலியை தூக்கிக் கொள்ள அந்த பெண்மணி, "ஒரு நிமிஷம் இரும்மா" என வேகமாக பூஜையறை நுழைந்தவர் கையில் குங்குமமும் பூவும் எடுத்து வந்து அவளிடம் நீட்டி, "வீட்டுக்கு வந்தவங்களை சும்மா அனுப்ப கூடாது, எடுத்துக்கோம்மா" என்றார்.

குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டிலும் தாலியிலும் வைத்தவள் விஷாலி நெற்றியில் வைக்க அருள் அவளை தான் பார்த்திருந்தான். அவனது பார்வை அவளை தாக்க, என்ன நினைத்தாலோ தெரியவில்லை குங்குமத்தை எடுத்து அவன் நெற்றியிலும் வைத்து விட அவனது உதட்டோரத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.

பேச்சால் அருளை தள்ளி தள்ளி நிறுத்தினாலும் அவளது செய்கை வெகு நெருக்கமாகி விடுகிறது.


சில நிமிடங்களில் சாஹியையும் விஷாலியையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

காரில் ஏறிய இருவருக்குமே ஒரு வித இதமான மனநிலை வெகு நாட்களுக்கு பிறகு.

சாஹி அமைதியாக விஷாலியை மடியில் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்து வர அருளின் பார்வை அவளை தான் தீண்டிக் கொண்டிருந்தது நொடிக் கொரு முறை.


முதலில் விஷாலியை பள்ளியில் இறக்கி விட அவனை அணைத்து முத்தமிட்டவள் சாஹியின் கன்னத்திலும் முத்தமிட்டு இறங்கி சென்றாள். அந்த பிஞ்சின் மனது இதற்காக தானே நிறைய முறை ஏங்கி தத்தளித்தது.

காரை கல்லூரி நோக்கி செலுத்தியவன், "நெக்ஸ்ட் வீக்ல ரிஜிஸ்ட்ரேஷன் பண்ற மாதிரி இருக்கும். அதுக்கு நீ லீவ் போடனும்" என்றான்.

அவள் அவனை கேள்வியாக பார்க்க,

"ஆமா, இடத்தை உன் பேர்ல தான் வாங்கலாம்னு இருக்கேன்" என்று கூற,

"ஏன் நீங்க என் பேர்ல வாங்குனா நான் உங்க கூட வந்துருவேன்னு எதிர்பார்க்குறீங்களா?" என்றிட வண்டியை அப்படியே ப்ரேக் போட அவளும் ஒரு நிமிடம் கதவில் இடித்து தான் தன்னை நிலைப்படுத்தினாள்.


"ஏன்டி நீ இப்படி இருக்க? உனக்கு என்ன தான் பிரச்சனை?" என்றிட,

"சொன்னா மட்டும் தீர்த்து வச்சிட போறீங்களா?" என்றாள் கோபமாக.

"சாஹி நீ ரொம்ப ஓவரா பேசுற?" என்றவன் கையை மடக்கி ஸ்டியரிங்கில் குத்த,


"யார்? நானா?" என்றாள் நக்கலாக.

"நல்லா தானடி இருந்த. அப்புறம் திடீர்னு பைத்தியம் பிடிச்சுடுது" என்றிட அவனை முறைத்தவள்,


"உன்னை போய் விழுந்து விழுந்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ல்ல. அப்ப என்னை பைத்தியம் தான்டா சொல்லுவ" என்றவள் காரை விட்டு இறங்குவதற்காக கதவை திறக்க அவளது கைகளை பிடித்துக் கொண்டான் கதவை திறக்க முடியாத படி.

"அருள் கையை எடுங்க" என்றவள் பல்லைக் கடிக்க,

"முடியாது" என்றிட அவனிடமிருந்து கையை விடுவிக்க போராடியவள் முயற்சி தோல்வியில் முடிய அப்படியே அமர்ந்து விட்டாள்.


"சரி சொல்லு, எப்ப வீட்டுக்கு வர்ற" என்று கேட்க அவனை அலட்சியமாக பார்த்தவள் எதுவும் கூறாது முகத்தை திருப்ப அவளது முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன், "இப்படி பார்க்காத. மனுசனுக்கு கடுப்பாகுதுனு எத்தனை தடவை சொல்றது" என்று கூற அவனது கையை தட்டி விட்டவள்,

"எனக்கு டைம்கிடுச்சு, காரை எடுங்க இல்ல இறங்க விடுங்க" என்றாள் முகத்தில் கடுப்புடன்.

காரை சற்று ஓரமாக நிறுத்தியவன் அதில் தலை சாய்த்து படுத்து விட சாஹிக்கு தான் கோபம் அதிகமாகியது.


"அருள்....." என பல்லைக் கடிக்க,


"எதுக்குடி இவ்வளவு டென்சன் ஆகுற? அப்புறம் பீ.பி வந்தா டேப்லெட் போடனும், ரொம்ப கஷ்டம். என்னை பார் எவ்வளவு கூலா இருக்கேன் நீ எவ்வளவு கடுப்பேத்துனாலும்" என்றவன் சிரிக்க,


"உங்க வீட்டுக்கு என்னால வர முடியாது. நீங்க எப்ப கேட்டாலும் என்னோட பதில் இது தான்" என்று உறுதியாக கூற,


"ம்ம்..சரி டி, உன்னோட முடிவ நீ சொல்லீட்ட. என்னோட முடிவையும் ஏத்துக்க தயாரா இரு" என்றவன் வண்டியை கல்லூரியை நோக்கி செலுத்த சாஹிக்கு தான் அவனது பதிலை கேட்டு ஒரு நிமிடம் பயம் தோன்றியது.


'என்ன பண்ண போறார்னு தெரியலை' என நினைத்தவள் எதுவும் கூறாது அவனையே பார்க்க,


"சாஹி நான் என்ன அவ்ளோ அழகா வா இருக்கேன். என்னையவே பார்த்திட்டு இருக்க?" என்றவன் புருவம் உயர்த்த தனது முகத்தை சன்னல் புறம் திருப்பிக் கொள்ள அவனும் சிரித்தானே தவிர வேறதுவும் கூறவில்லை.


காரை கல்லூரி வாசலில் நிறுத்த வேகமாக கதவை திறந்து கீழே இறங்கியவள் திரும்பி பார்க்காமல் சென்று விட பெருமூச்சு விட்ட‌ அருள் காரை கிளம்பினான்.


அருள் கூறியதை கேட்டு எழில் சாப்பிடாமல் கை கழுவி விட்டு தனதறைக்குள் எழுந்து செல்ல திவ்யாவும் அவன் பின்பே சென்றாள்."ஏங்க பாதி சாப்பாட்டுல வந்தீங்க" என்று கேட்க,

"எப்படி டி சாப்பிட சொல்ற, உன் தம்பி பேசுறதை கேட்டு, கொஞ்ச நஞ்சமா எழுபது இலட்சம் டி" என்று கூற,

"ஏங்க வாங்குன காசை திருப்பி கொடுக்க தான செய்யனும். அதுக்கு எதுக்கு இப்படி பேசீட்டு இருக்கீங்க?" என்றாள்‌.


"ஐயோ திவ்யா! என்னைக்கு இருந்தாலும் மாப்பிள்ளைக்கு நான் திருப்பி கொடுத்திடுவேன் தான். ஆனா நானே இப்ப காசு இல்லாம நெருக்கடில மாப்பிள்ளை கிட்ட கேட்டுட்டு இருக்கேன்‌. எல்லாமே நஷ்டத்தில போகுது டி, பத்து இலட்சம் மட்டும் இருந்தா போதும். நான் இழந்தது எல்லாம் மீட்டுடுவேன். கண்டிப்பா மாப்பிள்ளை கிட்ட வாங்குன காசை வட்டி போட்டு கூட கொடுத்திடலாம். ஆனா மாப்பிள்ளை உடனே காசு கேட்கிறது தான் வருத்தமா இருக்கு. என்ன பண்ண போறேன்னே தெரியலை" என்று புலம்பி‌ முகத்தை பாவமாக வைக்க,

"சரி நீங்க பேசுறதை பார்த்தாலும் கஷ்டமா தான் இருக்கு. இந்த ஒரு தடவை நான் அம்மாகிட்ட பேசிப் பார்க்கிறேன் இல்லை அருள்கிட்டே நேரா கேட்டு பார்க்கிறேன்" என்றவள் வெளியே வர ஜெயா ஹரீஸை பள்ளிக்கு அனுப்புவதற்காக தயார் செய்து கொண்டிருந்தார்.

மகளின் கலக்கமான முகத்தை பார்த்து, "என்ன திவ்யா முகம் ஒரு மாதிரி இருக்கு?" என்று கேட்டு கொண்டிருக்க அவன் பள்ளி வாகனம் ஹாரன் சத்தம் வந்தது.


"இரும்மா வந்து சொல்றேன்" என்றவள் ஹரீஸை அழைத்து சென்று வேனில் ஏற்றி விட்டாள்‌.


தலையில் கை வைத்து அமர்ந்திருந்த எழில் மொபைல் ஒலிக்க எடுத்து பார்த்தவன், "இவனுங்க வேற நேரம் காலம் தெரியாம" என புலம்பியவன் அழைப்பை துண்டிக்க அது மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.


'விட மாட்டானுங்க போலயே' என நினைத்தவன் அழைப்பை ஏற்க,


"என்ன தலை இன்னும் ஆளை காணோம். ஒரு கை குறையுது தலை. வேகமா வாங்க" என்று கூற,

"யோவ் நீ வேற ஏன்யா, காசு இல்லை. ஏற்கனவே உனக்கு இருபது இலட்சம் தரனும். என் மச்சான் கிட்ட பத்து இலட்சம் கேட்டா தர மாட்றான். நானே கடுப்புல இருக்கேன்" என்றான்.


"காசு இல்லைனா என்ன தலை உன்னை பத்தி எங்களுக்கு தெரியாதா? வா நான் கடன் தரேன். வாங்கி விளையாடு ஜெயிச்சா மொத்தத்தையும் அடைச்சிடுவ, வா தலை" என அவனது ஆசையை தூண்ட தனது பிடறியை வருடியவன், "சரி பத்து நிமிஷத்தில வரேன்" என அழைப்பை துண்டித்து விட்டு வேகமாக வெளியே கிளம்பினான்.

ஹரீஸை அனுப்பி விட்டு வந்த திவ்யா ஜெயாவிடம் அமர எழில் வெளியே வந்தான்.

"எங்க கிளம்பிட்டீங்க" என்றவள் அவனருகில் வர,

"என்ன திவ்யா பண்றது? மாப்பிள்ளை கடனை அடைக்கனும்ல. அதான் ஒருத்தர்கிட்ட கடன் கேட்ருக்கேன். போய் பார்த்துட்டு வரேன். ஏற்கனவே ஒரு வாரமா அவர் ஆபீஸ் போய் வெயிட பண்னேன். ஆனா இல்லைனு சொல்லிட்டார். சரி வேற வழி இல்லை நம்ம பொண்டாட்டி பிள்ளைய காப்பத்தனும்னா நாலு பேர் கால்ல கூட விழுகலாம் தப்பில்லை" என்றவன் நகர்ந்து விட திவ்யா தான் சோகமாக ஜெயா அருகில் அமர்ந்தாள்.தொடரும்...

 
Top