• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 6

Administrator
Staff member
Messages
499
Reaction score
706
Points
93
அத்தியாயம் - 6



வேகமாக கிளம்பி விட்டாள். ஆனால் அவன் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லை. தெரு முனையிலே நின்று கொண்டவள் மீண்டும் அருளிற்கு அழைக்க அழைப்பு முழுவதுமாக சென்று துண்டாகியது.



விஷாலியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமே. வேறு வழியின்றி அவனது வீட்டிற்கு சென்றவள் காலிங்பெல்லை அழுத்தி விட்டு காத்திருக்க அருள் தான் கதவை திறந்தான்.


திவ்யாவும் ஜெயாவும் வெளியில் சென்றிருந்தனர். அவளை கண்டவுடன் ஒரு நொடி திகைத்தவன், "சாஹி" என்றிட "விஷாலி எங்க?" என்றாள்.

"ஹேய், என்கிட்ட கேட்குற? எனக்கு எப்படி தெரியும்" என்று கூற அவனது சட்டையை பிடித்தவள், "உண்மைய சொல்லுங்க? என் பொண்ணு எனக்கு வேணும். இல்லை அவ்வளவு தான்" என்று கூற,

"பைத்தியம் மாதிரி பேசாதடி, விஷாலி உன்கிட்ட தான இருந்தா? எங்கடி அவ?" என்றவன் அவளை பிடித்து உலுக்க,


அங்கேயே மடங்கி அமர்ந்து அழ ஆரம்பிக்க அருளிற்கு தான் தூக்கி வாரி போட்டது.


அவள் அருகில் அமர்ந்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி, "என்னடி ஆச்சு. தெளிவா சொல்லு முதல்ல. விஷாலி எங்க? ஸ்கூல்க்கு போகலையா?" எனக் கேட்க அவள் அழுகை அதிகமாகதே தவிர குறைய வில்லை. அவளால் அழுகையில் பதில் கூற முடியாமல் திணற அவளை கையை பிடித்து தூக்கியவன் உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்து அவளிற்கு தண்ணீர் கொடுக்க அதை வாங்க மறுத்தவள், "எனக்கு விஷாலி தான் வேணும்" என்றாள்.



அவளை முறைத்தவன் அருகில் அமர்ந்து தோளோடு அணைத்து, "முதல்ல குடி" என்று அதட்டி அவளுக்கு தண்ணீர் புகட்ட மெதுவாக குடித்தவள் சில நிமிடங்களில் தன்னை சமன் செய்தாள்.

அவள் ஆசுவாசமடைந்த பின், "சொல்லு, என்ன நடந்துச்சு?" என்று கேட்க,


"விஷாலி ஸ்கூல் வேன்ல ஏறவே இல்லை. அம்மா போன் பண்ணி சொன்னாங்க. நான் நீங்க தான் கூட்டிட்டு வந்திருப்பீங்கனு நினைச்சேன். நீங்களும் இல்லைனு சொல்றீங்க?" என்றவள் மீண்டும் அழ ஆரம்பிக்க,

"எதுக்குடி அழுகுற? வா போய் முதல்ல ஸ்கூல்ல போய் பார்க்கலாம்" என்று அவளை அழைத்துக் கொண்டு வெளியே வர அவளும் வேகமாக அவனுடன் வந்தாள்.

இருவரும் வெளியே வர திவ்யாவுடன் கோயிலுக்கு சென்ற ஜெயா உள்ளே நுழைந்தார்.

சாஹித்யாவை எதிர்பார்க்காதவர் அவளையே முறைக்க அவள் அவரை கண்டு கொள்ளாமல் எப்போதும் போல் அலட்சியமாக பார்த்தாள்.

அருள், "ம்மா...நான் கொஞ்ச அவசரமா வெளிய போகனும், வந்திடுறேன்" என்று கூற அவனது நெற்றியில் விபூதியை பூசி விட்டவர்,


"வெளியிலனா எங்கப்பா" என்றவரின் பார்வை சாஹியின் மீது படிய அவள் நகர்ந்து தனது ஸ்கூட்டியின் அருகில் சென்று அதை உயிர்பிக்க, "வந்து சொல்றேன்ம்மா" என்ற அருள், "சாஹி, கார்ல ஏறு" என குரல் கொடுத்தான்.



அவள் நகராமல் இருக்க வேகமாக வண்டியின் அருகில் சென்றவன், "தள்ளி நான் ட்ரைவ் பண்றேன்" என்று கூற இறங்கி அவனிடம் வண்டியை கொடுத்தவள் பின்னாடி ஏறிக் கொள்ள வேகமாக வண்டியை பள்ளியை நோக்கி செலுத்தினான்.


இருவரும் பள்ளிக்குள் நுழைய காவலாளி மட்டும் அமர்ந்திருந்தார்.

அவருக்கு தினமும் விஷாலியை விட வருவதால் சாஹியை தெரியும்.

அவரிடம் சென்றவள், "விஷாலி இன்னும் வீட்டுக்கு வரலை தாத்தா. இங்க இருக்காளா?" எனக் கேட்க,

"இல்லம்மா, எல்லா பிள்ளைகளுமே வீட்டுக்கு போயிடுச்சே" என்று கூற பெற்றவர்கள் இருவருக்குமே நிலை கொள்ள முடியவில்லை.

அருள், "இல்லையே அவ வரலை, நான் உள்ள தேடி பார்க்கட்டுமா" என்று வினவ,

"வாங்க பார்க்கலாம்" என காவலாளியும் அவர்களுடன் இணைந்து தேட ஆரம்பிக்க சாஹித்யா ஒரு புறமும் அருள் ஒரு புறமும் என பள்ளியை சுற்றிலும் தேடிக் கொண்டிருந்தனர்.


வெகுநேர தேடலுக்கு பிறகும் அவள் கிடைக்கவில்லை என்றவுடன் சாஹியின் அழுகை அதிகமாக அவளை அணைத்துக் கொண்ட அருள், "சாஹி, ரிலாக்ஸ். விஷாலி நம்மளை விட்டு எங்கையும் போக மாட்டா. கண்டிப்பா கிடைச்சுடுவா" என்று சமாதானம் செய்து கொண்டிருக்க சிவகாமியிடமிருந்து அழைப்பு வந்தது.

"சாஹி, விஷாலி வந்துட்டாம்மா. நீ வீட்டுக்கு வா" என்றிட அவள் வேகமாக அருளிடம் கூறினாள்.

அந்த காவலாளியிடம் நன்றி கூறிய அருள் சாஹித்யாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வர அங்கு விஷாலி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அருகில் ஒரு ஆட்டோ ட்ரைவர் அமர்ந்திருக்க சிவகாமி அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.


உள்ளே நுழைந்து வேகமாக விஷாலியை அணைத்துக் கொண்ட சாஹி, "எங்கடி போன?" எனக் கேட்க,

அவள் சிவகாமியை பார்த்தாள். அருள், "அத்தை இவர் யார்?" என்று கேட்க,

"இந்த தம்பி தான் நம்ம விஷாலியை பத்திரமா அழைச்சுட்டு வந்துச்சு. அவ ஸ்கூல்க்கு கொஞ்ச தூரம் தள்ளி இருக்க ரோட்ல நின்டு அழுதுட்டு இருந்திருக்கா" என்றார்.

அவரிடம் சென்ற அருள், "ரொம்ப நன்றிங்க" என்று கூற,

"பரவாயில்லை சார், இனி இது போல குழந்தையை தனியா விடாதீங்க. காலம் ரொம்ப கெட்டு போய் கிடக்கு. அதுவும் பொம்பளை பிள்ளை. பத்திரமா பார்த்துக்கோங்க" என்றவரிடம் சாஹித்யாவும் நன்றி கூற சிறிது நேரம் அவர்களிடம் பேசி விட்டு கிளம்பி விட்டார்.

சிவகாமி பேத்தி வந்து விட்ட சந்தோஷத்தில் எதுவுமே கேட்காமல் அவளுக்கு பசிக்கும் என்பதால் உடை மாற்றி உணவு கொடுத்து அமர வைத்திருந்தார்.

அவர் சென்றவுடன் அருள் மடி மீது அமர்ந்திருந்த விஷாலியை பிடித்து இழுத்து நிற்க வைத்த சாஹித்யா, "ஸ்கூல் முடிஞ்சது வேன்ல ஏறாம எங்க டி போன?" என்று அதட்டி கேட்க பயத்தில் தனது சட்டையை இறுக பிடித்திருந்தவள் எதுவும் கூறாது குனிந்திருந்தாள்.

அவளது முகத்தை நிமிர்த்தியவள், "கேட்குறேன்ல பதில் சொல்லுடி" என்று சற்று குரலை உயர்த்த விஷாலி கண்களிலிருந்த அருவியாய் நீர் வழிய ஆரம்பித்தது.

அருள், "அவ சின்ன குழந்தை, எதுக்கு இப்படி மிரட்டுற?" என்று கூறி விஷாலியை தன் புறம் இழுக்க அவனை முறைத்தவள்,

"விஷாலி, இங்க வா" என்று கோபத்துடன் கூற அருளை விலக்கி தள்ளி நின்றாள் குழந்தை.

"கேட்குறது பதில் சொல்லு" என்று சாஹி மீண்டும் கேட்க,

சிவகாமி, "ஏம்மா இப்படி பண்ற? அதான் அவ பத்திரமா வந்துட்டால்ல. பிள்ளைய போட்டு எதுக்கு படுத்துற?" என விஷாலியை தூக்க வர அவர் கையை பிடித்து தடுத்தவள்,

"ம்மா...நீங்க சும்மா இருங்க. இவ எங்க போனானு பதில் சொல்லனும்" என்று அவரையும் தள்ளி நிறுத்தியவள் விஷாலியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் அருளையும் சிவகாமியையும் மாறி மாறி பார்க்க இருவராலும் சாஹியை மீறி எதுவும் செய்ய முடியவில்லை.


"அவங்களை எதுக்கு பார்க்கிற? நான் கேட்டதுக்கு பதில் சொல்லு" என்று கேட்க அருளிற்கு எங்கு தான் அங்கிருந்தால் சாஹியிடம் சண்டை போட்டு விடுவோமோ என பயந்து வெளியே சென்று நின்று கொண்டான்.

விஷாலி அழுவதை அவனால் பார்க்க முடியவில்லை.

"ம்மா..நான் வேன்க்காக வெயிட் பண்ணீட்டு இருக்கும் போது அப்பா கார் மாதிரியே ஒரு கார் போச்சு. நானும் அப்பானு கூப்பிட்டுகிட்டே அது பின்னாடியே ஓடுனேன். அந்த கார் நிக்காம போயிடுச்சும்மா. நான் ஸ்கூல்ல இருந்த ரொம்ப தூரம் தள்ளி வந்ததிட்டேன். அப்புறம் திரும்பி போக வழி தெரியாம ஓரமா நின்டு அழுதுட்டு இருந்தேன். அப்ப அந்த ஆட்டோக்கார அங்கிள் தான் என்னை அழைச்சுட்டு வந்தார்" என்று தேம்பி தேம்பி ஒருவாராக கூறி முடித்து விட சாஹிக்கு அவள் கூறியதை கேட்டு கோபம் அதிதமாகியது.


"இது மாதிரி இனிமே பண்ணுவியா? ஒரு நிமிஷம் என் உயிரே என்கிட்ட இல்லை, அவர் நல்லவரா இருக்க போய் உன்னை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தார். இதே கடத்தீட்டு போயிருந்தா என்ன பண்ணி இருப்ப" என்றவள் ஓங்கி அவளை இரு அடி அடித்து விட சத்தம் உள்ளே வந்த அருளுக்கு கோபம் ஏகத்துக்கும் ஏறியது.

அவள் நிற்க வைத்து மிரட்டியதையே பொறுக்காமல் வெளியே நின்றவன் அடித்ததை கண்டவுடன் வேகமாக உள்ளே நுழைந்து சாஹியை இழுத்து ஒரு அறை விட சோபாவில் விழுந்தாள்.

சிவகாமி, "மாப்பிள்ளை" என்று வர,
"என்னை மன்னிச்சிடுங்கத்தை" என்றவன் விஷாலியை தூக்கி அவள் கண்களை துடைத்து விட்டான்.

அவனையே முறைத்த சாஹி கன்னத்தை பொத்தியப படியே எழுந்து அவனை பார்க்க, "இனிமே அடிக்கிற வேலை வச்சிக்கிட்ட கொன்னுடுவேன்" என விரல் நீட்டி எச்சரித்து விட்டு விஷாலியை தூக்கிக் கொண்டு வெளியேறி விட்டான்.


அவளிடம் என்ன நடந்தது என கேட்டு அறிந்து கொண்டவன்,

"எதுக்கும்மா இப்படி பண்ண? அப்பாவா இருந்தா உன்னை பார்க்காம போவேனா? உனக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்றது. கொஞ்ச நேரத்தில நாங்க எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா?" என்று பொறுமையாக எடுத்துக் கூறிட, "சாரிப்பா, இனிமே இப்படி பண்ண மாட்டேன்" என அழுகையோடு கூறினாள்.


"விஷாலி குட் கேள் தான. அழக் கூடாது. சரி உனக்கு சாப்பிட என்ன வேணும்" என கேட்டுக் கொண்டே அருகிலிருக்கும் ஹோட்டல்க்கு அழைத்து சென்று அவளுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தான்.

"ப்பா..எனக்கு வேணாம்" என்றவள் அவன் மார்பில் முகம் புதைக்க அவளை நிமிர்த்தியவன், "விஷாலி, இப்ப தான சொன்னேன். அடம்பிடிக்க கூடாதுனு. நீ சாப்பிடவே இல்லை, உனக்கு பசிக்கும்னு எனக்கு தெரியும்" என்றவன் அவளுக்கு வலுகட்டாயமாக உணவை ஊட்டி விட்டான்.


வெகு நேரத்திற்கு பிறகே விஷாலி நார்மலாக அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அவன் அடித்ததிலிருந்து அந்த இடத்தை விட்டு நகராமலே சாஹி அமர்ந்திருக்க சிவகாமி, "சாஹிம்மா" என அவள் தோளை தொட அவரை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவளது தலையை வருடியவர், "அவ சின்ன பொண்ணும்மா. ஏதோ தெரியாம பண்ணிட்டா. நம்ம கோபத்தை எல்லாம் அவ மேல காட்டுனா நம்ம மேல வெறுப்பு தான் வரும். விஷாலி புத்திசாலி பொண்ணும்மா. நீ ஒரு தடவை மாப்பிள்ளைய பத்தி பேசக் கூடாதுனு சொன்ன. அதுல இருந்து அவ உன்கிட்ட அதை பத்தி பேசுனதே கிடையாது. நீ அடிச்சப்ப பிள்ளை எப்படி அரண்டு போயிட்டா தெரியுமா?" என்றவர் அவளை அணைத்துக் கொள்ள, "ம்மா..எல்லாமே புரியுதும்மா. ஆனா நான் பெத்த வளர்த்த பிள்ளைய கண்டிக்க எனக்கு உரிமையில்லையா?" என்றாள் ஆதங்கம் கலந்த குரலில்.


"சாஹி, நீ கண்டிக்க கூடாதுனு யாருமே சொல்லலை. ஏற்கனவே அவ ரொம்ப பயந்து போயிட்டா. இந்த மாதிரி நேரத்தில நம்ம தான் அன்பா அரவணைச்சு பொறுமையா சொல்லனும்" என்றார்.

"அப்ப அருள் என்னை அடிச்சது சரினு சொல்றீங்களா?" என்றாள் கோபமாக.

"சாஹி, ஏன் இப்படி பேசிட்டு இருக்க நான் எப்ப அப்படி சொன்னேன். இப்ப கூட நீ அவசரபட்டு அடிச்ச மாதிரி தான் அவரும் பண்ணார். ரெண்டு பேர் மேலயும் தான் தப்பு இருக்கு. நீ முதல்ல சாப்பிடு" என்றவர் நேரத்தை பார்த்து விட்டு தட்டில் சாப்பாடு போட்டு எடுத்து வந்து அவளுக்கு ஊட்ட வர சாப்பிட மாட்டேன் என மறுத்து அமர்ந்திருக்க அவர் மகளை சமாதானம் செய்து கொண்டிருக்க அருள் விஷாலியுடன் உள்ளே நுழைந்தான்.


சோபாவில் சாஹி காலை தூக்கி மேலே வைத்து அதில் முகம் புதைத்திருக்க சிவகாமி அவளருகில் தட்டுடன் அமர்ந்திருந்தார்.


அவனை பார்த்த சிவகாமி எழுந்து கொள்ள விஷாலி அவனிடமிருந்து அவரிடம் தாவ குழந்தையை வாங்கிக் கொண்டார். சாஹி முகத்தை நிமிர்த்தவே இல்லை.

ஏற்கனவே அவளை அடித்த குற்றவுணர்வில் இருந்தவனுக்கு அவள் அமர்ந்திருக்கும் நிலை
மனதை பிசைந்தது.

சிவகாமிடமிருந்து தட்டை வாங்கியவன் அவளருகில் அமர சிவகாமி விஷாலியை தூக்கிக் கொண்டு அறைக்குள் புகுந்து கொண்டார்.





தொடரும்...

 
Member
Messages
84
Reaction score
14
Points
8
ரொம்ப பீலிங்கா இருக்கு... ரெண்டு பேரும் ஏன் இப்படி... 🥺
 
Top