• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 5

Messages
31
Reaction score
13
Points
8
அத்தியாயம் - 5

மாலை நேரம் மணி ஆறு ஆக, கோப்புகளை மூடி விட்டு வீட்டிற்கு அலுவலக காரில் வந்தாள் சஹானா. வீட்டிற்கு வர இன்னமும் நேரம் ஆகிற்று... ஆனால் அஹானா வந்த பாடில்லை.
கண்டுகொள்ளாமல் செல்லவும் முடியவில்லை...


ஏனோ காலையில் சமர் சொன்னது உண்மையாக இருக்குமோ என்று மனதைப் பிசைந்தது. இருப்பினும் தன்னைச் சமாதானம் செய்து கொண்டு அஹானாவை அழைக்க, அலைபேசி முழு ரிங் சென்று நின்றது... ஒன்றிற்கு மேற்பட்ட முறை சென்றும் பதில்
வரவில்லை... நேரம் போக போக பயம் வந்து ஒட்டிக் கொண்டது...

எட்டு மணிபோல வீட்டிற்கு வந்தான் சமர்ஜித். போலீஸ் ஷூவைக் கழற்றும்போது , " வீட்டுக்கு வெளிய போலீஸ் ஷூ அ கழற்றும்போதே மறக்காம போலீஸ் மூளையையும் கழற்றி வச்சுட்டு வா ... இல்ல நான் உன் தாலிய கழற்ற வேண்டி வரும் " என்று சஹானா சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்துத் தொலைக்க , மனம் வலியைக் கூட்டியது. ஷூவைக் கழற்றியவன், புது சமராக உள் நுழைந்தான்.

" சமர் ... நீ எங்கப் போய் தொலைஞ்ச... அஹானா இன்னும் வரவேயில்லடா... என்னனு பாரு... உன் ஃபோன் ல இருந்து கால் பண்ணிப்பாரு... " என்று அவள் போக்கில் கூற, சமரோ கையைக் கட்டிக் கொண்டு அவளையே உற்றுப் பார்த்தான். அவள் இன்னமும் அனாவைக் காணவில்லை என்ற பதற்றம் குறையாமல் பேசிக்கொண்டே தான் இருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் எதிரில் பதில் வராமையினால் அவனைப் பார்க்க, கடுப்பாகி விட்டாள். " என்ன பண்ற சமர்... உனக்கு நான் சொல்றது புரியலயா... அவ இன்னமும் வரல " என்று உரக்க கத்த, சமர் கூலாக பதில் தந்தான்.

" அப்படியா... வெயிட் அ மினிட்... ஆமா... நீ சொல்ற அஹானா யாரு " என்று புன்னகை மாறாமல் கேட்டானே பார்க்கலாம்... அவன் கேட்ட கேள்வியில் சஹானாவிற்கு குழப்பம் உண்டாகிற்று...




' நான் சரியா தானே சொல்றேன்... அஹானா யாரு னு கேக்குறான் ... என்னடா இது. இல்ல இல்ல... இவனுக்கு எதாவது மூளை ல அடிபட்டிருச்சா... அஹானா யாரு னு கேக்குறான்... முதல் குழந்தை னு இவன் தானே கொஞ்சுறதே... நான் சரியா தான் பேசுறேன்... ' என்று தன்னைத் தானே நிதானித்தவள் மீண்டும் அவனிடமே பேசினாள்.

" அடேய் சமர்... நீ லூசா... உன் விளையாட்ட பிறகு வச்சுக்க... அனா இன்னமும் வரலடா... " என்று சொல்லி வைக்க, " அத தான் நானும் சொல்றேன் மிஸ். சஹானா சமர்ஜித். அந்த அஹானா யாரு னு கேக்குறேன்... யா அவங்க உன்னோட தங்கச்சி இல்லையா... சாரி எனக்கு இப்ப தான் நினைவு வருது... ஆனா அவங்க விஷயத்துல நான் என்ன பண்ண முடியும் னு நீங்க நினைக்கிறீங்க... " என்று கேட்டானே பார்க்கலாம்... சஹானாவிற்கு காலையில் பேசியது அப்படியே நினைவு வந்திட்டது.
" அப்ப அவள பத்தி நான் எதும் சொல்ல கூடாது... தப்பு நடந்தாலும் ஏன் னு கேட்க கூடாது அப்படி தானே... " என்று சமர்ஜித் கேட்க, " அவளப் பற்றி நான் பாத்துப்பேன்... நீ கேக்க வேண்டாம்... " என்றவள் கடுப்புடன் வேலைக்குக் கிளம்பினாள். அது நினைவில் வர அய்யோ என்றானது.

" சரி சமரா வேண்டாம்... அஸ் அ போலீஸ் அ ஆக்ஷன் எடுக்கலாமே " என்று கேட்க, அடுத்த பதில் வந்து கன்னத்தில் அறைந்தது போல இருந்தது.

" சாரி மிஸ் . சஹானா சமர்ஜித் அவர்களே... வெளில ஷூவை கழட்டும் போதே போலீஸ் வேலையை வெளிய விட்டுட்டு வந்துட்டேன்... இப்ப நான் சாதாரணமான குடும்ப தலைவன் மட்டுமே... அதுவும் உங்க தங்கச்சி அஹானா இல்லாத நான் நீ என்ற இருவர் மட்டுமே கொண்ட குடும்பம் இது... " என்று சொல்லி முடித்தான் சமர்.

இருவரின் விவாதம் நடக்க, கவினின் வண்டியில் வந்து இறங்கினாள் அஹானா. அஹானாவும் கவினும் எதோ கடுப்போடு இருந்தனர் போலும்... கேட் வாயிலைத் தாண்டி உள்ளே வந்தான்.

" எவ்வளவு தைரியம் இருந்தா என் பைக்கையே கஸ்டடி ல எடுத்துருப்ப " என்று கத்தியவன், கையை நீட்டி சமரை அறைந்தே விட்டான் கவின் . சமர் திரும்ப அடிப்பான் என்று எதிர்பார்க்க, புன்முறுவலைப் பரிசளித்து அறைக்குள் நுழைந்து கொண்டான். அதைப் பார்த்து அஹானாவிற்கே பக்கென்றானது. ஆனாலும் அப்பொழுது எதிர்க்க மனம் வரவும் இல்லை... ஆனால் அதற்கு மாறாக சனா, விட்டாளே பார்க்கலாம் ஒரு அறை...

" நீ எவனா வேணா இருந்துட்டு போ... ஒரு போலீஸ் அ கை நீட்டி அறையுற... செவுள் பிஞ்சுடும் ராஸ்கல்... அஹானா... உன் ஃப்ரெண்டுனா உன் லிமிட் ல இருக்கணும்... அப்புறம் இந்த வீட்டு கேட் வரை வர்றதே என் ஹஸ்பண்ட்க்கு புடிக்கல... அப்படி இருக்கைல இன்னைக்கு வீட்டுக்குள்ள வர்ற... கை நீட்டுற ... பல்லு பேந்திடும்... நைட் 9.00 வரை இங்க என்ன சுத்திட்டு இருக்க... கிளம்புடா வெளில... " என்று கத்த,
அவமானத்துடன் வெளியே கிளம்பினான்.

அஹானாவிடம் வந்தவள், " உனக்காக சமரை கைவிடுவேன் னு நினைக்காத... காலை ல கோவத்துல எதோ பேசினேன். ஆனா அவன் பேசுறது ல எதாவது உண்மை இருக்கும்.... உன்கிட்ட என்ன தப்பிருக்கோ திருத்திக்க... அதுதான் நல்லது... " என்றவள் தனி அறைக்குச் சென்றாள்.


சமருக்கு வலித்தாலும் உள்ளுக்குள் குளுகுளுவென தான் இருந்தது. அவனிடம் அடி வாங்கியது அவனுக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை... இதை எதிர்பார்த்து தான் வந்தான். லைசன்ஸ் இல்லாமல் வந்த வண்டியை தூக்கியது ... அடுத்து அவன் யூகித்தது போலவே வந்து நின்றாள் சஹானா .

" நீ ஏன் சமர் டிரான்ஸ்பர் வாங்குன... வீட்டு பிரச்சனையையும் ஆஃபிஸையும் இப்படி கனெக்ட் பண்ணுவ னு நான் நினைக்கல ... ரிவென்ச் அ.. " என்று சோகம் தாங்கிய குரலில் கேட்டாள் அவள்.

" ஓ... வீட்டுக்கு வந்தா ஆஃபீஸ் பத்தி பேச கூடாது னு நீ சொன்னதா எனக்கு நினைவு சனாமா... சரி இங்க வரியா இல்ல நான் என் தனி ரூம்ல தூங்கவா.... " என்று கேட்டு வைக்க, தன் வார்த்தைகள் தன்னையே வதைப்பதை எண்ணி நொந்து கொண்டாள் பெண்ணவள்.

அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து இப்படியே தான் அவள் சொன்ன வார்த்தையைக் குறிப்பிட்டுக் காட்டி கடந்து செல்வான் . அஹானாவிடம் முற்றிலுமாக பேச்சு தடைபட்டிருந்தது. உணவு என்ற ஒன்று தனித்தனியே செய்து உண்டு கொண்டு அவசரம் அவசரமாகக் கிளம்பியிருந்தனர் .

ஏனோ இந்த நாட்களில் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றியது உண்டு... பிரச்சனை மூழ்கையில் ஆணின் தயவை நாடி நின்று பழகிய பெண்களாய் இருந்தாள் அவள். சில பொழுதுகளில் பிரதமர் வேலையே கிடைத்தாலும் நம்மைச் சுற்றி பிரச்சனை மூழ்கையில் அந்தப் பதவி நமக்கு குமட்டிக்காயாய் கசக்கும்...அப்படி தான் அவளுக்கும்...

அக்கரைக்கு இக்கரை பச்சை... அதாவது வேலையில் இருக்கையில் வீட்டில் இருக்கலாமே என்று தோன்றும்... வீட்டில் இருக்கையில் வேலைக்கு போகலாம் என்று தோன்றும்... எல்லாம் நமது மனநிலையைப் பொறுத்தது...

****

இருவரும் ஒரு காட்சியைக் கண்டுகொண்டிருக்க வீட்டிற்கு வெளியே கார் வரும் சப்தம் கேட்க வெளியே வந்தனர் இருவரும் . வந்து பார்க்க அங்கு போலீஸ் அதிகாரி ஆரியனும் அவரது மனைவி பிரதீபாவும் கைக்குழந்தை கரீஷ்மாவும் கூடவே அவரது தம்பி அஸ்வினும் வந்திருந்தனர். ஆரியன் சமர்ஜித்தின் கல்லூரி தோழன். சமரின் திருமணத்தில் முன்நின்று நடத்தியவன். குடும்ப நண்பர்கள் என்பார்களே... அந்தப்படியே இவர்களும்...

" வா மச்சான்... " என்று சமர் அழைத்தபடி நடுக்கூடத்தில் அமர்ந்தான் . வழமையான குசல விசாரிப்புகள் ஆண்களிடையே நிகழ, பெண்கள் குடும்ப காரியங்களை விவாதிக்க, அஸ்வின் மட்டும் ஃபோன் நோண்டிக் கொண்டிருந்தான்... ஆண்களின் விவாதம் அஹானாவில் முடிய, ஆரியன் புது குண்டை போட்டு வைத்தான் சமரிடத்தில்...


தொடரும்...

கதை எப்படி போகுது தங்கம்ஸ்...


- என்றும் அன்புடன்
சில்வியா மனோகரன் 🌿
 
New member
Messages
13
Reaction score
12
Points
3
சாரி மா ‌‌... மன்னிச்சுடுங்க... இனிமே தொடர்ந்து போட்டுடுறேன் 🤗. அடுத்த அத்தியாயம் போட்டாச்சு 😁
But next epi varaliye sis.

Also y sorry. Unga story Nala iruku athan next episode keten
 
Top