- Messages
- 499
- Reaction score
- 706
- Points
- 93
அத்தியாயம் -5
சாஹி வெளியே வர கைகளை கட்டிக் கொண்டு அவளுக்காக காத்திருந்தான்.
தூரத்திலிருந்து அவளை பார்த்தவனுக்கு முதன் முதலில் அவளை பார்த்த நினைவு வர அவனது இதழில் புன்னகை அரும்பியது.
நேராக அவனிடம் வந்தவள், "சொல்லுங்க எதுக்கு என்னை வர சொன்னீங்க?" என்றாள் அவனின் கண்களை பார்த்து.
அவனுக்கு சாஹியின் திமிரின் மீது ஒரு ஈர்ப்பு என்றே கூறலாம். சில இடங்களில் இரசித்தாலும் சில இடங்களில் பொங்கி விடுவான்.
அவளையே சில நிமிடம் பார்த்தவன், "எனக்கு விஷாலி வேணும்" என்று கூற அவனை முறைத்தவள், "வேணும்னா நீங்க எந்த அர்த்தத்தில சொல்றீங்கனு எனக்கு புரியலை" என்றாள்.
"நீ என் கூட திரும்பி வர மாதிரி தெரியலை, நானும் இத்தனை வருஷம் வெயிட் பண்ணீட்டேன். விஷாலிக்கு நாலு வயசு ஆக போகுது. இனிமேலாவது என் பொண்ணு என் கூடவே இருக்கனும்னு ஆசைப்படுறேன். உன்னை கட்டாயபடுத்தி அழைச்சிட்டு போக எனக்கு விருப்பமில்லை.
நான் சொன்னாலும் நீ கேட்க மாட்ட அது எனக்கு நல்லா தெரியுது. உனக்கு நான் வேணாம்னு முடிவு பண்ணீட்ட. சரி என் பொண்ணை மட்டுமாவது என்கிட்ட கொடுத்துடு" என்று முழு முச்சாக பேசி முடித்து அவளை பார்க்க கோபத்தில் வேக பெருமூச்சுகளை விட்டு அவனை தான் தீயாய் முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் அமைதியாய் இருக்கவே, "வாயை தொறந்து பதில் சொல்லு டி. ஒன்னு பேசியே சாவடி இல்லை பேசாமலே சாவடி. ஏன் டி என்னை இப்படி படுத்துற?" என்று கூற,
"இவ்ளோ வயசாகியும் நீங்க உங்க அம்மா கூட இருக்கனும். ஆனா என் பொண்ணு அவ அம்மா கூட இருக்க கூடாது அப்படி தான" என்றாள் கோபமாக சிவந்த விழிகளுடன்.
"ஏன் டி நான் என்ன பேசுறேன். நீ என்ன பேசுற? இதுக்கு மேல என் பொண்ணை விட்டு என்னால இருக்க முடியாது. எனக்கு அவ வேணும்" என்று உறுதியான குரலில் கூற அவனையே அசராது பார்த்தவள்,
"போனா போகுதுனு வந்து பார்த்துட்டு போக பர்மிஷன் கொடுத்தா இப்ப பொண்ணை கேட்டு நிற்கிறீங்க? தப்பு தான் உங்க கிட்ட காட்டாமலே இருந்திருக்கனும்" என்று கூற நெருங்கி நின்று அவளது கழுத்தை பிடித்தவன், "கொன்னுடுவேன், என் பொண்ணை என்கிட்டே காட்ட மாட்டீயா? அவ என் பொண்ணு" என்று கூறி உறுத்து விழிக்க அவனது கைகளை எடுத்து விட முயற்சி செய்தவள் மூச்சுக்காக ஏங்க அவனே கைகளை எடுத்து விட்டான்.
கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள், "இவளை எது பண்ணாலும் யார் கேட்பானு நினைக்கிறீங்களா? என் பொண்ணு மேல மட்டும் கை வச்சீங்க அப்ப தெரியும் இந்த சாஹித்யா யார்னு?" என்று விரல் நீட்டி எச்சரிக்க அவளது விரல்களை வளைத்தவன், "என் பொண்ணை எப்படி வாங்கிறதுனு எனக்கு தெரியும்" என்று கூற,
"சரி, உங்களால முடிஞ்சா வாங்கிக்கோங்க" என்றாள் திமிராக.
அவளை முறைத்துக் கொண்டிருந்தவனின்
எண்ணமெல்லாம் மகள் மட்டுமின்றி மனைவியும் தன்னுடன் வர வேண்டும் என்பதே. ஆனால் நேரடியாக சொல்லியிருந்தால் சாஹி அவனை ஒரு வழி செய்திருப்பாள். அதனாலே முதலில் மகளை தன்னிடம் கொண்டு வந்து விட்டாள் அடுத்து மனைவியை எளிதாக அழைத்துக் கொள்ளலாம் என நினைத்தான்.
உள்ளிருந்து சிவகாமி, "சாஹி" என உரத்த குரலில் அலற அவள் வேகமாக வீட்டிற்குள் நுழைய அருளும் அவள் பின்பே வந்தான்.
சிவகாமி விஷாலியை தன் மடியில் வைத்திருக்க அவளுக்கு பிக்ஸ் வந்து ஒரு கை கால் இழுத்திருந்தது.
"ஐயோ விஷாலி" என்ற சாஹித்யா அவளை தூக்கி கன்னத்தில் தட்ட வாயிலிருந்து நுரையாக வந்தது.
சிவகாமி, "நான் பாத்ரூம் போக எழுந்தேன். இவளும் எழுந்து தண்ணி கேட்டா, கிச்சன் போய் எடுத்து வரதுக்குள்ள இப்படி கிடக்கா" என்றவரின் அழுகை அதிகமாக,
அருள், "வா, டாக்டர்கிட்ட போகலாம்" என அவசரமாக விஷாலியை சாஹியிடமிருந்து பெற்றுக் கொண்டு கார்க்கு விரைய அப்போது சிவகாமி அருளை பார்த்தார். ஆனால் அதை கேட்கும் நிலையில் இல்லாததால் சாஹியின் கையை பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றவர் காரில் ஏறி விஷாலியை மடியில் வைத்துக் கொள்ள அவரின் அருகில் அமர்ந்திருந்த சாஹிக்கு ஏதோ பிரம்மை பிடித்தது போல் இருந்தது.
அவளால் விஷாலிக்கு மட்டும் ஏதாவது என்றால் தாங்கவே முடியாது முழுவதுமாக உடைந்து விடுவாள்.
சிவகாமி, "இவளுக்கு நான் சளி பிடிக்காம தான வச்சிருந்தேன். அப்புறம் எப்படி இப்படி வந்துச்சு" என அழுகையோடு புலம்ப அருள், "அத்தை, விஷாலிக்கு இது மாதிரி ஏற்கனவே வந்திருக்கா?" என்றிட,
"ஆமாம் மாப்பிள்ளை, அடிக்கடி வரும். இப்ப தான் கொஞ்சம் அவளை இந்த ஐஸ்கிரீம் இதெல்லாம் சாப்பிட விடாம வைச்சு பார்த்துக்கிறேன். டாக்டர் சொல்லி இருக்காங்க" என்றிட சாஹி அருளை தான் முறைத்தாள்.
மாலையில் விஷாலி ஐஸ்கிரீம் உடன் நின்றிருந்த போதே சாஹிக்கு கடுப்பு தான். ஒன்று தான எதுவும் செய்யாது என அவள் நினைத்துக் கொண்டிருக்க அருள் அவளை பீச்சிற்கு அழைத்து சென்று விட்டான். வெகுநேரம் உடை மாற்றாமல் ஈரத்தோடு இருந்ததும் சேர்ந்து மீண்டும் வந்து விட்டது.
ஐஸ்கீரிம் சாப்பிட்டது மட்டும் தான் சாஹிக்கு தெரியும் இல்லையென்றால் இப்பொழுதே அருளை ஒரு வழியாக்கி இருப்பாள்.
அருள் அவர்கள் வழக்கமாக செல்லும் மருத்துவமனையை கேட்டுக் கொண்டு அங்கு அழைத்துச் செல்ல விஷாலியை உள்ளே அனுமதித்தவர்கள் மருத்துவர் வருகைக்காக காத்திருந்தனர்.
சில நிமிடங்கிளில் உள்ளே வந்த மருத்துவர் செவிலிய பெண்ணிடம் தனது ஸ்டெதெஸ்கோப்பை வாங்கி அணிந்து கொண்டு சாஹியை நோக்கி வந்தவர், "வாட் ஹாப்பண்ட் சாஹி? நல்லா தான இருந்தா. எப்படி திடீர்னு" என்றிட சாஹி, "தெரியலை டாக்டர் திரும்பவும் வந்திடுச்சு" என்றாள்.
மருத்துவர் விஷாலியை அனுமதித்திருக்கும் அறைக்குள் நுழைந்து கொள்ள சாஹி அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
அவர்கள் பேசுவதை கேட்டு அருளிற்கு தான் குற்றவுணர்வாக இருந்தது. அவன் ஒரு புறம் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க சிவகாமி தான் அழுது கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர், "சாஹி, அவளுக்கு ஒன்னுமில்லை, ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கேன். திரும்பவும் ஐஸ்கீரிம் குடுக்காதீங்க. கோல்ட் பிடிக்கிற அளவுக்கு எதையும் செய்யாதீங்க.கொஞ்ச நாள் அவளை கவனமா பார்த்துக்கோங்க" என்று கூற அருள், "இப்ப விஷாலியை பார்க்கலாமா டாக்டர்?" என்றான்.
அவனை புருவம் சுருக்கி பார்த்தவர், "சாஹி, இவர் யார்?" என்றிட அவள் என்ன கூறுவாள் என்றே அருள் அவளை பார்த்திருக்க சில நிமிட அமைதிக்கு பிறகு, "விஷாலியோட அப்பா டாக்டர்" என்றாள்.
"ஓஓ...பாரின்ல இருக்கார்னு சொன்னீங்கல்ல" என்றவர் அருளிடம், "ஹாய் ஐயம் சந்துரு. என்னோட சிஸ்டர் சாஹித்யா ஸ்டூடண்ட் தான்" என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள அவரின் கைகளை பற்றி குலுக்கிய அருள் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
சில நிமிடம் அவரிடம் பேசிய அருள் விஷாலி அறைக்குள் வர சாஹி ஓரமாக அமர்ந்து விஷாலியையே பார்த்துக் கொண்டிருக்க சிவகாமியும் மற்றொரு புறம் அமர்ந்திருந்தார்.
அவன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அவனை கண்டு கொண்ட சிவகாமி, "உட்காருங்க மாப்பிள்ளை, நான் வெளியில இருக்கேன்" என எழுந்து கொள்ள, "இல்லத்தை நான் வெளியில இருக்கேன்" என அருள் மறுக்க அவனை அமர வைத்த சிவகாமி வெளியேறி விட்டார்.
விஷாலியின் அருகில் அமர்ந்து அவளின் தலையை வருடியவன் அப்படியே அமர்ந்து சாஹியை பார்க்க விஷாலி கையை தன் கையுடன் பிணைத்தவள் கட்டிலில் தலையை சாய்த்து படுத்திருந்தாள்.
அருளிற்கு அவளிடம் செல்ல வேண்டும் அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. ஆனால் தான் அருகில் சென்றால் அவள் வெகு தூரம் விலகி சென்று விடுவாளோ என்று பயம்.
உறங்கும் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள். தான் சிறிதளவு இறங்கி சென்று அவளிடம் பேசியிருக்கலாமோ என்று இப்பொழுது தோன்றியது. அப்படி செய்திருந்தாள் இன்று என் சாஹி என்ன விட்டு போயிருக்க மாட்டா. அவளை நான் ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்.
இந்த மாதிரி எத்தனை தடவை தனியா ஹாஸ்பிட்டல் வந்திருப்பா. அவ என்னை தேடுனப்ப எல்லா நான் அவ கூட இல்லையே. அப்புறம் எப்படி இப்ப மட்டும் அவ என்னை ஏத்துக்குவா? என்று பல்வேறு எண்ண அலைகளில் சிக்கி சுழன்றவனுக்கு மனைவி மகளின் நிர்மலமான முகம் அதிகமாக தாக்கியது.
சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்து வெளியே வர சிவகாமி அமர்ந்த நிலையிலே சுவற்றில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தார்.
இவன் வரும் அரவம் கேட்டவர் கண் விழித்து விட, "அத்தை, வாங்க உங்களை வீட்டுல விடுறேன். விஷாலி கண் விழிச்சதும் நானும் சாஹியும் அழைச்சுட்டு வரோம்" என்று கூற, "இல்லை மாப்பிள்ளை நானும் உங்க கூடவே இருக்கேன்" என்றார்.
"பரவாயில்லத்தை வாங்க" என அவரின் கை பிடித்து அழைத்து செல்ல அவரும் எழுந்து சென்று விட்டார்.
அவருக்கும் வயது முதிர்ச்சியின் காரணமாக கை கால் முதுகு வலி என உடம்பில் பல பிரச்சனைகள் உள்ளது. அதை விட மகள் இந்த வயதிலே இப்படி தனியாய் நிற்பதை குறித்து கவலையிலே இரத்த அழுத்தமும் வந்து விட்டது. அவர் அருளை குறித்து பேச ஆரம்பித்தாலே சாஹி இரண்டு நாட்கள் தாயிடம் முகம் கொடுத்து பேச மாட்டாள். அதனாலே முதலில் அவளிடம் பேச்சு கொடுத்தவர் அவள் நடவடிக்கையால் ஒதுங்கிக் கொண்டார். இருந்தாலும் பெத்த மனது தவிக்க தான் செய்தது.
யார் சரி தவறு என அவர் வாதாட வில்லை. விட்டு கொடுத்திருக்கலாமே என்று தான் பேசிடுவார். அவருக்கு அருளை மிகவும் பிடிக்கும். அதை அருளும் அறிவான்.
சாஹியும் அவன் மீதே உயிரையே வைத்திருந்தாள் தான். தந்தையிடம் போராடியே அருளை கரம் பிடித்தாள் ஆனால் ஏனோ விரிசல்? இருவருமே தங்கள் தரப்பை மட்டும் யோசிக்க இந்த நிலையில் நிற்கின்றனர்.
சிவகாமியை வீட்டில் விட்டவன் நேரத்தை பார்க்க மணி அதிகாலை மூன்றை தொட்டுக் கொண்டிருந்தது.
"அத்தை, நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் அவங்களை பத்திரமா கூட்டிட்டு வரேன்" என்று கூற, "சரிங்க மாப்பிள்ளை" என்ற சிவகாமி உள்ளே சென்று விட அருள் மீண்டும் மருத்துவமனை செல்ல சாஹியும் விஷாலியும் உறங்கி கொண்டிருந்தனர்.
விடியும் வரை அங்கேயே அமர்ந்திருந்தவன் அங்குள்ள கேண்டீன் சென்று காபி குடித்து விட்டு அவர்களுக்கும் வாங்கி வந்து வைத்திருந்தான்.
வெகுநேரத்திற்கு பிறகே இருவரும் கண் விழிக்க விஷாலியின் அருகில் சென்ற அருள், "எப்படி டா இருக்கு" எனக் கேட்க அவன் மேலே சாய்ந்து கொண்டவள், "கொஞ்சம் டயர்டா இருக்குப்பா" என்று கூறினாள்.
சாஹி அருகில் தான் அமர்ந்திருந்தாள் இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே.
வேகமாக கப்பில் காபியை ஊற்றிய அருள் விஷாலிக்கு கொடுத்து கொண்டிருந்த உள்ளே நுழைந்த செவிலி, "மேம், உங்களை டாக்டர் கூப்பிடுறாங்க" என்று சாஹியிடம் கூறி சென்றார்.
அவள் எழுந்து கொள்ள, "நீ இரு, நான் போறேன்" என அவளுக்கு காபி ஊற்றி வைத்தவன் டாக்டரை பார்க்க சென்றான்.
மருத்துவரிடம் பேசி விஷாலி உடல்நிலையை அறிந்து கொண்டவன் அவளுக்கான மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வந்தான்.
சாஹி காபியை குடிக்காமல் அதையே பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்க விஷாலி, "ம்மா..காபிய குடிங்க, சூடு குறைஞ்சா உங்களுக்கு பிடிக்காதே" என கப்பை அவள் முன் தள்ளி வைக்க மறுக்க முடியாதவள் எடுத்து குடித்தாள்.
சிறிது நேரத்தில் உள்ளே வந்த அருள், மாத்திரைகளை சாஹியிடம் கொடுத்து விட்டு விஷாலியை தூக்கிக் கொண்டு, "வீட்டுக்கு அழைச்சுட்டு போக சொல்லிட்டாங்க" என்றவன் வெளியேற சாஹியும் எழுந்து அவன் பின் வந்தாள்.
அருள் பில் கட்டுவதற்காக நிற்க சாஹி, "நான் கொடுக்கிறேன்" தனது கார்டை எடுத்து நீட்ட அருள், "தேவையில்லை, என் பொண்ணுக்கு நான் தான் கொடுப்பேன்" என பணத்தை நீட்ட அங்கிருக்கும் வரவேற்பாளினி இருவரையும் மாறி மாறி பார்க்க அவனை முறைத்த சாஹி கார்டை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டாள்.
அருளிற்காக காத்திருந்தவள் அவன் வந்தவுடன் விஷாலியை வாங்குவதற்காக கையை நீட்டிட அவளை கண்டு கொள்ளாது காரில் ஏறியவன் விஷாலியை அருகில் அமர வைத்து காரை ஸ்டார் செய்தான்.
சாஹி அவனை தான் முறைத்துக் கொண்டு கைக்கட்டி நின்றிருந்தாள்.
காரை அவள் முன் நிறுத்தி கதவை திறந்து விட்டவன், "ஏறு" என்று கூற பதில் கூறாது நின்றவள் நடக்க ஆரம்பிக்க வேகமாக காரில் இருந்து இறங்கிய விஷாலி அவளின் கையை பிடித்து, "ம்மா..ப்ளீஸ் வாங்க" என முகம் சுருக்கி கெஞ்சினாள்.
அவளது முகத்தை பார்த்தவள் வேறெதுவும் கூறாது அவளை தூக்கிக் கொண்டு காரில் ஏற காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.
விஷாலி தான் அருளிடம் பேசிக் கொண்டே வர அவன் பதில் கூறிக் கொண்டிருந்தான். சாஹித்யா முகத்தை திருப்பிக் கொண்டவள் வெளியில் வேடிக்கை பார்த்திருந்தாள்.
காரின் சத்தம் கேட்டு வெளியே வந்த சிவகாமி சாஹியிடமிருந்து விஷாலியை வாங்கியவர் அருளை, "உள்ள வாங்க மாப்பிள்ளை" என்றழைக்க, "இல்லத்தை, நைட்ல இருந்து வீட்டுக்கே போகலை. இன்னொரு நாள் கண்டிப்பா வரேன்" என்று கூறி கிளம்பி விட்டான்.
இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்த சாஹித்யா அருகிலே இருந்து விஷாலியை கவனித்து கொண்டாள்.
அருள் தினமும் காலை மாலை வந்து பார்த்துச் சென்றான்.
சாஹி அவன் வந்தவுடன் எழுந்து தனதறைக்குள் புகுந்து கொள்வாள். அவன் விஷாலியிடமும் சிவகாமியிடமும் பேசி விட்டு சென்று விடுவான்.
அன்று விஷாலிக்கு முழுவதுமாக உடல்நிலை தேறி விட அவளை பள்ளியில் விட்ட சாஹித்யா கல்லூரி கிளம்பி விட்டாள்.
மாலையில் பள்ளி வேனில் வீடு திரும்பும் விஷாலியை அழைத்து செல்வதற்காக வாசலில் காத்திருந்தார் சிவகாமி.
வேனில் இருந்து மற்ற குழந்தைகள் இறங்கி விட டிரைவரிடம் சென்று, "விஷாலி எங்கப்பா?" என்று கேட்க வேனில் பார்வையை செலுத்தியவன் "அந்த பொண்ணு ஏறவே இல்லம்மா" எனக் கூறி கிளம்பி விட்டான்.
"வேன்ல ஏறலையா? ஒரு வேளை சாஹித்யா கூப்பிட்டு போயிருப்பாளோ?" என்று நினைத்தவர் அவளை தொடர்பு கொண்டு, "சாஹி, விஷாலி ஸ்கூல் வேன்லே ஏறலையாமே. நீ அழைச்சுட்டு போனீயா?" என்றிட ஒரு நிமிடம் பதறியவள், "என்னம்மா சொல்றீங்க. நான் க்ளாஸ்ல இருக்கேன். நான் எதுக்கு அவளை கூப்பிட போறேன். அப்படினாலும் உங்ககிட்ட சொல்லாம எப்படி செய்வேன்" என்றவள் சில நிமிடம் யோசித்து விட்டு, "சரி இருங்க நான் கூப்பிடுறேன்" என அழைப்பை துண்டித்தவள் வேகமாக அருளை அழைக்க அவனது அழைப்பு முழுவதுமாக சென்று துண்டாகியது.
'எப்படி வாங்கனும்னு தெரியும்னு சொன்னப்பவே நான் யோசிச்சிருக்கனும்...இவனை" என பல்லை கடித்தவள் தனது மேலிடத்தில் கூறி விட்டு வேகமாக ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அருளை பார்ப்பதற்காக புறப்பட்டு விட்டாள்.
தொடரும்...