• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 4

Administrator
Staff member
Messages
525
Reaction score
717
Points
93
அத்தியாயம் - 4அருள் சாஹியிடம் செல்ல, குனிந்திருந்தவளுக்கு யாரோ தன்னை நெருங்குவதை போல உணர்வு தோன்ற நிமிர்ந்து பார்க்க அருளும் அவளை மட்டும் தான் பார்த்திருந்தான் கண் எடுக்காமல்.


அவனுக்கு கோபம் அதிகமாக தான் இருந்தது. ஆனால் நெருங்கி அவளுடைய சோர்வான முகத்தையும் அமர்ந்திருந்த கோலத்தையும் கண்டவனுக்கு தன்னையும் மீறி மனதில் ஏதோ ஒரு வலி பரவுவதை தடுக்க முடியவில்லை.சாஹியும் அந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்கவில்லை தான். அவனை கண்ட நொடி மனதில் ஒரு இனம் புரியாத பரவசம் தான். அதை முகத்தில் காட்டாது இருக்க பெரும்பாடு பட்டாள்.

அவளை இழுத்து தன்னுடன் அணைக்க பரபரத்த கையை கடினபட்டே கட்டுப்படுத்திக் கொண்டான்.


வந்து விட்டான் ஆனால் என்ன பேசுவதென்று தெரியவில்லை. தன்னுடைய காதல் மனைவி தான் ஆனால் அவனிடம் ஏதோ தயக்கம்.

"வீட்டுக்கு போகலையா?" என்றான் தன்னை சமாளித்து.

அவனையே சில நிமிடம் பார்த்தவள் பதில் கூறாது இருக்க, "வாயை திறந்து பதில் கூட சொல்ல முடியாது போல, எல்லாம் திமிர்" என வாய்க்குள் முணுமுணுக்க அவளது காதிலும் அது தெளிவாக விழுந்தது.

ஆனால் அவள் இப்போது சண்டையிடும் மனநிலையில் இல்லை. அவளது உடலும் அதற்கு ஒத்துழைக்காது.அவள் அவனை முறைக்க, "வீட்டுக்கு கிளம்பு, அத்தை தேடீட்டு இருக்காங்க" என்றவன் காரை நோக்கி நகர அவள் அசையாமல் தான் அமர்ந்திருந்தாள்.

சிறிது தூரம் சென்றவன் திரும்பி பார்க்க அதே நிலையில் நகராமல் அமர்ந்திருக்க மீண்டும் அவளிடம் சென்றவன், "வாயை திறக்க தான் கஷ்டமாயிருக்கு. சொல்றது கூடவா காதுல விழலை" என்றான் பல்லை கடித்துக் கொண்டே.

அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தவள் முகத்தை திருப்ப அருளுக்கு ஏகத்துக்கும் கோபம் ஏறியது.

எப்பொழுதும் இதனாலே இருவரிடமும் சண்டை முட்டிக் கொண்டு நிற்கும். அருளிற்கு பொறுமை குறைவு. என்னவென்று விசாரிக்காமல் பேசி விடுவான். சாஹியும் அவன் இப்படி தான் என அலட்சியமாக கடந்து விடுவாள்.

அவளுடைய அலட்சியம் தான் அருளை அதிகம் தாக்கும். அவள் அவனிடன் வாயை திறந்து பேசி சண்டையிட்டாலோ இல்லை இரண்டு அடி கூட அடித்தாலோ பிரச்சனை முடிந்து விடும்.


அருள் அதை தான் எதிர்பார்ப்பான் ஆனால் அவள் அப்படி செய்திடாமல் அலட்சியமாக கடந்திடுவாள்.


"சாஹி, வீட்டுக்கு கிளம்பு. இந்த இடம் சேப்ட்டி இல்லை" என்று தன் கோபத்தை விட்டு இறங்கி வந்து கூற அவள் அசையவில்லை.


இதற்கு மேல் அவளிடம் என்ன எப்படி கூறுவது என்று அவனுக்கு தெரியவில்லை.

சில நிமிடம் பொறுத்திருந்த விஷாலி இறங்கி வந்து விட்டாள். வேகமாக வந்தவள் சாஹியை இடையோடு அணைத்துக் கொள்ள அவளது நெற்றியில் முத்தமிட்டவள், "நீயுமா வந்த?" என்றாள்.


அவர்கள் நெருக்கமாக இருப்பதை பார்த்து அருளுக்கு ஏதோ தன்னை தனித்து விட்டது போன்றதொரு உணர்வு.


"ஆமாம்" என தலையாட்டியவள், "ம்மா..வீட்டுக்கு போகாம இங்க என்ன பண்றீங்க?" என்று கேட்க,

"வண்டியில பெட்ரோல் இல்லை டா" என்றாள்.


அவளை அருள் தீப்பார்வை பார்த்திருந்தான். 'நான் கேட்கும் போது சொன்னா குறைஞ்சிடுவாளா? நான் என்ன அவ்ளோ வேண்டப்படாத விரோதியாகிட்டேனே' என அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.வேகமாக காரின் அருகில் சென்று நின்று கொண்டான்.

"ம்மா..அப்பா கார்ல போவோம். நேரமாகிடுச்சு பார்ங்க. பாட்டி வேற தேடப் போறாங்க" என்று பெரிய மனுசியாய் கூற,

வேகமாக, "இல்லடா, நீ போய் அப்பாகிட்ட பெட்ரோல் மட்டும் வாங்கி குடு. அம்மா வீட்டுக்கு போறேன்" என்றாள் தன் வண்டியில் இருந்த வாட்டர் பாட்டிலை நீட்டி.


அதை வாங்கிய விஷாலி அருளிடம் சென்று வாட்டர் பாட்டிலை நீட்டி சாஹி கூறியதை கூற சாஹித்யாவை வெறித்தவன் விஷாலியிடமிருந்து வாட்டர் பாட்டிலை வாங்கி தூர எறிந்து விட்டு அவளை தூக்கி காரில் அமர வைத்து, "இங்கே இருடா, வந்திடுறேன்" என்று கோபமாக அவளின் முன் சென்றவன், "வந்து கார்ல ஏறு" என்று அதிகாரமாக கூறி விட்டு திரும்பி சென்று டிரைவர் சீட்டில் ஏறி காரை எடுத்தான்.எடுத்தவன் நின்ற இடத்திலிருந்தே வண்டியின் வேகத்தை அதிகரிக்க சாஹி, 'நீ சொல்லி நான் கேட்கனுமா' என்று நினைத்தவள் வண்டியை தள்ளிக் கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பிக்க இப்போது அருளுக்கு தான் கோபம் ஏறியது.

விஷாலி முன் அவன் சண்டை போட விரும்பததால் தான் அவன் இவ்வளவு பொறுமையாக பேசிக் கொண்டிருக்கிறான்.

ஏற்கனவே இவர்கள் பிரிந்திருப்பதால் அவள் மனதளவில் அதிகமாக காயப்பட்டிருக்கிறாள் என்பதை அவனால் உணர முடிந்தது. மேலும் அவளின் முன்னாலே சண்டையிட்டால் அந்த பிஞ்சின் மனது துடித்து விடும் என்பதற்காகவே அருள் தன்னிலை இறங்கி வந்து பேசிக் கொண்டிருந்தான்.


வேகமாக அவள் ஸ்கூட்டியின் முன் வண்டியை நிறுத்தியவன் தன் வண்டியில் வைத்திருந்த பெட்ரோல் நிரம்பிய பாட்டிலை விஷாலியிடம் நீட்ட சன்னல் வழியாக சாஹியிடம் கொடுக்க எதுவும் கூறாது வாங்கி வண்டியில் ஊற்றியவள் வேகமாக பர்சில் இருந்து அதற்கான பணத்தை எடுத்து நீட்ட அருளுக்கு இறங்கி சென்று அவளை அடித்திடும் அளவிற்கு ஆத்திரம் தான். கைகளை மடக்கி தன்னை கட்டுப்படுத்தி கொண்டிருக்க விஷாலி கையில் திணித்தவள் வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு பறக்க அவள் தான் பெற்றவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.


அவளிடமிருந்த பணத்தை வாங்கிய அருள் கசக்கி எறிந்து விட்டு வண்டியை அதி வேகத்தில் செலுத்தினான்.


விஷாலிக்கு வீட்டில் இருக்கும் போதே உறக்கம் வந்தது. ஆனால் அதையும் மீறி அருளுடன் வந்தாள். வேகமாக செல்வதால் அடிக்கும் காற்றிற்கு கண்கள் சொருக உறங்கியும் விட்டாள் தந்தையின் தோள் சாய்ந்து.
அவனுடைய கோபமெல்லாம் உறங்கும் மகளை காணும் வேளையில் மறைந்திட அவளது சிகையை வருடியவன் வண்டியின் வேகத்தை குறைத்து, அவள் பின்னால் வருகிறாளா? என கண்ணாடியில் அடிக்கொரு முறை ஆராய்ச்சி செய்து கொண்டே செலுத்தினான்.


அருளிற்கு கோபம் கோபம் கட்டுக்கடங்காமல் சாஹியின் மீது பொங்கி வழிந்தது.

அவளுக்கு முன் வீட்டின் வாசலில் சென்று காத்திருக்க வண்டியை நிறுத்தியவள் அவனை ஒரு பார்வை பார்த்தாளே தவிர எதுவும் கூறாமல் காலிங்பெல்லை அழுத்த கதவை திறந்த சிவகாமி அவளை ஒரு வழியாக்கி விட்டார்.

"எவ்வளவு நேரம் உனக்காக காத்திருக்கிறது. எங்க போன? போனும் எடுக்க மாட்ற? இந்த வயசான காலத்தில ஏன்டி என்னை படுத்திற? இப்படி எல்லாம் பண்ணா நானும் சீக்கிரமே போய் சேர்ந்திடுவேன்" என பொரிந்து தள்ள அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தவள் அவர் ஓய, "ம்மா...என்ன நடந்ததுனு கேட்டுட்டு அப்புறம் பேசுங்க" என்றாள்.


சிவகாமியின் பார்வை இப்போது தான் அவளை தாண்டி கேட்டிற்கு வெளியே நின்ற அருளின் மீது படிய சாஹியை விலக்கி வெளியே அருளை நோக்கி சென்றார்.


அவள், "ம்மா.." என்றழைக்க அது காற்றோடு கரைந்தது. அவரை முறைத்தவள் உள்ளே தனதறைக்கு சென்று விட அருளின் அருகில் சென்ற சிவகாமி, "ரொம்ப நன்றி, இந்த நேரத்தில உங்களை தொந்தரவு பண்ணதுக்கு மன்னிச்சிடுங்க. உள்ள வாங்க மாப்பிள்ளை" என்றழைக்க,

"பரவாயில்லைத்தை, உங்களுக்கு நான் செய்யாம வேற யார் செய்வா?" என்று புன்னகை முகமாக கூறினான்.

சிவகாமியின் கண்கள் விஷாலி மீது படிய, "தூங்கிட்டாளா?" என்றவர் கதவை திறந்து அவளை தூக்கிக் கொண்டு, "வாங்க" என அவனை மீண்டும் அழைத்தார்.

"இல்லத்தை, இன்னொரு நாள் வரேன். நீங்க போங்க" என்று கூற அவர் விஷாலியை தூக்கி கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டார்.


காரை எடுத்த அருளிற்கு வீட்டிற்கு செல்ல மனமில்லாது காரிலே வேகமாக நேரம் இலக்கின்றி சுற்றித் திரிந்தான்.

உள்ளே நுழைந்து ப்ரெஷாகி வந்த சாஹிக்கு சிவகாமி உணவை எடுத்து வைத்தார்.

அவள் உண்ண ஆரம்பிக்க 'மகளிடம் காலையில் பேசி கொள்ளலாம்' என நினைத்தவர், "சாப்பிட்டு போய் படும்மா, விஷாலி தனியா தூங்கிறா? எந்திரிச்சா பயந்திடுவா. நான் போறேன்" என்றவர் அறைக்குள் நுழைந்து பேத்தியின் அருகில் படுத்துக் கொண்டார்.


"விஷாலியை விட்டு போயிட்டாரா? என் மேல இருக்க கோவத்தை அவ மேலயா காட்டுறது" என்று எப்பொழுதும் போல அவனையே சாடியவளுக்கு உணவு இறங்க மறுத்தது.

சிறிது நேரம் தட்டில் உள்ள உணவை கைகளால் அளந்து கொண்டிருந்தவள் அப்படியே கை கழுவி எழுந்து விட்டாள்.


உள்ளே வந்து படுத்தவளுக்கு உறக்கம் வர மறுத்தது. அருள் வந்து நின்றது அவனுடைய பேச்சு செய்கை எல்லாமே அவளை இம்சை செய்ய உறக்கம் என்னவோ விலகி சென்றது.

மொபைலை சார்ஜில் இருந்து எடுத்து உயிர்பித்தவள் சிறிது அதில் உலாவ ஆரம்பித்தாள்.


அருளிற்கு கண் மண் தெரியாத கோபம். 'நான் வா னு கூப்ட்டா வர மாட்டா. பெட்ரோல் வாங்கிட்டு காசு கொடுக்கிறா? எவ்ளோ திமிர் அவளுக்கு' என்று நினைத்தவனுக்கு ஆத்திரம் அடங்க மறுத்தது.

மீண்டும் வண்டியை சாஹியின் வீட்டின் முன் சென்று நிறுத்தியவன் அவளது மொபைலுக்கு தொடர்பு கொண்டான்.

மொபைலை பார்த்துக் கொண்டிருந்தவள் அழைப்பு வர எடுத்து விட்டாள்.

தன்னுடைய எண்ணில் இருந்து அழைத்தால் எடுக்க மாட்டாள் என உணர்ந்தவன் அலுவலக எண்ணிலிருந்து தொடர்பு கொண்டான்.


"ஹலோ, யார் பேசுறது" என்று கேட்க, "நான் அருள் பேசுறேன்" என்றவுடன் எதிர்புறம் ஒரே அமைதி நிலவியது.

"சாஹி" என்றிட பதிலில்லை. மொபைலை எடுத்து பார்த்தவன் அழைப்பு துண்டிக்கபட வில்லை என உறுதி செய்து விட்டு, "நான் உன்கிட்ட பேசனும். உங்க வீட்டு வெளிய தான் இருக்கேன். வரலைனா கதவை தட்டுவேன்" என்று விட்டு அழைப்பை துண்டித்தவன் காரை விட்டு இறங்கி கைகளை கட்டி நின்று வானத்தை வெறிக்க ஆரம்பித்தான்.


நேரத்தை பார்த்தவள், "ஒரு மணிக்கு வந்து பேசனுமா, வரலைனா கதவை தட்டுவேன்னு மிரட்டல் வேற? இத்தனை வருஷம் பேசாததையா இப்ப பேச போறார்" என சலித்தவள் எழுந்து முடியை தூக்கி கிளிப் போட்டு விட்டு ஒரு ஷாலை எடுத்து போர்த்திக் கொண்டு வேகமாக கதவை திறந்து வெளியே வந்தாள்.


தொடரும்...
 
Top