• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 28

Administrator
Staff member
Messages
499
Reaction score
706
Points
93
அத்தியாயம் - 28


அவனை பார்த்தவள் ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டு தன் வகுப்பறையை நோக்கி நகர அவனும் பின்பே சென்றான்.


திரும்பி பார்த்தவள், "அருள், ப்ளீஸ் இது காலேஜ். நீங்க இப்படி பின்னாடி வந்த எல்லாரும் என்ன நினைப்பாங்க. தயவு செஞ்சு போங்க" என இறைஞ்சும் குரலில் கேட்க,


"நான் உன் கூட பேசனும்" என்று கூற தன் தலையை சிலுப்பியவளுக்கு இவன் விட மாட்டான் என்று தோன்ற

"சரி வாங்க" என்று பல்லைக் கடித்தவள் அவன் காரை நோக்கி செல்ல புன்னகையுடனே அவள் பின் சென்று காரை எடுத்தவன் அருகிலிருக்கும் காபி ஷாபிற்கு செலுத்தினான்.

ஒரு டேபிளில் அமர இருவருக்கும் காபியை ஆர்டர் செய்ய,

"சீக்கிரம், எனக்கு க்ளாஸ்க்கு டையமாகிடுச்சு" என்று கூற அவள் புறம் திரும்பியவன்,


"எப்ப நம்ம வீட்டுக்கு வருவ?" என்றான் நேரடியாக.


அவனையே ஆழ்ந்து பார்த்தவள்,

"ஒரு திருத்தம், அது நம்ம வீடு இல்லை. உங்க வீடு" என்று கூற அவளை முறைத்தவன்,

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு?" என்றான் மீண்டும் இறுகிய குரலில்.

"அருள், என்னை பேச வைக்காதீங்க. நான் அங்க எப்பயுமே வர மாட்டேன். இதை உங்ககிட்ட அன்னைக்கே சொல்லீட்டேன். திருப்பி திருப்பி அதையே பேசாதீங்க கடுப்பாகுது" என்றாள் முகத்தை சுருக்கி.


"சாஹி, தப்பு பண்ணாதவங்க இந்த உலகத்தில யார் இருக்கா? ஏதோ ஒரு தடவை நடந்திருச்சு. இனிமே அப்படி நடக்காது. அதையே நினைச்சுட்டு இப்படி பிடிவாதமா இருந்து என்னத்த சாதிக்க போற. விஷாலிக்காகவாது யோசிக்க மாட்டீயா?"


"விஷாலி என் பொண்ணு. அவளை பார்த்துக்க எனக்கு தெரியும். நீங்க அதை பத்தி கவலைப்பட தேவையில்லை. நான் கல்யாணத்தன்னைக்கு உங்களை தேடி வந்ததுக்கு அவ்வளவு கேவலமா பேசி என்னை அசிங்க படுத்துனவங்க உங்க அக்கா.

அவங்களை பத்தி தெரிஞ்சும் நான் ஏன் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா நீங்க எனக்கு எப்பவுமே துணையா இருப்பீங்க. என்னை புரிஞ்சுப்பீங்கனு நினைச்சேன்.

பட் அது தப்புன்னு நீங்க நிரூபிச்சிட்டிங்க" என்றவளை இடை மறித்தவன்,

"அதான் நான் மன்னிப்பு கேட்குறேன்ல்ல. அப்புறம் என்னடி பண்ண சொல்ற. உன் கால்ல விழுகவா?" என்று சற்று எரிச்சலாக கேட்க,


"நான் எப்பயுமே உங்க மரியாதை எங்கையுமே இறங்காம பார்த்துக்கிட்டேன். எங்க அப்பா அம்மாகிட்ட கூட. ஆனா நீங்க அப்படி இல்லை. இப்ப என்னமோ நான் உங்களை கொடுமைபடுத்துற மாதிரி கால்ல விழுகவானு கேட்குறீங்க? நீங்க ஒரு தடவை என்னை பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்.


பேசுன உங்களுக்கு வேணா அது மறந்து போயிருக்கலாம். ஆனா எனக்கு. நான் ரொம்ப கஷ்டப்பட்டு மீண்டு வந்திருக்கேன்.

திரும்பவும் உங்க லைப்குள்ளயோ உங்க குடும்பத்துக்குள்ளயோ வர விருப்பமில்லை.

இன்னும் பத்து வருஷம் கழிச்சு இதே மாதிரி வேற ஒரு பிரச்சனை வரலாம். அப்பயும் நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை குற்றவாளி கூண்டில நிறுத்துவீங்க.

விலகி இருக்கது தான் நல்லது. என்னையும் என் பொண்ணையும் பார்த்துக்கிற அளவுக்கு எனக்கு சக்தி இருக்கு. நீங்க உங்க வழிய பார்த்து போங்க. என்னை தொந்தரவு பண்ணாதீங்க" என்றாள் மூச்சை இழுத்துக் கொண்டு."சாஹி, நீ என்ன சின்ன குழந்தையா? புரிஞ்சுக்காம பேசுற. அது நான் தெரியாம பண்ணது. ஆல்ரெடி நீ இத்தனை வருஷமா பேசாம இருந்து எனக்கு தண்டனை கொடுத்திட்ட. உனக்கு அடிக்கனும்னா கூட அடிச்சிக்கோ. இதுக்கு மேல எனக்கு எப்படி பேசுறதுனு சத்தியமா புரியல. என்னோட சூழ்நிலை தான் அன்னைக்கு நடந்ததுக்கு காரணம். நீயும் விஷாலியும் எனக்கு வேணும். ப்ளீஸ்" என்று குரலில் வலியை தேக்கி கேட்க,


"அருள் ஒரு விஷயத்தை முதல்ல நல்லா புரிஞ்சுக்கோங்க. எந்த ஒரு ரிலேஷன்ஷிப்க்கும் அடிப்படை என்ன தெரியுமா? நம்பிக்கை மட்டும் தான்.


அன்னைக்கு ப்ராப்ளம் நடந்த அன்னைக்கு நீங்க ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம். அவ ஏன் போனா? அவ அப்படி பண்றவ இல்லையேனு. ஆனா நீங்க செய்யலை.

அப்ப என்ன புரிஞ்சுக்கலைனு தான் அர்த்தம். இதை வேற எப்படி எடுக்கிறது."


"நீ தேவையில்லாம ரொம்ப யோசிக்கிற சாஹி."


"யோசிக்காம தான் உங்க மேல இருந்த கண் மூடி தனமான காதல்க்காக எங்கப்பா அம்மாவ பத்தி நினைக்காம உங்களை தேடி வந்தேன். இப்ப வரை நீங்க பேசுனதோ உங்கம்மா பேசுனதோ எங்க வீட்டில யாருக்குமே தெரியாது. எங்க பெரியம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சது உங்களை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க.

உங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது நமக்குள்ள யாரும் வரக்கூடாதுனு தான் நான் யார்கிட்டயும் சொல்லலை.

நான் எப்பயுமே உங்களை மட்டும் தான் யோசிச்சேன். பட் நீங்க அப்படி இல்லை" என்றவள் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு,


"எனக்கு டைம்மாகிடுச்சு" என எழுந்து கொள்ள,

"சாஹி" என்றான் சற்று இறங்கிய குரலில்.


"டோன்ட் டிஸ்டர்ப் மீ அகைன். எல்லா நேரமும் நான் பொறுமையா இருப்பேன்னு நினைக்காதீங்க" என்று விரல் நீட்டி மிரட்ட அவளை பார்த்து சிரித்தவன்,

"அப்படி என்ன மேடம் பண்ணுவீங்க?"
என்று கேட்க அவனை முறைத்தவள் நகர,

எட்டி கைகளை பிடித்தவன்,
"பதில் சொல்லு டி" என்றான் மீண்டும்.

"அருள்...கையை விடுங்க" என பல்லைக் கடிக்க,

"எனக்கு சொந்தமானதை தொடுறது தப்பு இல்லை. நீ இப்பயும்
என்னை ரொம்ப லவ் பண்றனு எனக்கு தெரியும். என்ன சொன்ன டோன்ட் டிஸ்டர்ப் மீ யா? அது மட்டும் என்னால முடியாது. கண்டிப்பா உன்னை மட்டும் டிஸ்டர்ப் பண்ணுவேன். நீயும் விஷாலியும் எனக்கு வேணும். அதுக்காக என்ன வேணும்னாலும் நான் செய்வேன்" என்று கூறியவன் அவளை பிடித்து இழுத்து கன்னத்தில் இதழ் பதிக்க ஒரு நிமிடம் அதிர்ந்தவள் அவனை பிடித்து தள்ளி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டாள்.செல்லும் அவளையே புன்னகையோடு பார்த்தவன் உதடுகள், "என்னை விட்டு நீ எப்படி போறனு நான் பார்க்கிறேன் டி" என உச்சரித்தது.இவன் இப்படி ஏதாவது செய்வான் என்பதால் தான் சாஹி அவனை விட்டு விலகி ஓடுகிறாள். அவளுக்கு உறுதியாக தெரியும் அவன் அவளை விட மாட்டான் என்பது மட்டும். இருந்தாலும் ஏதோ ஒரு கோபம் ஆத்திரத்தில் தான் இவ்வாறு செய்கிறாள்.


அருள் மட்டும் அந்த நேரத்தில், "நீ எதுக்குடி போன? என்ன பிரச்சனை?" என்று நிதானமாக ஒரு வார்த்தை கேட்டிருந்தாலே சாஹி ஜெயா பேசுவதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் அவனுடன் சென்றிருப்பாள்.

அருள் இடத்தில் சாஹி இருந்திருந்தால் அவன் செய்திருக்கவே மாட்டான் அப்படியே என்றாலும் கண்டிப்பாக நியாயமான காரணம் அதன் பின் இருக்கும் என உறுதியாக அடித்து கூறி இருப்பாள்.

அவ்வளவு நம்பிக்கை அவன் மீது. இது தான் அவனை விலக்கி வைக்க உந்துகிறது. நான் என்னை விட உன்னையே அதிகம் நம்பினேன். ஆனால் நீ என்ன செய்தாய்? என்பதே அவளது மிகப் பெரிய குற்றச்சாட்டு.


அதற்கு பிறகு வந்த நாட்களில் தினமும் வீட்டிற்கு வந்து விஷாலியுடன் நேரம் செலவழிப்பான் அவளையும் வெளியே அழைத்துச் செல்வான் ஆனால் சாஹி மட்டும் மிக கவனமாக ஒதுங்கியே செல்ல அருளும் கடினப்பட்டே வலுகட்டாயமாக அவளை இழுத்து பிடித்தான்.


இதையெல்லாம் நினைத்து பழைய நினைவுகளிலிருந்து மீண்டவள் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டிருக்க வாயிற்படியிலே அமர்ந்து தன் கால்களில் முகத்தை புதைத்திருந்தாள்.


எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

'அவன் கூப்பிட்டா இவங்க போயிடுவாங்களா? அப்ப நான் யார்? என்னோட உணர்ச்சிக்கு மரியாதை இல்லையா?' என அவளது எண்ணம் தறிக் கெட்டு ஓட அருளின் மீதே அவளது முழு கோபமும் திரும்பியது.


வானம் வேறு லேசாக தூறல் போட ஆரம்பிக்க அவள் அதற்கெல்லாம் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரம் பொறுத்து பார்த்த அருள் வெளியே எட்டி பார்க்க மழை வேறு பொழிந்தது.


தன் மடியில் இருந்த விஷாலியை இறக்கி விட்டவன், "விஷாலி குட்டி, நீ பாட்டி கூட ரூம்ல இரு. இன்னும் அம்மாவ காணோம். நான் போய் கூட்டிட்டு வரேன்" என்று கூறி அவளை சிவகாமி இருந்த அறையில் விட்டவன் அவரிடமும் கூறி விட்டு வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.

நேரம் ஆக ஆக மழை வலுக்க ஆரம்பித்தது.

'நான் எப்ப போன் பண்னேன். இன்னும் அங்கே என்ன பண்றா? சாவிக் கூட என்கிட்ட தான இருக்கு' என நினைத்தவன் வேகமாக வீட்டிற்கு சென்று காரை நிறுத்த சாஹி அப்படியே மழையிலே அமர்ந்திருந்தாள் முகத்தை காலில் புதைத்து.


அவள் அமர்ந்திருந்த நிலை அவன் உயிர் வரை சென்று தாக்க,

"திமிர் பிடிச்சவ, மழையில கூட இருப்பா. வீட்டுக்கு வர மாட்டா" திட்டியவன் வேகமாக கீழிறங்கி சென்று அவள் தோளில் கை வைக்க அப்பொழுது தான் சுயநினைவு பெற்று அவனையே நோக்கியவள் முழுவதுமாக நனைந்திருந்தாள்.

'வெகு நேரமாக இப்படி அமர்ந்திருப்பாளோ?' என்று நினைத்தவனுக்கு கோபம் தலைக் கேற,


"மழையில இங்க எதுக்குடி உட்கார்ந்திருக்க. வீட்டுக்கு வர மாட்டீயா?" என கடிய அவனை முறைத்தவள் தன் மீதிருந்த அவனது கையை தட்டி விட்டாள் ஆத்திர மிகுதியில்.


அவனுக்கு விஷாலி நியாபகம் வந்தது.

"சின்ன பொண்ணு விஷாலி கூட இவ்வளவு அடம் பிடிக்க மாட்டா. ஆனா அவங்கம்மா இருக்காளே" என்று அவளுக்கு கேட்குமாறே புலம்பியவன் வலுக்கட்டாயமாக அவளது கையை பிடித்து மேலே தூக்க

ஆவேசமாக எழுந்தவள், "நீ சொல்றததை தான் நான் கேட்கனுமா. என் வாழ்க்கைய நான் முடிவு எடுக்க கூடாதா. நீ ரொம்ப அராஜகம் பண்ற. உன்னை எனக்கு பிடிக்கலை. உன்னோட முடிவை என் மேல திணிக்கிற.

விஷாலிகிட்ட கூட உனக்கு ஸ்பேஸ் குடுத்து நான் விலகி தான நின்னேன். அப்புறம் ஏன் என்னை இவ்வளவு கொடுமை படுத்துற" என்றவள் முகத்தை மூடி கத்தி அழுக,


"சாஹி, ஏன் டி இப்படி பண்ற? நான் உனக்கு வேணாமா?" என்று ஆற்றாமையோடு கேட்க,


"வேணாம், தயவு செஞ்சு போய்டு. இதுக்கப்புறம் எந்த பிரச்சனையும் தாங்குற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. இப்ப எங்கம்மாவையும் உங்க குடும்பமே சேர்ந்து கொல்லனும். என் பொண்ணையும் கொடுமைப்படுத்தனும். அதுக்கு தான நீ அவங்கள அங்க கூட்டிட்டு போயிருக்க. ஏன் எங்க நிம்மதிய கெடுக்கிற" என்று அவனது சட்டையை பிடித்து உலுக்கியவள் அவனது கன்னத்தில் வேகமாக அடித்து விட்டு மீண்டும் தரையில் அமர்ந்து அழுக ஆரம்பித்தாள்.


அவனுக்கு அவள் அடித்ததை விட இவ்வாறு அழுவதே மிகுந்த அழுத்தத்தை கொடுத்தது. அவளது வார்த்தை அவனது இதயத்தை ரணமாக்க பெருமூச்சை இழுத்து சமன் செய்தவன்,


"சரி டி, இப்ப என்ன? நான் போகனும் அவ்வளவு தான? போறேன்" என்று சற்று அழுத்தி கூறியவன் வீட்டு சாவியை அவள் கையில் திணித்து விட்டு வேகமாக வண்டியில் ஏறி கிளம்பி விட்டான்.


அவனுக்கும் கோபம், வெறி. அவனும் அவளிடம் கெஞ்சியும் கொஞ்சியும் பல முறை முயற்சித்து விட்டான். அவனது வேலைகளை எல்லாம் விட்டு அவளை சமாதானம் செய்வதை மட்டுமே வேலையாக செய்து கொண்டிருக்க அவள் எறித்தெறிந்து பேசுவது அவ்வளவு வலியை கொடுத்தது.

தொடரும்....

 
Well-known member
Messages
509
Reaction score
368
Points
63
Shaahi ean ipdi panraa. Paavam arul
 
Top