• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 20

Administrator
Staff member
Messages
525
Reaction score
717
Points
93
அத்தியாயம் - 20


ஜெயிலின் வாசலில் காத்திருந்த பங்கஜம் உள்ளே அழைக்கப்பட வேகமாக நுழைந்தவர் சிவராம் அருகில் சென்று, "எப்படிப்பா இருக்க?" என்றார்.


"இந்த முறையாவது ஜாமீன் வாங்குனீங்களா? என்ன உங்க அண்ணன் நான் உள்ள இருக்கும் போதே கல்யாணத்தை முடிக்க அவசர படுறார் போலயே" என்றான்.


"இல்லடா, நானும் எவ்ளோவோ முயற்சி பண்ணீட்டேன். ஜாமீன் கிடைக்கலை" என்று கூற,

"இதை சொல்ல தான் வந்தீங்களா? போங்க முதல்ல" என்றவன் மீண்டும் உள்ளே சென்று விட கண்ணீரை துடைத்த பங்கஜம் கிளம்பி விட்டார்.
வீரபாண்டி தன்னுடைய செல்வாக்கு மூலம் அவன் வெளியில் வர முடியாதவாறு செய்து விட்டார்.


பத்திரிக்கை வைப்பது பந்தல் போடுவது என நாட்கள் கடக்க அன்று திருமணம்.

அந்த ஊரில் இருந்த ஒரு கோயிலில் திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர். ஐயர் முன் அமர்ந்து அருள் மந்திரம் கூறிக் கொண்டிருக்க,


ரதி சாஹிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி.

திவ்யாவிற்கு விருப்பமில்லாததால் ஆரம்பத்திலிருந்தே ஒதுங்கியே இருந்தாள்.

சிறிது நேரத்தில் ஐயர் மணமகளை அழைக்க சாஹி அழைத்து வரப் பட்டு
அருளின் அருகில் அமர வைக்கப்பட்டாள்.

பின்பு ஐயர் தாலியை எடுத்து கொடுக்க ஒரு நிமிடம் கண்களை மூடி இறைவனை வேண்டிய அருள் அதை சாஹி கழுத்தில் கட்டி தன்னவளாக்கி கொண்டான்.

வீரபாண்டிக்கும் சிவகாமிக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. மணமக்கள் வரிசையாக பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க பந்தி பரிமாறப்பட்டது.திருமணம் வெகு சிறப்பாக நடைபெற மணமக்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.


மணமக்களை தனியாக ஒரு காரில் ஏற்றி விட்டு பின்னால் மற்றொரு காரில் அனைவரும் ஏறிக் கொண்டனர்.


காரில் ஏறிய சாஹி அருளின் தோளில் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள்.

"ரொம்ப டயர்டா இருக்கா?" என்றவன் அவளை தோளோடு அணைத்து பிடிக்க, "ரொம்ப சந்தோஷமா இருக்கு அருள். இவ்வளவு சீக்கிரம் அப்பா அக்சப்ட் பண்ணுவாங்கனு நான் நினைக்கலை. எல்லாமே கனவு மாதிரி இருக்கு. அன்னைக்கு நடந்த பிரச்சனைக்கு அப்புறம் உங்களை பார்க்கவே முடியாதோனு ரொம்ப பயந்துட்டேன்" என்றவளின் கைகள் தாலியை வருட அவளது முகத்தை பிடித்து இழுத்தவன் நெற்றியில் இதழ் பதிக்க அவனை பிடித்து தள்ளி விட்டவள், ட்ரைவரை கண் காட்டினாள்.

"இருந்தா இருந்துட்டு போகட்டும். என் பொண்டாட்டியை தான கிஸ் பண்னேன். அன்னைக்கு. ஏர்போர்ட்ல கிஸ் பண்ணப்பவே அமைதியா தான இருந்த?" என்றான் அவளை வம்பிலுப்பதற்காக.

"ஆமா, நானே கேட்கனும்னு நினைச்சேன். நீங்களா ப்ரபோஸ் பண்ணீங்க. எனக்கு பிடிச்சிருக்கானு கூட கேட்காம நீங்களா ஏர்போர்ட்ல வச்சு கிஸ் பண்ணீங்க. நான் வேணாம்னு ரிஜக்ட் பண்ணியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க."

"கண்டிப்பா நீ சொல்ல மாட்டேனு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு" என்றான் புன்னகை முகமாக.

"எப்படி சொல்றீங்க" என்று கேட்க,

அவளது முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன் அவள் கண்களோடு கண்களை கலங்க விட்டு, "இந்த கண் எப்பயுமே என் கிட்ட பொய் சொல்லாது" என்று அவள் கண்களில் முத்தமிட அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்.


அருள் வீட்டிற்கு செல்ல திவ்யா தான் வேறு வழியின்றி ஜெயா கெஞ்சலுக்காக மணமக்களுக்கு ஆரத்தி எடுத்தாள்.


ஜெயா அவளை பூஜையறை அழைத்து செல்ல விளக்கு ஏற்றி இருவரும் இறைவனை வழிபட்டனர்.


பிறகு வரிசையாக சடங்குகளை செய்த பின் மற்றவர்கள் அனைவரும் கிளம்பி விட்டனர். சாஹியின் இரண்டு அண்ணிகள் அவளுடன் இருந்து கொண்டனர்.


ஜெயாவும் திவ்யாவும் சாஹியுடன் ஒரு வித விலகல் தன்மையுடனே பேசி வந்தனர்.

சாஹியின் சோர்வான முகத்தை பார்த்த ஜெயா, "அருள், சாஹியை ரூம்க்கு அழைச்சுட்டு போ.ரெஸ்ட் எடுக்கட்டும்" என்று கூற அவன் தனதறையில் அவளை விட்டு வர திவ்யா கிளம்பிக் கொண்டிருந்தாள்.


"எங்கக்கா கிளம்பிட்ட?" என அருள் கேட்க,

"மாமா, தனியா வீடு பார்த்திட்டார் டா. உன் கல்யாணம் முடியட்டும்னு சொன்னார். அதான் கிளம்பிட்டேன்" என்றவள் பேக்கை எடுத்து தயாராகி வர,

"இன்னும் ரெண்டு நாள் கழிச்சு போகலாம்க்கா" என்றான்.

"நானும் அதான்டா சொல்றேன். கேட்க மாட்றா" என்றார் ஜெயா.


அதற்குள் எழில் வந்து விட, "வாங்க மாமா" என்றான்.

ஜெயா, "உட்கார்ங்க மாப்பிள்ளை. காபி கொண்டு வரேன்" என அடுப்பை நுழைய,


"மாமா, அக்கா ரெண்டு நாள் கழிச்சு கிளம்பட்டும். நீங்களும் இருங்க" என்று கூற எழில் திவ்யாவை பார்த்தான்.


"சரிடா, நாளைக்கே போறோம். நீங்களும் இருங்க" என்றவள் குழந்தையை எழிலிடம் கொடுத்து விட்டு ரதியுடன் இணைந்து கொண்டாள்.


சிறிது நேரத்தில் ஐயரிடம் பேசி நல்ல நேரம் குறித்த ஜெயா எழிலிடம் கூறி சாந்தி முகூர்த்திற்கு தேவையானதை ஏற்பாடு செய்தார்.


காலையிலிருந்து வேகமாக எழுந்து என சாஹிக்கு அலுப்பாக இருந்ததால் நன்றாக உறங்கியவள் வெகு நேரத்திற்கு பிறகே கண் விழித்தாள்.


ரதி அவளுக்கு அலங்காரம் செய்து விட்டவள் சில பல அறிவுரைகளுக்கு பிறகு அவளை அருளின் அறையில் விட்டாள்.


சாஹி உள்ளே நுழைய தன் மொபைலை பார்த்திருந்த அருள் கதவு திறக்கும் சத்தத்தில் தான் அவளை பார்த்தான்.

மயில் வண்ணத்தில் சேவை கட்டி தலை நிறைய மல்லிகை பூ வைத்திருக்க அருள் அவளையே கண்ணெடுக்காமல் பார்க்க அவளுக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.

இத்தனை நாள் இருந்த அவனின் பார்வை அன்றி ரசனையாக அவள் மீது படிய அவளது கன்னங்கள் செம்மையை தத்தெடுத்துக் கொண்டது.


அது அவனை வெகுவாக ஈர்க்க அவளை நோக்கி தன் கைகளை வா என்பது போல் நீட்ட தாயை கண்ட சேய் போல் வேகமாக அவனது மார்பில் அடைக்கலமாகி புதைந்து கொண்டாள்.


மெதுவாக அவளது காதில் குனிந்து, "சாஹி, நிமிர்ந்து பார் டி" என அவளது முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்த,
வேகமாக தலையாட்டி மறுத்தவள்
மேலும் அவனுள் புதைந்தாள்.


"சாஹி நீ வெக்கப்படுறீயா?" என்று சிரித்தவன் அவளது செம்மை ஏறிய கன்னங்களை வருடி மேலும் சிரிக்க அவனது கையில் அழுத்தி கிள்ளினாள்.

"ஸ்ஸ்...வலிக்குது டி, சத்தியமா உன்கிட்ட இப்படி நான் எதிர்பார்க்கலை. எப்பயும் போல என்னை பார்த்து முறைச்சு புருவத்தை தூக்குவியே அந்த திமிர் பிடிச்ச சாஹி தான் எனக்கு வேணும். அன்னைக்கு காலேஜ்ல என்னம்மா பேசுன. அந்த பையனை நீ பேசுன பேச்சை பார்த்து உன்னை ரொம்ப தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன்" என்று கூற அவனிடமிருந்து விலகி எழுந்து நின்று இடுப்பில் கையூன்றி அவனை முறைத்தாள்.

"வாவ், எப்படி இருக்க தெரியுமா?" என்றவன் அவளை நோக்கி செல்ல அவனது அருகாமையும் ஸ்பரிசமும் அவளை தாக்க கண்களில் மிரட்சியுடன் பின்னால் அடியெடுத்து நகர்ந்தவளை இடையில் கைகொடுத்து இழுத்தவன் தன்னுடன் நெருக்கி பயத்தில் மெல்லிதாக நடுங்கும் இதழை தன் வசப்படுத்தினான்.


சிறிது நேரத்தில் அவளது இதழுக்கு விடுதலையளித்து அவளையே முழுவதுமாக தன் வசப்படுத்த ஆரம்பித்தான்.
மறுநாள் சாஹியின் வீட்டிற்கு மறு வீடு சென்றனர். அதற்கடுத்து காமாட்சி வீடு திவ்யா வீடு என்று ஒரு வாரமாக சுற்றியவர் வீட்டிற்கு கிளம்ப சிவகாமியும் காமாட்சியும் அவளை கட்டி பிடித்து அழுக ஆரம்பித்தனர்.


வீரபாண்டி, "கிளம்புற நேரத்துல அழுகாதீங்க" என அவர்களை சமாதானம் செய்ய அவரது குரலுமே வாடி இருந்தது.

அருள், "நீங்க கவலைப்படாதீங்க மாமா, சாஹிய நான் நல்லா பார்த்துக்கிறேன். அவ என் பொறுப்பு" என்று கூற வீரபாண்டி அவனை அணைத்துக் கொண்டார்.


சாஹியை சாமாதானம் செய்த அருள் வீட்டிற்கு அழைத்து சென்றான்.


ஒரு வாரம் அவன் வீட்டில் தங்கியவன் அவளை அழைத்துக் கொண்டு பெங்களூர் கிளம்பி விட்டான்.அவன் இருந்த வீடே இருவருக்கும் போதுமானதாக இருக்க அங்கே தங்கிக் கொண்டனர்.


சென்னையில் இருந்து வேலையை சாஹியும் அங்கு மாற்றிக் கொள்ள இருவரும் தினமும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர்.

அருள் சாஹியை கையில் வைத்து தாங்கினான். அவள் கேட்கும் முன்பே எல்லாவற்றையும் செய்து விடுவான்.


சாஹி சமையல் வேலையும் பார்த்துக் கொண்டு அலுவலகமும் சென்று வர அருள் அவளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வான்.

இருவருக்கும் நல்ல புரிதல் உருவாகி இருந்தது.

வார விடுமுறை வெளியில் செல்வது என மிகவும் மகிழ்ச்சியாக சென்றது இருவருக்கும் வாழ்க்கை.


அவ்வ பொழுது ஊர்க்கு வந்து செல்வார்கள். ஆறு மாதம் எவ்வாறு கடந்தது என இருவருக்குமே தெரியவில்லை.


அருளுக்கு ப்ரோமோஷன் கொடுத்து சென்னை ப்ராஞ்சிற்கு ட்ரான்ஸ்பர் செய்திருந்தனர்.


சாஹிக்கு ஆறு மாதத்திற்கு முன்பு அருள் தான் கடினபட்டு கம்பெனியில் பேசி ட்ரான்ஸ்பர் வாங்கினான். மீண்டும் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது ஒரு வருடமவது முடிந்திருக்க வேண்டும்.


சாஹியை பிரிய வேண்டும் என்பதற்காக அருள் ப்ரோமோஷனை மறுக்க சாஹி, "அருள், நம்ம சென்னைக்கே போயிடலாம். நான் வேலைக்கு போகலை. மேல படிக்கிறேன்" என்றாள்.


"இல்லை சாஹி, எனக்காக உன் கெரியரை ஸ்பாயில் பண்ண வேண்டாம். உனக்கு நிறைய திறமை இருக்கு‌" என்று மறுக்க அவனை பேசி கெஞ்சி சரி கட்டியவள் சென்னையில் மேற்படிப்பில் சேர்ந்து விட அருள் வேலைக்கு செல்ல ஆரம்பித்தான்.


அருளை அழைத்த திவ்யா, "அருள், அம்மாக்கு உடம்பு சரியில்லை. நீ உடனே கிளம்பி வா" என்றாள்.அவனும் சாஹியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான். இன்று வரை சாஹிக்கும் ஜெயாவிற்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து கொண்டிருந்தது திவ்யா வால்.


அவன் உள்ளே நுழைய ஜெயா படுத்திருந்தார்.

"என்னாச்சும்மா" என்றிட,


திவ்யா, "ப்ரெஷர் அதிகமாகி மயங்கி விழுந்திட்டாங்க டா. நல்ல வேளை நான் வர போய் சரியா போயிடுச்சு. இனிமே அம்மாவை தனியா விடாத அருள். உன் கூடவே அழைச்சுட்டு போய் வச்சுக்கோ. தம்பி இல்லைனா நானே கூட்டிட்டு போய்ட்டுவேன்" என்றாள்.


அருளுக்கு நிறைய நாள் ஜெயாவை தங்களுடன் அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஆனால் அவன் முன்பு ஒன்றிரண்டு முறை அழைக்க அவர் மறுத்து விட்டார். அதனாலே அப்படியே விட்டு விட்டான்.

இரண்டு நாள் அங்கேயே இருந்தவன் அவர் உடம்பு ஒரளவு தேறிய பிறகு அவரையும் உடன் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.


வந்த சில நாட்கள் அமைதியாக இருந்த ஜெயா அடுத்தாக சாஹியின் சமையலை குற்றம் கண்டு பிடிக்க ஆரம்பித்தார்.

அவள் நன்றாக சமைப்பாள் தான் இருந்தாலும் கல்லூரிக்கும் சென்று கொண்டு வீட்டையும் பார்த்துக் கொள்வது சற்று சிரமமாக தான் இருந்தது.


முதலில் இருவர் என்பதால் அவசரத்திற்கு ப்ரெட்டை மட்டும் கூட அருளுக்கு கொடுப்பாள். அவனும் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான். அவனுக்கு அவளின் சூழ்நிலை புரியும் என்பதால் நிறைய நாட்கள் வெளியில் தான் சாப்பிடுவார்கள்.


ஆனால் ஜெயாவிற்கு ஓட்டல் சாப்பாடு என்றால் அலர்ஜி. அருள் வீட்டில் வேலைக்கு ஆள் வைக்கவா என்று கேட்க,

"நாங்க எல்லாம் அந்த காலத்தில் கூட்டு குடும்பத்துக்கே சமைச்சு போட்டோம் இந்த காலத்து பொண்ணுங்க ஒரு மூனு பேர்க்கு சமைக்க முடியலை. என் பொண்ணுங்களோ" என அவளையே பேச அதையும் விட்டு விட்டான்.


அதுவுமில்லாமல் ஜெயாவிற்கு ப்ரெஷர் சுகர் என நிறைய உடல் உபாதைகள் இருக்க உப்பு போடாமல் சமைப்பது என அவருக்காக பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருந்தது.

சாஹி தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தன்னுடைய படிப்பையும் பார்த்துக் கொண்டாள்.

அருளுக்கும் வேலை அதிகம் என்பதால் தன்னால் முடிந்தளவுக்கு அவளுக்கு உதவி செய்தான்.


அங்கு அவர்களின் வீட்டின் அருகில் ஒரு இடம் விலைக்கு வர அருள் அதை வாங்கலாம் என நினைத்தான். அவனுக்கும் அலுவலகம் அருகில் சாஹிக்கும் கல்லூரி வெகு அருகில் இருந்தது.ஆனால் விலை சற்று அதிகமாக இருக்க யோசித்துக் கொண்டிருந்தான். சாஹி, "அருள், அப்பா கொடுத்த நகை இப்ப என்கிட்ட சும்மா தான் இருக்கு. அதை யூஸ் பண்ணிக்கலாமா?" என்று கூற,

"இல்லை, அது உனக்குனு கொடுத்தது. வேண்டாம்" என உறுதியாக மறுத்து விட்டான்.


ஜெயாவிடம் பேசி அவர்களின் சில நிலத்தை விற்றவன் தன்னுடைய சேமிப்பு முழுவதையும் எடுத்து அந்த இடத்தை வாங்கி விட்டான்.
சாஹியிக்கு கல்லூரி கட்டணம், ஜெயாவிற்கு மருத்துவமனை கட்டணம், வீட்டு வாடகை என செலவும் அதிகரித்தது.


முதலில் இருவருமே வேலைக்கு சென்றதால் பணம் ஒரு பிரச்சனையாக இல்லை. ஆனால் தற்போது அருளுக்கு அதுவும் ஒரு பிரச்சனையாக மாறியது.


கொஞ்ச நாட்கள் நன்றாக வேலைக்கு சென்ற எழில் அதற்கடுத்து நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்ற ஆரம்பித்தான்.

காமாட்சியுடன் இருந்த பொழுது அது சொந்த வீடு. வாடகை கொடுக்க அவசியமில்லை. சாப்பாடு முதல் எல்லா செலவுமே அவரே வயலில் விவசாயம் செய்து வரும் வருமானத்தை கொண்டு பார்த்துக் கொள்வார்.


அதனால் எழிலும் பாதி நாள் வேலைக்கு சென்று விட்டு பாதி நாள் ஊர் சுற்றுவான். அது திவ்யாவிற்கு பெரிதாக தெரியவில்லை.

ஆனால் தற்போது ஹரீஸ் வளர அவனுக்கு பள்ளிக் கட்டணம் வீட்டு செலவு என பணத்தட்டு பாடு அதிகரித்தது.ஜெயா இருந்த பொழுது அருள் தனக்கு கொடுக்கும் பணத்தையும் அவர்களது பூர்வீக சொத்தில் வரும் வருமானம் என எல்லாவற்றையும் அவளுக்கு கொடுத்து கொண்டிருந்தார். இப்பொழுது அவரும் இல்லாமல் திவ்யா வெகுவாகவே திண்டாடினாள்.

எழில் அவளின் தொல்லை தாங்காது வெளியில் கடன் வாங்க ஆரம்பித்தான்.


அதுவும் சில நாட்கள் கை கொடுத்த நிலையில் கடன்காரர்கள் வீட்டிற்கு வர ஆரம்பிக்க திவ்யாவிற்கும் எழிலிற்கும் சண்டை ஆரம்பமானது.


தினமும் சண்டையே வாடிக்கையாக கடன் பிரச்சனை காரணமாக எழில் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்ல ஆரம்பித்தான்.


வேறு வழியின்றி திவ்யா அருள் தனக்கு கொடுத்த அனைத்து நகைகளையும் விற்று கடனை அடைத்தாள். காமாட்சியிடம் சென்று கூற அவளுக்கு மனதில்லை. ஜெயாவிற்கும் தெரியாமல் தான் வைத்திருந்தாள்.


பிரச்சனை அதிகமாக வேறு வழியின்றி அருளுக்கு அழைத்து அழுக ஆரம்பித்தாள்.


அவனுக்கு எழிலிடம் எவ்வாறு பேசுவது என்று புரியவில்லை. அவன் எதாவது தப்பாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது.

ஆயிரம் இருந்தாலும் அடுத்தவர் குடும்பத்தில் தலையிடுவது தவறாகவே தோன்றியது.


ஜெயா, "அங்க தனியா இருக்கிறதால தான் மாப்பிள்ளை அப்படி பண்றார். பேசாம திவ்யாவ இங்க கூட்டி வந்து நம்ம பக்கத்தில் வச்சுக்கலாம். நீ மாப்பிள்ளைக்கு ஒரு வேலை வாங்கி குடு. தெரியாத ஊர்னா அவர் கடன் வாங்க மாட்டார்" என பல விதங்களில் அருளிடம் பேசியவர் திவ்யாவை தங்களின் வீட்டிற்கு அருகிலே கொண்டு வந்து விட்டார்.


அவளை அழைத்து வந்தது வீடு பார்த்து தங்க வைத்தது எல்லாமே அருளின் செலவில் தான்.


சாஹிக்கு அவனுடைய பணக்கஷ்டம் தெரியும் என்பதால், "அருள், நான் காலேஜ் போகலை. திரும்பவும் வேலைக்கு போகவா" என்று கேட்க அவளின் எண்ணத்தை புரிந்தவன்,

"ஹேய், நீ அதையெல்லாம் நினைச்சு கவலைப்படாத. நான் பார்த்துக்கிறேன். நிம்மதியா படிக்கிற வேலைய மட்டும் பார்" என்று அதட்ட அவனை அணைத்துக் கொண்டாள்.


வீரபாண்டியிடம் கேட்டால் இந்த பணம் எல்லாம் அவருக்கு ஒரு விஷயம் இல்லை தான். உடனே கொடுத்து விடுவார் அவருடைய சொத்து முழுவதுமே சாஹிக்கு தான். ஆனால் அவர் போட்ட நகையையே வாங்க மாட்டேன் என மறுத்தவன் இதை கண்டிப்பாக வாங்க மாட்டான் என அவளுக்கு தெரியும். அதனால் அவனுக்கு தெரியாமல் கல்லூரி முடித்து வந்ததும் வீட்டு வேலைகளை முடித்து விட்டு ஆன்லைனில் வேலை பார்க்க ஆரம்பித்தாள்.


அதன் மூலம் அவளது செலவுகளை ஓரளவு பார்த்துக் கொண்டாள். அருளும் காலையில் சென்று விட்டு இரவில் தான் வீடு திரும்புவான்.


இடம் வாங்கிய பின் அடுத்ததாக வீடு கட்டுவதற்காக பணம் சேர்ப்பதற்கு விடுமுறை நாட்களில் கூட அருள் கம்பெனியை தவிர்த்து வேறு சில வேலைகளையும் பார்க்க ஆரம்பித்தான்.

அதனால் சாஹி என்ன செய்கிறாள் என்று அவனுக்கு தெரியவில்லை. திவ்யா எப்பொழுதுமே இங்கு ஜெயாவுடன் தான் இருப்பாள்.


அவளுக்கும் சேர்த்து சமையல் எல்லாம் சாஹி தான் பார்த்துக் கொண்டாள். ஆனால் அதையெல்லாம் அவள் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டது கிடையாது.


அங்கு வந்ததும் ஜெயா கூறியது போல் எழில் ஒழுங்காக வேலைக்கு செல்ல ஆரம்பித்தான். ஆனால் அவர்களுக்காக செலவுகளை அருள் தான் பார்க்க வேண்டும்.

திவ்யா அதை தனியாக சேமிப்பில் வைத்துக் கொள்வாள். எல்லாமே அருளுக்கும் சாஹிக்கும் தெரியும். இருந்தாலும் அதை பிரச்சனையாக மாற்ற விரும்பவில்லை.

சாஹி திவ்யாவுடனும் ஜெயாவுடனும் அதிக பேச்சு வார்த்தை இல்லையென்றாலும் ஹரீஸை நன்கு பார்த்துக் கொள்வாள்.திவ்யா அவ்வ பொழுது சமையல் சரியில்லை அது இது என்று சாஹியை வம்பிலுப்பாள். ஆனால் சாஹி அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டாள். அருளிற்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வாள் அவனிடமும் கூற மாட்டாள்.ஓரளவிற்கு அருள் எல்லாவற்றையும் சமாளித்து வெளி வந்த நிலையில் திடீரென ஜெயாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் அதற்கு இருபது லட்சம் வேண்டும் என்று கூறி விட்டனர்.

அருள் ஊரில் இருக்கும் வீட்டை விற்கலாம் என எண்ண சாஹி அவனை கேட்காமலே தன்னுடைய நகையே விற்று பணத்தை கட்டி விட்டாள்.

"ஏன் டி இப்படி பண்ண?" என் அருள் அவளிடம் சண்டையிட,


"அவங்க எனக்கும் அத்தை தான. நான் செய்ய கூடாதா" என அவனை கெஞ்சி சமாதனம் செய்தாள்.


திவ்யா கர்ப்பமாகி விட அடிக்கடி இங்கு வந்து செல்பவள் குழந்தையை பார்க்க முடியாது என காரணம் கூறி முழுவதுமாகவே இங்கு தங்க ஆர்மபித்தாள். எழில் மட்டும் தினமும் வந்து சாப்பிட்டு செல்லுவான் இல்லை திவ்யா எடுத்து சென்று கொடுத்து வருவாள்.


முதலில் சிறு சிறு வேலை செய்யும் ஜெயா உடல் நலத்தை காரணம் காட்டி எந்த வேலையும் செய்ய வில்லை. திவ்யா நல்லா இருந்தாலே செய்யாமல் சுற்றுபவளுக்கு கர்ப்பமாக இருப்பது ஒரு காரணமாகி விட்டது. ஹரீஸிற்கு உணவு ஊட்டுவது கூட இப்பொழுது சாஹியின் வேலையாகி விட்டது.


அருள் வரும் வரை முழித்திருந்து அவனுக்கு உணவு பரிமாறி விட்டு உறங்க செல்வாள்.

அன்று அருள் கதவை தட்ட திவ்யா தான் திறந்தாள்.

"சாஹி எங்க? நீ கதவை திறக்கிற?" என்றிட,

"மகாராணி உள்ள என்ன பண்றாங்கனு எனக்கு என்ன தெரியும்" என்று கூறினாள் தனது தூக்கம் கலைந்த கடுப்பில்.


அவளை முறைத்தவன் உள்ளே தங்களது அறைக்குள் நுழைய கையில் புத்தக்கத்துடனே உறங்கி இருந்தாள்.


குளியலறை புகுந்து ப்ரெஷாகி வந்தவன் அவளருகில் அமர்ந்து கொண்டான்.

அவளது முகம் மிகுந்த சோர்வாக இருக்க அவளது கன்னங்களை வருடியவன் புத்தகத்தை மெதுவாக உருவி எடுக்க சாஹி கண் விழித்து விட்டாள்.

வேகமாக எழுந்தவள், "எப்ப வந்தீங்க. சாரி தூக்கம் வந்திடுச்சு. சாப்பாடு எடுத்து வைக்கவா" என்று எழ அவளது கைகளை பிடித்து மடியில் அமர்த்தியவன், "நீ சாப்பிட்டீயா?" என்றான்.

"ம்ம்..சாப்பிட்டேன். வாங்க சாப்பிட்டு வந்து பேசுங்க. ஏற்கனவே டையமாகிடுச்சு" என்று கூறி எழ முயற்சிக்க அவனது பிடி இறுகியது.


"சாஹி, நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்."

"நீங்க என்ன வேணும்னாலும் அப்புறமா பேசுங்க" என அவனை வலுகட்டாயப் படுத்தி அழைத்து செல்ல அவளை அருகில் அமர வைத்தவன் தானே போட்டு அவளுக்கும் ஊட்டி விட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிட்டவன் எழுந்து அறைக்கு செல்ல எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டு அவனுக்கு பாலை காய்ச்சி எடுத்து சென்று கொடுத்தவள் அருகில் அமர,


"சாஹி, எனக்கு ஆபீஸ்ல ஒரு ஆஃபர் வந்திருக்கு" என்று கூற கேள்வியாக அவனை பார்த்தாள்.


"ஆமா, நெக்ஸ்ட் ப்ராஜெக்ட் யூ.எஸ் ல பண்ண போறாங்க. அதுக்கு டீம் லீடரா செலக்ட் பண்ணியிருக்காங்க" என்று கூறியவுடன் அவளது கண்ணிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.


"ஹேய், எதுக்குடி அழுகுற?" என்றவன் அவளை நெருங்கி அமர்ந்து தன்னோடு சேர்த்து அணைக்க,

"இன்னும் கொஞ்ச நாள் தான் அருள். உங்க கஷ்டம் ப்ரெஷர் எனக்கு புரியுது. நான் வேலைக்கு போக ஆரம்பிச்சா எல்லாம் சரியாகிடும்" என்றாள் கண்ணீரை துடைத்து.


"சாஹி, இது சூப்பர் சான்ஸ். ஒரு தடவை போயிட்டு வந்திடுறேன். அப்ப தான் வீடு கட்ட முடியும். அப்புறம் ப்யூசர்ல பேபி வந்த ஸ்டடீஸ் அப்புறம் நிறைய செலவு இருக்கு. சீக்கிரமே வந்திடுவேன். ஜெஸ்ட் ஃபோர் இயர்ஸ் தான் டி. கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள ஓடிடும்."


"அருள், அப்பா சொத்து முழுதும் எனக்கு தான். அம்மாவுக்கும் நிறைய இருக்கு. பேபியை பத்தி யெல்லாம் கவலைப்பட தேவையில்லை. நீங்க என் கூடவே இருங்க. அதுவே எனக்கு போதும்" என்று சிறு குழந்தையாய் சிணுங்க,

"சாஹி, உனக்கு உங்கப்பா கொடுத்த மாதிரி நான் பேபிக்கு செய்யனும்னு நினைக்கிறேன்‌. அது தப்பா?" என்றான்.


"அருள்" என ஆரம்பிக்க,

"சாஹி ப்ளீஸ்" என அவளை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தவன் மறுநாள் அலுவலகத்திலும் சம்மதம் சொல்லி கையெழுத்திட்டான். ஆறு மாதத்தில் அவன் கிளம்புவதாக இருந்தது.


அதற்குள் பேங்கில் லோன் ஏற்பாடு செய்து வீடு கட்ட ஏற்பாடு செய்து விட்டான்.எழில் தனக்கு தெரிந்தவர் மூலம் தொழில் தொடங்குவதற்கு நாற்பது லட்சம் வேண்டும் என காமாட்சியிடம் போய் சொத்தை பிரித்து தருமாறு நிற்க,

"உன் மேல எனக்கு நம்பிக்கையே இல்லை. சொத்து என்னோட பேரபிள்ளைங்க பேர்ல மாத்திடுவேன். நீ உழைச்சு சாப்பிடு. பின்னாடி அவங்க படிக்கிறதுக்கு கல்யாணத்துக்கு வித்து பண்ணிக்கலாம்" என்று கூறி விட அவன் அடுத்ததாக திவ்யாவை மோதினான்.

"ஏங்க அவ்ளே பணத்துக்கு எங்க போறது. நம்மளை நம்பி யார் தருவா?" என்றாள்.


"ப்ளீஸ் திவ்யா, இப்படி ஒருத்தவங்க கீழயே வேலை பார்த்து நம்ம என்னைக்கு முன்னேறது. இப்ப தான் நான் கரெக்ட்டா வேலைக்கு போறேன்ல்ல. நம்பும்மா, என் ப்ரெண்ட் சொல்றான் கண்டிப்பா சக்ஸஸ் ஆகும். நீ உன் தம்பி கிட்ட பேசு."


"என்னங்க பேசுறீங்க? ஏற்கனவே நம்ம பிள்ளை ஸ்கூல் பீஸ் கூட அவன் தான் கட்டிட்டு இருக்கான். அவனே வீடு கட்டறதுக்கு வெளிநாட்டுக்கு போறான். இதுல எப்படி அவன்கிட்ட கேட்க சொல்றீங்க" என்றாள்.


"இல்ல திவ்யா, அருள் லோன் வாங்கும் போது நமக்கும் சேர்த்து வாங்கி தர சொல்லு.
மாசமாசம் கரெக்டா கட்டிடலாம். நீயே யோசி எத்தனை நாளைக்கு தான் நம்ம உன் தம்பியையே நம்பி இருக்கிறது. நாளைக்கு அவனுக்கே புள்ளை குட்டி வந்திட்டா நம்ம பிள்ளைக்கு பார்ப்பானா இல்லை அவன் பிள்ளைக்கு பார்ப்பானா. அவனை மாதிரி நம்மளும் வீடு கட்டனும்னு உனக்கு தோணலையா?" என்று அவளை மூளைச் சலவை செய்ய,

"சரிங்க, நான் அருள்கிட்ட பேசுறேன்" என்றவள் மறுநாளே அவனிடம் பேசினாள்.

"க்கா..நான் இருக்கிற நிலைமையில நீ கேட்குறது ரொம்ப பெரிய அமௌன்ட். கொஞ்ச நாள் கழிச்சு வேணா பார்க்கலாம்" என்று கூற அழுது ஆர்பார்ட்டம் செய்தவள்,


"எனக்கு உன்னை விட்டா யார்டா இருக்கா? உன் கையில இருந்தா கேட்டேன். நீ லோன் வாங்கும் போது எனக்கும் சேர்த்து வாங்கிக் குடுனு தான சொல்றேன்" என்று கூற,

"யோசிச்சு சொல்றேன்" என்றவன் எழுந்து சென்று விட்டான்.


தொடரும்...
 
Well-known member
Messages
572
Reaction score
416
Points
63
Ezhil n Divya ipdi irukkangale
 
Top