• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 19

Administrator
Staff member
Messages
525
Reaction score
717
Points
93
அத்தியாயம் - 19


அவளின் அழுகையை கேட்டு பதறியவன், "ஏய் என்னாச்சு டி, எதுக்கு அழுகுற" என வினவ சில நிமிடங்களுக்கு பிறகு தன்னை சமன் செய்தவள்,

"அருள் அப்பா என்கிட்ட பேசிட்டார், நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க" என்றாள் மகிழ்ச்சியுடன்.


"வாவ், சூப்பர் சாஹி. ஐயம் சோ ஹாப்பி. இப்பவே உன்னை பார்க்கனும் போல இருக்குடி" என்றான்.


"எனக்கும் தான், சீக்கிரம் வாங்க" என கெஞ்சும் குரலில் கேட்க,

"ம்ம்..மேடம்க்கு இப்ப தான் நான் தெரியுறேன். இத்தனை நாளா போன் பண்ணா கூட எடுக்கலை. அதுக்கு உனக்கு பனிஷ்மெண்ட் இருக்கு டி. அங்க வந்து பார்த்துக்கிறேன்" என்றான் மிரட்டலாக.


"சரி வாங்க பார்த்துக்கலாம், நீங்களா நானா னு" என்று சிரித்துக் கொண்டே கூற,

"என்னடி நக்கலா? எதுவும் பண்ண மாட்டேன்னு நினைக்கிறீயா?" என்றிட,

"என்ன பண்ணுவீங்க சார்?" என்றாள் அவனை வம்பிலுக்கும் பொருட்டு.

"சொன்னா நல்லா இருக்காது. வந்து ப்ராக்டிகலா செஞ்சு காட்டுறேன்" என்று கூற அவளது சிரிப்பு சத்தம் அதிகமாகியது.

வெகு நாட்களுக்கு பிறகு இருவருக்குமே மகிழ்ச்சியான மனநிலை. அப்படி அவனிடம் சிறிது நேரம் வம்பிலுத்தவளை சிவகாமி அழைக்க, "சரி, அம்மா கூப்பிடுறாங்க. அப்புறமா பேசலாம்" என அழைப்பை துண்டித்தாள்.


அவள் விஷயத்தை கூறியவுடன் அருளுக்கு அங்கிருக்க இருப்பு கொள்ளவில்லை.

மறுநாளே கிளம்பி வந்து விட, "என்னடா அதிசயமா இருக்கு? நானே கூப்பிட்டு மூனு மாசம் வர மாட்டேன்னு சொல்லி வீம்பு புடிச்சவன் திடீர்னு வந்திருக்க?" என‌ ஜெயா அவனிடம் வினவ,

"ஏன்ம்மா வரக் கூடாதா?" என்றான் புன்னகை முகமாக.

"சரி டா, போய் ட்ரெஸ் மாத்திட்டு வா காபி கொண்டு வரேன்" எனக் கூறிக் கொண்டிருக்க திவ்யா தன் மகனுடன் வெளியே வர அவள் கையிலிருந்து வேகமாக அருளிடம் தாவினான்.


அவனை வாங்கி அணைத்து கொஞ்சியவன், "எப்படிக்கா இருக்க?" என்றான்.

"ம்ம்..இருக்கேன் டா" என்றவள் அமர்ந்து கொள்ள குழந்தையை கொடுத்து விட்டு உடையை மாற்றி வந்து மீண்டும் அவளருகில் அமர்ந்து குழந்தையை வாங்கிக் கொண்டான்.

திவ்யா கோபித்து கொண்டு வந்து விட்ட பிறகு எழில் வந்து இரு முறை அழைக்க தனி குடித்தனம் தான் வருவேன் என உறுதியாக கூறி மறுத்து விட்டாள்.


அதற்கு பிறகு அவன் வந்து அவளை அழைக்க வில்லை. குழந்தையை மட்டும் பார்த்து செல்வான். சில சமயம் வீட்டிற்கு அழைத்து செல்லுவான்.


நாட்கள் நகர நகர அவளுக்கும் அவன் அழைக்க மாட்டானா? என்ற ஏக்கம் தோன்ற, அவனோ அவள் பிடிவாதத்தை நினைத்து அமைதி காத்தான்.

ஜெயா காபியை எடுத்து வந்து கொடுக்க வாங்கி பருகியவன், "ம்மா..சாஹி அப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லீட்டாங்க. வாங்க நம்ம போய் பேசிட்டு வந்திடலாம்" என்று கூற,

திவ்யா, "என்ன அருள் பேசுற?" என ஆரம்பித்தாள்.

"நீ சும்மா இரு திவ்யா" என மகளை அதட்டிய ஜெயா, "அருள் ஏன்ப்பா இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிற? அதான் அக்கா வேண்டாம்னு சொல்றா இல்ல. வேற நல்ல இடமா பார்ப்போம்" என்று கூற,

"கல்யாணம் பண்ணி கூட வாழ போறது நானா? அக்காவா?" என்று கேட்க,

"அருள்" என்றார் சற்று இறங்கிய குரலில்.

"சொல்லுங்க" என குரலை உயர்த்த,

"டேய்" என்றாள் திவ்யா.

"நீ பேசாத, இது எனக்கும் அம்மாவுக்கும் இடையில் நடக்கிற பிரச்சனை" என்று அதட்டியவன்,

ஜெயாவை பார்த்து, "ம்மா..எனக்கு சாஹி தான் வேணும். நீங்க வருவீங்களா? மாட்டீங்களா" என்று தீவிரமான குரலில் கேட்டான்.

ஜெயா அமைதியாகவே இருக்க,

"சரி சொல்லுங்க. நீங்க ஏன் சாஹியை வேண்டாம்னு சொல்றீங்க. அவ என்னைக்காவது உங்களையோ அக்காவையோ மரியாதை இல்லாம பேசியிருக்காளா? இல்லை அவகிட்ட ஏதாவது தப்பு இருக்கா. ஏன் உங்களுக்கு பிடிக்கலைனு காரணம் சொல்லுங்க" என்றான்.

"இல்லப்பா, அவங்க பெரியம்மா" என்றவரை இடை மறித்தவன்,

"ம்மா..இதுக்கான பதிலை நான் அன்னைக்கே சொல்லீட்டேன். நான் அவ கூட தான் வாழப் போறேன். அதை தவிர அவ மேல தப்பு இருக்கா?" என்று கேட்க இல்லை என தலையாட்டினார்.

"சரி நான் போய் குளிச்சுட்டு வரேன். நீங்களும் கிளம்புங்க" என்று முடிவாக கூறியவன் எழுந்து உள்ளே சென்று விட திவ்யா, ஜெயாவை பார்த்தாள்.


"நான் என்னடி பண்ண முடியும். நீ எப்படி அவர் தான் வேணும்னு ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கல. அதே மாதிரி தான் இவனும் பிடிவாதமா இருக்கான். இது அவன் வாழ்க்கை. நம்ம சம்மதம் கொடுக்கலைனாலும் அவன் அந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணுவான். அதுக்கு நம்மளே மரியாதையா பண்ணி வச்சிடலாம்" என்றார்.


"நான் சொல்றது உங்களுக்கு இப்ப தெரியாது பின்னாடி தான் புரியும்" என்றவள் எழுந்து சென்று விட அருள் ஜெயாவை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.


அவர்கள் உள்ளே நுழைய வீரபாண்டி, "வாங்க" என வரவேற்க உள்ளே வந்து அமர்ந்தனர்.

காமாட்சி பொதுவாக , "வாங்க" என்றழைக்க ஜெயா தலையசைப்போடு நிறுத்திக் கொண்டார்.

காபி போட்ட சிவகாமி அதை சாஹி கையில் கொடுக்க எடுத்து சென்று அவர்களுக்கு கொடுத்தவள் காமாட்சி அருகில் நின்று கொண்டாள்.

திவ்யாவை பற்றி விசாரித்த வீரபாண்டி, "சம்பந்தி நான் ஐயர்ட்ட பேசி நாள் குறிச்சு வாங்கிட்டேன். உங்களுக்கு எது வசதியோ பார்ங்க. அப்பவே ஏற்பாடு பண்ணிடலாம்" என்றார்.

"ஐயர் பார்த்து எல்லாமே நீங்களே முடிவு இப்ப எதுக்கு என்கிட்ட கேட்குறீங்க?" என்று கூற அருள், "ம்மா" என்றான்.

"இல்லடா, அவங்களே ஐயரை பார்த்தாச்சு. அப்புறம் என்ன?" என்றார்.

வீரபாண்டி, "இப்ப என்ன சம்பந்தி, நீங்களே கூட ஐயரை வரச் சொல்லி நாள் பார்ங்க. இதுல என்ன இருக்கு" என்று கூற,

"இருக்கட்டும் விடுங்க" என்றார் சலித்தவாறே.

காமாட்சிக்கு ஜெயா பேசியது பிடிக்கவில்லை என்றாலும் சாஹிக்காக அமைதியாய் இருந்தார்.


ஒரு மாதத்திற்கு பிறகு திருமணம் என உறுதி செய்தனர்.
வீரபாண்டி, "சாப்பிட்டு போங்க சம்பந்தி" என்று கூற,

"இல்லை நேரமாகிடுச்சு. திவ்யா பிள்ளையோட தனியா இருப்பா நாங்க கிளம்புறோம்" என்றவர் அருளை பார்க்க எழுந்து கொண்டவன் வீரபாண்டியிடம் கூறி விட்டு சாஹியிடம் கண்களாலே விடை பெற்று கிளம்பி விட்டான்.


ஜெயாவின் பிடித்தமின்மையை அவ்வ போது வெளி காட்டினாலும் அருள் தான் சமாளித்துக் கொண்டிருந்தான்.திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அருள் ஊர்க்கு வந்து விட்டான்.

அன்று திருமணத்திற்கு புடவை எடுப்பதற்காக சாஹி வீட்டிலிருந்து அனைவரும் கடையில் காத்திருந்தனர்.

"திவ்யா, ஏன் டி அடம்பிடிக்கிற. கிளம்பு டையமாகிடுச்சு" என ஜெயா அவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்க,

"கிளம்பீட்டோம் மாமா, பத்து நிமிஷத்தில் வந்திடுவோம்" என்ற அருள் அழைப்பை துண்டித்து வெளியே வந்தான்.

"அம்மா, போகலாமா?" என்று கேட்க அவர் திவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.


அவரை உணர்ந்தவன், "நீங்க போய் கிளம்புங்க. நான் பார்த்துக்கிறேன்" என அவரை அனுப்பியவன் திவ்யா அருகில் அமர்ந்து, "ஏன்க்கா இப்படி பண்ற? ப்ளீஸ் எனக்காக வர மாட்டீயா?" என கெஞ்சலில் இறங்கி வெகு நேரத்திற்கு பிறகே அவளை சமாதானம் செய்து கிளம்பினார்கள்.


வாசலிலே அவர்களை பார்த்த எழில், "வாங்க" என வரவேற்றவன் திவ்யாவிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு அவர்களை அழைத்து செல்ல அனைவரும் காத்திருந்தனர்.அன்று நடந்த கலவரத்திற்கு பிறகு அருள் சாஹியை தனியே சந்திக்க சந்தர்ப்பமே அமையவில்லை.


பெண்கள் மட்டும் எழிலுடன் காரில் வந்திருக்க மற்றவர்கள் பத்திரிக்கை கொடுப்பது மற்ற வேலைகளில் பிஸியாக இருந்தனர்.

ஜெயா, "கட்ட போறது சாஹி தான. அவளுக்கு பிடிச்ச மாதிரியே எடுத்துக்கலாம்" என ஒதுங்கிக் கொள்ள அருள், "சாஹி வா, நான் உனக்கு செலக்ட் பண்றேன்" என்றவன், "நீங்க உங்களுக்கு எடுங்க" என பொதுவாக கூறி விட்டு நகர்ந்தான்.


காமாட்சியும் சிவகாமியும் ஓரமாக நாற்காலியில் அமர்ந்து விட, "திவ்யா அம்மாவுக்கும் சேர்த்து எடுத்து வந்திடும்மா" என்றவர் அவர்களுடன் அமர்ந்து கொண்டார். ஜெயா காமாட்சியுடன் மட்டுமே சரியாக பேச மாட்டார் திவ்யாவின் விஷயத்தால். சிவகாமியுடன் பேசிக் கொண்டார்.


காமாட்சியின் மற்ற இரண்டு மருமகள்களிடம், "நீங்க போய் குழந்தைக்கு உங்களுக்கு அப்புறம் எல்லாருக்கும் எடுத்துடுங்கம்மா" என்று கூற அவர்களும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தங்களுக்கு தேவையானதை எடுக்க சென்றனர்.


சாஹியை அழைத்து சென்று அருகில் அமர வைத்து கொண்ட அருள் ஒவ்வொரு புடவையாக வாங்கி அவளுக்கு பொருத்தமாக இருக்கிறதா? என ஆராய்ந்து கொண்டிருக்க சாஹியோ அவனையே விடாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களுக்கு பிறகே அவளை கவனித்து, "ஓய் என்ன சைட் அடிக்கிறீயா?" என்றவன் அவளது தோளை தட்டிய பிறகே சுயநினைவு பெற்று, "ஆஆ..என்ன சொன்னீங்க?" என்றாள்.

"சுத்தம்! என்னடி கனவா?" என்று கேட்க அவனை பார்த்து சிரித்தவள் எதுவும் கூறாது இருக்க, "சாஹி ஏன் இப்ப எல்லாம் முன்ன மாதிரி பேச மாட்ற. முறைக்க மாட்ற. ரொம்ப மாறிட்டீயே" என்றான்.

"எல்லாம் உங்க பக்கத்தில இருக்கேன்ல அதான்...காதல் மயக்கம்" என நக்கலாக கூற, "என்னடி பேக் டூ ஃபார்ம்மா?" என்றான்.


திவ்யா குழந்தைக்கு உடையை எடுக்க அவள் பின்பே குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த எழில், "திவ்யா, வீட்டுக்கு வாடி. எத்தனை நாள் தான் அங்கே இருக்க போற?" என்று கெஞ்ச,

"நான் தான் அப்பவே சொல்லீட்டேன்ல்ல. நீங்க தனியா வீடு பார்ங்க. நான் தம்பியை தூக்கிட்டு வரேன். நீங்க எத்தனை தடவை கேட்டாலும் இதான் என்னோட பதில்" என்றவள் துணியை ஆராய பெருமூச்சை விட்டவன்,

"சரி டி, சாஹி கல்யாணம் முடியட்டும். அப்புறம் அம்மாகிட்ட பேசி ஏற்பாடு பண்றேன்" என்று கூறினான்.


அவளை சீண்டிக் கொண்டே தங்களுக்கு தேவையான உடையை எடுத்தவன் சாஹியை அழைத்துக் கொண்டு வர எல்லோரும் தங்களுக்கான உடைகளை வாங்கி கொண்டு வந்திருந்தனர்.


அடுத்து வண்டியை ஹோட்டலுக்கு விட்டவர்கள் சாப்பிட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.வீட்டிற்கு வந்த எழில் காமாட்சியிடம் பேசி அருள் திருமணத்திற்கு பிறகு தனி வீடு பார்த்து செல்வது என்று முடிவெடுத்தான்.

தொடரும்....
 
Top