• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 18

Administrator
Staff member
Messages
525
Reaction score
717
Points
93
அத்தியாயம் -18


வரும் பொழுதே சாஹி, "எனக்கு பயமா இருக்கு அருள்" என்று கூற அவளது கைகளை இறுக பற்றிக் கொண்டான்.

இருவரும் உள்ளே நுழைய சிவகாமி, "சாஹி" என்றிட எல்லோரின் கவனமும் அவர்களின் மீது திரும்பியது. அவர்கள் இருவரையும் ஒன்றாக எதிர்பார்க்காததால் எல்லோரும் ஒரு வித அதிர்ச்சியில் இருக்க முதலில் சுதாரித்த வீரபாண்டி,

"சாஹி எங்கம்மா போன?" என்று கேட்க பதில் கூறாது தலையை தாழ்த்திக் கொண்டாள்.

சாஹியை பிடித்து தன்னிடம் இழுத்த காமாட்சி, "சாஹி, அப்பா கேட்குறார்ல்ல. பதில் சொல்லு" என்று கேட்க,

திவ்யா, "அருள் நீ எப்படி டா இவ கூட வந்த?" என்றாள்.


வீரபாண்டியிடம் வந்த அருள், "மாமா, உங்க பொண்ணும் நானும் விரும்புறோம். அவ உங்க கிட்ட இதை பத்தி பேசுறதுக்குள்ள நீங்க கல்யாணத்தை ஏற்பாடு பண்ணிட்டீங்க. அதான் என்ன பண்றதுனு தெரியாம பயந்து போய் என்னை தேடி வந்துட்டா" எனக் கூறி முடிக்க முன் எழிலின் அண்ணன் அருளை அடித்து விட கொந்தளித்த திவ்யா அவனது சட்டையை பற்றி விட்டாள்.


"முதல்ல உங்கம்மா என்னை அடிச்சாங்க, இப்ப நீங்க என் தம்பியை அடிக்கிறீங்க. தைரியம் இருந்தா உங்க வீட்டு பொண்ணை அடிக்க வேண்டியது தான. எதுக்கு என் தம்பி மேல கை வைக்கிறீங்க?" என ஆவேசமாக கத்த எழில் திவ்யாவை பிடித்து இழுத்து ஓங்கி அடித்து விட சிவகாமி சாஹியை பிடித்து ஓங்கி அடித்து விட இடமே ரணகளமாக மாறியது.


ஜெயா, "ஏன்டா வேற பொண்னே உனக்கு கிடைக்கலையா" என அவனது சட்டையை பிடித்து உலுக்கி கொண்டிருக்க,
இதையெல்லாம் பார்த்த சண்முகம் பெருமூச்சு விட்டு வீரபாண்டியிடம் வந்து, "உங்க பொண்ணுகிட்ட ஒரு வார்த்தை கேட்ருக்கலாம்ல மாப்பிள்ளை. இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்காது" என்று விட்டு வெளியேறி விட வெற்றியும் அவர் பின்பே சென்று விட்டான்.


இதையெல்லாம் பார்த்த வீரபாண்டிக்கு கண்களை கட்டிக் கொண்டு வர நெஞ்சை பிடித்து மயங்கி சரிய
சாஹி, "அப்பா" என குரல் கொடுத்து அருகில் வர எல்லோரும் வேகமாக வந்தனர்.


சாஹியை விலக்கிய ராஜா, "அப்பா" என அவரின் கன்னத்தை தட்டியவன்,


"எழில் வேகமா வண்டியை எடுடா" என குரல் கொடுக்க அருள் அவரை ஒரு புறம் பிடித்து தூக்கி இருக்க ராஜா மற்றொரு புறம் தூக்க என வண்டியில் ஏற்றினார்கள்.


சிவகாமியும் சாஹியும் ஏறிக் கொள்ள வண்டி மருத்துவமனையை நோக்கி விரைந்தது.

திவ்யாவிடம் வந்த காமாட்சி, "இப்ப நிம்மதியா டி, நல்லா இருந்த குடும்பத்தை இப்படி ஆக்கிட்டீயேடி" என்று கூற,

ஜெயா, "உங்க பொண்ணு ஓடி போனதுக்கு இப்ப என் பொண்ணை குறை சொல்றீங்க. நீங்க பேசுறது சரியில்லை" என்றார்.

"ஆமா, முதல்ல உன் பொண்ணு எங்க பையனை இழுத்துட்டு ஓடுனா. இப்ப உங்க பையன் எங்க பொண்ணை மயக்கிட்டான். ஒரு பிள்ளையை கூட உருப்படியா வளர்க்கலையா? இத்தனை நாளா நல்லா இருந்த பொண்ணை உன் பையன் தான் ஏதோ பண்ணீட்டான். ஒழுக்கம்னா நீங்க உங்க பிள்ளைகளுக்கு என்னன்னே சொல்லி தரலையா?" என்று கேட்க,.

ஜெயா, "போதும் நிறுத்துங்க. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க நான் மனுசியாவே இருக்க மாட்டேன். எப்படி திவ்யா இந்த பொம்பளை கூட இத்தனை நாள் இருந்த. பேசமா நீ தம்பியை தூக்கிட்டு வந்திடு" என்று கூற வேகமாக உள்ளே நுழைந்தவள் குழந்தையை தூக்கிக் கொண்டு ஜெயாவுடன் கிளம்பி விட்டாள்.வீரபாண்டியை உள்ளே அனுமதித்திருக்க சாஹியை பிடித்து உலுக்கிய சிவகாமி, "ஏன்டி இப்படி பண்ண? உங்கப்பா எந்த நிலைமையில இருக்கார் பார். உனக்கு என்னடி குறை வச்சார். மனுசனை எல்லார் முன்னாடியும் அசிங்கபடுத்தித்தியேடி" என்று அவளது கன்னத்தில் மாறி மாறி அடிக்க ராஜா வேகமாக, "அம்மா, இது ஆஸ்பிட்டல். என்ன பண்ணீட்டு இருக்கீங்க?" என அவரை பிடித்து இழுக்க அருள்,

"அத்தை, அவ மேல எந்த தப்பும் இல்லை. எல்லாத்துக்கும் காரணம் நான் தான். நீங்க அடிக்கிறதுனா என்னை அடிங்க" என அவரின் முன்னால் நிற்க,

ராஜாவின் தம்பி, "எல்லாத்துக்கும் காரணம் நீ தான்டா, இப்ப நல்லவன் மாதிரி பேசுற" என அருளின் மீது பாய எழில் வேகமாக அவனை பிடித்துக் கொண்டான்.


"தயவு செஞ்சு நீங்க முதல்ல கிளம்புங்க. இருக்கிற பிரிச்சனையே போதும். இதுக்கு மேல எதையும் தாங்கிற சக்தி எங்களுக்கு இல்லை" என்று சிவகாமி அருளை பார்த்து கையெடுத்து கும்பிட சாஹி கண்களாலே அவனிடம் கெஞ்ச அருள் கிளம்பி விட்டான்.


அருள் இந்த மாதிரி பிரச்சனைகள் எழும் என நினைத்தே சாஹியிடம் தன் காதலை கூற தயங்கினான். அவன் எதிர்பார்க்காத ஒன்று வீரபாண்டியை மருத்துவமனையில் அனுமதித்தது. அவனுக்கும் இதில் அதிக வருத்தம் தான்.
வீட்டிற்கு வந்த திவ்யா, "ம்மா..அருள் மட்டும் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட அவ்வளவு தான். நான் மனுசியா இருக்க மாட்டேன்" என ஆர்பாட்டம் செய்தாள்.

"எதுக்கு டி இப்படி கத்துற. அவன் வரட்டும் பேசிக்கலாம்" என்று சமாதானம் செய்து கொண்டிருக்க அருள் உள்ளே நுழைந்தான்.

அவர்களை பார்த்தும் எதுவும் பேசாது தனது அறைக்குள் நுழைய போக ஜெயா, "டேய் நில்லுடா" என்றார்.

அவன் அவரை ஏறிட்டு பார்க்க, "என்னடா பண்ணீட்டு இருக்க?" என்றிட,

"ம்மா..அன்னைக்கு நீங்க தான சொன்னீங்க. உனக்கு பிடிச்ச பொண்ணு இருந்தா கூட சொல்லு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு. இப்ப சொல்றேன் எனக்கு சாஹிய தான் பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைங்க" என உறுதியாக கூற ஜெயாவே ஒரு நிமிடம் ஆடித் தான் போய் விட்டார்.

திவ்யா, "அவ வேண்டாம் டா, வேற நல்ல பொண்ணா பார்க்கலாம்" என கூற,

"க்கா...நீ இதுல தலையிடாத" என்றான்.

"என்னம்மா இப்படி பேசுறான். அப்ப நான் யார்ம்மா?" என திவ்யா ஆவேசமாக கொந்தளிக்க,

"அருள் நீ உள்ள போப்பா, அப்புறமா பேசிக்கலாம்" என ஜெயா அவனை உள்ளே அனுப்பினார்.


"ம்மா.." என்றிட,

"சும்மா இரு திவ்யா, இது எடுத்தோம் கவுத்தோம்னு பேசுற விஷயமில்ல. அவன் கோபமா இருக்கான். அப்புறமா பேசலாம்" என அமைதி படுத்தினார்.


வீரபாண்டி கண் விழித்து விட இரண்டு நாட்களில் வீரபாண்டியை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

யாரும் நடந்த விஷயத்தை பற்றியோ மற்றவரை பற்றியோ குறை சொல்ல விரும்ப வில்லை. மாப்பிள்ளை வீட்டில் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.


சாஹி தான் யாரிடமும் முகம் கொடுத்து கூட பேசாமல் தன் அறையிலே அழுது கொண்டே அடைந்திருந்தாள்.

அவள் ஏதோ ஒரு வேகத்தில் அருளை இழந்து விடக் கூடாது என செய்து வைத்த காரியம் இவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க வில்லை.

அப்படியே நாட்கள் நகர அருளுக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு மேல் அழைப்பு வந்து கொண்டிருந்தது.

வேறு வழியின்றி கிளம்பியவன் நேராக வீரபாண்டி வீட்டிற்கு சென்றான்.

அவர் நாற்காலியில் அமர்ந்திருக்க, சிவகாமி அவருக்கு காபி எடுத்து வந்து கொடுத்தார்.

வண்டியை நிறுத்திய அருள் உள்ளே நுழைய, அவனை பார்த்த வீரபாண்டி ஒரு நிமிடம் அதிர்ந்து பின், "வாங்க, உட்கார்ங்க" என்றிட, எதிரில் அமர்ந்தான்.


பால்கனியில் அமர்ந்திருந்த சாஹி முதலிலே அவனை பார்த்து விட்டு கீழிறங்கி வராமல் அங்கிருந்தே கீழே நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.


"முதல்ல நீங்க என்னை மன்னிக்கனும். அன்னைக்கு நடந்த பிரச்சனைக்கு நானும் ஒரு காரணம். உங்களுக்கு இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கலை. சாஹியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவளுக்கும் தான். ஆனா கண்டிப்பா உங்க விருப்பம் இல்லாம நான் அவளை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன்.


எத்தனை வருஷம் வேண்டும்னாலும் நான் காத்திருக்கேன். அதே மாதிரி சாஹியை தவிர வேற யாரையுமே நான் கல்யாணம் பண்ண மாட்டேன் கடைசி வரை.

நானே முறைப்படி பேசனும்னு நினைக்கிறதுக்குள்ள என்னென்னமோ நடந்திருச்சு. இப்ப அவசர வேலையா கிளம்புறேன். அதான் உங்க கிட்ட பேச வந்தேன்.


உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தா கடைசி வரை நல்லா பார்த்துப்பேன். உங்களுக்கே எப்ப என் மேல நம்பிக்கை வருதோ அப்ப கூப்பிடுங்க. உடனே பதில் சொல்லனும்னு அவசியம் இல்லை.


உங்க பதிலுக்காக காத்திருக்கேன்" என்றவன் மேல் நின்ற சாஹியை ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பி விட்டான்.


நாட்களும் நகர்ந்தது. எழில் திவ்யாவை தேடி செல்ல, "உங்கம்மா இருக்க வீட்டுக்கு என்னால வர முடியாது. உங்களுக்கு நான் வேணும்னா இங்கே இருங்க" என்று உறுதியாக கூற,

சில நாட்களில் அவளது கோபம் தனிந்து விடும். தன்னை தேடி வந்து விடுவாள் என நினைத்தவன் அவள் அங்கே இருக்கட்டும் என்று விட்டு தன் வீட்டில் இருந்து கொண்டான்.


வீரபாண்டி குணமடைந்து தனது வேலையை பார்க்க ஆரம்பித்தார். ஆனால் அன்றைய நிகழ்விற்கு பின் சாஹியிடம் முகம் கொடுத்து கூட பேச வில்லை.


அவர் அவளை சிவகாமி மாதிரி நான்கு அடி அடித்து விட்டிருந்தால் இல்லை ஏன் இப்படி பண்ண
என்று கேட்டிருந்தால் கூட பெரிதாக தெரிந்திருக்காது. ஆனால் பேசாமல் ஒதுக்குவது அதிக அழுத்தத்தை கொடுத்தது.


வேலைக்கும் செல்லாமல் வீட்டிலே இருந்தவள் அன்று வீரபாண்டி அறையை தேடி சென்றாள்.


அவளை பார்த்தவர் எதுவும் கூறாமல் அமர்ந்திருக்க, "ப்பா.." என்றவளின் கண்கள் கலங்கி நீர் வெளியேறுவதற்கு தயாராக இருக்க அதை பார்த்தவருக்கும் ஒரு நிமிடம் வலிக்க தான் செய்தது.

ஒரே மகள் என அவள் விரும்பியதை எல்லாம் வாங்கி கொடுத்தார். அருளை விரும்புவதை திருமணம் உறுதி செய்வதற்து முன்பே கூறியிருந்தாள் கண்டிப்பாக ஏற்றிருப்பார்.

இப்பொழுதும் அவள் மீது கோபமெல்லாம் இல்லை வருத்தம் மட்டுமே. ஆனால் அவரும் அவளிடம் ஒரு வார்த்தை சம்மதமா என கேட்டிருக்கலாம் என்று நினைத்து மருகினார்.அவருக்கு அருளின் குணம் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும். அன்றைய அவனது பேச்சு அவரையும் சற்று அசைக்க தான் செய்தது. அவன் நினைத்திருந்தால் சாஹியை அன்றே திருமணம் செய்திருக்கலாம்.


அவ்வாறு செய்திருந்தால் தங்களால் எதுவும் பண்ணியிருக்க முடியாது தான். ஆனால் இன்று வரை அவரின் சம்மதத்திற்காக காத்திருக்கிறான் என நினைக்க அவனை அவருக்கு அதிகமாகவே பிடித்திருந்தது.

தான் பார்த்த மாப்பிள்ளையை விட எல்லா விதத்திலும் அவன் சாஹிக்கு பொருத்தம் தான் ‌ என்பதை அவரும் நன்கு அறிவார்."சாரிப்பா, உங்களை கஷ்டப்படுத்தனும்னு நான் அப்படி செய்யலைப்பா" என்றவளின் கண்ணீர் கன்னத்தை தாண்டி விட வேகமாக மகளை அணைத்துக் கொண்டார். இதுவரை அவளிடம் பேசாமல் இருந்ததே கிடையாது.


"நானும் உன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கனும். சரி விடும்மா, நடந்ததை பத்தி பேச வேணாம். அந்த பையனை வரச் சொல்லு. கல்யாணம் பேசனும்" என்று கூற,

"ப்பா" என்றவளின் அழுகை அதிகமாகியது.

"கல்யாணப் பொண்ணு அழுக கூடாது. போ" என அவளின் கண்ணீரை துடைத்து விட சந்தோஷமாக தலையாட்டியவள் வேகமாக தனதறைக்குள் புகுந்து அருளிற்கு அழைத்தாள்.

அன்றைய நிகழ்வுக்கு பின் சாஹி அருளிடமும் பேச வில்லை. பல முறை அழைத்து ஓய்ந்தவன் அவளை தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி நின்று கொண்டான்.

அழைப்பை ஏற்ற அருள், "சாஹி" என்றழைக்க அவளின் கண்ணீரின் அளவு அதிகமாகியது.
தொடரும்..
 
Well-known member
Messages
572
Reaction score
416
Points
63
Epdiyo shaahi APPA marriage ku ok sollittaru, superrrrrrrrr
 
Top