• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 17

Administrator
Staff member
Messages
525
Reaction score
717
Points
93
அத்தியாயம் - 17



சாஹியை தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தவர்கள் அவளின் மொபைலுக்கு அழைக்க சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது.



ப்ளைட்டில் ஏறும் போதே மொபைலை அணைத்து வைத்தவள் அருள் அருகில் அமர்ந்து அவனது தோளில் சாய்ந்து கைகளை இறுக பற்றிக் கொண்டாள்.

அவளது பயத்தை புரிந்து கொண்டவன் அவளது தோளில் கைப்போட்டு ஆதரவாக அணைத்து பிடித்துக் கொண்டான்.



சிவகாமி உட்கார்ந்து அழுது கொண்டிருக்க, "கவலைப்படாத சிவகாமி, சாஹியை கண்டு பிடிச்சிடலாம்" என காமாட்சி சமாதானம் செய்து கொண்டிருந்தார்.


வீரபாண்டியும் ஒரு புறம் இடிந்து போய் உட்கார்ந்திருக்க ராஜா, "ப்பா..போலீஸ்ல கம்ப்ளைட் பண்ணிடலாமா?" என்று கேட்க,


"வேண்டாண்ணா, நாளைக்கு கல்யாணம் வச்சிக்கிட்டு இன்னைக்கு பொண்ணை காணோம்னு மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். நம்மளே தேடலாம்" என்றான் அவனின் தம்பி.


குழந்தையை உறங்க வைத்து விட்டு வந்த திவ்யா எழில் அருகில் நின்று நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

காமாட்சி முழுமையாக தளர்ந்து போய் தான் அமர்ந்திருந்தார் சாஹி விஷயத்தில். அதை பார்த்தவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. என்ன தான் அவளை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டாலும் காமாட்சி சற்று விலக்கி வைத்து அவ்வ பொழுது வார்த்தையால் குத்திக் கொண்டு தான் இருப்பார்.


திவ்யா, "ஏன் மாமா, அவ ஆபீஸ்ல யாரையாவது காதலிக்கிறாளானு விசாரிச்சு பார்க்கலாமே" என்றிட அவளை முறைத்த எழில், "திவ்யா என்ன பேசுற? வாயை மூடு" என்றான்.


"இல்லங்க, இந்த ஆங்கிள்ல விசாரிச்சு பார்க்கலாம்னு தான் சொன்னேன். நான் எதுவும் தப்பா சொல்லலையே. கல்யாணத்துக்கு முதல் நாள் ஓடிப் போனா அப்புறம் என்ன நினைக்கிறது" என்று கூற,


"வாயை மூடுடி, எங்க பொண்ணு ஓடி போனானு நீ பார்த்தியா? உன்னை மாதிரி தறுதலையா எந்த வீட்டு பையன் கிடைப்பான் இழுத்துட்டு ஓடி போகலாம்னு எங்க பொண்ணு நினைக்க மாட்டா. நாங்க பிள்ளைய நல்லா வளர்த்திருக்கோம்" என்று காமாட்சி எல்லோர் முன்னாடியும் கூற திவ்யா முகம் கறுத்து விட்டது.

"அத்தை நீங்க தேவையில்லாம பேசுறீங்க? உங்களுக்கு மரியாதை அவ்வளவு தான். நான் பொறுமையா போறேன்றதுக்காக நீங்க என்ன வேணாலும் பேசலாம்னு அர்த்தம் கிடையாது. சும்மா ஓடி போனேன்னு சொல்றீங்க? உங்க வீட்டு பொண்ணு எங்க போயிருக்கா?" என்று கேட்க,


"யார் டி தேவையில்லாம பேசுறது. எங்க மரியாதை இல்லாம பேசி தான் பார். அப்புறம் இந்த காமாட்சி யார்னு தெரியும். உன்னையெல்லாம் இழுத்து வந்தான் பார் என் புள்ளை அவனை செருப்பாலே அடிக்கனும். உன்னை மாதிரி தான்டி இந்த வீட்டில இரண்டு மருமகள்க இருக்காங்க. எங்கையாவது இப்படி வந்து பேசுறாங்களா.

என்ன பண்றது தகுதி தராதரம் இல்லாத வீட்டில எல்லாம் பொண்ணு எடுத்தா இப்படி தான். உன்னையெல்லாம் வீட்டில சேர்த்தோம்ல்ல. அதான் நடு வீட்டில நின்டு நியாயம் பேசீட்டு இருக்க?" என்றார் காமாட்சி கோபத்தில் கொந்தளித்து.


அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் திவ்யாவிற்கு உட்ச பட்ச கோபத்தை கொடுக்க, "பொம்பளை மாதிரியா பேசுறீங்க. பதிலுக்கு பேச தெரியாம இல்லை. வயசுல மூத்தவங்கனா என்னாலும் பேசுவீங்களா?" என அவரிடம் விரல் நீட்டி பேச
எழில், "திவ்யா" என குரல் கொடுத்து அதட்டினான்.


"என்ன திவ்யா? உங்கம்மா பேசுறது எல்லாம் காதுக்கு கேட்கலையா? எத்தனை தடவை பேசியிருக்காங்க. நான் ஒரு தடவை பேசுனதுக்கு உங்களுக்கு கோபம் வருது. அப்ப உங்களை நம்பி வீட்டை விட்டு வந்த நான் என்ன பைத்தியமா? இதெல்லாம் ஒரு குடும்பமா? உங்கம்மா என்னைக்காவது பெரிய மனுசி மாதிரி பேசி இருக்காங்களா? அப்படி என்ன நான் இந்த வீட்டில குறைஞ்சி போயிட்டேன்.

சும்மா என்னை மட்டம் தட்டிட்டே இருக்காங்க. இப்ப அவங்க வீட்டு பொண்ணு ஓடி போனதும் பூசி மொழுகிறாங்க" என்று வீடே அதிரும் படி கத்த காமாட்சி அவளை ஓங்கி அடிக்க நிலை தடுமாறி கீழே விழுந்தாள்.

எழில் வேகமாக அவளை தூக்க சிவகாமி, "க்கா..என்ன காரியம் பண்றீங்க" என்று குரல் கொடுக்க வீரபாண்டி, "அண்ணி" என்றார்.


"எல்லாரும் சும்மா இருங்க. நம்ம என்ன பேசீட்டு இருக்கோம். இவ என்ன பேசுறா? கொழுப்பெடுத்தவ. இந்த தறுதலைய சொல்லனும்" என்று எழிலை கை நீட்டி கூற,

வேகமாக எழுந்த திவ்யா எழிலின் கையை தட்டி விட்டு,

"நீங்க எல்லாம் ஆம்பிள்ளையா? உங்களை நம்பி வந்த என்னை உங்கம்மாவை வச்சு அடிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறீங்க?" என்று ஆவேசமாக பேச,

"இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன வாயை கிழிச்சிடுவேன்" என்ற காமாட்சி அவளை நோக்கி வர இடையில் நின்ற எழில் அவரை பிடித்து தடுக்க,

"அண்ணி, அவ தான் சின்ன பொண்ணு. நிலைமை புரியாம பேசுறா? நீங்களுமா..?" என்றார் தளர்ந்த குரலில் வீரபாண்டி.


"நீங்களே பார்ங்க, நம்ம சாஹியை காணோம்னு பதட்டத்துல இருக்கோம். இவ என்னன்னா நம்ம பொண்ணு ஓடி போய்ட்டானு சொல்றா" என்றார் ஆதங்கமாக காமாட்சி.


"உங்க பொண்ணை ஒரு தடவை சொல்றதுக்கே இவ்வளவு கோபம் வருதே! நானும் ஒரு பொண்ணு தான? நீங்க எத்தனை தடவை சொல்லி குத்தி காட்றீங்க. அடுத்த வீட்டு பொண்ணுன்னா எளக்காரமா இருக்கா? எவ்வளவு தைரியம் இருந்தா என் மேல கையை வச்சிருப்பீங்க? கேட்க ஆள் இல்லைனு நினைக்கிறீங்களா? எனக்கும் அம்மா தம்பி எல்லாரும் இருக்காங்க" என்று கூற,


"ஏம்மா திவ்யா, இப்படி பேசுற. என்ன பிரச்சனை நடக்குது. நீ ஏன் தேவையில்லாம சண்டை போடுற. நம்ம வீட்டு பொண்ணை நீயே அசிங்கபடுத்துனா ஊர்காரங்க எல்லாம் எப்படி பேசுவாங்க" என வீரபாண்டி கேட்க,

"ஏன் மாமா, நான் எந்த வீட்டு பொண்ணு. இத்தனை நாளா இவங்க என்னை அசிங்கபடுத்துனப்ப எல்லாம் அமைதியா தான இருந்தீங்க. உங்க பொண்ணை பேசுனதும் வாயை திறக்குறீங்க" என்று அவரின் மீது பாய,

ராஜா, "திவ்யா, பெரியவங்க கிட்ட இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா?" என்றான்.


"நான் பேசுறது மட்டும் உங்க எல்லார்க்கும் பெரிசா தெரியுது. உங்கம்மா அடிச்சது தப்பா தெரியலை. இன்னைக்கு நான் அவங்களை சும்மா விட மாட்டேன். என்னை அடிச்சதுக்கு பதில் சொல்லியே ஆகனும்" என்று கூற,

"என்னடி பதில் சொல்லனும். இதுக்கு மேல பேசுன இன்னும் நாலு அடி சேர்த்து கொடுப்பேன்" என்றார் காமாட்சி.


"ஒரு தடவை அமைதியா இருந்தா எல்லா தடவையும் அமைதியா இருப்பேன்னு நினைக்காதீங்க. எனக்கும் கை இருக்கு" என்று கூற,

"பார்டா உன் பொண்டாட்டிக்கு கொழுப்பை என் வயசு என்ன அவ வயசு என்ன? என்னையே அடிப்பேனு சொல்றா. இதையெல்லாம் கேட்க மாட்டீயா?" என்றார்.

"அவர் என்ன கேட்குறது, இன்னைக்கு உங்களை ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்" என்றவள் வேகமாக வீட்டை விட்டு வெளியேறி தன் வீட்டை நோக்கி செல்ல எழில் அவளின் பின்னாலே ஓடினான்.


"அவளை விட்டு தள்ளுங்க, முதல்ல நம்ம பிள்ளை எங்க இருக்கானு பார்ங்க" என்று காமாட்சி கூறிக் கொண்டிருக்க மாப்பிள்ளையும் அவனது தந்தையும் வந்து விட்டனர்.


அவரை பார்த்த வீரபாண்டி, "வாங்க மாமா" என அவரை அழைக்க உள்ளே நுழைந்த சண்முகம், "என்ன மாப்பிள்ளை மருமகளை காணோம்னு பேசிக்கிறாங்க. உண்மையா?" எனக் கேட்க,


"ஆமா மாமா" என்றார் கைகளை பிசைந்து கொண்டு.

"சிவராம் கூட ஊர்க்குள்ள இல்லையே அப்புறம் எப்படி? எல்லா பக்கமும் விசாரிச்சுங்கீங்களா?" என்றார் சண்முகம்.

"எல்லா இடத்துலையும் தேடிட்டோம். ஆனா எந்த தகவலும் இல்லை மாமா" என்று ராஜா கூற,

"என் நண்பர் போலீஸா இருக்கார். அவர் கிட்ட பேசிப் பார்ப்போம். கேஸ் இல்லாம பர்ஷனலா உதவி கேட்போம்" என்ற சண்முகம் வீரபாண்டியை பார்க்க,

"சரி மாமா" என்றார். தனது மகன் வெற்றியை பார்த்த சண்முகம், "போன் பண்ணி கேளுப்பா, எங்க இருக்கார்னு. நேரா போய் பேசிட்டு வந்திடலாம்" என்று கூற வெற்றி மொபைலை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.

ஆவேசமாக உள்ளே நுழைந்த திவ்யா வேகமாக ஜெயாவிற்கு அழைத்தாள்.

"சொல்லும்மா திவ்யா, தம்பி எப்படி இருக்கான். நேத்து உடம்பு சரியில்லைன்னு சொன்ன. இப்ப பரவாயில்லையா?" என்று கேட்க,

"அம்மா" என அழுக ஆரம்பித்தாள்.

ஒரு நிமிடம் அதிர்ந்த ஜெயா, "ஏய் என்னடி ஆச்சு? எதுக்கு அழுகுற?" எனக் கேட்க,


"ம்மா..என் மாமியார் என்னை போட்டு அடிச்சிட்டாங்க. குடும்பமே வேடிக்கை பார்க்கிறாங்க. அந்தம்மா கேவலமா பேசுறாங்க" என்று கூறி மேலும் அழுக,

"என்னடி சொல்ற? அந்தம்மா எதுக்கு உன்னை அடிச்சுச்சு. மாப்பிள்ளை எதுவும் கேட்கலையா?" என்றார்.


"இல்லை, அவரும் சேர்ந்து தான் வேடிக்கை பார்க்கிறார். நீ வாம்மா, அந்தம்மா என்னை ரொம்ப கொடுமை படுத்துறாங்க. என்னால இருக்கவே முடியலை. நீ உடனே வா. அவங்க எனக்கு கேட்க ஆள் இல்லைனு ரொம்ப பேசுறாங்க."

"சரி, இரு நான் உடனே வரேன். அந்தம்மா யார் உன்னை அடிக்க. வந்து பேசிக்கிறேன்" என அழைப்பை துண்டித்த ஜெயா வேகமாக ஆட்டோ பிடித்து கிளம்பி விட்டார்.


எழில், "ஏன் திவ்யா இப்படி பண்ற? இப்ப எதுக்கு அத்தைக்கு போன் பண்ண? பிரச்சனைய பெரிசாக்காதடி" என்று கூற,

அவனை முறைத்தவள், "என்னை அடக்குறதுலே குறியா இருங்க. ஓடி போன உங்க தங்கச்சிய ஓடி போய்ட்டானு சொன்னா தப்பா. இத்தனை நாள் உங்கம்மா பேசுறதை சரி போனா போகுது சகிச்சுக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு உங்கம்மா எல்லார் முன்னாடியும் என்னை அடிக்கிறாங்க. நீங்களும் சும்மா தான் வேடிக்கை பார்த்தீங்க. நான் என்ன அனாதையா? எங்கம்மா வரட்டும். உங்களையெல்லாம் ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்" எனக் கத்த குழந்தை அழுக ஆரம்பித்தான்.

"ஏன்டி இராட்சசி மாதிரி கத்தி தூக்கிறவனை எழுப்பி விடுற?" என்ற எழில் குழந்தையை தூக்கி சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

போலீஸ்காரரிடம் பேசிய வெற்றி, "ப்பா..போட்டோ, போன் நம்பரை உடனே அனுப்ப சொன்னார். ஈவ்னிங் ஆறு மணிக்கு நேரா வீட்டுக்கு வரச் சொன்னார்" என சொல்லிக் கொண்டிருக்க ஜெயா ஆட்டோ வந்து வாசலில் நின்றது.

வேகமாக வெளியே வந்த திவ்யா அவரை அழைத்துக் கொண்டு காமாட்சியிடம் வர, "எதுக்கு சம்மந்தி திவ்யாவை அடிச்சீங்க? அவளை என்னை பண்ணாலும் யாரும் கேட்க இல்லைனு நினைக்கிறீங்களா? நீங்க யார்ங்க நான் பெத்த பொண்ணை அடிக்க?" என சத்தமிட,


வீரபாண்டி, "சம்பந்தி என்ன நடந்ததுனு கேட்டு பேசுங்க. நாங்களே எங்க வீட்டு பொண்ணை காணோம்னு பதட்டத்தில இருக்கோம்" என்றார்.

"ஏங்க, என் பொண்ணை எதுக்கு அடிச்சீங்கனே கேட்ட உங்க பொண்ணை காணோம்னு சொல்லீட்டு இருக்கீங்க? என் பொண்ணை எதுக்கு அடிச்சாங்க உங்க அண்ணி. முதல்ல இருந்தே அவங்க பேச்சு வார்த்தை சரியில்லை, ஏதே ஆசைப்பட்டு ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. பிள்ளையும் பிறந்திடுச்சு. அதுக்கப்புறமும் அந்தம்மா என் பொண்ணை கொடுமை படுத்துறாங்க. நீங்க எல்லாம் பஞ்சாயத்து தலைவரா இருக்கீங்க. இந்த அநியாயத்தை எல்லாம் கேட்க மாட்டீங்களா?" என்று சண்டையிட அருளும் சாஹியும் வீட்டிற்குள் நுழைந்தனர்.





தொடரும்...
 
Well-known member
Messages
572
Reaction score
416
Points
63
Achacho innum Enna nadakka pogutho
 
Top