• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 15

Administrator
Staff member
Messages
525
Reaction score
717
Points
93
அத்தியாயம் -15


அவனை பார்த்த நொடி சாஹியின் கண்கள் அதிர்ச்சியில் விரிய அருளோ அந்த நொடியை அவள் உள்ளே நுழையும் பொழுதே கடந்திருந்ததால் இப்போது அவனது பார்வை இரசனையாக அவள் மீது படிந்தது.அவளை பார்த்தவன் புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க வேகமாக தலையாட்டினாள்.

அருள் அவளை பார்த்து புன்னகைக்க அவளும் புன்னகைத்தாள்.


சில நிமிடங்களில் மீட்டிங் தொடங்கியது. அந்த கம்பெனி புதிதாக தொடங்கயிருக்கும் ப்ரஜெக்ட் சம்பந்தமாக ஒரு குறும்படம் ஓடியது. பின்பு அது தொடர்பாக பல்வேறு கிளைகளிலிருந்தும் தயாரித்து வைத்திருந்த பைலை சமர்பித்தனர்.


ஒவ்வொரு கிளையிலிருந்தும் இருந்து இரண்டு பேர் வீதம் அதற்கு தேர்வு செய்திருக்க அதில் சாஹியும் இடம்பெற்றிருந்தாள். அதற்கு தலைமை பொறுப்பிற்கு அருள் தான் தேர்ந்தெடுத்திருந்தனர்‌.சிறிது நேரத்தில் மீட்டிங் முடிய சாஹியை நோக்கி வந்து அருள், "ஹாய், நீ இங்க எப்ப ஜாயின் பண்ண?" எனக் கேட்டுக் கொண்டிருக்க அவள் அருகில் வந்த நேகா அவனது கையில் தனது கையை கோர்த்துக் கொண்டு,

"அருள், இப்படி தனியா விட்டு வந்துட்ட" என அவனிடம் கொஞ்சிக் கொண்டிருக்க

"இங்க தான் நேகா இருக்கேன்" என பதில் கொடுத்து விட்டு சாஹியை பார்த்தான் பதில் எதிர்பார்த்து.

சாஹிக்கு அருள் நேகாவுடன் நெருக்கமாக பார்த்தவுடன் ஒரு மாதிரி ஆகி விட்டது. ஆரம்பத்திலிருந்தே அவள் அவனிடம் அவ்வாறு தான் நடந்து கொண்டிருந்தாள். அவன் அவளை கவனமாக விலக்கி கொண்டிருந்தாலும் அவன் பின்பே சுற்றிக் கொண்டிருந்தாள். அவள் பணி புரியும் அதே அலுவலகத்தில் தான் அவள் பணி புரிகிறாள்."சிக்ஸ் மந்த் ஆகுது, நீங்க எப்படி இருக்கீங்க?" என்றவளது பார்வை அவர்களின் கை மீது படிய வேகமாக அவளது கையை எடுத்து விட்டவன்,


"நல்லா இருக்கேன், உன் மேரேஜ்" என இழுக்க,

"நின்டு போச்சு" என்றாள்.

அதை கேட்டு அருளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் வெளியில் காட்டாது அவளிடம் சில நிமிடம் பேசிக் கொண்டிருக்க சாஹி, "எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு, அப்புறம் பார்க்கலாம்" என நகர்ந்து விட்டாள்.


மறுநாளிலிருந்து அந்த ப்ராஜெக்ட் தொடங்குவதாக இருந்தது.


அதனால் அருளும் நேகாவும் கிளம்ப அருளின் கண்கள் சாஹியை தேடியது. ஆனால் அவள் தன்னுடைய வேலையில் முழ்கி விட அவனது கண்களுக்கு அகப்பட வில்லை.


அருளும் நேகாவும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

அந்த ப்ராஜெக்ட் முடிய ஆறு மாதம் ஆகும் என்பதால் அருள், "நேகா, நான் என் ப்ரெண்ட் கிட்ட பேசிட்டேன். ப்ராஜெக்ட் முடியுற வரை நான் அவன் வீட்டில் தங்கிக்கிறேன். நீ ஹாஸ்ட்டல்ல ஸ்டே பண்ணிக்கோ" என்றிட,

"சரி அருள், ஆனா எனக்கு இங்க யாரையுமே தெரியாதே" என உதட்டை பிதுக்கினாள்.

"சரி இரு நான் பார்க்கிறேன்" என்றவன் தன் நண்பனுக்கு அழைக்க அவனும் சில மகளிர் விடுதி விலாசத்தை வழங்கினான்.

அவளை அழைத்துக் கொண்டு சென்ற அருள் ஹாஸ்ட்டலை பார்க்க நேகாவிற்கு எதுவுமே பிடிக்கவில்லை.


"நேகா, எல்லாத்தையும் பிடிக்கலைனு சொன்னா என்ன பண்றது. சிக்ஸ் மந்த் தான. அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ" என்று கூற,

"ப்ளீஸ் அருள், வேற பார்க்கலாம் இல்லை நான் உங்க கூட தங்கிக்கவா?" என்றாள்.

"ஏய், அங்க நாங்க பசங்களா இருப்போம். இரு பார்க்கலாம்" என்றவன் சில நிமிடம் யோசித்து விட்டு சாஹியை அழைத்தான்.


மொபைல் ஒலிக்க அழைப்பை ஏற்றவள், "ஹலோ" என்றிட,

"சாஹி, அருள் பேசுறேன்" என்றான்.


"தெரியுது, சொல்லுங்க" என்று கூற தன் சிரிப்பை கட்டு படுத்தியவன்,
"ஒரு ஹெல்ப், என் ப்ரெண்ட் நேகா இருக்கா இல்ல அவளுக்கு சிக்ஸ் மந்த்க்கு இங்க ஹாஸ்ட்டல் பார்த்தோம். அவளுக்கு பிடிக்கலை, உனக்கு தெரிஞ்சு இங்க ஏதாவது நல்ல ஹாஸ்ட்டல் இருக்கா? இல்லை நீங்க தங்கி இருக்க இடத்தில ஏற்பாடு பண்ண முடியுமா? எனக்கு இந்த ஏரியா பழக்கமில்லை. அதான் கேட்குறேன்" என்று கூறி முடிக்க,

"சரி விசாரிச்சுட்டு சொல்றேன்" என்றவள் தனது தோழி நந்தினியை அழைத்து விவரத்தை கூற,


"சாஹி, சூப்பர் டி. நான். சிக்ஸ் மந்த் ட்ரெயினிங் உன்னை எப்படி தனியா விட்டு போறதுனு நினைச்சேன். நல்ல வேளை, பேசாம அந்த பொண்ணை நம்ம வீட்டிலே தங்க வைச்சுக்கோ. உனக்கும் தனியா இருக்க கஷ்டமாயிருக்காது. நான் இன்னும் டூ டேஸ்ல கிளம்பிருவேன்" என்று கூற ரெண்டு நிமிடம் யோசித்த சாஹி அருளுக்கு அழைத்து விவரத்தை கூற அவன் நேகாவை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.


காலிங் பெல் ஒலிக்க கதவை திறந்த சாஹி அவர்களை வரவேற்று அமர வைத்தாள்.


அவர்களது வீட்டை பார்த்த நேகாவிற்கு பிடித்து விட, "நான் தங்கிறது உங்களுக்கு எதுவும் பிரச்சனையில்லையே" எனக் கேட்க,

"அதெல்லாம் இல்லை" என்றவள் அவர்களுக்கு காபி கொடுத்தாள்.


சிறிது நேரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்த அருள் கிளம்பி விட நேகா சாஹியிடம் பேச ஆரம்பித்தாள்.

அவள் பேசுவதில் ஆர்வமில்லாமல் தலையாட்டிக் கொண்டிருந்தவளுக்கு அவளது வெகுளி தனமான பேச்சு பிடித்து விட்டது.

நந்தினியும் இரண்டு நாட்களில் கிளம்பி விட சாஹியும் வேறு வழியின்றி நேகாவுடன் பேச ஆரம்பித்தாள்.


அவளுக்கு நேகா வந்து பேசும் பொழுது முகத்தை திருப்பி செல்ல மனதில்லை.

அலுவலகத்திலும் அருளுக்கு கீழ் உள்ள டீமில் நேகாவும் சாஹியும் இருக்க இருவரும் இணைந்து அவனை ஒரு வழியாக்கி கொண்டிருந்தனர்.

அவர்களுடன் பழகிய சிறிது நாட்களில் அருள் நேகாவுடன் நட்புடன் பழகுவதையும் ஆனால் அவள் அப்படி இல்லை என்பதையும் சாஹி உணர்ந்திருந்தாள்.

ஆனால் அவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க விரும்பாமல் தள்ளி நின்று கொண்டாள்.

வீட்டில் மட்டுமின்றி நேகாவின் அட்டகாசங்கள் ஆபீஸிலும் தொடர அருள் தான் திண்டாடிக் கொண்டிருந்தான்.

வார இறுதி விடுமுறை நாட்களில் அவர்களின் வீட்டிற்கு வந்து விடுவான். மூவரும் படத்திற்கு செல்வது, கேம் விளையாடுவது, சமைப்பது என அவர்களது நாட்கள் மகிழ்ச்சியாக நகர்ந்தது.

சாஹியும் அருளுடன் முன்பு போல் அல்லாது சற்று நெருங்கி இருந்தாள். அருளுக்கு அவளின் மீதிருந்த காதல் இன்னும் இன்னும் வளர்ந்தாலும் நேரடியாக சொல்ல சற்று பயமாக தான் இருந்தது எங்கு நிராகரித்து விடுவாளோ? என்று.


அவனுக்கு சாஹியை பற்றி தெரியும் எதையும் மறைக்காது முகத்திற்கு நேராக கூறி விடும் பழக்கமுடையவள்.


இறுதி நாட்களில் ப்ராஜெக்ட்டும் படு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.


அன்று நேகாவும் அருளும் மறுநாள் பெங்களூர் கிளம்புவதால் ஹோட்டலில் சாஹியும் நேகாவும் அருளுக்காக காத்திருந்தனர்.

சில நிமிடங்களில் அருள் ஆஜராகி விட சிரிப்பும் கலாட்டாவோடும் தங்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்தனர்.


சாஹி மொபைல் ஒலிக்க வீரபாண்டி தான் அழைத்திருந்தார்.

"சொல்லுங்கப்பா" என்றிட,

"ம்மா..இந்த வாரம் உனக்கு கல்யாணம் முடிவு பண்ணியிருக்கோம். மாப்பிள்ளை நமக்கு ரொம்ப நெருங்கின சொந்தம். இந்த தடவை கண்டிப்பா அந்த பங்கஜத்தால எதுவுமே பண்ண முடியாது" என்று கூற சாஹியின் முகம் தான் கறுத்து விட்டது.

முயன்று தன்னை சமன் செய்தவள், "ப்பா..என்னப்பா அதுக்குள்ள" என்று கேட்க,

"நீ நேர்ல வாடா, எல்லாம் பேசிக்கலாம்" என அழைப்பை துண்டித்தார்.

சாஹியின் முக மாற்றத்தை கண்டு அருள் என்னவென்று கேட்க சாஹி வீரபாண்டி கூறியதை கூற அவளை அணைத்துக் கொண்ட நேகா, "வாவ் சூப்பர் சாஹி, கங்கிராட்ஸ்" என ஆர்பரிக்க மற்ற இருவரிடமும் அந்த மகிழ்ச்சி துளியும் இல்லை.


"ஹேய், இதுக்கு சேர்த்து இன்னைக்கு நீ தான் ட்ரீட்" என்றவள் அடுத்த ரவுண்டை ஆரம்பித்து விட்டாள்.அருள் எப்படியாவது கிளம்புவதற்குள் காதலை சாஹியிடம் சொல்லி விட வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்க,


நேகா, "அருள் நான் உங்ககிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயம் சொல்லனும்னு நினைச்சேன். பட் இன்னைக்கு தான் சொல்லுனும் தோனுது" என்றிட இருவருமே அவளை ஆச்சரியமாக பார்க்க,

"எஸ், எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கலாமா?" எனக் கேட்க இருவரது முகமும் ஆச்சரியத்தில் விரிந்தது.

சாஹி அருளின் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்க,


"அருள் ப்ளீஸ், நோ மட்டும் சொல்லிடாத. டைம் எடுத்து யோசிச்சு கூட சொல்லு, உடனே சொல்லனும்னு அவசியம் இல்லை" என கூறிக் கொண்டிருக்க,

"நேகா, சத்தியமா எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை. நான் உன் கூட ப்ரெண்டா தான் பழகுனேன்" என்றான்.

"பரவாயில்லை அருள், இனிமே லவ் பண்ணலாம். இதுவரைக்கும் யார்க்கிட்டயும் இந்த மாதரி எனக்கு எண்ணம் வந்தது இல்லை. நீ அழகா இருக்கனு நான் இப்படி சொல்லலை. நான் யாரோவா இருக்கும் போதே நீ என்னை இவ்வளவு கேர் பண்ற. அது வாழ்க்கை முழுக்க வேணும்னு தோணுது" என்று முழு மூச்சாக பேசி முடித்தவள் அருளை பார்க்க தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்.

சாஹி இருவரையும் மாறி மாறி பார்க்க, "நேகா, நான் ஆல்ரெடி ஒரு பொண்ணை லவ் பண்றேன்" என்றான்.


"நீ என்னை அவாய்ட் பண்றதுக்காக பொய் சொல்ற அருள்" என்றவள் கண்கள் லேசாக கலங்கி விட,

"சத்தியமா, நான் எப்பயாவது உன்கிட்ட பொய் சொல்லி இருக்கேனா?" என்று கேட்க நேகா கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

"நேகா, ஏன் இப்படி?" என்றவன் அவளின் கண்ணீரை துடைக்க வர அவனது கைகளை பிடித்து தடுத்தவள் வேகமாக எழுந்து சென்று விட சாஹி வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தாள்.


அவன் சாஹியிடம் தன் காதலை கூறலாம் என எதிர்பார்த்திருக்க எல்லாமே தலை கீழாக மாறி விட்டது.

அதுவும் சாஹியின் முன்பே. அவன் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க நேகா பின் செல்வதா இல்லை அமர்ந்திருப்பதா என சில நிமிடம் முழித்தவள்

"அருள்" என அழைக்க அவனை நிமிரந்து‌ பார்த்தான்.

"உனக்கு என்ன பிரச்சனை" என்றிட தன் குரலை செருமியவள்,

"நேகா நல்ல பொண்ணு தான" என்றிட அவளை முறைத்தவன் அருகிலிருக்கும் தண்ணீரை எடுத்து குடித்து விட்டு,


"நல்ல பொண்ணு தான் நான் இல்லைனு சொல்லலையே. ஆனால் நான் காலேஜ்ல இருந்து உன்னை தான் லவ் பண்றேன்னு அவகிட்ட மொதல்லே சொல்லி இருக்கனும். எல்லா தப்பு என் மேல் தான். என் கேர்ளே அவளுக்கு சப்போர்ட் பண்றளவுக்கு வந்திருக்காது" என உதடு குவித்து ஊதினான்.

அவன் சொல்வதை புரிந்து கொள்ள சற்று நேரம் பிடித்த சாஹி, "ஹேய்' என அலறியே விட,

அவளருகில் நெருங்கி அமர்ந்தவன் டேபிளில் வைத்திருந்த அவளது கைகளை தன் கைக்குள் கொண்டு வந்து,

"சாஹி உண்மையிலே சத்தியமா முடியலை. நிறைய தடவை ட்ரை பண்னேன். ஆனா பார் நீ உன் முட்டை கண் வச்சு முறைக்கிறதை பார்த்தே பயந்து சொல்லலை. உன்னை தவிர யாரையுமே பிடிக்கலை. உனக்கு நிச்சதார்த்தம்ன்றதால தான். பெங்களூர்க்கே கிளம்புனேன்.


இப்ப இல்ல டி, உன்னை என்னைக்கு பார்த்தேனோ அதுல இருந்து. எப்படி சொல்றது. நீ இல்லைனா கண்டிப்பா லைஃப் நல்லா இருக்காதுனு தோணுது. உன் இடத்துல யாரையுமே வச்சு பார்க்க பிடிக்கலை.

நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதும் ஏதோ கோவம் நீ எப்படி என்னை விட்டு போகலாம்னு. ஆனா அதுக்கப்புறம் தான் இந்த மரமண்டைக்கு புரிஞ்சுது நீ இன்னும் அவகிட்ட சொல்லவே இல்லைனு.

இன்னைக்கு எப்படியாவது சொல்லலாம்னு நினைச்சேன். பட் என்னோட துரதிஷ்டம் நேகா முந்திட்டா. இதுக்கு மேலயும் சொல்லலைனா கண்டிப்பா எப்பயுமே சொல்ல முடியாம போய்டும்" என்றவன் அவளது கண்களை பார்த்து,

"சாஹி, ஐ லவ் யூ" என்றிட வேகமாக அவனது கைகளிலிருந்து தன் கையை உருவியவள் அவனை முறைத்தாள்.


"இந்த பார்வை தான்டி என்னை உன் பின்னாடி சுத்த வச்சது, நான் நாளைக்கு ஊர்க்கு கிளம்புறேன். அதுக்குள்ள உன் முடிவை சொல்லுவன்னு எதிர்பார்க்குறேன்" என்றவன் எழுந்து அவளது கன்னத்தில் தட்டி விட்டு சென்று விட,


சாஹி தான் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள். 'இவன் என்னை லவ் பண்ணானா? எனக்காக தான் பெங்களூர் போனான்னா?' என நினைக்க நினைக்க அவளால் முடியவில்லை.

வீரபாண்டி அடுத்த வாரம் திருமணம் என்றதும் அருள் அவளிடம் பேசியதும் மாறி மாறி ஒலிக்க இதயம் தான் தன் துடிப்பை அதிகரித்தது.


வெகு நேரம் அமர்ந்திருந்தவள் அதிர்ச்சியிலிருந்து வெளி வந்து வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.

வீட்டிற்கு வந்த நேகா அழுது கொண்டிருக்க, "நேகா இதுக்கெல்லாம் அழுகலாமா?" என சாஹி அவளை சமாதானம் செய்ய அவளை அணைத்துக் கொண்டவள்,

"இல்லை சாஹி, அவர் பொய் சொல்றார். அவர் யாரையுமே லவ் பண்ணலை. அப்படி பண்ணியிருந்தா எப்படி ஒரு நாள் கூடவா பேசாம இருப்பார். அவர் யார்கிட்டையும் பேசி நான் பார்த்ததில்லை‌. என்னை அவர்க்கு பிடிக்கலை" என மூக்கை உறிஞ்சுபவளிடம் எப்படி அவன் காதலிப்பது தன்னை தான் என்று சாஹியால் கூறிட இயலும்.


"அவர் ரொம்ப நல்லவர் சாஹி, இதுவரைக்கும் நான் எந்த ஹெல்ப் கேட்டும் செய்யாம இருந்தது இல்லை. இங்க வந்து கூட நான் ஹாஸ்ட்டல் பிடிக்கலனு சொல்லி அவரை படுத்தினாலும் உன் கூட ஸ்டே பண்ண ஏற்பாடு பண்ணார். ஆனா என்னை மட்டும் பிடிக்கலைனு சொல்லீட்டார்" என்று கூற சாஹி தான் திண்டாடிக் கொண்டிருந்தாள் அவளை சமரசம் செய்ய வழியறியாது.


எப்படியே உருண்டு பிரண்டு அவளை சமாதானம் செய்து சாப்பிட வைத்து உறங்க வைத்த சாஹிக்கு தான் அன்று உறக்கமில்லா இரவாகி போனது.


அவளது மனம் முழுவதும் அருளின் நினைவுகள் நிறைந்திருக்க அவளது மனம் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.காலை சாஹியை அழைத்த வீரபாண்டி, "நாளைக்கே லீவ் போட்டு வந்திடும்மா" என்று கூற, "சரி" என்று‌ அழைப்பை துண்டித்தவளுக்கு சலிப்பாக இருந்தது.

ஏர்போர்ட்டிற்கு கிளம்பிய‌ அருள் சாஹியை அழைத்து, "நேகாவை ஏர்போர்ட் வரச் சொல்லீடு" என்று கூற,

"நீங்களே அவகிட்ட சொல்ல வேண்டியது தான" என்றாள்.

"அவளை நான் தான் கூட்டிட்டு வந்தேன். அதே மாதிரி பத்திரமா கூட்டீட்டு போயிடுவேன். நான் திருப்பி அவகிட்ட பேசுனா தப்பா எடுத்துகுவாளோனு தோணுது. சில இடத்தில விலகி நிற்கிறது தான் சரி. நான் முதல்ல இருந்தே இதை செஞ்சிருக்கனும். அவளை என் சிஸ்டர் போல தான் நினைச்சேன். பட் அவ இப்படி எடுத்துப்பானு யோசிக்கலை. நீ அவகிட்ட சொல்லீடு" என்றவன் வேறு எதுவும் கேட்காமல் அழைப்பை துண்டித்து விட சாஹிக்கு தான் ஏமாற்றமாய் போனது.

நேகாவை அழைத்து விஷயத்தை கூறி அவளை கிளப்ப, "என் கூட பேசக் கூட அவர்க்கு விருப்பமில்லையா?" என்று அழுக ஆரம்பிக்க சாஹிக்கு யாருக்காக பேசுவது என்றே குழப்பமாக இருந்தது.

இவள் அழுவது பாவமாக இருக்க அவன் பேசியது நியாயமாக இருந்தது.

வேறு வழியின்றி அவளை பேசி சம்மதிக்க வைத்து ஏர்போர்ட்டிற்கு அழைத்து செல்ல,

"சாஹி கண்டிப்பா நீ எங்க வீட்டுக்கு வரனும். உன்னை பிரியுறது ரொம்ப கஷ்டமாயிருக்கு" என அவளை அணைத்துக் கொண்டு வருத்திக் கொண்டிருக்க அவர்கள் அருகில் வந்து குரலை செருமினான் அருள்.

இருவரும் அவனை பார்க்க, "டையமாகிடுச்சு" என்று கூற சாஹி கன்னத்தில் இதழ் பதித்த நேகா, "ஐ மிஸ் யூ சோ மச் சாஹி" எனக் கூறியவள்,

அருளை முறைத்து விட்டு எழுந்து சென்று விட அவள் இடத்தில் அமர்ந்த அருள்,

"என்ன டி நான் செய்ய வேண்டியது சொல்ல வேண்டியது எல்லாம் அவ சொல்லீட்டு போறா" என சிரித்துக் கொண்டே கேட்க இப்பொழுது சாஹி அவனை முறைத்தாள்.

"தயவு செஞ்சு அப்படி மட்டும் பார்க்காத டி. என்னை கண்ட்ரோல் பண்ண முடியலை. அப்புறம் ஏதாவது பண்ணீட்டா என்னை சொல்லக் கூடாது" என்றவள் மேலும் அவளை பார்த்து சிரிக்க அவளது விழிகள் ஆச்சரியத்தில் விரிந்து கொண்டது.

அவளது கைகளை பிடிக்க வர வேகமாக பின் இழுத்துக் கொள்ள வேகமாக பின்புறமிருந்து அவளை இடையில் கைக் கொடுத்து தன்னோடு சேர்த்து அணைத்தவன் அவள் சுதாரிக்கும் முன் அவளது முகத்தை பற்றி நெற்றியில் இதழ் பதித்து,

"நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை" என்றான்.

ஒரு நிமிடம் கண்களை மூடி நடந்ததை கிரகித்தவள் அவனது கையை எடுத்து விட முயற்சிக்க,

"ஏய் நானா நினைச்சா தான் எடுக்க முடியும்.‌ நீ டைம் வேஸ்ட் பண்றதை விட்டு வேகமாக பதில் சொல்லு. இன்னும் இரண்டு நிமிஷம் தான் இருக்கு" என தனது கையில் உள்ள கைகடிகாரத்தை பார்த்த படி கூறினான்.

அவனுக்கு நன்றாக தெரியும் அவளுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என இல்லையென்றால் இவ்வளவு உரிமையை அவளிடம் எடுத்திருக்க மாட்டான்.

இருந்தாலும் அவளது வாயால் கேட்க வேண்டும் என்ற ஆசையில் அவளையே பார்த்திருக்க அவள் எதுவும் கூறாது அமர்ந்திருந்தாள்.


அவளுக்கே புரியவில்லை இந்த சூழலை எவ்வாறு கையாளுவது என்று. சற்று திணறி தான் இருந்தாள்.

அவளை மேலும் வற்புறுத்த விரும்பாதவன் வேகமாக அவளை விட்டு எழுந்து,

"நான் எப்பயுமே உனக்காக வெயிட் பண்ணுவேன்" என்று கூறி சென்று விட்டான்.

தொடரும்....
 
Last edited:
Well-known member
Messages
572
Reaction score
416
Points
63
Superrrrrrrrr superrrrrrrrr
 
Top