- Messages
- 525
- Reaction score
- 717
- Points
- 93
அத்தியாயம் - 14
மாப்பிள்ளை வரவிற்காக அனைவரும் சிறிது நேரம் காத்திருக்க வந்தது என்னவோ சிவராமும் பங்கஜமும் தான்.
அவர்களை பார்த்த வீரபாண்டி ஒரு நிமிடம் தடுமாறி தான் போனார்.
"என்னண்ணா வியர்க்குது ரொம்ப" என நக்கலாக அவரது அதிர்ந்த முகத்தை பார்த்து கேட்க,
"பங்கஜம், நல்லா காரியம் நடக்க போகுது. தயவு செஞ்சு பிரச்சனை எதுவும் பண்ணீடாத" என சற்று இறங்கியே பேச,
"ஐயோ! அண்ணா நான் போய் பிரச்சனை பண்ணுவேனா....? நானே என்னடா நம்ம அண்ணன் நம்மளை கூப்பிடாம விஷேஷம் வச்சிட்டாரேனு பதறி போய் ஓடி வந்திருக்கேன். நீங்க என்னமோ இப்படி பேசுறீங்களே" என்றவர்,
"தம்பி சிவராமு, அம்மாக்கு அந்த சேரை எடுத்து வாடா" என நாற்காலியை போட்டு அமர்ந்து கொள்ள அவனும் அருகிலே நின்று கொண்டான்.
சக்திக்கும் சிவராம் பங்கஜத்தை பற்றி தெரியும். ஆனால் அவர்களால் வீரபாண்டியை மீறி எதுவும் செய்திட இயலாது என்ற நம்பிக்கையில் திருமணத்திற்கு சம்மதம் கொடுத்து விட்டார்.
வீரபண்டியை தனியே அழைத்த காமாட்சி, "இவ பேசுற தோரணையே எனக்கு சரியா படலை, மாப்பிள்ளை எங்க வந்திருக்கார்னு கேளுங்க" என்று கூற,
சக்தியிடம் சென்றவர், "மச்சான், நல்ல நேரம் முடிய போகுது. மாப்பிள்ளை எங்க வந்திருக்கார்னு கேளுங்க" என்றிட மாப்பிளையின் தொலைபேசிக்கு அழைத்தவர்,
"மாமா, என்னனு தெரியலை போன் எடுக்க மாட்றான். நம்ம நல்ல நேரம் முடியறதுக்குள்ள நம்ம தட்டை மாத்திக்குவோம்" என்று கூற
காமாட்சி, "ஆமா தம்பி, அவர் சொல்றது தான் சரி. நம்ம தட்டை மாத்துவோம். அவர் வரட்டும்" என்றார் வேகமாக.
பங்கஜம், "அதெப்படி மாப்பிள்ளை வராம தட்டை மாத்துவீங்க" என்று சத்தமாக கேட்க,
ராஜா, "அத்தை, உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை. உங்களை யாராவது கூப்பிட்டாங்களா? எதுக்கு தேவையில்லாம பேசுறீங்க. அதான் அப்பா பேசீட்டு இருக்கார்ல்ல" என்றான்.
"வாங்க மருமகனே! நான் பார்த்து வளர்ந்த நீங்க எல்லாம் என்னை கேள்வி கேட்க வந்தீட்டீங்கல்ல" என ஆரம்பிக்க நிலமையின் தீவிரத்தை உணர்ந்த வீரபாண்டி,
"ராஜா, நீ பேசாம இருப்பா. அவ எப்ப சண்டை இழுக்கலாம்னு வந்திருக்கா" என மகனை அடக்கினார்.
சக்தி, "மச்சான், ஒரு பத்து நிமிஷம் பார்ப்போம். அவன் வரலைனா அடுத்து என்னனு யோசிப்போம்" என்று கூறி அந்த இடத்தை அமைதி படுத்திக் கொண்டிருக்க சாஹியோ இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற தோரணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்திருந்தாள்.
சிறுது நேரத்தில் வேகமாக காரில் வந்து இறங்கி மாப்பிள்ளை கூட்டத்தின் முன் நின்று,
"எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்லை" என்று கூறியவன்,
"அப்பா வாங்க போகலாம்" என்றான்.
"டேய் என்னடா பேசுற?" என்ற சக்தி அவனை அதட்ட,
"ப்பா. நான் சொல்றதை கேட்பீங்களா இல்லையா..? வாங்க" என சற்றே அழுத்தத்தை கூட்ட
வீரபாண்டி, "என்ன மாப்பிள்ளை இப்படி பேசுறீங்க. இப்படி நிச்சயம் வரை கொண்டு வந்து நிறுத்திட்டா என் பொண்ணோட நிலைமைய நினைச்சு பார்ங்க" என்று கூற,
"இல்லை மாமா, சொன்னா புரிஞ்சுக்கோங்க. நாங்க கல்யாணம் பண்ண ரெண்டு பேர்க்குமே தான் பிரச்சனை" என வேகமாக சக்தியோடு குடும்பத்தை இழுத்துக் கொண்டு சென்று விட்டான்.
வண்டியில் ஏறிய சக்தி, "டேய் என்னடா ஆச்சு, எனக்கு உன்னை பத்தி தெரியும்" எனக் கேட்க,
யாருக்கும் கேட்காத வகையில் ,
"ப்பா..நான் வரும் போது தான் சிவராமும் பங்கஜமும் என்ன பார்த்தாங்க. நம்ம ஜீவி இப்ப அவங்க கிட்ட தான் இருக்கா" என்று கூற சற்று அதிர்ந்தவர்,
"என்னடா சொல்ற? அவ மெட்ராஸ்ல்ல தான இருக்கா" என்றார் பயம் கலந்த குரலில்.
"அங்க வச்சு தான் தூக்கிட்டாங்க, என்னையும் மிரட்டுறாங்க" என்று கூற கொதித்தெழுந்த சக்தி,
"டேய் அங்கே சொல்லியிருந்தா ஒரு வழி பண்ணி இருக்கலாம்ல" என்றார் ஆத்திரம் தாங்காமல்,
"நம்ம சண்டை போட்டு ஜீவியை எதாவது பண்ணீட்டா. வேண்டாம்ப்பா ஒதுங்கிருவோம். இப்பவே இவ்வளவு பிரச்சனை பண்றாங்க. கல்யாணம் முடிஞ்சா கண்டிப்பா இதை விட அதிகமா பண்ணுவாங்கனு தோணுது. அதான் கல்யாணத்தை நிறுத்திட்டேன் ."
"அவங்க பண்ண தப்புக்கு அந்த பொண்ணு என்னடா பாவம் பண்ணுச்சு. இப்படி நிச்சயம் வரை வந்து நிறுத்திட்ட."
"ப்பா..அவங்க ஜீவிய ஏதாவது பண்ணா நீங்க என்ன பண்ணுவீங்க. அதுவும் அந்த சிவராம் கொஞ்சம் விவகாரம் புடிச்சவன்" என தந்தையை சமாதானம் செய்தான்.
அதிர்ச்சியாய் அமர்ந்திருந்த வீரபாண்டியை நோக்கி வந்த பங்கஜம், "ண்ணா..இப்பயும் ஒண்ணுமில்ல, நீ சரினு சொல்லு. என் பையன் தாலி கட்ட ரெடியா இருக்கான்" என்றிட,
காமாட்சி, "அடி செருப்பால, இந்த ஒரு மாப்பிள்ளைய விட்டா உலகத்தில மாப்பிள்ளையே இல்லையா...? உன் பையனுக்கு கட்டி கொடுக்கிறதுக்கு எங்க பொண்ணாவே காலம் முழுக்க அவ இருந்துட்டு போறா.? முதல்ல வெளிய போங்க" என்று கூற,
"இப்ப பேசுவீங்க, இதே வாய் உன் புள்ளைக்கு எங்க பொண்ணை கட்டிக்கோனு கேட்கும். அன்னைக்கு பார்த்துக்கிறேன்" என்ற பங்கஜம் மகனுடன் கிளம்பி விட்டார்.
எழில், "ப்பா..நீங்க பேசாம இருக்கிறதால தான் இவங்க ஆடுறாங்க. இந்த கல்யாணம் நின்னு போனதுக்கு கண்டிப்பா இவனுங்க தான் காரணமா இருக்கும். நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க. தூக்கிடுவோம்" என கோபத்தோடு கர்ஜிக்க,
"அவசரபடாத எழில், இது நம்ம பொண்ணு விஷயம். எடுத்தோம் கவுத்தோம்னு ஏதாவது பண்ணா நமக்கு தான் கஷ்டம். யோசிச்சு எதுனாலும் பண்ணலாம்" என்று வீரபாண்டி கூற எல்லோர்க்கும் அதுவே சரியென பட்டது.
விஷேஷம் நின்றவுடன் திவ்யாவிடம் கூறி விட்டு வீட்டிற்கு சென்ற ஜெயா அருள் ஊருக்கு சென்று விட்டானா என்பதை அறிவதற்காக அவனை அழைக்க சுவிட்ச் ஆப் என்று வந்தது.
'இந்த பையன் இருக்கானே! ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லனும்னு தோணுதா' என்று புலம்பி ஜெயா உறங்கி போனார்.
எல்லோரும் கிளம்பியவுடன் சிவகாமி அழுது கொண்டிருக்க, "அம்மா...என்ன இது. எதுக்கு இப்ப அழுகுறீங்க" என சாஹி அவரை சமாதானம் செய்ய வீரபாண்டியும் அமைதியாக தான் அமர்ந்திருந்தார்.
"ப்பா..நீங்களாவது சொல்லுங்க. அம்மா அழுகுறாங்க" என அவரை துணைக்கு அழைக்க அவரும் மகளை வேதனையுடன் பார்த்தார். அவரின் கையை அழுத்தி பிடித்தவள், "வாங்க" என அவரை சிவகாமி அருகில் அழைத்து செல்ல அவளது பிடியே எனக்கு எதுவுமில்லை நல்லா இருக்கேன் என்பதை அவருக்கு உணர்த்தியது.
"என்ன சிவகாமி, இந்த சம்பந்தம் போச்சுன்னா இதை விட நல்ல இடமா அமைய போதுதுனு அர்த்தம். எதுக்கு இப்படி அழுகுற. பார் பாப்பா முகம் வாடிடுச்சு. நீ தான் அவளுக்கு ஆறுதல் சொல்லனும். இப்படி அழுது வடிஞ்சா அவ என்ன பண்ணுவா" என அவரை சமாதானம் செய்திட சிவகாமி கண்களை துடைத்த சாஹி அவரை அணைத்துக் கொண்டாள்.
அருள் மொபைலில் சார்ஜ் இல்லாததால் சுவிட்ச் ஆப் ஆகியிருக்க அவன் வீட்டை அடைய நடுநிசியாகியிருந்தது.
அப்போது தான் ஜெயாவிற்கு அழைப்பதற்காக மொபைலை எடுத்தவன் அதை சார்ஜில் போட்டு விட்டு உறங்கியும் போனான்.
மறுநாளை காலையில் ஜெயாவிற்கு அழைக்க, "ஏன்ப்பா நைட்டே போன் பண்ணலை" என சலித்துக் கொண்டவர் வீட்டை பற்றியும் ஊரை பற்றியும் பேச ஆரம்பித்தார்.
அருளுக்கு வழிய சென்று நிச்சயத்தை பற்றி எப்படி கேட்பது என்ற தவிப்பு இருக்க அவராக சொல்லட்டும் என விட்டு விட்டான்.
இரண்டு நாட்களில் வேலையில் சேர்ந்த அருள் அதனோடே பொருந்தி போக கடினபட்டு அவனது மனதை சாஹியிடமிருந்து வெளி கொண்டு வர முயற்சித்தான்.
நாட்கள் நகர வீரபாண்டி சாஹிக்கு நிறைய வரன்களை பார்த்தாலும் பங்கஜம் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவற்றை தடுத்துக் கொண்டிருந்தார்.
வீரபாண்டியால் அவர்களை எதிர்த்து சண்டையிட இயலும். மத்த விஷயம் என்றால் வேறு. இது தனது மகள் வாழ்க்கை சம்பந்தபட்ட விஷயம் நாளை அவளது திருமண வாழ்வில் எவ்வித துன்பமும் வந்து விடக் கூடாது என்பதற்காக பொறுமை காத்தார்.
ஆறு மாதம் வீட்டில் இருந்த சாஹிக்கு வெறுத்து விட்டது.
"ப்பா...இப்படியே வீட்டில இருக்கது ரொம்ப கஷ்டமாயிருக்கு. நான் வேலைக்கு போகவா..?" என்று கேட்க,
சிறிது நேர யோசனைக்கு பின், "சரிம்மா, கொஞ்ச நாள் வேலைக்கு போ. அப்புறம் மத்ததெல்லாம் பார்த்துக்கலாம்" என தனது சம்மதத்தை கொடுத்து விட்டார்.
வீட்டிலே அடைந்திருப்பதால் அவளுடைய சுணங்கிய முகம் அவரை சம்மத்திக்க வைத்திருக்க அன்று சென்னை கிளம்பிக் கொண்டிருந்தாள். அதுவுமில்லாமல் எல்லோரும் அவளது நின்ற திருமணம் பங்கஜம் பற்றியே பேசிக் கொண்டிருக்க அவருக்கு அது எரிச்சலை கொடுத்தது. அது மகளையும் பாதிக்கும் என உணர்ந்தவர் அவளுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக சென்னை செல்லவே மகளுக்கு அனுமதி அளித்திருந்தார்.
சிவகாமி, "ஏம்மா, இங்க ஏதாவது வேலை பார்க்கலாம்ல. அவ்ளோ தூரம் எதுக்குமா தனியா போற" என கடிந்து கொள்ள,
"ம்மா..இது பெரிய கம்பெனிம்மா. வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்மா. எக்பீரியன்ஸ்க்காக தானம்மா. ப்ளீஸ்" என அவரை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தவளை வீரபாண்டி காரில் அழைத்து சென்று சில பல அறிவுரைகளை கூறிய பின்பே பஸ் ஏற்றி விட்டார்.
சென்னையில் அவளுடைய கல்லூரி தோழி தனியாக வீடு எடுத்து தங்கி இருக்க அவளுடனே சாஹியும் இணைந்து கொண்டாள்.
அங்கு அவள் தங்குமிடம் பாதுகாப்பு எல்லாவற்றையும் உறுதி செய்து பார்வையிட்ட பின்பே வீரபாண்டி மகளிற்கு ஒப்புதல் வழங்கினார்.
அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் சிறிது தடுமாறியவள் தன்னுடைய கடின முயற்சியால் டீம் லீடராக மாறி விட்டாள் வந்த ஆறு மாதங்களில்.
சாஹி எதையும் வேகமாக புரிந்து கொண்டு சிறப்பாக செய்து விடுவாள். அதை தெரிந்து கொண்ட கம்பெனியும் அவளது உழைப்பையும் திறமையையும் மதித்தது.
அன்று முக்கியமான மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர் கம்பெனியின் சார்பாக.
அந்த கம்பெனியின் பல்வேறு கிளைகலிருந்து ஊர்களிலிருந்தும் வந்திருந்தனர் ஊழியர்கள்.
அந்த மீட்டிங்கிற்கான ஏற்பாட்டை சாஹியிடம் நிர்வாகம் கொடுக்க எல்லா வேலையையும் கச்சிதமாக முடித்தவள் தான் செய்ய வேண்டிய ப்ரெஷன்டேசனை ஒரு முறை பார்த்துக் கொண்டிருந்தாள் தனது கேபினில் அமர்ந்து.
வேகமாக வந்த அவளது தோழி ரஞ்சு, "சாஹி, வா டைம் ஆகிடுச்சு. மீட்டிங் ஸ்டார் பண்ண போறாங்க" என அவளது கையை பிடித்து இழுத்து சென்றாள்.
அந்த ஏ.சி அறை முழுவதும் நிசப்தமாக இருக்க கதவை திறந்து உள்ளே நுழைந்த சாஹியும் ரஞ்சுவும் தங்களுக்கான டேபிளில் அமர்ந்தனர்.
சாஹிக்கு தன்னை யாரே உற்று நோக்குவது போல் தோன்ற நிமிர்ந்து பார்க்க அவளுக்கு எதிர்ப்புறம் அவளையோ கண்ணெடுக்காது துளைக்கும் பார்வை பார்த்துக் கொண்டு கைகளை கட்டி அமர்ந்திருந்தான் அருள்.
தொடரும்..