• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 13

Administrator
Staff member
Messages
525
Reaction score
717
Points
93
அத்தியாயம் - 13


ஒன்பதாம் மாதத்தில் திவ்யாவிற்கு வளைகாப்பு நடத்திய ஜெயா அவருடன் அழைத்து செல்ல அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.


அருள் அவ்வ பொழுது குழந்தையை பார்க்கும் சாக்கில் சென்று சாஹியையும் பார்த்து வருவான்.
நாட்கள் அதன் போக்கில் நகர அருள் தனது கல்லூரியை முடிக்க பெங்களூரில் ஒரு கம்பெனியில் கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் வேலைக்கு கிடைத்து விட இரண்டு நாட்களில் கிளம்புவதாக இருந்தான்.சாஹி தனது யூ.ஜி படிப்பை முடித்து விட்டாள். சாஹி, "ப்பா..எனக்கு கேம்பஸ்ல வேலை கிடைச்சிருக்கு ப்பா" என்று கூற,

"வேலைக்கு எல்லாம் வேணாம்மா, நம்ம சக்தி பையனுக்கு‌ உன்னை பொண்ணு கேட்டாங்க. நான் தான் நீ படிக்கிற வரை காத்திருக்க சொன்னேன். இப்ப தான் நீ படிப்பை முடிச்சுட்ட, அவங்களை வர சொல்லவாம்மா?" என்று கேட்க,

"ப்பா..இப்ப தான் காலேஜ் முடிச்சேன். கொஞ்ச நாள் போகட்டுமே" என்று கூற,

"இல்லம்மா, அப்பா எதுக்கு சொல்றேன்னு புரிஞ்சுக்கோ. ஏற்கனவே பங்கஜம் வேற உன்னை யார்க்கும் கட்டிக் கொடுக்க விட மாட்டேன்னு சபதம் போட்டு சுத்தீட்டு இருக்கா. இந்த பையன் ரொம்ப நல்ல பையன்ம்மா, நல்லா படிச்சுட்டு சென்னையில வேலை பார்க்கிறான்" என பல விதங்களில் பேசி அவளின் சம்மதத்தை பெற்று விட்டார்.


சாஹிக்கு ஏனோ விருப்பமில்லை. ஆனாலும் வீரபாண்டிக்காக சம்மதம் கொடுத்து விட்டாள்.


அவர் மாப்பிள்ளை வீட்டில் பேச ஒரு வாரத்தில் நிச்சயம் ஏற்பாடு செய்திருந்தனர். பெண் மாப்பிள்ளை இருவரும் உள்ளூர் என்பதால் வேறு எந்த பிரச்சனையும் இருக்க வில்லை.


அன்று நிச்சயதார்த்தம், ஜெயா கிளம்பிக் கொண்டிருக்க, "எங்கம்மா கிளம்பீட்டீங்க" என்று கேட்ட படி உள்ளே நுழைந்த அருள் தான் வாங்கி வந்த பொருட்களை டேபிளில் வைத்தான்.


"என்னது டா இது" எனக் கேட்க, "திவ்யா தான் ஹரிஸ்க்கு‌ கொஞ்சம் திங்க்ஸ் கேட்ருந்தா. அதான் வாங்கிட்டு வந்தேன். நீங்க எங்க கிளம்பிட்டீங்க?" என்றான் மீண்டும்.


"இதை உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் பார். நம்ம திவ்யா நாத்தனார் ஒரு பொண்ணு இருந்தா இல்ல, அவளுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம். வீரபாண்டி அண்ணா போன் பண்ணி கண்டிப்பா வரனும்னு சொல்லீட்டார்.

திவ்யா மாமியார் தான் கொஞ்சம் குணம் சரியில்லை மத்தபடி இவங்க எல்லாரும் ரொம்ப தங்கமானவங்க டா. அந்த மனுசன் மதிச்சு கூப்பிட்ருக்கார். அதான் போய்ட்டு வரலாம்னு இருக்கேன். நீயும் கூட வாடா" என அழைக்க அந்த விஷயத்தை கேட்டவுடனே அருளின் முகம் சுருங்கி விட்டது.


'அதெப்படி அவ சம்மதம் சொல்லலாம்' என ஒரு மனம் கேட்க, 'உனக்கு அவளை பிடிச்சிருந்தா அவளுக்கும் பிடிக்கனும்னு அவசியம் இல்லையே. அதுவுமில்லாம நீ இன்னும் அந்த பொண்ணுக்கிட்ட உன்னை பிடிச்சிருக்குனு கூட சொல்லலை' என இடிந்துரைக்க,

"ம்மா...வெளியில போய்ட்டு வந்தது கொஞ்சம் தலை வலிக்குது. நீங்க போய்ட்டு அப்படியே திவ்யாகிட்ட இதெல்லாம் கொடுத்திட்டு வந்திடுங்க" என ஆட்டோ பிடித்து அவரை அனுப்பி வைத்தவன் வீட்டிற்கு வந்தான்.

அவனது மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத தவிப்பு. தனக்கு சொந்தமான பொருள் தொலைவதை போன்ற உணர்வு.

அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை.

'அப்ப நான் மட்டும் தான் அவளை விரும்புறேன்னா. அவளுக்கு என்னை பிடிக்கலையா?' என பல வித எண்ணங்களில் உழன்றவனுக்கு விடையாக கிடைத்தது என்னவோ தலைவலி தான்.


அருளிற்கு சாஹியை மிகவும் பிடிக்கும்.‌ ஆனால் தங்களது குடும்பம் திவ்யாவினால் எழுந்த பிரச்சனை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டவன் நேரடியாக அவளிடம் தனது விருப்பத்தை கூற வில்லை. அவனுள் ஏதோ ஒரு தயக்கம் அவளை நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.


ஊருக்கு கிளம்பும் முன் தன்னுடைய விருப்பத்தை அவளிடம் கூறி விடலாம் என எண்ணிக் கொண்டிருக்க அவளது நிச்சயம் என்ற செய்தி அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.


அவளையும் இதில் குறை கூற இயலாது. அவன் தன் காதலை வெளிப்படுத்தி அவள் மறுத்திருந்தால் வருந்துவது நியாயம். வெளிப்படுத்தாமலே அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என அருளுக்கு புரிந்திருந்தாலும் மனது அடித்துக் கொண்டது.

இரண்டு நாட்கள் கழித்து கிளம்ப வேண்டிய ஊருக்கு இன்றே கிளம்பி விட்டான்.


வேகமாக கிளம்பியவன் ஜெயாவை அழைக்க, "சொல்லு அருள், இப்ப தான கிளம்புனேன். அதுக்குள்ள எதுக்கு கூப்பிட்ட" என்றார்.


"ம்மா..நான் பெங்களூர் கிளம்புறேன்."

ஒரு நிமிடம் என அதிர்ந்தவர், "டேய், இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தான கிளம்புறேன்னு சொன்ன. அதுக்குள்ள கிளம்பீட்டா.‌ என்ன டா அவசரம்" என்றார்.

"இல்லைம்மா, ப்ரெண்ட் வீடு பார்த்திட்டான். அங்க கொஞ்ச திங்ஸ் வாங்கனும்.‌ முன்ன போறது நல்லது தானம்மா" என்றான்.

"அதுக்கில்லடா, முதல்லே சொல்லியிருந்தா நான் உன் கூடவே இருந்திருப்பேன் கிளம்புற வரைக்கும்" என்றார்.


"அதனால என்னம்மா, உங்க மதிச்சு கூப்பிட்ருக்கப்ப நீங்க போகாம இருந்தா நல்லா இருக்காது. ஒன்னும் பிரச்சனையில்லை. நான் பார்த்துக்கிறேன்" என அவரை சமாதானம் செய்தவன் தனது பேக்கை தயார் செய்து எடுத்துக் கொண்டு வெளியே வர வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கினார் ஜெயா.


"ம்மா.." என அதிர்ச்சியோடு அழைக்க,

"உன்னை விட எனக்கு மத்த எதுவும் முக்கியமில்லை. அதுவுமில்லாம விஷேஷத்துக்கு நேரம் இருக்கு. நான் போகும் போது கூட எதுவுமே சொல்லலையேடா. என்னாச்சு திடீர்னு. எதாவது பிரச்சனையா?" என்றார் அக்கறையோடு.


"அதான் அப்பவே சொன்னேன்ல்லம்மா."

"சரி டா, பார்த்துப் போ. கவனமா இரு, புது இடம். பழகுற வரைக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.‌ இங்க மாதிரி அங்கயும் இருக்காத. நேர நேரத்துக்கு சாப்பிடு" என்றவரின் கண்கள் கலங்கி விட அவரை அணைத்துக் கொண்டவன்,

"ம்மா..நான் என்ன சின்ன பையனா. யூ.ஜி கூட ஹாஸ்ட்டல்ல இருந்து
தான படிச்சேன். புதுசா பிரியிற மாதிரி அழுகுறீங்க?" என்று அவரிடம் வம்பளக்க,

"டேய், இந்த ரெண்டு வருஷமும் கூடவே இருந்துட்டு இப்ப திருப்பி வெளியூர் போறது தான் கஷ்டமா இருக்கு. சரி வேலைக்கு தான போற. நல்லா இருந்தா சரி டா" என்றவர் கை மகனின் தலையை வருட அவரது தோளில் சாய்ந்து கொண்டான்.


அவர் செல்லும் ஆட்டோவிலே வந்து பஸ் ஸ்டாண்டில் இறங்கிக் கொள்ள பல அறிவுரைகளை வழங்கிய பின்பே ஜெயா விஷேஷத்திற்கு கிளம்பி சென்றார்.


பஸ்ஸில் ஏறி விட்டாலும் அருளுக்கு மனது சாஹியை விட்டு அகலவில்லை.

அவளது அந்த பார்வை பேச்சு திமிர் எல்லாமே அவன் கண் முன் தோன்ற அவனுக்கு எதிலோ அடைபட்டது போன்றதொரு உணர்வு.

நிச்சயம் பாதி திருமணத்திற்கு சமம். அவர்கள் ஊரில் நிச்சயம் முடிந்தால் ஒரு மாதமோ அதற்குள்ளாகவோ திருமணத்தை நடத்தி விடுவார்கள். அது அங்குள்ள நடைமுறை.

அவள் தனக்கு சொந்தமில்லை என நினைக்க நினைக்க மனது ரணமாக துடிக்க ஆரம்பித்தது.

அவனும் இது தவறு என பல முறை அதனிடம் போராடி பார்த்து இறுதியில் அதன் போக்கிலே விட்டு கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான்.


வீட்டிற்குள் நுழைந்த ஜெயாவை பார்த்த திவ்யா, "வாம்மா" என அழைக்க அவளிடமிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டவர் அருள் குழந்தைக்காக வாங்கி கொடுத்த பொருட்களை கொடுத்தார்.

"ஏம்மா, அருளையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல. நேத்தே தம்பி கண்ணுக்குள்ளே இருக்கான். வந்து பார்க்கிறேன்னு சொன்னானே" என வினவ,


"ஏய் அவன் வேலை விஷயமா பெங்களூர்க்கு போய்ட்டான் டி" என்றார்.


"என்னம்மா உளர்ற, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான போன் பண்ணி கடை வாசல்ல நிற்கிறேன். தம்பிக்கு என்ன வேணும் சொல்லுனு கேட்டான். நீ பெங்களூர் போய்ட்டான் சொல்ற?" என்றாள்.

"ஆமாண்டி, இப்ப தான் என் கூட வந்து பஸ் ஏறுனான். ஏதோ அவசர வேலையாம்" எனக் கூறிக் கொண்டிருக்க எழில், "திவ்யா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட போறாங்க, இன்னும் என்ன பண்ற" என கேட்டுக் கொண்டே நுழைந்தவன் ஜெயாவை பார்த்து விட்டான்.

"வாங்கத்தை, என்ன இங்கே உட்கார்ந்திட்டீங்க? அங்க வாங்க, அப்பா அப்பவே கேட்டார் நீங்க வரலையானு" என்று கூற அவர் குழந்தையை தூக்கிக் கொண்டு,

"திவ்யா, நான் முன்னாடி போறேன். நீ வா" என சாஹி வீட்டிற்கு கிளம்பி விட்டார்.

அவரை பார்த்த சிவகாமியும் வீரபாண்டியும் வரவேற்க உள்ளே சென்று குழந்தையுடன் அமர்ந்து கொண்டார்.


சாஹியை அவளது இரு அண்ணிகளும் அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். வழக்கம் போல் திவ்யா ஒதுங்கி அமர்ந்து கொண்டாள்.

அவள் இன்னும் மாப்பிள்ளையின் புகைபடத்தை கூட பார்க்கவில்லை.

அவளுக்கு ஏனோ பிடிக்கவில்லை தான் ஆனால் திருமண ஏற்பாட்டை நிறுத்தவும்‌ முயற்சிக்கவில்லை.
காரணம் அவளிடம் கேட்டால் கண்டிப்பாக தெரியாது தான்.

சில சமயங்களில் நம்‌ மனமும் காரணமின்றி ஏதையாவது வெறுக்கும்.‌ விடையறிய முற்பட்டால் இறுதியில் பலன் என்னவோ சுழியம் தான்.


சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்து விட சிவகாமி, வீரபாண்டி ,காமாட்சி மூவரும் வந்தவர்களை வரவேற்று அமர வைத்தனர்.

வீரபாண்டி, "என்ன மச்சான், நீங்க மட்டும் வந்து இருக்கீங்க? மாப்பிள்ளைய காணோம்" என்று வினவ,


சக்தி, "இல்லை மாமா, அவன் வெளியூர் போயிருந்தான் வேலை விஷயமா.‌ இன்னைக்கு தான திரும்பி வரான். அதான் நான் நேரா இங்கவே வர சொல்லீட்டேன். பக்கத்து ஊர்க்கிட்ட வந்துட்டான். பத்து நிமிஷத்துல வந்திடுவான். நீங்க பொண்ணை அழைச்சுட்டு வரச் சொல்லுங்க" என்று கூற அவர் சிவகாமியை பார்க்க அவர் உள்ளே சென்று, "ரதிம்மா, சாஹியை கூட்டீட்டு வா" என்று வெளியேற அவர்களும் சாஹியை‌ அழைத்து வந்து அமர வைத்தனர்.

அந்த ஒப்பனையில் எப்பொழுதையும் விட அழகாக இருந்த சாஹி முகத்தில் சோகம் இழையோடியது.தொடரும்....

 
Top