- Messages
- 499
- Reaction score
- 706
- Points
- 93
அத்தியாயம் - 12
எழில் கூறியதை கேட்டு அதிர்ந்தவன் அவளை காணாது வண்டியை மீண்டும் திருப்பி கொண்டு வர சிறிது தூரத்தில் அவள் வண்டியை நிறுத்தி ஓரமாக நின்று கொண்டிருந்தாள்.
அவளின் முன் வண்டியை நிறுத்த மொபைலில் இருந்து தலையை நிமிர்த்தி அவனை பார்த்தாள்.
"இங்க எதுக்கு நிற்கிற?" என்று கேட்க,
வண்டியின் டயரை கண்களால் காட்ட அது பஞ்சராகியிருந்தது.
"அதுக்கு இங்கே நிற்கணும்மா. உங்கண்ணனுக்கு போன் பண்ண வேண்டியது தானா" என அந்த காட்டு பகுதியை ஆராய்ந்து கூற,
"போன்ல சிக்னல் இல்லை" என்றாள்.
"சரி வண்டியில ஏறு" என்று கூற அவனை உறுத்து விழித்தவள்,
"என் வண்டியை தனியா விட்டு வர முடியாது" என்றாள்.
"அதுக்காக இங்கே நிற்க போறீயா?" என்று கேட்டுக் கொண்டிருக்க எழில் அழைத்து விட்டான்.
அழைப்பை ஏற்றவன், "சொல்லுங்க மாமா" என்றிட,
"எங்க பின்னாடி தான வந்தீங்க. ஆளை காணோம். நல்ல நேரம் முடியறதுக்குள்ள வாங்க"" என்றான்.
"மாமா, உங்க தங்கச்சி வண்டி பஞ்சராகிடுச்சு. அவங்க வர மாட்டேன்னு சொல்றாங்க. நீங்களே பேசுங்க" என மொபைலை நீட்ட,
"பாப்பா" என்றிட,
"அண்ணா வண்டி பஞ்சர்கிடுச்சு" என்றாள்.
"சரி நீ அருள் கூட வா, நம்ம ஆளை வச்சு வண்டியை எடுத்துக்கலாம். அப்பா வேற திட்றார். வேகமா வா" என்று கூற மொபைலை அருளிடம் கொடுத்தாள்.
"சொல்லுங்க மாமா."
"மாப்பிள்ளை வேகமா வாங்க" என்று கூறி அழைப்பை துண்டிக்க அருள் வண்டியை எடுத்தான்.
சாஹி ஏறிக் கொள்ள வண்டியை கோயிலை நோக்கி செலுத்தினான்.
பின்னால் அமர்ந்து மொபைலை பார்த்துக் கொண்டே வந்தவள் கோயிலை அடைந்ததும் இறங்கி வேகமாக சென்று விட, 'இறக்கி விட்டதுக்கு ஒரு தாங்க்ஸ் சாவது சொல்றாளா பார். திமிர் கொஞ்சம் இல்லை உடம்பெல்லாம்" என நினைத்தவன் உள்ளே நுழைய ஜெயா பிடித்துக் கொண்டார்.
எல்லாரும் வந்து விட பங்ஷன் தொடங்கியது. சிவகாமியும் ஜெயாவும் எல்லாவற்றையும் முன் நின்று பார்க்க அடுத்ததாக உணவு பரிமாறப்பட்டது.
ஆளாளுக்கு ஒரு வேலை செய்ய சிறப்பாக நடைபெற்றது. ஜெயா திருமணத்தின் போது நகை எதுவும் போடததால் திவ்யாவை அழைத்து சென்றே அவளுக்கு பிடித்ததாக எல்லாவற்றையும் வாங்கி கொடுத்திருந்தார்.
அருள் வேலை செய்து கொண்டிருந்தாலும் அடிக்கடி அவனது பார்வை சாஹியை தழுவுவதை தவிர்க்க இயலவில்லை. அவளும் கண்டு கொண்டாள் ஆனால் அதை கவனிக்காதது போல் குழந்தைகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
மும்முரமாக பேசிக் கொண்டிருக்க அவளருகில் யாரோ நெருங்கி நிற்பது போன்று தோன்ற திரும்பி பார்த்தாள்.
அங்கு நின்று கொண்டிருந்த சிவராம் அவளை பார்த்து வழிசலான சிரிப்போடு, "எப்படி இருக்க சாஹி?" என்றான்.
அவனை பார்த்த அருளுக்கு ஏனோ பிடிக்கவில்லை. அதுவும் அவளருகில் நெருங்கி நிற்பது பற்றிக் கொண்டு எரிந்தது.
அவனை முறைத்த சாஹித்யா இரண்டடி தள்ளி நின்றாள். அவன் பின்பே வந்த பங்கஜம் அவளை கட்டிக் கொண்டு "மருகமகளே எப்படி இருக்க?" என்றார்.
அவரிடமிருந்து விலகியவள், "நல்லா இருக்கேன்த்தை" என்பதோடு முடித்துக் கொண்டாள்.
"என்னம்மா நீ? நான் எவ்வளவு பாசமா கேட்குறேன். பதிலுக்கு ஒரு வார்த்தை நீங்க எப்படி இருக்கீங்கனு கேட்க மாட்ற. உன்னை கட்டிக்க போறவன் வந்திருக்கான். அவனையாவது எப்படி இருக்குனு கேட்கலாம்ல" என்றார்.
அவரை அலட்சியமாக பார்த்தவள் பேச வாயெடுப்பதற்குள் வேகமாக அருகில் வந்த சிவகாமி, "வாங்கண்ணி, வாப்பா சிவராம்" என்றார்.
"க்கும்..நீ கேட்டு என்ன பண்ண சிவகாமி. எங்க வீட்டுக்கு வரப் போற மருமகள்ல அதை கேட்கனும்" என்றார் அங்கலாய்த்துக் கொண்டு.
"நான் உங்க வீட்டுக்கு வர போற மருமக இல்லை" என்று பல்லைக் கடித்துக் கொண்டே சாஹி கூற,
"என்னம்மா இப்படி பேசுற? இது பெரியவங்க பேச்சு. நீ சின்னப்பிள்ளை இதுல வரக் கூடாது" எனக் கூற சாஹி வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டாள்.
"என்ன சிவகாமி பிள்ளை வளர்த்திருக்க? சொல்ற பேச்சை கேட்காம பெரியவங்களை எதிர்த்து பேசுறா?" என்று கூற சிவராம், "ம்மா..அவ சின்ன பொண்ணு. நீங்க ஏன் இப்படி பேசுறீங்க. அவ பயந்து கல்யாணம் வேணாம்னு சொல்லிட போறா" என தன் கறையான பற்கள் தெரிய சிரித்துக் கொண்டே கூற,
"உனக்கு உன் பிரச்சனையாடா" என்றார்.
சிவகாமி, "வாங்கண்ணி சாப்பிடப் போகலாம்" என்று அவரை அழைத்து சென்று சாப்பிட வைக்க அவர் வீரபாண்டியை தேடி வந்தார்.
"வாம்மா, எப்படி இருக்க? சிவராம் எப்படி டா இருக்க?" என்று வினவ,
"எங்களுக்கு என்னண்ணே இருக்கோம்" என்றார் போலியான வருத்ததுடன்.
"ஏன்ம்மா? எப்பயுமே இப்படி பேசுற?"
"ஆமாண்ணே, சொந்த அண்ணன் நீங்களே பொண்ணு தர மாட்டேன்னு சொன்னா என் பையனுக்கு ஊர்ல எவன்ண்ணா பொண்ணு கொடுப்பான்."
"பங்கஜம் உன்கிட்ட நான் பலதடவை சொல்லீட்டேன். அதை பத்தி பேசாத. போன வாரம் கூட சிவராம் நம்ம சந்தையில குடிச்சிட்டு விழுந்து கிடந்திருக்கான். நம்ம பங்காளி பார்த்து வந்து சொல்லும் போது எனக்கே அசிங்கமா இருக்கு. இப்படி இருக்கிறப்ப எந்த தைரியத்தில நீ சாஹியை கேட்குற?"
"என்னண்ணா பேசுறீங்க? யாராவது எதாவது சொன்னா நம்புவீங்களா? என் பையன் குடிக்கிறதை நிறுத்தி ஒரு மாசமாச்சு. அவ திருந்திட்டான். நம்புங்க ."
"பங்கஜம் சொல்றதை புரிஞ்சுக்கோ. சிவராம் ஸ்கூல் கூட போகலை, சாஹி அப்படியா?"
"ண்ணா...பொம்பளை பிள்ளைக்கு எதுக்குண்ணா படிப்பு. என் புள்ளை இப்ப கரெக்ட்டா வேலைக்கு போறான். அவளை கட்டி கொடுங்க நல்லா பார்த்துப்பான்."
"பங்கஜம்" என பல்லைக் கடிக்க,
"எதுக்கு கோபப்படுறீங்க? என் பிள்ளைக்கு இல்லாத உரிமையா..?"
"உரிமையை பத்தி எல்லாம் பேசாத, உன் பையனுக்கு பொண்ணு தர முடியாது. எத்தனை தடவை கேட்டாலும் இது தான் என் பதில். உனக்கு தேவைனா ஏதாவது கேளு செய்றேன். அதை விட்டு பொண்ணு கேட்கிற வேலையெல்லாம் வைச்சுக்காத" என்றார் எச்சரிக்கும் குரலில்.
"முடிவா என்ன சொல்ற? பொண்ணு தர முடியுமா? முடியாதா?" என்றவர் எழுந்து கொள்ள
வீரபாண்டி, "முடியாது" என்றார்.
சேலையை உதறி சொருகிய பங்கஜம், "நானும் மரியாதையா கேட்டு பார்த்திட்டேன். நீ கொடுக்கிற மாதிரியே தெரியலை. என் புள்ளைய தவிர வேற யாராவது உன் பொண்ணு கழுத்தில தாலி கட்டிட முடியுமானு நானு பார்க்கிறேன்" என்று கோபமாக கூற,
"தங்கச்சினு உன் மேல இருக்க பாசத்துல தான் உள்ள விட்டுட்டு இருக்கேன். இல்லை ஊர்ல உன் புள்ளை பண்ற பொறுக்கி தனதுக்கு என்னைக்கோ அடிச்சு துரத்தி இருப்பேன். இதுல எவ்வளவு தைரியம் இருந்தா நீ இப்படி பேசுவ. உன் கண் முன்னாடியே என் பொண்ணுக்கு ராஜா மாதிரி அவ படிப்புக்கு சமமா படிச்ச மாப்பிள்ளையா பார்த்து இதே ஊர்ல வச்சு கல்யாணம் பண்ணி காட்டுறேன்" என்று கூற,
வேகமாக அவரது சட்டையை பிடித்த சிவராம், "யோவ் மாமா, அவ என் பொண்டாட்டி, என்னை தவிர எவனாவது அவளுக்கு மாப்பிள்ளை பார்த்த அவளை எதுவும் பண்ண மாட்டேன். அவனை போட்டு தள்ளிடுவேன். நாங்க அமைதியா பேசுனா ரொம்ப திமிரா பேசுற" என்று கத்தியவன் அவரின் சட்டையை விட நிலை தடுமாறி கீழே விழுந்தார் வீரபாண்டி.
அவர் விழுந்ததை பார்த்த எழிலும் அவனது அண்ணன்களும் சிவராம் மீது பாய்ந்து அடித்து விட்டனர்.
ஆளாளுக்கு மாற்றி மாற்றி அடிக்க சண்டை பெரிதாகியது.
வேகமாக வீரபாண்டி அருகில் வந்த காமாட்சியும் சிவகாமியும் அவரை பதறி தூக்க அவரது தலையில் இருந்து இரத்தம் வழிந்தது.
சிவகாமி, "என்னங்க இது" என்றவர் அழ ஆரம்பிக்க அவர் அருகில் வந்த சாஹி வேகமாக தனது கைக் குட்டையால் இரத்ததை துடைத்து விட்டு, "ப்பா வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்" என அவரை தூக்க தண்ணீர் கொண்டு வந்த அருள் அவருக்கு கொடுத்தான்.
பங்கஜத்திடம் போன காமாட்சி, "பங்கஜம், என்ன பண்ணீட்டு இருக்க? இதுக்கு தான் உங்களை கூப்பிடவே கூடாதுனு சொன்னேன். உங்க அண்ணன் தான் தங்கச்சி கண்டிப்பா வரனும்னு வலுகட்டாயமா கூப்பிட சொன்னார். அந்த மனுசனை போய் தள்ளி விட்ருக்கீங்களே. நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க" என்று சண்டையிட ஆரம்பித்தார்.
வேகமாக அருள் காரை ஸ்டார்ட் செய்ய சாஹி தான் வீரபாண்டியை கைத்தாங்கலாக அழைத்து சென்று வண்டியில் ஏற்ற சிவகாமியும் ஏறிக் கொள்ள வண்டி மருத்துவமனை நோக்கி பறந்தது.
பங்கஜம், "நீங்க எல்லாம் எங்க அப்பா சொத்துல நல்லா வசதியா வாழனும். நானும் என் புள்ளையும் மட்டும் கஷ்டப்படனுமா? அதுவுமில்லாம நாங்க இப்ப சொத்து கூட கேட்கலையே. சாஹியை பொண்ணு தான கேட்டோம். அதுக்கு ஆளாளுக்கு இந்த பேச்சு பேசுறீங்க?"
"உன் புள்ளை மாதிரி ஒரு பொறுக்கிக்கு எப்படி நீ தைரியமா பொண்ணு கேட்குற."
"ஏன் அண்ணி என் புள்ளை என்ன உங்க புள்ளை மாதிரியா திருட்டு கல்யாணமா பண்ண?" என்று கேட்க காமாட்சி முகம் கறுத்து விட்டது.
"நீங்க முதல்ல பிள்ளைய ஒழுங்கா வளர்ங்க. அப்புறம் அடுத்த வீட்டு பஞ்சாயத்துக்கு வரலாம். நல்லா கேட்டுக்கோங்க என் அண்ணன் பொண்ணு என் பையனுக்கு தான். இடையில எவனாவது வரட்டும் போட்டு தள்ளிடுறோம்" என்ற பங்கஜம்,
"டேய் சிவராம், வாடா போகலாம். இவனுங்க எப்படி மாப்பிள்ளை பார்த்து அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிரானுங்கனு நானும் பார்க்கிறேன்" என மகனுடன் கிளம்பி விட்டார்.
எழிலை பார்த்தவர், "போதும்மாடா, இவ கூட என்ன பேசுற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தீட்ட சந்தோஷம் தான" என கோபம் கொப்பளிக்க கேட்க,
"ம்மா..." என ஆரம்பித்தான். கைகளை நீட்டி தடுத்தவர் தன் மூத்த மகனுடன் மருத்துவமனை கிளம்பி விட்டார்.
வீரபண்டிக்கு இரத்தம் அதிகளவு சென்றதால் மயங்கி விட்டார்.
சிவகாமி அழுது கொண்டே வர சாஹி தான், "ம்மா...அப்பாக்கு ஒன்னுமில்லை" என சமாதானம் கூறிக் கொண்டே வர மருத்துவமனை முன் நிறுத்திய அருள் வேகமாக வீரபாண்டியை உள்ளே அழைத்த செல்ல சிகிச்சையை ஆரம்பித்தனர்.
சிவகாமியின் அழுகை அதிகமானதே தவிர குறையவில்லை.
அருள், "அழாதீங்கத்தை, சின்ன காயம் தான் சரியாகிடும்" என்று அவர் அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து கூறிக் கொண்டிருக்க அவர்களுக்கு எதிர்புறம் இருந்த நாற்காலியில் சாஹி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவளது அலட்சியமான கண்களில் முதல் முறையாக பயத்தை மீறிய ஒரு வித தவிப்பை காண்கிறான். அது அவனை ஏதோ விதத்தில் தாக்கியது. அவளை அணைத்து தன் தோள் சாய்த்து ஆறுதல் கூற வேண்டும் என்றெல்லாம் அவனது கை பரபரக்க,
"நீ யார் அவளுக்கு? நீ எதுக்கு இப்படி தவிக்கிற?" என மனது அவனை அடக்கியது.
காமாட்சி மருத்துமனை கிளம்பி விட எழிலும் திவ்யா ஜெயா குழந்தைகள் அனைவரையும் காரில் ஏற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
திவ்யா, "யார் எழில் அந்த பொம்பளை? உங்கம்மாவையே இந்த வாங்கு வாங்குறா?" என குரலில் சற்று குதுகலத்துடன் கேட்க,
"ஏன்டி, எங்கம்மா அசிங்கபட்டது உனக்கு அவ்வளவு ஜாலியாவா இருக்கு" என்றான்.
'நான் அப்படி சொல்லலை" என இழுக்க,
"எங்க அப்பா வீரபாண்டி அப்பா அவங்க மூனு பேரும் கூட பிறந்தவங்க. அவங்க வந்தா கண்டிப்பா அந்த இடத்தில குறைஞ்சது ஒரு வெட்டு குத்தாவது நடக்கும் டி. அதுலையும் அவங்க பையன் இருக்கனே. ஊர்ல இருக்கிற. எல்லா கெட்ட பழக்கமும் அவன்கிட்ட தான் இருக்கு. இப்ப கொஞ்ச நாளா சாஹியை பொண்ணு கேட்டு சண்டை போட்டு இருக்காங்க.
அவங்களுக்கு அவளை விட அப்பா சொத்து மேல தான் கண்ணு. ஒரே பொண்ணு இல்லையா? பூர்வீக சொத்து அப்புறம் அவர் சம்பாதிச்சனு அப்புறம் சிவகாமி அம்மா வீட்டில இருந்து கொடுத்ததுனு எல்லாமே சாஹிக்கு மட்டும் தான். அதுக்கு தான் இப்படி மல்லுகட்டீட்டு இருக்காங்க" என்றவன் அவர்களை வீட்டில் விட்டு
மருத்துவமனை நோக்கி சென்றான்.
அருளுக்கு அழைத்த ஜெயா, "வீரபாண்டி அண்ணா எப்படி டா இருக்கார். ஒன்னும் பிரச்சனையில்லையே" என விசாரிக்க,
"ட்ரீட்மெண்ட் பண்ணீட்டு இருக்காங்கம்மா. நான் மருந்து வாங்க வந்திருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறேன்" என அழைப்பை துண்டித்தவன்,
மருத்துவரிடம் சென்று வாங்கி வந்த மருந்துகளை கொடுத்து விட்டு வர காமாட்சியும் அவரது மூத்த மகன் ராஜாவும் வந்து விட்டனர்.
வேகமாக சிவகாமி அருகில் அமர்ந்தவர், "டாக்டர் என்ன சொன்னாங்க சிவகாமி" என்றார்.
"கீழ விழுந்ததுல தலையில அடிபட்டிருக்கு. அதான் ஸ்கேன் எடுத்து பார்த்துட்டு எதுவுமில்லனா கூட்டிட்டு போகலாம்னு சொல்லீட்டாங்கக்கா" என்று அழுகையோடே கூற அவரை ஆதரவாக பிடித்துக் கொண்டவர்,
"எதுவும் ஆகாது" என ஆறுதல் கூறிக் கொண்டிருக்க மற்றொரு புறம் ராஜா அமர்ந்திருந்தான்
சாஹி அருகில் அமர்ந்த அருள் அவளை பார்க்க அதே நிலையில் அமர்ந்திருந்தாள்.
"சாஹி, ஆர் யூ ஓகே?" என்று அருள் கேட்க அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
"ஏய் எதுக்கு அழுகுற? எவ்வளவு போல்டான பொண்ணு நீ?" என்றிட வேகமாக கண்களை துடைத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர், "ஸ்கேன் பண்ணியாச்சு. அவர்க்கு எந்த பிரச்சனையும் இல்லை. தலையில் மட்டும் காயம். அதுவும் ஒரு வாரத்தில சரியாகிடும்" என கூறி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
வீட்டிற்கு வந்த காமாட்சி வீரபாண்டியிடம், "நான் அப்பவே சொன்னேன். உங்க தங்கச்சியை கூப்பிட வேண்டாம்னு கேட்டா தான. இப்ப பார்ங்க எந்த நிலைமையில வந்து நிற்கிறோம்னு. எனக்கு பயமா இருக்கு. சாஹியை ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு. சீக்கிரமா அவளுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடலாம். அப்புறம் அவங்களால எதுவும் பண்ண முடியாது" என தனது ஆதங்கத்தை கொட்ட,
ராஜா, "ம்மா..என்ன பேசுறீங்க? அவ படிப்பை முடிக்கட்டும். அப்புறம் கல்யாணம் பணண்ணலாம். மூட்டை பூச்சிக்கு பயந்துட்டு வீட்டை கொழுத்த சொல்றீங்களா? நம்மளை மீறி அவங்ககளால எதுவும் பண்ண முடியாது. இப்ப வேணாம். ஒரு வாரம் போகட்டும் நம்ம பசங்களை விட்டு அவன் கைகால்லை ஒடச்சி போட சொல்றேன்" என்றான் கோபமாக.
வீரபாண்டி, "வேண்டாம்டா, நீ அடிச்சா அவன் திருப்பி அடிப்பான். பிரச்சனை வளர்ந்துக்கிட்டே தான் போகும். இத்தோட இதை முடிச்சுக்குவோம்" என அவனை சமாதானம் செய்தார்.
வீரபாண்டியிடம் சென்ற அருள், "மாமா, நாங்க கிளம்புறோம். உடம்பை பார்த்துக்கோங்க" என்று கூற,
"ரொம்ப நன்றிப்பா" என்றார்.
"எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க?" என்று அவரிடம் அமர்ந்து பேசியவன் ஜெயாவை கூட்டிக் கொண்டு கிளம்பியும் விட்டான்.
அன்றைய நிகழ்விற்கு பிறகு சாஹி அருளை கல்லூரியில் பார்த்தால் மெலிதாக புன்னகைப்பாள். எதாவது அவசியம் என்றால் பேசுவாள். அவர்களிடம் ஒரு நட்புணர்வு வளர்ந்திருந்தது.
அவனுக்கு அவளை மிகவும் பிடித்திருந்ததாலும் விலகியே நின்று இரசித்தான்.
தொடரும்...