• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 11

Administrator
Staff member
Messages
525
Reaction score
717
Points
93
அத்தியாயம் -11


எழிலையும் திவ்யாவையும் உள்ளே அழைத்து சென்று சிவகாமி, "பூஜை ரூம்ல போய் விளக்கு ஏத்தும்மா" எனக் கூற அங்கு வந்த காமட்சி, "என்ன சிவகாமி சொல்லீட்டு இருக்க. அது எல்லாம் முறையா கல்யாணம் பண்ணி வந்தவங்க செய்ய வேண்டிய முறை. ஓடி போனவங்களுக்கு எதுக்கு அது எல்லாம்" என்றார் குத்தலாக.


அதை கேட்டு திவ்யாவின் கண்கள் கலங்க எழில் அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.

சிவகாமி, "க்கா..என்ன இப்படி பேசுறீங்க? பாவம் அந்த பொண்ணு. கண் கலங்கிடுச்சு" என்று கூற,

"ஆமா, அந்த பொண்ணு வருத்தப்படுறது மட்டும் தான் உங்களுக்கு தெரியுதா? நான் இங்க எவ்வளவு கஷ்டபட்டுட்டு இருக்கேன்" என்றவரின் கண்களில் கண்ணீர் வெளியேற சாஹி, "ம்மா..என்ன இது" என அவரின் கண்ணீரை துடைத்து அணைத்துக் கொள்ள வெளியில் இருந்து சத்தம் கேட்டது.


எல்லோரும் வெளியே வர எழிலுக்கு பேசா முடித்த பெண்ணின் வீட்டில் இருந்து தான் வந்திருந்தனர்.


"ஏம்மா, நீயெல்லாம் என்ன பெரிய மனுசி. உங்க பேச்சை கேட்டு கல்யாணம் ஏற்பாடு பண்ணதுக்கு நல்லா செருப்படி கொடுத்திட்டீங்க. இப்ப என் பொண்ணு வாழ்க்கைக்கு யார் பதில் சொல்றது. கல்யாண வரை வந்து நின்டு போனா யார் என் பொண்ணை கல்யாணம் பண்ணுவா? என்னம்மா பிள்ளை பெத்து வச்சிருக்கீங்க?" என அவரை கேவலமாக பேச காமட்சி எதுவும் பேசாது இறுகிய முகத்துடனே நின்றிருந்தார்.

"என்னம்மா பதில் சொல்லுங்க, இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் என் பொண்ணு வாழ்க்கைக்கு என்ன பதில்" என்று மீண்டும் கேட்க அவர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்ட காமாட்சி, "தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க. இதை தவிர என்ன சொல்றதுனு தெரியலை" என்றவர் உள்ளே சென்று விட அந்த கூட்டத்தினர் ஆளாளுக்கு ஒன்றை பேசி கலைந்து சென்றனர்.



காமாட்சிக்கு மிகுந்த அவமானமாக போய் விட்டது.


உள்ளே வந்த எழிலை பார்த்தவர், "இப்ப உங்க ரெண்டு பேர்க்கும் சந்தோஷம் தான" என்று கூற யாரும் எதுவும் கூறிட இயலவில்லை.



உள்ளே நுழைந்த ஜெயா தலையில் அடித்துக் கொண்டு, "அப்பா இல்லாத பொண்ணுனு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சே இப்படி அசிங்கபடுத்தீட்டாளே" என அழ ஆரம்பிக்க அருள் தான் அவரை கஷ்டப்பட்டு சமாதானம் செய்தான்.



அப்படியே நாட்கள் நகர காமாட்சிக்கு திவ்யா மீது கோபம் மட்டும் குறையவேயில்லை.

அவள் வீட்டில் ஒரே பெண் என்று செல்லமாக வளர்ந்ததால்
எந்த வேலையும் செய்ய தெரியாது.


ஏற்கனவே கடுப்பில் இருந்த காமாட்சிக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்து விட திவ்யாவை படுத்தி தான் எடுத்தார்.

எழிலும் பெரிதாக எதையும் கண்டு கொள்ளவில்லை. அவன் காமாட்சியை எதிர்த்து செய்த ஒரே விஷயம் திவ்யாவை திருமணம் செய்தது மட்டுமே.

சிவகாமியும் சாஹியும் அவ்வ பொழுது திவ்யாவிற்கு சாதகமாக பேசினாலும் காமாட்சி அதற்கும் திவ்யாவையே குறை கூற அவர்களும் ஒதுங்கிக் கொண்டனர்.


திவ்யாவிற்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. எழிலிடம், "நம்ம தனி குடித்தனம் போய்டலாம்" என கெஞ்ச அவன் மறுத்து விட்டான்.



வேறு வழியில்லாமல் அங்கு இருந்தவளுக்கு எல்லார் மீதும் ஒரு வித வெறுப்பு தான். காமாட்சி தனது மற்ற மருகள்களையும் சாஹியையும் உயர்த்தி பேசி திவ்யாவை மட்டும் தாழ்த்தி பேசுவார். அதுவே திவ்யாவிற்கு சாஹி மீது வெறுப்பு உருவாக காரணமாக அமைந்தது.


சாஹியும் எத்தனையோ முறை, "ம்மா இப்படி பேசாதீங்க" என அவரை தடுத்தும் அவர் கேட்கவேயில்லை.
அப்படியே நாட்களும் நகர திவ்யா கருவுற்றிருந்தாள்.

அந்த செய்தியை கேட்டதிலிருந்து ஜெயாவிற்கு அவளை பார்க்க வேண்டும் என்ற உந்துதல் எழ அருளை சமாதானம் செய்து முதலில் போனில் பேச ஆரம்பித்தவர் பின்பு வீட்டிற்கு அழைத்தார்.

திவ்யாவும் காமாட்சியிடம் பேசி ஒருவாறு சரி கட்டிட திவ்யா அங்கு சென்று வர ஆரம்பித்தாள்.

ஜெயா அருளுடன் அடிக்கடி அங்கு வந்து செல்வார். திருமணத்தின் போது அவளுக்கு செய்யாததை எல்லாம் இப்போது செய்தார் ஜெயா.


சாஹி படிக்கும் கல்லூரியில் தான் அருள் முதல் வருடம் பி.ஜி சேர்ந்திருந்தான்.


இறுதியாண்டு மாணவர்களுக்கு பி.ஜி மாணவர்கள் வகுப்பெடுக்கும் படி கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.


சாஹி வகுப்பில் அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருக்க வேகமாக உள்ளே ஓடி வந்த விஜி, "சாஹி, இன்னைக்கு நம்ம க்ளாஸ்க்கு பி.ஜியில இருந்து அருள் மொழினு ஒருத்தர வரார்டி. ஆளு செம்ம சூப்பரா இருக்கார்" என்று கூற அவளை முறைத்தவள்,

"ஹேய், நெக்ஸ்ட் ஹவர் எக்ஸாம் இருக்கு. படிக்கிறதை விட்டு போய் என்ன வேலை பார்த்துட்டு வந்திருக்க பிசாசே" என்றவள் அவள் தலையில் கொட்ட சாஹியை தள்ளி விட்ட மஞ்சு, "இவ கிடக்கா, எப்ப பார்த்தாலும் புக்கை தூக்கிட்டு. நீ சொல்லு டி, எங்க பார்த்த அவரை, பி.ஜி எத்தனை பேர் வந்திருக்காங்க...?" என ஆரம்பிக்க, இருவரும் கதையளக்க ஆரம்பித்தனர்.

"நீங்க திருந்த மாட்டீங்க" என்ற சாஹித்யா தனது வேலையை கவனிக்க பார்க்க ஆரம்பித்தாள்.


அருள் உள்ளே நுழைய எல்லோரும் எழுந்து நிற்க சாஹி அதை அறியாது புக்கிலே மூழ்கியிருந்தாள்.


உள்ளே நுழையும் போதே அவளை கவனித்து விட்ட அருள், "சிட் டவுன்" என்று அவளை பார்த்துக் கொண்டே கூற அவளும் நிமிர்ந்து அவனை தான் பார்த்தாள்.

அருள் வகுப்பை தொடங்கி விட
'இவரை எங்கேயோ பார்த்திருக்கேனே' என நினைத்தவள் அவனையே பார்த்திருக்க அவளை கவனித்த அருள் என்ன என்று புருவம் உயர்த்தி ஒண்ணுமில்லை என தன் தலையை ஆட்ட அருளின் இதழோரத்தில் புன்னகை தோன்ற வகுப்பை தொடர்ந்தான்.

விஜி, "சாஹி, அவர் அழகா இருக்கார்னு சொன்னதுக்கு என்ன பேச்சு பேசுன. இப்ப அவரை எப்படி சைட் அடிக்கிற கண்ணெடுக்காம" என அவளை வம்பிலுக்க,

"நீ வேற ஏன்டி படுத்துற, அவரை எங்கையோ பார்த்திருக்கேன். ஆனா எங்கனு தான் தெரியலை" என்றிட சாஹி பேசுவதை அருள் பார்த்து விட்டான்.


அவளை முறைத்தவன், "கெட் அப்" என எழுப்பி விட்டு, "வாட்ஸ் யுவர் நேம்" என்றான்.

அவன் எழுப்பியதை நினைத்து கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் ஒரு அலட்சிய பார்வை பார்த்தவள், "சாஹித்யா" என்றாள்.


"சாஹித்யா, நான் லெசன் நடத்தும் போது அங்க என்ன பேச்சு" என்றவன் முறைக்க,

"இப்ப என்ன வெளிய போகனுமா?" என்றவள் பேக்கை எடுத்துக் கொண்டு வெளியேற ஆயத்தமாக,

"நான் அப்படி சொல்லவே இல்லையே" என்றான்.

அப்படியே நின்றவள், "சொல்லுங்க சார்" என அழுத்தமாக கேட்க அருளுக்கு தான் ஆச்சரியமாக போயிற்று.

அவள் முகத்தில் ஒரு துளி கூட பயமோ பதற்றமோ இல்லாது அலட்சியம் மட்டுமே இருந்தது. அவள் மன்னிப்பு கேட்டிருந்தாலோ இல்லை அமைதியாக இருந்திருந்தாலோ அருள் எதுவும் கூறி இருக்க மாட்டான்.



அவளது அலட்சியமான அந்த பார்வை அவனை ஏதோ செய்ய கரும்பலகையில் ஒரு வினாவை எழுதியவன், "சால்வ் இட்" எனக் கூறி அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்து கொள்ள அவனையே சில நிமிடம் பார்த்த சாஹி வேகமாக தனது பேக்கை டேபிளில் வைத்து சாக்பீஸை எடுத்து அந்த ப்ராப்ளத்திற்கு சில நொடியில் விடை எழுதியவள்,

"இப்ப நான் கிளம்பலாமா?" என தனது பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேற அருள் தான் அவளையே விடாது பார்க்க அவனது பார்வையை உணர்ந்து திரும்பி அலட்சியமாக சிரித்தவள் நூலகம் புகுந்தாள்.


சாஹியும் அவளது பார்வையும் அருளை ஏதோ செய்தது. அதை ஒதுக்கியவன் மீண்டும் தனது வேலையை தொடர்ந்தான்.


அன்று அருள் எச்.ஓ.டி ரூமில் நின்று அவரிடம் பேசிக் கொண்டிருக்க வேகமாக உள்ளே நுழைந்தான் ஒரு மாணவன் உதட்டில் வழியும் இரத்தத்துடன்.

எச்.ஓ.டி, "என்னாச்சு வினய், முகத்தில் இரத்தம்" என்றவர் பதறி எழ,

"அங்கிள், ஒரு பொண்ணு என்னை அடிச்சிட்டா" என்றான்.

வினய் அந்த கல்லூரியில் தாளாளர் மகன். இந்த வருடம் தான் பி.ஜி முதல் வருடம் சேர்ந்திருந்தான்.

"யார்ப்பா அது" எனக் கேட்டுக் கொண்டிருக்க சாஹித்யா விஜியுடன் உள்ளே நுழைந்தாள்.

அங்கிருக்கும் அருளை ஒரு பார்வை பார்த்தவள் எச்.ஓ.டி முன் செல்ல வினய், "அங்கிள் இந்த பொண்ணு தான் என்னை அடிச்சிட்டா" என்று கூற,

"உன்னை அடிச்சதோட விடக் கூடாது சாவடிச்சுக்கனும்" என்றவள் அவனை முறைக்க எச்.ஓ.டி, "வாட் இஸ் திஸ் சாஹி" என்றார் சற்று எரிச்சலான குரலில்.

"என்கிட்ட கேட்குறீங்க? அவன் கிட்ட கேளுங்க என்ன செஞ்சானு" என்றவள் கைகளை கட்டிக் கொண்டு திமிராக நின்றாள்.

வினய் புறம் திரும்பியவர், "நீயாவது சொல்லு வினய் என்ன நடந்துச்சுனு" என்றிட, "நான் எதுவுமே செய்யலை அங்கிள்" என்றவனது வார்த்தை சாஹியின் முறைப்பில் அடங்கிக் கொண்டது.


அவன் பயத்தில் எச்சிலை விழுங்க அருள் நடப்பவற்றை சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

"சாஹி, என்ன நடந்துச்சு நீ எதுக்கு வினயை அடிச்ச" என்று சற்று அதட்டலாக கேட்க,


விஜியின் மொபைலை எடுத்து டேபிளின் மீது போட்டவள், "இதை பார்ங்க. இவன் கரெஸ்பாண்டன்ட் பையன்னா என்னனாலும் செய்யலாம்மா? எங்களுக்கு கிளாஸ் எடுக்க வந்துட்டு இவ நம்பர் வாங்கி கேவலமா பேசி செக்சுவலா டார்ச்சர் பண்ணியிருக்கான். அவன் சொல்றதை கேட்கலைனா இந்த காலேஜ்ல படிக்க முடியாதுனு மிரட்டி இருக்கான்.


இவங்க அம்மா,அப்பா படிக்காதவங்க. இவ அம்மாகிட்ட சொல்லவும் பயந்து படிக்க வேணாம், வீட்டுலே இருக்க சொல்லீட்டாங்க.


ஏன் பொம்பளையா பொறந்தா தப்பா...? வீட்டில ஆரம்பிச்சு பஸ்,ரோடுனு காலேஜ் ஸ்கூல் வரை வந்திடுச்சு.

இல்லை தெரியாம தான கேட்கிறேன் ஆண் மாதிரி தான பெண்ணும் ஒரு உயிர். அப்புறம் ஏன் எங்களை மட்டும் இப்படி கேவலமா போதை பொருள் மாதிரி பார்க்கிறீங்க..? நடத்துறீங்க....?" என்றவள் ஆக்ரோசமாக டேபிளை தட்ட எச்.ஓ.டியே ஒரு நிமிடம் அதிர்ந்து பார்க்க அருளுக்கு தான் அவள் பேசுவதை கேட்டு கை தட்ட வேண்டும் போல் இருந்தது.



"சரிம்மா, அவன் பண்ணது தப்பு தான். அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லு" என்றவர் வினயை முறைக்க,

"விஜி கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லுங்க" என்றாள்.


"நான் இவ கால்ல விழுகனுமா, முடியாது" என்று வினய் திமிராக கூற,



"வலிக்குதா..அப்ப நீ கேவலமா பேசும் போதும் படத்தை அனுப்பும் போதும் எங்களுக்கும் இப்படி தான் இருந்துச்சு. நீ இங்க மன்னிப்பு கேட்கலை எங்க பசங்கி கிட்ட சொல்லி வாசல்ல போராட்டம் பண்ணுவோம். அப்புறம் எல்லார் முன்னாடியும் நீ இவ கால்ல விழுகனும்" என சொடக்கிட்டு கூற,

வினய், "அங்கிள்" என்றழைக்க,
அவனை விரல் நீட்டி எச்சரித்தவர், "மன்னிப்புக் கேளு" என்றார்.

சாஹியை முறைத்தவன் விஜி காலில் விழுந்து வேகமாக வெளியேறி விட சாஹி கைகளை பற்றி குலுக்கியவர்,
"வெரிகுட் மா, எல்லார் இந்த மாதிரி‌ தான் தைரியமா இருக்கனும்" என பாராட்ட அவரை பார்த்து புன்னகைத்தவள், "ஒரு சின்ன திருத்தம் சார், அவனை மாதிரி இருக்க கூடாதுனு சொல்லி பசங்களை வளர்த்தாலே போதும் சார்" என்றவள் விஜியுடன் வெளியேறி விட்டாள்.

அவளையே பார்த்தவர், "ரொம்ப நல்ல பொண்ணு அருள். நானே தப்பு பண்ணாலும் நோரா வந்து கேட்டுடுவா. படிப்பில செம்மை கெட்டி" என்று அவனிடம் கூற அவனது கண்களும் செல்லும் அவளை கவனிக்க தவறவில்லை.



சாஹி ஏதோ ஒரு விதத்தில் அருளை சூழ்ந்து கொண்டாள். ஆனால் அவன் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.



அதற்கு பிறகு வந்த நாட்களிலும் சாஹியின் நடவடிக்கை அருளை அவள் புறம் நோக்கி இழுத்தது. அவள் இயல்பாக தான் இருக்கிறாள்.



சாஹித்யாவிற்கு அருளை தெரியும் ஆனால் அவனிற்கு தெரியாது அவள் எழிலின் தங்கை என.

திவ்யா கர்ப்பமாக இருப்பதால் ஐந்து மாதத்தில் அவளுக்கு கழி கிண்டி போடும் விழாவை சிறிய பங்ஷன் மாதிரி செய்து விடலாம் என ஜெயா அருளிடம் கூறியிருந்தார். "அருள், அவ ஏதோ தெரியாம பண்ணீட்டா. இருந்தாலும் நம்ம அவளுக்கு எல்லாமே முறையா செஞ்சா தான அந்த வீட்டில அவளுக்கு மரியாதையா இருக்கும். ஏற்கனவே அவ மாமியார் ரொம்ப பேசிட்டு இருக்காங்க" என்றிட,

"சரிம்மா செஞ்சிடலாம், நீங்க திவ்யாகிட்ட கேட்டுக்கோங்க" என்று விட்டான்.


ஜெயா திவ்யாவிடம் பேச
அவள் எழிலிடம் போனை கொடுக்க, "உங்க பொண்ணுக்கு நீங்க செய்றீங்க. இதுல நாங்க தலையிட மாட்டோம்" என கூறி விட அருள் தான் முன் நின்று எல்லா ஏற்பாடும் செய்தான்.

காமாட்சி எப்பொழுதும் போல் ஒதுங்கி கொண்டதால் வீரபாண்டி சிவகாமியை முன் நிறுத்தி அருள் அவர்களிடமே எல்லாவற்றையும் கேட்டு செய்தான்.


அவன் பலமுறை வந்தும் சாஹி மட்டும் அவன் கண்ணில் படவில்லை.


அன்று பங்ஷன் கோவிலில் ஏற்பாடு செய்திருக்க வீரபாண்டியும் சிவகாமியும் காமாட்சியை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு முன்னே சென்று விட்டனர்.

சிவகாமி, "சாஹி, நீ அண்ணா கூட வந்திடு. எங்களுக்கு அங்க வேலை இருக்கு" என்று கூறி விட்டு கிளம்ப
சாஹி தயாராகி அங்கு சென்று விட்டாள்.

திவ்யா முதலில் இருந்தே யாரிடமும் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லை. சாஹியே வழிய சென்று பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளோடு முடித்துக் கொள்வாள். காமாட்சி அவளை உயர்த்தியும் திவ்யாவை தாழ்த்தியும் பேச பேச இயல்பாகவே அவளின் மீது ஒரு வெறுப்புணர்வு உருவாகி விட்டது.

சாஹிக்கு காமாட்சி பேசுவது பிடிக்காது நேராக கூறினாலும் அவர் அதையெல்லாம் காதில் போடாது தன் வேலையை செய்து கொண்டிருப்பார்.


அதிகாலையிலே கோவிலிற்கு கிளம்பிய ஜெயா, "அருள் நான் நேரா கோவிலுக்கு போறேன். நீ போய் அக்கா கூட வாப்பா" என்றிட அவனும் திவ்யா வீட்டிற்கு கிளம்பி விட்டான்.


உள்ளே நுழைந்தவன் அங்கு நின்று கொண்டிருந்த சாஹியை பார்த்து விட்டான்.

'இவ எங்க இங்க?' என ஆராய்ச்சி செய்தவன் பார்வை ரசனையாக மாற அவள் எப்பொழுதும் போல் அவனை கண்டு கொள்ளாது கையில் வைத்திருந்த அவளது மூத்த அண்ணன் பையனை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

இவனை பார்த்த எழில், "வாங்க மாப்பிள்ளை" என வரவேற்க திவ்யாவும் வெளியே வந்து விட்டாள்.

அவள் அருள் வர மாட்டான் என நினைத்துக் கொண்டிருக்க வீடு தேடி வந்தது அளவில்லா ஆனந்தம்.

அருளும் முதலில் அவளின் தவறை நினைத்து ஒதுக்கினாலும் அவளின் மீது கொண்ட பாசம் அதை செய்ய விடவில்லை. அதுவுமில்லாமல்
அவள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கோபத்தை காட்ட விரும்பவில்லை.

திவ்யா வேகமாக சென்று அவனை அணைத்துக் கொள்ள, "க்கா..எப்படி இருக்க?" என்று தான் கேட்டான்.

அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவளது முகத்தை நிமிர்த்தியவன், "என்ன இது சின்ன பிள்ளை மாதிரி" என்று அவளது முதுகை ஆதரவாக வருடியவன், "சரி வாங்க கிளம்பலாம்" என எழிலிடம் கூறினான்.

எழில், "திவ்யா கார்ல ஏறும்மா" என்றவன் சாஹியிடம் திரும்பி

"பாப்பா, அண்ணி பசங்க எல்லாரையும் வரச் சொல்லுடா" என்றான்.

"சரிண்ணா" என்ற சாஹி அவர்களை அனுப்பி விட்டு பின்னால் வர அனைவரும் காரில் ஏறி விட காரில் இடமில்லை.

அவள் நின்று கொண்டிருக்க வெளியில் வந்த எழில், "பாப்பா, வண்டியில ஏறு. இங்க என்ன பண்ணீட்டு இருக்க" என்றிட,

"ண்ணா..இடமில்லை" என்றாள்.

எழிலின் அண்ணன் இருவரும் முன்பே பைக்கில் சென்று விட அவர்களின் குழந்தைகள் மனைவி திவ்யா அனைவரும் காரில் ஏறி விட்டனர்.

அவளின் மூத்த அண்ணி ரதி, "சாஹி, வா அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்" என்றிட,

"ண்ணி..ரொம்ப தூரம் போகனும். அட்ஜெஸ்ட் பண்ண முடியாது கஷ்டம்" என்றாள்.

எழில், "சரி இரு, நம்ம மாரி அண்ணனை இன்னொரு காரை எடுத்து வரச் சொல்றேன். அதுல்ல போகலாம்" என மொபைலை எடுக்க,

"அண்ணா, அவங்களை எதுக்கு டிஸ்டர்ப் பண்றீங்க. நான் ஸ்கூட்டியில வந்திடுறேன்" என்றாள்.

"பாப்பா என்ன விளையாடுறீயா..?
அவ்வளவு தூரம் நீ வண்டியில வரது அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்" என மறுக்க,

"அண்ணா, அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க. ஏற்கனவே டைமாகிடுச்சு. கிளம்புங்க நல்ல நேரம் முடியப் போகுது" என்றிட

அருள், "நீங்க போங்க மாமா, நானும் பின்னாடி வரேன்ல்ல பார்த்துக்கிறேன்" என்றுக் கூற எழில் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப சாஹியின் வண்டி பின்பே அருளும் வண்டியை செலுத்தினான்.

எழிலிற்கும் அருளிற்கும் இடையில் சாஹி சென்று கொண்டிருக்க இடையில் சிக்கனலில் அருள் வண்டி சிக்கிக் கொள்ள சாஹி பறந்து விட்டாள்.

"ச்சை..எவ்வளவு வேகமா போறா..? பின்னாடி ஆள் வராங்களான்னு பார்க்கிறது கூட இல்லை" என அவளை திட்டியவன் வேகத்தை கூட்ட அவனிற்கு முன் எழிலின் கார் தான் சென்றது.

அவளை காணாது தேடியவன் விழிகள் காரிற்கு முன்பும் அவளை தேடி ஏமாற அவனது மூளை அபாய ஒலி எழுப்ப எழிலிற்கு அழைக்க, "அவ எங்க கார்க்கு பின்னாடி தான மாப்பிள்ளை வரா" என்றான்.





தொடரும்...

 
Well-known member
Messages
572
Reaction score
416
Points
63
Shaahi ellathulayum athiradi than polaye
 
Top