- Messages
- 525
- Reaction score
- 717
- Points
- 93
அத்தியாயம் - 10
சாஹியை இறக்கி விட்ட அருள் தன்னுடைய வேலையை முடித்து மதியம் போல் வீட்டிற்குள் நுழைய திவ்யா அமர்ந்து மொபைல் பார்த்துக் கொண்டிருக்க ஜெயா அவளது குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார்.
அவனை பார்த்தவுடன், "வாப்பா அருள் சாப்பிடு.." என்றவர்,
"திவ்யா, நீ போய் அருளுக்கு சாப்பாடு எடுத்து வைம்மா" என்றார்.
"இல்லம்மா அப்புறமா சாப்பிடுறேன்" என்றவன் திவ்யாவின் குழந்தையை வாங்கிக் கொண்டு அவர்கள் அருகிலே அமர்ந்து விட்டான்.
"எங்கப்பா போன? இப்ப எல்லாம் உனக்கு இந்த அம்மானு ஒருத்தி இருக்கது தெரியாமலே போய்டுச்சு. எங்கெங்கையோ போற. என்னென்னமோ செய்ற. ஆனா என்கிட்ட சொல்ல பிடிக்கலை நான் உனக்கு மூணாவது மனுசியாகிட்டேன்ல்ல" என்று புலம்ப,
"ம்மா...ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க?" என்றான் சலிப்பாக.
"ஆமா, காலையில மாப்பிள்ளைகிட்ட ஏதோ கட்ட போறேன் அப்படி இப்படினு சொன்ன. ஆனா ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லனும்னு தோனலைல. நான் உனக்கு வேணாடப்படாதவளா போயிட்டேனா?" என்றார் ஆதங்கமாக.
"அப்படி இல்லைம்மா, எல்லாமே முடிச்சிட்டு உங்களை கூட்டிட்டு போய் காட்டலாம்னு இருந்தேன்" என்று கூற,
"அப்படியாப்பா, நான் சொன்னேன்ல்ல திவ்யா என் புள்ளை அப்படி எல்லாம் இல்லை, நம்ம மேல பாசமா தான் இருக்கான்னு நீ தான் கேட்கலை" என்றிட அருள் திவ்யாவை பார்க்க அவள் முகத்தை தூக்கி வைத்து அமர்ந்திருந்தாள்.
"அக்கா" என அழைக்க அவள் நிமிரவேயில்லை
அவன் வலுக்கட்டாயமாக அவளது முகத்தை பற்றி நிமிர்த்த அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிய பதறிய அருள் குழந்தையை ஜெயாவிடம் கொடுத்து அவளருகில் அமர்ந்தான்.
"க்கா..என் இது. இப்படி அழுதுட்டு இருக்க?" என்று கண்ணீரை துடைக்க அவனது கைகளை தட்டி விட்டாள்.
'க்கா.." என்றிட, "இப்ப தான் நான் உனக்கு தெரியுறேன்னா? நம்ம தம்பின்ற உரிமையில தான காசு கேட்டேன். எனக்குனு யார்டா இருக்கா உன்னை தவிர அதுவும் மாமா எதோ அவசரம்னு தான கேட்கிறார். ஆனா நீ என்னமோ ஏற்கனவே குடுத்ததையும் சேர்த்து கேட்குற. அவர் சொல்லீட்டு தான் போனார் யார் கையில கால்லயாவது விழுந்து ஏற்பாடு பண்ணி வட்டியோட உனக்கு தந்திடலாம்னு" என்றவள் கண்ணீரை துடைக்க,
"க்கா ..ஏன் இப்படி பேசுற. நான் உனக்கு எதுவுமே செய்யாத மாதிரி பேசுற. என்னைக்காவது உன்னை விட காசு முக்கியம்னு நான் நினைச்சிருக்கேன்னா?"
"அதான் இப்ப பேசுறல்ல டா, மாமா என்ன எதுவும் இல்லாதவரா? அவங்க குடும்பத்தை பத்தி உனக்கு தெரியாததா? அவசரம்னு கேட்டதுக்கு இப்படி பேசுற" என சண்டைக்கு நிற்க,
"க்கா..நான் என்ன சொல்ல வரேன்னு முதல்ல புரிஞ்சுக்கோ. இப்ப நான் ஷாப்பிங் காம்ளக்ஸ் கட்டவே கையில பணமில்லாம லோன் தான் ஏற்பாடு பண்ண போறேன். அதான் மாமாகிட்ட கொடுத்த பணத்தை கேட்டேன். நீ கேட்டு இத்தனை நாள் இல்லைனு சொல்லியிருக்கேனா?" என்று வினவ,
"சரி டா, எனக்கு புரியுது இல்லைனு சொல்லலை. ஆனா மாமாவுக்கும் இப்ப அவசர தேவை தான். பிசினஸ் நஷ்டத்தில போகுதாம். நீ லோன் வாங்கும் போது சேர்த்து வாங்கிக் குடுடா. கொஞ்ச நாளல் எல்லா காசையும் சேர்த்து திருப்பி தர சொல்றேன்" என்று கூற அவளையே பார்க்க ஜெயா, "இந்த ஒரு தடவை தான் சொல்றாப்பா" என்றிட,
"சரிம்மா, ஏற்பாடு செய்யலாம்" என்றவன் தனதறைக்கு சென்று விட்டான்.
மாலையில் சாஹி அலுவகலகம் விட்டு வீட்டிற்கு செல்ல கதவு பூட்டியிருந்தது.
'என்ன இந்த நேரத்தில பூட்டியிருக்கு. அம்மா எங்க போயிருப்பாங்க, போன் கூட பண்ணலையே' என மொபைலை பரிசோதித்தவள் சிவகாமியை தொடர்பு கொண்டாள்.
அழைப்பை ஏற்றவுடன், "ம்மா....எங்க இருக்கீங்க. வீடு பூட்டியிருக்கு" என்று கூற, "சாஹி" என்றான் அருள்.
மொபைலை எடுத்து பார்த்தவள், 'அம்மா நம்பர்க்கு தான கூப்பிட்டோம். இவர் பேசுறார்' என நினைத்தவள்,
"அருள் அம்மா எங்க?" என்றாள்.
"என் பொண்ணும் அத்தையும் பத்திரமா என் வீட்டில இருக்காங்க. நீயும் அப்படியே இங்க வந்து சேர்" என்று கூற,
"அருள் இதான் உங்களுக்கு லிமிட், நான் பேசாம இருந்தா நீங்க என்ன வேணும்னாலும் செய்யலாம்னு அர்த்தமில்லை. எதுக்கு அம்மா உங்க வீட்டுக்கு வந்தாங்க. போனை முதல்ல அம்மாகிட்ட கொடுங்க" என்று கோபத்தில் கத்த,
"ஏய் மெதுவா பேசு டி, எதுக்கு இப்படி கத்துற. இனிமே அவங்க இங்க தான் இருப்பாங்க. நீயும் என் வீட்டுல தான் இருக்கனும். உன் திங்கஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன். மரியாதையா வீட்டுக்கு வா" என்றவன் அழைப்பை துண்டிக்க சாஹிக்கு கோபம் தலைக்கேறியது.
மொபைலை கீழே எறிந்தவள் வாசலிலே அமர்ந்து விட்டாள். அவளுக்கு அங்கு செல்ல விருப்பமில்லை. அப்படியே கண்களை மூடியவளின் கண்ணீர் தரையை தொட்டது.
'நான் வர மாட்டேன். நீ கூப்ட்டா வரனுமா?" என்றவளின் நினைவுகள் சில வருடங்களுக்கு முன்பு சென்றது.
சில வருடங்களுக்கு முன்பு
அன்று வழக்கம் போல் சாஹி கல்லூரி முடித்து வீட்டிற்குள் நுழைய வீடு முழுவதும் ஆட்கள் குழுமியிருக்க சத்தமும் சண்டையாக இருந்தது.
இவள் நுழையும் போதே பார்த்து விட்ட சிவகாமி கைகளை பிடித்து ஓரமாக அழைத்துச் சென்று, "நீ ரூம்குள்ள போ சாஹி" என்று படிகளில் ஏற்றி விட,
"ம்மா...என்ன பிராப்ளம். எதுக்கு இவ்ளோ பேர் வந்திருக்காங்க" என்றிட, "நான் அப்புறமா உனக்கு எல்லாமே சொல்றேன். நீ முதல்ல உள்ள போ" என மற்றவரின் பார்வை அவர்களின் மீது விழுவதை புரிந்து கொண்டு அவசரபடுத்தினார்.
அவளும் வேகமாக மேலே சென்று பேக்கை ஓரம் போட்டு விட்டு அங்கிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து கீழே நடப்பவற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அவளின் அப்பா வீரபாண்டி அந்த ஊரின் பெரிய தலைக்கட்டுகளில் ஒருவர். பஞ்சாயத்து தலைவரும் கூட.
சாஹியின் பெரியம்மா காமாட்சி தான் நடுவில் நின்று சத்தமிட்டு கொண்டிருந்தார். காமாட்சிக்கு எழிலுடன் சேர்த்து மூன்று பையன்கள். அவரது கணவர் இறந்து விட அவரின் தம்பியான வீரபாண்டி தான் அந்த குடும்பத்தில் எல்லாவற்றிற்கும் முன் நின்று எடுத்து செய்பவர்.
அவனுக்கு நாளை திருமணம் ஏற்பாடு செய்திருந்த நிலையில் முதல் நாள் திவ்யாவுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டான்.
திவ்யாவின் குடும்பம் எழிலின் குடும்பத்தை விட வசதி சற்று குறைவு அதுவுமில்லாமல் இருவரும் வேறு வேறு சமூகத்தை சார்ந்தவர்கள். அதுவே காமாட்சியின் கோபத்திற்கு காரணம்.
சில நிமிடங்களில் எழிலும் திவ்யாவும் மாலையும் கழுத்துமாக வந்து நிற்க காமாட்சிக்கு கோபம் தலைக் கேற வேகமாக ஓடிச் சென்று எழிலின் சட்டையை பிடித்து அடிக்க ஆரம்பிக்க சிவகாமி தான், "க்கா...என்ன செய்றீங்க?" என அவரை பிடித்து இழுத்தார்.
வீரபாண்டி, "ஏன்டா எழில் இப்படி பண்ண? உன்னால இன்னொரு பொண்ணோட வாழ்க்கையும் கேள்வி குறியாகிடுச்சுல்ல. உனக்கு விருப்பமில்லைனா முதல்லே சொல்லி இருக்கலாம்ல" என சற்று உரக்கவே கேட்க,
"இல்லப்பா, நான் அம்மாக்கிட்ட முதல்லே சொன்னேன். அவங்க தான்" என்று கூற காமாட்சி மீண்டும் அவனது கன்னத்தில் ஓங்கி அடிக்க ஆரம்பிக்க வீரபாண்டி, "அண்ணி, என்ன பண்றீங்க? அதான் பேசிட்டு இருக்கோம்ல" என்றார்.
"இல்ல தம்பி, உங்களுக்கு தெரியாது, நான் சொல்ல சொல்ல கேட்காம இப்படி பண்ணி வந்து நிற்கிறான். இந்த பொண்ணை நம்ம வீட்டு மருமகளா ஏத்துக்க முடியாது" என்று கத்தி சண்டையிட்டு கொண்டிருக்க அங்கிருந்த பெரியவர், "ஏம்மா, கல்யாணமே முடிஞ்சது. இப்ப போய் இப்படி பேசிட்டு இருக்க. நடந்தது நடந்திருச்சு. வேற வழியில்லை. அவன் நம்ம புள்ளைம்மா" என்று கூறிக் கொண்டிருந்தார்.
"அப்படி எல்லாம் ஏத்துக்க முடியாது, இவளை இப்பவே அத்து விட்டு வரச் சொல்லு. இல்லை இங்கயே தலை முழுகிட்டு போயிடுறேன்" என்று கூற திவ்யா பயத்தில் எழில் கையை பிடிக்க அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன்,
"ம்மா...அப்படி எல்லாம் வர முடியாது. அவ என் பொண்டாட்டி. இனிமே நம்ம கூட தான் இருப்பா" எனக் கூறிக் கொண்டிருக்க வெளியில் அருள் பைக்கை நிறுத்த அதிலிருந்து ஜெயா வேகமாக இறங்கி உள்ளே வந்தார்.
அவர்க்கு திவ்யாவை பார்த்து மயக்கம் வராத குறை தான்.
"ஏய் திவ்யா, என்ன காரியம் பண்ணீட்டு வந்து நிற்கிற" என்றவர் அவளை இழுத்து ஒரு அறை விட வேகமாக உள்ளே வந்த அருள் ஜெயாவை இழுத்து பிடித்துக் கொண்டான்.
காமாட்சி, "என்னம்மா நடிக்கிறீங்களா? பொண்ணை நல்லா வளர்த்து வச்சிருக்கீங்க. இப்படி நல்லா வசதியான பைனா பார்த்து மடக்கி இழுத்துட்டு போக சொல்லி கொடுத்தீங்களா?" என இழுக்க அவமானத்தால் ஜெயா கூனி குறுகி விட அருளுக்கு தான் கோபம் தலைக்கேறியது.
"வார்த்தையை அளந்து பேசுங்க. உங்க வீட்டு பொண்ணா இருந்தா இப்படி பேசுவீங்களா? நீங்களும் ஒரு பொண்ணுதானம்மா" என்றிட
காமாட்சி, "உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா எங்க வீட்டுக்குள்ளே வந்து எங்க வீட்டு பொண்ணை பத்தி பேசுவ. நாங்க என்ன உங்க வீட்டில மாதிரியா பொம்பளை பிள்ளையை தண்ணி தெளிச்சு விட்ருக்கோம். எங்க வீட்டு பிள்ளைங்க எல்லாம் தங்கம் டா. அதை போய் சாக்கடையோட சேர்த்து பேசுற" என்று கூற திவ்யாவை பிடித்து இழுத்து ஒரு அறை விட்டவன்,
"ஏன்க்கா இப்படி பண்ண? அப்பா இல்லாட்டியும் அம்மா நம்மளை எப்டி வளர்த்தாங்க. அவங்களை போய் இந்த மாதிரியெல்லாம் பேச்சு கேட்க வைச்சுட்டீயே" என்றவனின் குரலும் சுருதி இறங்க,
"இல்லை அருள்" என அவள் ஆரம்பிக்க,
"ம்மா..இப்படி ஒரு பொண்ணு உனக்கு இல்லைனு நினைச்சுக்கோ. வா போகலாம்" என ஜெயா கையை பிடித்து இழுக்க அவருக்கும் திவ்யா செயலில் ஆத்திரம் தான்.
இருந்தாலும் அத்தனை பேர் மத்தியில் ஆதரவின்றி கலங்கிய கண்களுடன் இருக்கும் மகளை தனித்து விட அவருக்கு மனது வாராமல் அங்கே நிற்க,
"என்னம்மா வாங்க போகலாம்" என இழுத்துச் செல்ல அவர் அரை மனதுடன் கிளம்பினார்.
இப்போது தான் அவருக்கும் வலித்தது. தந்தை இல்லையென அவளை அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாகி விட்டது என வருந்தினார்.
அவர் கண்ணீருடனே செல்ல இதையெல்லாம் மேலிருந்த சாஹி வேடிக்கை பார்த்திருந்தார்.
வீரபாண்டி, "அண்ணி, அவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நம்மளும் விட்ட பாவம் பிள்ளைங்க, நம்ம பையன் தானா. தெரியாம பண்ணிட்டான்" என எழிலுக்கு ஆதரவாக பேச,
காமாட்சி கொதித்தெழுந்து, "என்ன தம்பி பேசுறீங்க. அப்படி எல்லாம் ஏத்துக்க முடியாது. நாளைக்கு பொண்ணு வீட்டுக்காரங்க என் முகத்தில தான காறி துப்புவாங்க" என அடக்க மாட்டாமல் பேச அங்கிருந்த வயதானவர், "என்ன காமாட்சி பேசுற, நடந்தது நடந்து போச்சு. அதுக்காக என்ன பண்றது. பிள்ளைங்களை வீட்டுக்கு அழைச்சுட்டு போ" என்றார்.
"என்ன மாமா பேசுறீங்க, அப்படி எல்லாம் கூட்டிட்டு போக முடியாது" என மல்லுக்கு நிற்க,
எழில், "ம்மா..." என அவரின் அருகில் வர கையை பிடித்து தள்ளி விட்டார்.
எல்லாரும் சேர்ந்து காமாட்சியிடம் பேச வேறு வழியின்றி,
"என்னமோ பண்ணுங்க, ஆனா நான் எப்பயுமே இந்த பொண்ணையும் அவனையும் ஏத்துக்க மாட்டேன். வீட்டில ஏதோ ஒரு பொருள் இருக்க மாதிரி இருந்துட்டு போகட்டும்" என்றவர் ஒதுக்குவது போல் பேசி சென்று விட, எழில் வீரபாண்டியை தான் பார்த்தான்.
"சிவகாமி, நீ போய் எல்லாமே பார்ம்மா" என வீரபாண்டி கூற,
அவர் சாஹியை அழைத்து எதிர் வீடான காமாட்சி வீட்டில் ஆரத்தி எடுக்குமாறு கூற அவள் தான் அவர்களுக்கு ஆலம் சுற்ற சிவகாமி புதுமண தம்பதிகளை வரவேற்று எல்லா முறைகளையும் செய்தார்.
தொடரும்...

Last edited: