• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 10

Administrator
Staff member
Messages
499
Reaction score
706
Points
93
அத்தியாயம் 10



ஆடவன் நீட்டிய கைகளுக்குள் பாவை அடைக்கலம் புகும் முன், "சாரா" என்ற கார்த்திக் குரல் தூரத்தில் இருந்து ஒலித்து இருவரின் சம்பாஷனைகளுக்கு தடை விதித்திருந்தது.



பின்னால் தலையை திருப்பி பார்த்தவள் கார்த்திக் நிற்பதை உறுதி செய்து விட்டு சித்விக் புறம் திரும்பி, "போய்ட்டு வரேன்" என்று இதழசைத்து முணுமுணுத்து விட்டு நகர விழைய, "எனக்கு பதில் சொல்லிட்டு போ" என்ற ஆடவன் அவளின் கை விரல்களை பிடித்துக் கொண்டான்.



இவளின் பின்புறம் மட்டும் கார்த்திக் விழிகளுக்கு அகப்பட அவனின் செயல் தெரியவில்லை. ஆனால் கார்த்திக்கோ தங்கையை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தான்.



"ஹேய், என்ன பண்றீங்க? கையை விடுங்க. அண்ணா வரான்" என்ற பாவையின் விழிகள் சற்று பெரிதாக விரிந்து கொள்ள திரும்பி திரும்பி கார்த்திக்கை வேறு சற்று கிலியுடன் ஆராய்ந்தது.



பாவையின் செயலில் ஆடவனுக்கு சுவாரசியம் பிறக்க இதழ் நிறைந்த குறும்புன்னகையுடன், "நீ தான அன்னைக்கு சொன்ன? பொம்பளை பிள்ளை நானே தைரியமா இருக்கேன். நீங்க ஏன் இப்படி இருக்கீங்கனு? இப்ப ஏன் இவ்வளவு பயப்படுற? உங்க அண்ணனை எனக்கு இன்ட்ரோ கொடு" என்று வம்பு பேச அவனின் புருவம் வேறு ஏறி இறங்கியது நக்கலாய்.



'அடேய், விடுடா' என்று பெண் விழிகளை சுருக்கி யாசிக்க தொடங்க மேலும் அவளை இம்சிக்காது, 'சரி சரி போய் தொலையும்' என்று புன்னகையுடன் அவளின் கையை விட்டிருந்தவன், "போன் நம்பர் கொடு, உன்னை எப்படி கான்டாக்ட் பண்றது?" என்றான் நல்லவனாய்.



இடுப்பில் கையூன்றி அவனை முறைத்து, 'க்கும்...தேடி வரவே ஆறு மாசமாகிடுச்சு' என்று எண்ணியப்படி தொண்டையை செருமியவள், "இவ்வளவு நாள் என்ன பண்ணீங்க? உங்களுக்கு வேணும்னா நீங்க தான் தேடி கண்டுபிடிக்கணும் மிஸ்டர்.சித்விக்" என்று நியாயம் பேசினாள் பெண் அதட்டலாக.



"சரி விடு, நீ தரலைன்னா என்ன, நான் உங்க அண்ணன்கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன்" என்றவன் நகர முனைய, 'அடேய், ஏன்டா படுத்துற?' என்ற ரீதியில் நெற்றியில் தட்டிக் கொண்டவள் வேகமாக அவனுடைய மொபைலை வாங்கி தன்னுடைய எண்களை பதிந்து கொடுத்திருக்க கார்த்திக் அருகில் வந்திருந்தான் "என்ன பண்ற சாரா? எவ்வளவு நேரமா கூப்பிடுறது?" என்றபடி.



"அது கார்த்திண்ணா" என்று இழுத்தவள் தடுமாற எதிரில் சித்விக் இருந்திருக்கவில்லை நொடியில் விலகி கூட்டத்தில் கலந்திருந்தான். "என்னாச்சு சாரா?" என்ற கார்த்திக் பார்வையும் அவளை ஆராய, 'ப்பாடா போய்ட்டானா?' என்று நிம்மதி பெருமூச்சு விட்டு, "நத்திங் ண்ணா, போகலாம்" என்று முற்றுப்புள்ளி வைத்து நகர்ந்திருந்த பெண்ணின் விழிகள் ஆர்வமாய் ஆடவனை தேடி அலைபாய இறுதி வரை அகப்படவே இல்லை.



'ச்சு...போடா' என்று மனம் சலித்தது எப்பொழுதும் போல் எரிச்சலில் அல்லாது அவனை காண முடியவில்லை என்ற காதல் மேலீட்டின் ஆதங்கத்தினால்.



"வேகமா வா சாரா, உன்னை ட்ராப் பண்ணிட்டு நான் ஆபிஸ் போகணும். இன்னைக்கு மார்னிங் மீட்டிங் வேற இருக்கு" என்று பேசிய கார்த்திக் சாரா கையிலிருந்த பேக்கை கைப்பற்றி அவளையும் இழுத்து சென்றிருந்தான்.



அவளை அடுக்குமாடி குடியிருப்பின் வாயிலில் விட்ட கார்த்திக் காரை எடுத்துக் கொண்டு பறந்திருக்க வீடு நுழைந்தவளுக்கு அத்தனை அலுப்பாய் இருந்ததது. ஆனால் அதையும் மீறி ஆடவன் செயல் மனதை நிரப்பியிருக்க வேகமாக மொபைலை எடுத்து அவனுக்கு அழைத்து விட்டாள். எப்பொழுதோ அவனின் அலைபேசி எண்கள் சாராவின் அலைபேசியில் குடியேறி இருந்தது. நண்பர் பட்டாளத்தின் உதவியுடன் கைப்பற்றியிருந்தவள் அவனாக முன்னெடுக்காது இம்மியும் நகர்த்தும் எண்ணமின்றி கிடப்பில் போட்டிருந்தாள்.



அழைப்பின் பலனாய், 'சுவிட்ச் ஆஃப்' என்ற பதிலே கிடைக்க, 'இதுக்கு எதுக்கு நம்பர் வாங்குனான். இவனை வைச்சுக்கிட்ட சாரா உன்னோட நிலைமை கொஞ்சம் இல்ல ரொம்பவே மோசம் போல' என்று மனதினுள் புலம்பியவள் அப்படியே படுத்து உறங்கியும் போனாள் அழைப்புமணி ஒலிக்கும் வரை.



தூக்கம் கலைந்து கண்களை கசக்கி எழுந்தவள் நேரத்தை பார்க்க அதுவோ பணிரெண்டை தாண்டி இருந்தது. 'இவ்வளவு நேரமா தூங்கிட்டேன். இப்ப தான படுத்த மாதிரி இருந்தது' என்று தலையை உலுக்கியவள் கதவை நோக்கி விரைந்தாள்.



'கார்த்திண்ணா இவ்வளவு சீக்கிரமா வர மாட்டானே! யாரா இருக்கும்?' என்ற சிந்தனையுடன் கதவை திறக்க புன்னகையுடன் கைகளை கட்டிக் கொண்டு சித்விக் நின்றிருந்தான்.



அவனை கண்டு பெண்ணவளின் விழிகள் ஒளிர வதனம் விரிய, 'நீ எப்படி இங்கே?' என்று பாவனைகாட்டி நின்றிருந்தாள். உறங்கி எழுந்து தலை கலைந்து கோட்டோவியமாய் நின்றிருந்தவளை அள்ளி அணைக்கும் ஆர்வம் ஆடவனுக்கு. பாதியில் விட்ட பேச்சு வார்த்தைகளை தொடர்ந்திட மனது பிரயத்தப்பட்டாலும் மூளை அதற்கு தடை விதித்துக் கொண்டிருந்தது. காதல் சொல்லும் வரை இருந்த தடுமாற்றமும் தயக்கமும் எங்கோ பறந்து சென்றிருக்க ஒரு வித உரிமையுணர்வு வந்திருந்தது அவனுக்கு. ஆனால் ஆடவனுக்கு கண்ணியக்காதலில் தான் ஆகப்பெரும் விருப்பமும் கூட.



தலையை கோதிக் கொண்டவன், "எனக்கு வேண்டியதை நானே கண்டு பிடிச்சிட்டேன் சாரா, வெளிய போகலாமா?" என்று இதழில் தோன்றிய புன்னகையை அடக்கியபடி நிற்க,




அப்பொழுது தான் சுயநினைவு பெற்றவள், "ம்ம், நாட் பேட்" என்று இதழ் விரித்து, "உள்ள வாங்க" என்று அவனுக்கு வழியை விட்டு தள்ளி நின்றாள்.



வந்து அமர்ந்தவனுக்கு தண்ணீர் கொடுத்தவள் எதிரில் அமர்ந்திருக்க, "நான் ஈவ்னிங் சிக்ஸ் ஊருக்கு கிளம்புறேன்" என்ற தகவலை கொடுத்திருந்தான் ஆடவன். பகிர வேண்டிய விஷயங்களை நிறைய இருந்தாலும் இப்பொழுது அதற்கு நேரமில்லை என்றுணர்ந்து, "டூ மினிட்ஸ்" என்று அலைபேசியுடன் நகர்ந்தவள் அண்ணனுக்கு அழைத்து, "நான் ப்ரெண்டோட வெளிய போறேன் ண்ணா" என்று தகவல் கொடுத்து நிமிடத்தில் உடை மாற்றி அவனுடன் கிளம்பி இருந்தாள்.



பிற்பகல் பொழுது முழுவதும் அந்த புதுகாதலர்களுக்கான பொழுதாய் மாறி இருந்தது. இல்லை இல்லை மாற்றிக் கொண்டனர். ஆம், முதலில் உணவகம் சென்று உணவை முடித்துக் கொள்ள அந்த பலமாடி கட்டிடத்தை வலம் வந்து கொண்டிருந்தாள் அவனின் கையை இறுக பற்றியப்படி.



"ஹேய் எதாவது வாங்கு, இல்ல கிளம்பலாம். ஏன் சும்மாவே சுத்திட்டு இருக்க சாரா" என்று ஆடவன் கடிந்து கொண்டாலும் அவனை ஒரு பார்வை பார்த்த பெண் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அந்த பார்வை கூறியது, 'உன்னுடனான நேரத்தை தவிர வேறொன்றும் தேவையில்லை மடையா?' என்று.



ஏனோ புதிதாக தோன்றாமல் சட்டென்று ஆடவனுடன் பொருந்தி போனாள் பெண். ஏதோ பல நாள் பழக்கம் போல்.



"ஆல்ரெடி லேட்டாகிடுச்சு சாரா, நீ வீட்டுக்கு கிளம்பு" என்றவனின் பேச்சை காதில் வாங்காது "இரயில் நிலையம் வந்தே தீருவேன்" என்று அடம்பிடித்து அவனுடன் வந்திருந்தவள் அவன் இரயில் ஏறிய பின்பே அரைமனதுடன் கிளம்பினாள்.



ஆடவனுடனான அந்த அரைநாள் பொழுதே பெண்ணவளுக்கு பேரூவகையை கொடுத்திருக்க 'மாதமொரு முறை கண்டிப்பாக தன்னை காண வந்து விட வேண்டும்' என்ற உறுதிமொழியை பெற்றுக் கொண்டே ஆடவனை கிளம்ப அனுமதித்திருந்தாள்.



ஆடவனின் கைகளில் பாவை தஞ்சமடைந்து ஆறு மாதங்கள் நகர்ந்திருந்தது. காலையில் சாரா கிளம்புவதில் இருந்து இரவு வீடு வந்து மாற்றும் இலகு உடையின் நிறம் முதற்கொண்டு ஆடவனுக்கு ஒலிபரப்பப்பட்டு விடும் பாவையினால். அவனும் சலிக்காது அவளுக்கு காது கொடுத்தப்படி ஒவ்வொன்றாக கேட்டாலும், "உனக்கு வாயே வலிக்காதா சாரா?" என்று நேரடியாகவே கேட்டு அவளிடம் வாங்கி கட்டிய நாட்களும் உண்டு. அதற்கு பின் அவனே அழைத்தாலும் தவிர்த்து தவிக்க விட்டு அழைப்பை ஏற்பாள் அவனின் செல்ல ராட்சசி.



"மேரேஜ், ஷர்மிக்கு முடிச்சிட்டு தான் சாரா எனக்கு பார்ப்பாங்க, உங்க வீட்டில ப்ராப்ளம் இல்லையே? இருந்தா சொல்லு அப்பாக்கிட்ட சொல்லி பேச சொல்லிடலாம்" என்று சித் கூறியிருக்க, "இல்ல கார்த்தி அண்ணாவுக்கு தான் அம்மா தீவிரமாக பொண்ணு பார்த்திட்டு இருக்காங்க. அவனுக்கு முடிச்சிட்டு தான் எனக்கு பார்க்கலாம்னு டிசைட் பண்ணியிருக்காங்க. சோ இப்போதைக்கு நோ வொரிஸ், பார்த்துக்கலாம்" என்றிருந்தாள் பேதை.



அவளின் வேண்டுகோளின்படி மாதமொரு முறை எவ்வளவு வேலை இருந்தாலும் பாவையை பார்ப்பதற்கு கிளம்பி வந்து விடுவான். அவளும் அவன் வரும் நாளன்று அலுவலகத்திற்கு விடுப்பெடுத்து வீட்டிலே இருந்து கொள்வாள்.



"என்னாச்சு சாரா? ஹெல்த்க்கு என்ன? டாக்டரை பார்க்க போகலாமா?" என்று பாசம் பொங்கி வழியும் கார்த்தியிடமிருந்து தப்புவது தான் மிகப்பெரும் சவலான காரியமாக இருக்கும் பாவைக்கு.



நாள் முழுவதும் அவர்களுக்கானது, காலையில் அவன் உண்ட பின்பு கிளம்புபவர்கள் இரவு அவனை தொடர்வண்டி ஏற்றி விட்டே சாரா வீடு திரும்புவாள். அவனும் அலுத்துக் கொள்ளாது அவளுடனே கடை கடையாக ஏறி இறங்கி அவளுக்கு தேவையானதை வாங்கி கொடுப்பான். அவனுடன் இருக்கும் பொழுது முழு செலவும் அவனுடயது தான். கணக்கு வழக்குகளை தாண்டி அவர்களின் காதல் வளர்ந்திருந்தது. அவளும் அவனிடம் மறுத்து பேசியதில்லை. முன்பு போல் வாக்குவாதங்கள் என்பதெலலாம் அரிதான நிகழ்வாகி போயிற்று.



காதல், படிப்பை பாதியில் விட்டு கனவுகளை தொலைத்து என்றல்லாமல் இருவருமே நல்ல நிலையில் இருக்கும் பொழுது பரிமாறபட்டிருக்க அதொன்றும் அத்தனை தவறாக இருவருக்கும் தோன்றவில்லை. சாரா, அவளும் நல்ல நிறுவனத்தில் லட்சத்தில் பாதி ஆயிரங்களை ஊதியமாக பெற்றுக் கொண்டிருக்கிறாள். சித்விக், அவனும் தந்தையின் தொழிலை எடுத்து நன்றாகவே நிலை நிறுத்தி விட்டான். அடுக்குமாடி குடியிருப்பு, தனிவீடுகள், ஷாப்பிங் காம்ப்ளஸ், தியேட்டர் என்று அவரவர் விருப்பத்திற்கேற்ப அவர்களுக்கு தேவையான ஊரில் கட்டி தரும் நிறுவனம் அவர்களது. அதற்காக தான் அவன் கல்லூரியில் கட்டிட மென்பொறியாளர் துறையை தேர்ந்தெடுத்ததும்.



"நம்ம வீட்டுக்கு தெரியாம ஊர் சுத்துற தப்பு தான சித், எனக்கு கில்ட்டா இருக்கு. நான் திமிரா பேசுவேன் தான். ஆனா எந்த விஷயத்தையும் வீட்டுக்கு தெரியாம மறைச்சு செய்ததில்லை. பிடிச்சாலும், பிடிக்காட்டியும் முகத்துக்கு நேரா எல்லார்க்கிட்டயும் பேசி தான் பழகி இருக்கேன்" என்று அவ்வபொழுது பெண் புலம்பி இருக்க, "சரி, வீட்டில சொல்லிடலாம். எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல சாரா" என்றவனையும் மறுத்திருந்தாள்.



"ஏய், என்ன தான்டி உன் பிரச்சனை? மனுசனை படுத்தாத. வீட்டில சொல்லலாம்னாலும் வேண்டாம் சொல்ற, சரி இனிமே நான்உன்னை பார்க்க வரலை, வெளிய எங்கயும் போக வேண்டாம்" என்றிருக்க, "ம்ம், எப்படா சான்ஸ் கிடைக்கும் கழண்டு ஓடலாம்னு இருக்கீங்களா?" என்று அதற்கு அவனுடன் ஒரு சண்டை பிடிப்பாள். ஊடல் என்றாலும் அதிலும் மிதமிஞ்சிய காதல் மேலிட்டிருக்கும். ஒருவர் மிஞ்சும் கணங்களில் மற்றொருவர் கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்ய வேண்டும் என்பது அவர்களின் காதல் அகராதியில் எழுதுகோல் இல்லாது தீட்டபட்டு விட்ட விதி. ஆம், விதிமுறைகளை பின்பற்றும் காதலர்கள் அவர்கள் ஆனால் அதில் சில சமயம் விதிவிலக்கும் உண்டு.



பெண்ணை இறுக்கி பிடித்துக் கொண்டான். சாராவிற்கும் அணு கூட சித்விக் இன்றி அசையாது என்றொருநிலை தான். அருகருகே இல்லை என்ற குறையை தவிர அவளின் அடுத்த வேலை உணவு என்ன என்பது கூட ஆடவனுக்கு தெரியும். அவனின் அக்காவிற்கு பிறந்த பெண் குழந்தை முதல் அவன் புதிதாக வாங்கியிருந்த நாய்க்குட்டி வரை அவள் தேர்ந்தெடுத்த பெயரை தான் சூடிக் கொண்டிருந்தது. ஏன், அவன் இனிமேல் வாங்குவதற்காக ஏற்பாடு செய்திட்ட காரின் நிறமும் ப்ராண்டும் கூட அவளின் விருப்பப்படி தான்.



"சத்தமா பேசாத சாரா, யார் கூடயும் சண்டை போடாத" என்று அவன் கூறுபவற்றிற்கெல்லாம் தலையசைப்பதோடு மட்டுமல்லாது பின்பற்றவும் செய்தாள் பெண். ஏனோ அவனை பிடித்ததால் அவனது வார்த்தைகளுமே பிடித்து போனது. அவனும் பெண்ணவளையும் அழுத்தாது வார்த்தைக்கும் வலிக்காது பாவையின் கைப்பிடித்து சிறுகுழந்தைக்கு கூறுவது போல் கூற பேதை எங்கனம் மறுப்பது. அவனுக்கும் புரிந்திருந்தது, தன் அதட்டுதலை விட அனுசரணைகள் பெண்ணவளின் தலையை அசைய செய்யும் என்ற வித்தை. அவனது அன்பிலும் கனிவிலும் ஏறக்குறைய நெகிழ்ந்து கரைந்து காதலில் கசிந்துருக தொடங்கியிருந்தாள் பெண்.



முன்பை விட இன்னுமே அவனின் மீதான பிடித்தம் கூடியது காதலனாக! தள்ளி நின்று கட்டுப்பாட்டோடு கண்ணியமாகவும் அவளை மரியாதையாகவும் நடந்தும் கணங்களில். ஆம், சாராவே அவனை நெருங்கி நின்றாலும் புன்னகையுடன் தள்ளி நிறுத்தி விடுவான் ஆடவன்.



"ப்ரோபோஸ் பண்ணி ஆறு மாசமாகிடுச்சு, நீங்க ஒரு தடவை கூட என்னை ஹக் பண்ணதே இல்லை" என்று பெண் குறைபடித்தப்படி அவனது மார்பில் தஞ்சமடைந்த கணங்களை எப்பொழுது எண்ணினால் இருவர் மனதிலும் மழைச்சாரலாய் மகிழ்ச்சி கீற்றுகள் மின்னி மறையும்.



"ம்ம், அசையாதீங்க. நான் என்ன செய்திட்டேன் உங்களை, பயப்படாதீங்க?" என்றவள் அவனது சட்டையை விடாது இறுக்கி பிடித்துக் கொண்டு அவனின் மார்பில் தஞ்சமடைந்துக் கொள்ள ஆடவனுக்கு தான் ஆகப்பெரும் அவஸ்தையாக இருந்தது அவளின் செயலில். "ஹேய், சாரா, என்னடி பண்ற?" என்ற தவிப்பான வெளி வராத குரலுடன் அவளை தள்ளி நிறுத்த முனைய, "ஒரே ஒரு கிஸ் கொடுங்க, தள்ளி போயிடுறேன். இன்னும் தேர்ட்டி பைவ் டேஸ் ஆகும், உங்களை திரும்ப பார்க்க. தென் நம்மோட காதலுக்கு பர்ஸ்ட் இயர் ஆனிவர்சரி நெக்ஸ்ட் மந்த் பிப்டின், சோ நீங்க எப்பயும் வரதிலிருந்து வொன் வீக் தள்ளி வாங்க அன்னைக்கு செலிபிரேட் பண்ணனும்" என்று கணக்கு பேசி லஞ்சம் கேட்டு நிற்பவளை, 'இவளை.....என்ன தான் செய்ய?' என்ற ரீதியில் ஆடவன் தடுமாறி தவிப்புடன் பார்த்து நின்றிருந்தான்.



"ம்ம்...நான் ரெடி" என்றவளின் கறாரான பேச்சில், "நீ ரொம்ப பண்ற சாரா" என்று முறைத்தாலும் அவனது இதழ்கள் பட்டும் படாமலும் அவளது கன்னத்தை தழுவி மீண்டிருந்தது.



நொடிப்பொழுதில் நடந்தேறி இருந்த இதழணைப்பு பாவைக்கு போதவில்லை போலும். "ச்சு, என்ன பண்ணீங்க நீங்க, இது தேர்ட்டி டேஸ் தாங்காது இன்னும் ஸ்ட்ராங்கா வேணும்" என்று கண்களை சிமிட்டி நிற்க, "கொல்லப் போறேன் உன்னை, ரொம்ப சோதிக்காத டி" என்றவன் அவளது தலையில் லேசாக தட்டி புன்னகையுடன் விலகி நிற்க மீண்டும் அவனை நெருங்கி நின்றவள் தன்னிதழை அவனின் இதழில் பதித்திருந்தாள் கள்ளபுன்னகையுடன், '"நீ கொடுக்கா விட்டால் போடா, நான் தருவேன்' என்ற ரீதியில் புருவத்தை உயர்த்தி.



அவ்வப்பொழுது சித்விக்கும் அவளது அதிரடியில் தயங்கி தடுமாறினாலும் பெண் தாங்கி பிடித்துக் கொள்வாளே!...



அன்றைய நினைவுகளில் மிதந்தவளின் விரல்கள் தன்னிதழை அன்னிச்சையாக வருடியது. இன்னும் ஈரமிருப்பதை போலொரு எண்ணம் எழ அவளுடலில் உள்ள மயிரிழைகள் எல்லாம் கூசி மேலெழுந்து செங்குத்தாக நிற்க கண்களை இறுக மூடி பின்னால் இருக்கையில் சாய்ந்து கொண்டாள். ஆம், பெங்களூரில் இருந்து திருச்சியை நோக்கி பயணம். பத்து நாட்களுக்கு முன், "ஷர்மியை பொண்ணு பார்க்க வராங்க சாரா, நான் கொஞ்சம் பிஸி. நானே கூப்பிடுற வரை டிஸ்டர்ப் செய்யாத" என்று அழைப்பை துண்டித்தவன் இன்றுவரை அழைக்கவே இல்லை.



கடந்த பத்து நாட்களாக பெண்ணுக்கு பித்து பிடித்த நிலை தான். 'ஒரு பத்து நிமிஷம் கூட என்னிடம் பேச உனக்கு நேரமில்லையா?' என்று கோபமாக இருந்தவளுக்கு அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை



"என்ன சாரா, தப்பு தப்பா கோட் பண்ணியிருக்கீங்க?" என்று அலுவலகத்தில் அவளது மேலதிகாரியிடம் வசவு பெற்றிருக்க, "ஏன் சாரா எதையோ பறிகொடுத்த மாறியே இருக்க? எனிதிங்க் ஹெல்ஸ்?" என்று வீட்டில் கார்த்தியும் அவளை படுத்தி எடுத்திருக்க, "நான் டூ டேஸ் ஊருக்கு போய்ட்டு வரேன் கார்த்திண்ணா, டிக்கெட் புக் பண்றீயா?" என்று கேட்டு கிளம்பி இருந்தாள்.




மெதுவான விலகலை விட திடீரென்ற ஒதுக்கம் ஆளை உருக்குமாம். ஆமாம் சாராவும் உருகி தவித்துக் கொண்டிருந்தாள். அவனுடன் பேசுவதை தினசரி வழக்கமாக கொண்டிருந்தவளுக்கு எதையோ இழந்தது போலொரு உணர்வு. பத்து முறைக்கு மேல் முயற்சித்தவள், 'போடா' என்பதாய் அலுத்து போய் விட்டாள்.



ஏனோ அழுகையாய் வந்தது, கண்ணீர் கண்களை முட்டி நிற்க கன்னங்களை தாண்டாது பார்த்துக் கொண்டாள் வெகுசிரத்தை எடுத்து. இதுபோலொரு இரயில் சந்திப்பு தானே அவர்களுடையது. 'அன்று போல் எதிர்பாரது எதாவது சந்திப்பில் ஏறி விட மாட்டானா?' என்ற எண்ணத்தில் விழி வேட்டை நடத்தியவள் அவளையும் அறியாமல் உறங்கி போயிருந்தாள்.




காலையில் வாசுவுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தவளுக்கு, 'அவனை தேடி செல்லலாமா?' என்ற எண்ணம் பிரவாகமாக இருந்தாலும் தற்சமயம் அதற்கு முழுக்கு போட்டு மல்லிகாவுடன் ஐக்கியமாகி போனாள்.



மதியம் நன்றாக உறக்கத்தில் இருந்தவளை அலைபேசி ஒலி கலைத்திருந்தது. அடித்து பிடித்து எழுந்தமர்ந்தவள் விழிகள் சித்விக்கோ என்றெண்ணிய ஏமாற மஹிமா அழைத்திருந்தாள்.

தலையை தட்டிக் கொணடவள் அழைப்பை ஏற்க,


"ஹேய் என்ன சாரா பண்ற? எத்தனை நாளாச்சு, நீயா கூப்பிட மாட்டியா இம்சை. எங்களை மறந்திட்டியா?" என்று தொடங்கி பரஸ்பர நல விசாரிப்புக்கள் முடிய, "சாரா, நம்ம டென்த் க்ளாஸ் மேட் பிருந்தா இருக்கால்ல அவளுக்கு நெக்ஸ்ட் வீக் என்கேஜ்மென்ட், சோ நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இன்னைக்கு ஹோட்டல்ல சின்னதா பார்ட்டி அரேன்ஜ் பண்ணியிருக்கோம். உன் நம்பர் மிஸ் பண்ணிட்டா போல. நீ இங்க தான இருக்க, வர்றீயா? நானும் உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு, மார்னிங் ஹைதராபாத் கிளம்பிருவேன்" என்றிருந்தாள். மஹிமாவிற்கும் சாராவிற்கும் பள்ளியில் இருந்தே பழக்கமுண்டு. அவளின் தந்தை வேலையின் பொருட்டு ஒவ்வொரு மாநிலமாக மாற்றலாகி கொண்டிருக்க அவளின் தாய் வழி பாட்டியின் வீடு அமைந்துள்ள திருச்சியில் இருந்து தனது படிப்பை தொடர்ந்திருந்தாள்.



"வரணுமா?" என்று சிணுங்கிய சாராவிற்கு தற்பொழுதிருக்கும் மனநிலையில் யாரையும் காண விருப்பமும் இருந்திருக்கவில்லை.



"கண்டிப்பா, இல்ல தேடி வந்து அடிப்பேன்" என்று மிரட்டிய மஹிமா அழைப்பை துண்டித்திருக்க கண்களை கசக்கி எழுந்தமர்ந்தவள் சென்று மல்லிகாவிடம் அனுமதி வேண்டி இருந்தாள். வாசுவிடம் பேசியவர், "சரி பத்திரமா போய்ட்டு வா" என்று முடித்திருக்க மீண்டுமொரு குட்டி தூக்கத்தை போட்டவள் மாலையில் எழுந்து குளித்து தயாராகி இருக்க வாசு காரை அனுப்பி இருந்தார் மகளுக்காக.




அந்த உயர்தர ஹோட்டலின் வாயிலில் மகிழுந்து தன்னுடைய இயக்கத்தை நிறுத்தி இருக்க, "பார்க்கிங்ல்ல வெயிட் பண்ணுங்கண்ணா, நான் திரும்ப கூப்பிடும் போது வந்தா போதும்" என்று ஓட்டுநரிடம் பேசியவள் மஹிமாவிற்கு அழைத்தப்படியே உள்ளே நுழைந்திருந்தாள்.



வெகு வருடங்களுக்கு பிறகான சந்திப்பு, சாராவின் மனநிலை முற்றிலும் மாறி இருந்தது அந்த பட்டாளத்தை கண்டவுடன். பிருந்தாவை அணைத்து வாழ்த்து தெரிவித்தவள் மஹிமா அருகில் அமர்ந்து கொள்ள அந்த இடமே பேச்சுகளோடும் கூச்சலோடும் அமர்க்களப்பட்டு கொண்டிருக்க, "ஹேய், சைலண்ட். அவர் வந்திட்டாராம். நான் போய் கூட்டிட்டு வரேன்" என்ற பிருந்தாவிற்கு, "ஹோஹோ..." என கூச்சல் எழும்பி அடங்க வெளியில் சென்றவள் ஒரு ஆண்மகனுடன் உள்ளே நுழைந்திருந்தாள்.
அசட்டையாக அமர்ந்து மஹிமாவிடம் அளவளாவிக் கொண்டிருந்த சாராவின் தலையில் யாரோ ஓங்கி பலமான பொருளை கொண்டு தாக்கியதை போன்றதொரு வலி உண்டாகியது வந்தவனை கண்டவுடன். ஆம், சாட்சாத் அவளுடைய சித்விக் தான். 'இல்ல இல்ல, என்னோட சித்தா இருக்காது' என்ற பேதையின் உள்ளம் தன் முன் நின்றிருந்த முழு உருவத்தையும் நம்ம மறுத்து அடம்பிடித்தது. பிருந்தா தன்னுடன் இணைத்து பிடித்திருந்த சித்விக் கரங்களின் மீது சாராவின் விழிகள் நிலைக்குத்தி நிற்க மனதோ சொல்ல முடியாத வலியை உணர சட்டென்று அந்நியமாகி போனான் அவளவன்.





தொடரும். .
 
Last edited:
Messages
420
Reaction score
327
Points
63
என்னடா லவ் பாட்டுக்கு போயிட்டு இருக்கேன்னு நினைத்தேன் இதோ வைச்சாச்சில கடைசில டிவிஸ்ட
 
Top